அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போனது யாஷ் நடித்துள்ள ‘கே.ஜி.எஃப் 2’ பட ரிலீஸ்

அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போனது யாஷ் நடித்துள்ள ‘கே.ஜி.எஃப் 2’ பட ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட நடிகரான யஷ் நடித்து வரும் படம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’.

இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் ‘கே.ஜி.எஃப் 2’ வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 2022 அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி கே.ஜி.எஃப்2 திரைப்படம் ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை கவனித்துக் கொண்டே, பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தையும் இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எப் சேப்டர் 1 படமானது டிசம்பர் 2018ல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

KGF Chapter 2 release date announcement

அஜித் கைவிட்ட டைட்டிலை சிரஞ்சீவி படத் தலைப்பாக்கிய மோகன் ராஜா

அஜித் கைவிட்ட டைட்டிலை சிரஞ்சீவி படத் தலைப்பாக்கிய மோகன் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஆகஸ்ட் 22ல் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன் 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் புதிய படத்திற்கு ‘சிரஞ்சீவி 153’ என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர்.

கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது.

இதன் படப்படிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாளை சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை இப்படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு GOD FATHER என டைட்டில் வைத்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த படம் வரலாறு. ஆனால் இந்த படத்திற்கு முதலில் வைத்து தலைப்பு ‘காட்ஃபாதர்’ என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் வேலாயுதம், தனி ஒருவன் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் மோகன் ராஜா.

GOD FATHER படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார்.

Chiranjeevis 153rd film titled God father Directed by MohanRaja

A joint production venture of Konidela Production Company and Super Good Films. #Chiru153

JUST IN தமிழகத்தில் பள்ளிகள் & தியேட்டர்கள் திறக்க அனுமதி.; கொரோனா ஊரடங்கு 2 வாரம் நீட்டிப்பு

JUST IN தமிழகத்தில் பள்ளிகள் & தியேட்டர்கள் திறக்க அனுமதி.; கொரோனா ஊரடங்கு 2 வாரம் நீட்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

,

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மேலும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் & தியேட்டர்கள் திறக்க அனுமதி அனுமதியளித்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

*தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு.

*செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும்.

*இந்த பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

*1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்டம்பர் 15க்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் – தமிழக அரசு.

*அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகளும் (Diploma courses, polytechnic colleges) செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி.

*50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும்.

*கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி; நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி.*

*வரும் 23ம் தேதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்படலாம்.*

*கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி; இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவிப்பு.

*தினமும் இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி. இதுவரை இரவு 09.00 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் 23-8-2021-லிருந்து இரவு 10.00 மணி வரை செயல்பட அனுமதி.

*தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி.*

*ஆகஸ்ட் 23 திங்கட்கிழமை முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்கவும் அனுமதி.

*தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி

அங்கன்வாடி மையங்கள் 1.9.2021 முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும்.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

TN Govt extended 2 weeks lockdown Schools & theatres can be opened.

ரஜினி-சரத் பட நடிகை நல்லெண்ணெய் சித்ரா மரணம்.; அவரின் வாழ்க்கை ஒரு பார்வை..

ரஜினி-சரத் பட நடிகை நல்லெண்ணெய் சித்ரா மரணம்.; அவரின் வாழ்க்கை ஒரு பார்வை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் நிறைய படங்களில் நடித்தவர் நடிகை சித்ரா.

‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

சரத்குமாரின் ’சேரன் பாண்டியன்’, ரஜினியின் ’ஊர்காவலன்’ பிரபுவின் ’என் தங்கச்சி படிச்சவ’ ’வெள்ளையத்தேவன்’ உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

‘சேரன் பாண்டியன்’ படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருந்தார். க்ளைமாக்ஸ் காட்சியில் இவர் இறப்பதாக காட்சி இருக்கும்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.

சினிமா தவிர டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.

ஒரு முறை நல்லெண்ணய் விளம்பரத்தில் நடிக்கவே அதன்பிறகு நல்லெண்ணெய் சித்ரா என்ற பெயரே இவரது பெயராக மாறி போனது.

கடந்த 1990ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சித்ரா. இவர்களுக்கு ஸ்ருதி என்ற மகள் இருக்கிறார்.

சென்னையில் கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

நடிகை சித்ராவுக்கு ஸ்ருதி என்ற ஒரே மகள். அவர் இந்தாண்டு பிளஸ் டூ முடித்துள்ளார். குழந்தையை வளப்பதற்காகவே நடிக்காமல் பல ஆண்டுகள் இருந்தார்.

சித்ராவுக்கு வயது 56.

இந்த நிலையில் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார்.இன்று மாலை 5′ மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது!

சென்னை சாலிகிராமம் காவேரி தெருவில் அவரது வீடு உள்ளது.

தினம் ஏராளமான பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு அளிப்பார் சித்ரா. ஏராளமான காக்கைகள் இவர் வீட்டின் மொட்டை மாடியில் நேரம் தவறாமல் வந்து, உணவுக்காக கரையும். இதற்காகவே வெளியூர் பயணத்தை தவிர்ப்பார்.

சித்ராவின் கணவர் சில மாதங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். கணவரை பராமரித்து வந்த நிலையில் இவர் காலமானது மிகுந்த வேதனைக்குரியது.

நடிகை சித்ரா கடைசியாக நடித்த படம் “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா” என்ற படத்தில் ப்ளாஷ்பேக் காட்சியில் பள்ளி மாணவியாக நடித்து இருந்தார். அந்த படம் 2020 ஜனவரி 3’ம் தேதி வெளியானது.

Sad news, #ActressChithra (56 )passed away due to cardiac arrest. Funeral @ 5pm

1A, Thiyagi Lohaiah Colony, Saligramam, Chennai-93 contact:9962109666
#RIPActressChithra
#RIPChithra
#RIPNallanaiChithra

Actress Nallennai Chithra passed away.

விக்ரம் & துருவ் இணையும் படத்திற்கு வெறித்தனமான டைட்டில் வைத்த கார்த்திக் சுப்புராஜ்

விக்ரம் & துருவ் இணையும் படத்திற்கு வெறித்தனமான டைட்டில் வைத்த கார்த்திக் சுப்புராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சியான் 60’.

இந்த படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்திற்கு மகான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோவில் விக்ரம் புல்லட் பைக்கில் வருகிறார்.

விக்ரமின் பின்னர் பல கைகள் இருப்பது போலவும், அவர் காளி போல நிற்கிறார் போலவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Vikram – Karthik Subburaj’s Chiyaan 60 is titled Magaan

Mahaan
Mahaan
சிரஞ்சீவி பர்த் டே ஸ்பெஷலாக மோகன் ராஜா இயக்கும் பட அப்டேட்

சிரஞ்சீவி பர்த் டே ஸ்பெஷலாக மோகன் ராஜா இயக்கும் பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘சிரஞ்சீவி 153’ திரைப்படத்தின் புதிய அப்டேட் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் புதிய படம் ‘சிரஞ்சீவி 153’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு, இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார்.

இப்படத்தின் பணிகள் படப்படிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கியது. இப்படத்தை கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது.

இந்நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை 5.04 மணி அளவில் இப்படத்தை பற்றிய புதிய அப்டேட்டை வெளியிடுகின்றனர்.

இதுதொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் ரசிகர்கள், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒரு நாள் முன்னதாகவே திருவிழா போல் உற்சாகத்துடன் கொண்டாட தயாராகி விட்டார்கள்.

இயக்குனர் மோகன் ராஜா ‘சிரஞ்சீவி 153’ படத்தின் திரைக்கதையை வித்தியாசமாக எழுதியிருக்கிறார்.

இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். இதன் காரணமாக ரசிகர்கள் இப்படத்தின் இசையும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடனமும் இருக்கும் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

#Chiru153 special Update tomorrow at 5:04PM

More Articles
Follows