கேஜிஎஃப் 2 சென்னை மீட் ஹைலைட்ஸ்.; பிரசாந்த் & விஜய் இருவரும் பலம்.; BEAST & KGF2 இரண்டுமே கொண்டாட்டம்தான்

கேஜிஎஃப் 2 சென்னை மீட் ஹைலைட்ஸ்.; பிரசாந்த் & விஜய் இருவரும் பலம்.; BEAST & KGF2 இரண்டுமே கொண்டாட்டம்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’.

இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.

‘கே ஜி எஃப் 2’ படத்தினை தமிழில் அறிமுகப்படுத்தும் விழா நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

விஜய்யின் ‘BEAST’ படத்துடன் ‘KGF2’ மோதலா.? யஷ் சூப்பரான விளக்கம்

இவ்விழாவில் படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, சண்டைப்பயிற்சி இயக்குநர் அறிவு, தமிழ் பதிப்பிற்கு வசனம் எழுதிய வசனகர்த்தா அசோக், ஒளிப்பதிவாளர் புவன் கௌடா, தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் கௌடா, நடிகை ஈஸ்வரி ராவ், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகர் சரண் இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் படத்தின் கதாநாயகனான ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வசனகர்த்தா அசோக் பேசுகையில், ” கே ஜி எஃப் 2 படத்தில் வசனம் எழுத வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் கடுமையாக உழைத்திருக்கிறோம்.

கே ஜி எஃப் 2 படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு டப்பிங் படம் என்ற உணர்வு ஏற்படாமல், முழுமையாகவே தமிழில் எழுதி பேசி நடித்திருக்கிறார்கள். எனவே இதற்கான சரியான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

நடிகர் சரண் பேசுகையில்….

,” தமிழில் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் பிரசாந்த் நீல் சார், ‘கேஜிஎப் 2’ படத்தில் வாய்ப்பளித்த போது உண்மையில் வியந்தேன். இது போன்ற பிரம்மாண்டமான படைப்புகளில் சிறிய பங்களிப்பை அளித்திருக்கிறோம் என்று மகிழ்ச்சி எனக்குள் இருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் ராக்கிங் ஸ்டார் யஷ் அவர்களின் எளிமையை கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். மனிதநேய மிக்க மனிதர். வாய்ப்பு அளித்ததற்கு நன்றி.” என்றார்.

நானும் விஜய் ரசிகர்தான்.; ‘பீஸ்ட்’ ட்ரைலருக்கு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பாராட்டு

சண்டைப்பயிற்சி இயக்குநர் அறிவு பேசுகையில்…

, ” இயக்குநர் ,தயாரிப்பாளர் ,ஒளிப்பதிவாளர் , ராக்கிங் ஸ்டார் யஷ் ஆகியோர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆக்சன் காட்சிகளில் நாங்கள் நினைத்தவற்றை காட்சிப்படுத்த இவர்களின் ஒத்துழைப்பு எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருந்தது. படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தியதை விட, ‘கே ஜி எஃப்’ என்ற கனவு உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் பிரசாந்த் நீல் அவர்களின் கற்பனைக்காக ஒருங்கிணைந்து பணியாற்றினோம்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பிரம்மாண்டமான படைப்பாக கேஜிஎப் 2 அமைந்திருக்கிறது. பான் இந்தியா படம் என்றோ, டப்பிங் படம் என்றோ எந்த எண்ணமும் ஏற்படாது. இது முழுக்க முழுக்க தமிழ் படம் என்ற உணர்வை ஏற்படுத்தும்.” என்றார்.

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில்,….

” கடினமாகவும், அர்ப்பணிப்புடனும் உழைத்து கே ஜி எஃப் 2 படைப்பை உருவாக்கி இருக்கிறோம். படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளர் பிரபு அவர்களுக்கு படக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

படப்பிடிப்பு தளத்தில் ராக்கிங் ஸ்டார் யஷ் நிஜ நட்சத்திர நாயகனைப் போல் எங்களிடம் அக்கறையும், அன்பும் காட்டினார். தயாரிப்பாளர், இயக்குநர், ராக்கிங் ஸ்டார் மூவரும் இணைந்து உருவாக்கிய கே ஜி எஃப் உலகத்தை காண ஏப்ரல் 14ஆம் தேதி வரை காத்திருக்க முடியாது. இந்த உலகை காண உற்சாகமாக வாருங்கள். கொண்டாடுங்கள். அற்புதமான அனுபவத்தை பெறுங்கள். வெற்றிபெற செய்யுங்கள்.” என்றார்.

‘மாஸ்டர்’ டீசர் ரெக்கார்டை அடித்து நொறுக்கிய ‘கேஜிஎஃப் 2’ டீசர்..; ஆனாலும் விட்டுக் கொடுக்காத விஜய் ரசிகர்கள்.. ஏன்?

படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசுகையில்….

, ” கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்திலேயே இணைந்து பணியாற்ற வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பல்வேறு சூழல் காரணமாக இணைந்து பணியாற்ற முடியவில்லை. கே ஜி எஃப் படத்தின் ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய கலைஞர்கள் தெளிவான திட்டமிடலுடன் நேர்த்தியாக பணியாற்றியதால் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படைப்பாக இது உருவாகி இருக்கிறது.

எங்களுடைய நிறுவனத்திலிருந்து தயாராகும் திரைப்படங்களை மட்டுமே விநியோகித்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு ஏனைய தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களையும் வினியோகிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.

திரைப்பட துறையில் பிரம்மாண்டத்திற்கு என எப்போது ஒரு தனி ஈர்ப்பு உண்டு. டைரக்டர் ஷங்கர் சார் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டம் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தினார்.

அதனால் திரைத்துறை ஆரோக்கியமாக வளர்ச்சி அடைந்தது. வணிக எல்லையும் விரிவடைந்தது. புதுபுது தொழில்நுட்பங்களும், புதிய சிந்தனைகளும் உருவானது. மற்றொருபுறம் ராஜமௌலி சார் பிரம்மாண்டத்தை தன் பாணியில் வழங்கி ஆச்சரியப்படுத்தினார்.

அதை தொடர்ந்து பிரசாந்த் நீல் சார் அனைவரையும் திக்குமுக்காடும் வகையில் புதிய வகையிலான பிரமாண்டமான கே ஜி எஃப்பை வழங்கினார். எப்படி அவரால் இப்படியும் ஒரு விசயத்தை சிந்திக்க முடிந்தது என்று வியந்து பார்க்கிறேன்.

‘Beast & KGF2’ உடன் இணையும் ‘Haraa’.; தமிழ் புத்தாண்டில் விருந்தளிக்கும் விஜய்ஸ்ரீ

ஒவ்வொரு மாநில திரைத்துறையும் ஒன்றிணைந்து இன்று இந்திய திரைப்படத் துறை என்ற புது வடிவம் பெற்றிருக்கிறது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு மொழியில் உருவான படத்தை இந்தியா முழுவதும் பார்வையாளர்களால் ரசிக்கப்படுவது சந்தோஷமாக இருக்கிறது. இதன்மூலம் சர்வதேச தரத்திலான படைப்புகளை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இது சாதாரணமான விசயமல்ல. இதற்கான முயற்சியை தயாரிப்பாளர், இயக்குநர், நட்சத்திர நடிகர் என மூவரும் ஒன்றிணைந்து, பொறுமையுடன் காத்திருந்து ,தெளிவான திட்டமிடலுடன் உழைத்து பூர்த்தி செய்திருக்கிறார்கள். இந்த வகையில் உருவான கே ஜி எஃப் 2 ஏப்ரல் 14ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவதற்காக எங்களின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறது.

தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாகி இருப்பதால் கொண்டாட்டமான காலகட்டம். இரண்டு படங்களையும் பார்த்து கொண்டாடுங்கள். இயக்குநர் பிரசாந்த் நீல் அவர்கள் கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது படத்தை இயக்கிவருகிறீர்கள்.

விரைவில் தமிழிலும் திரைப்படத்தை இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ராக்கிங் ஸ்டார் யஷ் அவர்களுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உருவாகி இருப்பதால், நீங்களும் தமிழில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.

இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில்…

, ” கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்திற்கு பேராதரவு வழங்கிய தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கேஜிஎப் 2 படத்திற்காக கடந்த 3 ஆண்டுகளாக அளித்துவரும் அன்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படைப்புகள் மூலம் இரு மாநில மக்களுக்கு இடையே பரந்த மனப்பான்மை ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன்.

கே ஜி எஃப் 2 படத்தை வெளியிடுவதில் ஒத்துழைப்பு வழங்கி வரும் தயாரிப்பாளர் பிரபு அவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அழகான நடிகர்களை வைத்துக்கொண்டு கே ஜி எஃப் போன்ற அற்புதமான கதையை சொல்லியதற்காக நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கே ஜி எஃப் படத்தின் வெற்றிக்கு என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களின் முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பு வழங்கினர். அதனால்தான் இந்தப் படத்தை பிரம்மாண்ட படைப்பாக உருவாக்க முடிந்தது. கே ஜி எஃப் என்ற கனவு உலகத்தை காட்சிகளாக நடிகர் யஷ்ஷால் உணர முடிந்தது. அதனால் அதனை அவர் தன்னுடைய தோள்களில் ஒற்றை ஆளாக சுமந்து பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கியிருக்கிறார்.

இதற்காக அவருக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.” என்றார்.

‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் பேசுகையில்….

, ” மூன்று ஆண்டுகளுக்கு முன் என்னுடைய நண்பர் விஷால் மூலம் கேஜிஎப் படத்தின் முதல் பாகத்தை வெளியிட்டோம். அதற்கு ஆதரவு அளித்ததற்காக இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் இருக்கும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடும் உழைப்பாளிகள். சண்டைப்பயிற்சி இயக்குநர் அன்பறிவு இதற்கு சிறந்த உதாரணம். சண்டைக் காட்சிகளின் போது ஒவ்வொரு ஷாட்டிலும் மிகுந்த அக்கறையுடன் பாதுகாப்பு அம்சங்களை ஒன்றுக்கு பல முறை ஆய்வு செய்து பிறகு நடிகர்களை அக்காட்சியில் நடிக்க வைப்பார்.

அவரது இந்த அணுகுமுறை அவருடைய தொழில் மீது அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பை உணர்த்தியது. இதற்காக நான் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய கடின உழைப்பிற்கு, படத்தின் முதல் பாகத்தில் பணியாற்றியதற்காக அன்பறிவு மாஸ்டருக்கு தேசிய விருது கிடைத்தது.

வசனகர்த்தா அசோக் கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் கூடுதலாக உழைத்திருக்கிறார். சாதரணமாக இது ஒரு டப்பிங் படம் என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால் கேஜிஎப்பைப் பொருத்தவரை ஒவ்வொரு மொழிக்குரிய முக்கியத்துவத்தை அளித்திருக்கிறோம்.

ஏனெனில் மொழி என்பது மதிப்புமிக்கது அதற்குரிய மரியாதை தரவேண்டும். ஒட்டு மொத்த படக்குழுவினரும் அதற்கான மரியாதையை வழங்கியிருக்கிறோம். ஒவ்வொரு மொழிக்கேற்ற வகையில், அதன் நேட்டிவிட்டி மாறாமல் வசனங்களை எழுதியிருக்கிறார்கள்.

இதற்காக வசனகர்த்தாவிற்கு பிரத்யேக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சேகர் என்ற கலைஞர் எனக்காக தமிழில் பின்னணி பேசி இருக்கிறார் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் பாகத்திலேயே நான் தமிழில் பின்னணி பேச முயற்சித்தேன். ஆனால் முழுமையான தன்னம்பிக்கை இல்லாததால் பேசவில்லை. இனி வரும் படங்களில் தமிழில் பின்னணி பேச முயற்சிக்கிறேன்.

Kannada God of Films…. KGF கேஜிஎஃப் விமர்சனம்

பாடலாசிரியர் மதுரகவியின் பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒளிப்பதிவாளர் புவனிடம்,‘ உனக்கு தான் கொஞ்சம் தமிழ் தெரியுமே.. பேசலாமே என்று கேட்டேன். அதற்கு அவர் மைக் முன் சென்றால், கன்னடமும் மறந்துவிடும்’ என்றார்.

மைக்கில் பேசவில்லை என்றாலும் அவர் திரையில் தன் திறமையை பேச வைத்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளரான கார்த்திக், பட உருவாக்கத்திலும், படப்பிடிப்பிற்கான திட்டமிடலும் தன்னுடைய பங்களிப்பை நேர்த்தியாக செய்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சரண் நல்ல திறமையான நடிகர். அவர் நடித்த காட்சி ஒன்றைப் பார்த்து வியந்தேன். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

நடிகை ஈஸ்வரி ராவ் அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்பொழுது மிகுந்த உற்சாகமாக இருப்பார். ஆனால் காட்சியின்போது க்ஷண நேரத்தில் சோக காட்சியில் நடித்துவிட்டு பிறகு மீண்டும் உற்சாகமாக பழகுவார். அவரின் இந்த மேஜிக்கான திறமை கண்டு வியந்திருக்கிறேன்.

நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கேஜிஎஃப்காக செலவழித்த காலகட்டத்தை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவரின் இந்த அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. இது எந்த நடிகையிடம் இல்லாதது. ஏனெனில் ஒவ்வொரு நடிகைக்கும் காலம் பொன் போன்றது. இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் அவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்.

கே ஜி எஃப்பை பொருத்தவரை இயக்குநர் பிரசாந்த் தான் பலம். தயாரிப்பாளர் விஜய் அவர்களும் இதற்கு பக்கபலமாக இருந்தார். இந்த இருவரும் தான் கே ஜி எஃப் உருவாக காரணமாக இருந்தனர்.

ஏப்ரல் 14ஆம் தேதியன்று கேஜிஎப் 2 வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

KGF chapter 2 press meet high lights

சம்பள பாக்கியை கேட்டு 3 ஆண்டுகளாக ஏன் வழக்கு போடவில்லை.?.; சிவகார்த்திகேயனுக்கு கோர்ட் கேள்வி

சம்பள பாக்கியை கேட்டு 3 ஆண்டுகளாக ஏன் வழக்கு போடவில்லை.?.; சிவகார்த்திகேயனுக்கு கோர்ட் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019-ம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான ‘மிஸ்டர் லோக்கல்’ படம் வெளியானது.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.

இந்த படம் சுமாராகவே ஓடியது.

இந்த நிலையில் இந்த மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட 15 கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஞானவேல்ராஜா சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை அவர் தயாரிக்கும் படங்களில் முதலீடு செய்யத் தடை தேவை.

மேலும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடுகளை தடை செய்ய வேண்டும் எனவும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தனக்கு சம்பள பாக்கி ரூ.4 கோடி தர வேண்டும் என நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட பதினைந்து கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது நீதிபதி மூன்று ஆண்டுகளாக சம்பளப் பாக்கியை கேட்டு ஏன் வழக்கு தொடரவில்லை. தற்பொழுது டிடிஎஸ் தொகையை வசூலிக்கும் வருமான வரித்துறையின் நடவடிக்கை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கும் நிலையில் மற்றொரு வழக்காக ஏன் இதை தொடர்ந்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி இது தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு ஏப்ரல் 13 தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

High court questioned Sivakarthikeyan on Mr local issue

கேட்டு உதவியவர் ரஜினி.. கேட்காமல் உதவியவர் அஜித்.. விஜய், சூர்யாவும் உதவினர்.; SIDDY விழாவில் R.V.உதயகுமார் பேச்சு

கேட்டு உதவியவர் ரஜினி.. கேட்காமல் உதவியவர் அஜித்.. விஜய், சூர்யாவும் உதவினர்.; SIDDY விழாவில் R.V.உதயகுமார் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக திரு.மகேஷ்வரன் நந்தகோபால் அவர்கள் தயாரிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் படம் ‘சிட்தி’ ( SIDDY )
இந்த படத்தை பயஸ் ராஜ் (Pious Raj) எழுதி இயக்கியுள்ளார். அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்,

சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவன் ” சிட்தி ” தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார் ? இறுதியில் என்ன நடந்தது ? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளார்கள்.
அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, இப்படம் விரைவில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலிலையில் இப்படத்தின் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில் ..
தயாரிப்பாளர் திரு.மகேஷ்வரன் நந்தகோபால் பேசியது…

சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் நன்றி. சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் முதல் படம் சிட்தி. இது ஒரு கூலான திரில்லர் படமாக இருக்கும். புதுமையான படமாக இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நாயகி அக்ஷயா உதயகுமார் பேசியதாவது…

முதல் முறை ஒரு மேடையில் தமிழ் பேசுகிறேன் எல்லோருடைய வாழ்க்கையிலும் முதன் முதலாக நடக்கும் சம்பங்கள் மிக சந்தோசமாக இருக்கும் அப்படிப்பட்ட கனவு தான் எனக்கு “சிட்தி” படம். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

இயக்குநர் சண்முகம் முத்துசாமி பேசியதாவது…
சிட்தி டிரெய்லர் பாடல் எல்லாம் பார்க்க நன்றாக இருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும். படத்தில் ஒளிப்பதிவு மிக நன்றாக இருந்தது. நான் எடுக்கும் படத்திற்காக போட் சீக்வென்ஸ் எடுக்க மிக கஷ்டப்பட்டேன் இப்படத்தில் மிக அழகாக எடுத்துள்ளார்கள். இசையில் நிறைய வித்தியாசம் இருந்தது கதையின் பரபரப்பை இசையில் தந்துள்ளார் ரமேஷ் நாராயணன். கதைக்கு ஏற்ற கதாநாயகனாக இருக்கிறார் ஹீரோ. நாயகியும் மிக அழகாக இருந்தார். டிரெய்லரில் சொல்ல வந்தது மிக எளிதாக புரிந்தது, இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றி பெறும்.

சின்னப்படம் பெரிய படம் என ஒரு பஞ்சாயத்து போய்க்கொண்டே இருக்கிறது இரண்டு படத்திற்கும் ஒரே உழைப்பு தான். ஒரு பெரிய நடிகர் சொன்னதை இங்கு சொல்கிறேன் படம் எடுக்கும் போது சின்ன படம், பெரிய படம் என எதுவும் இல்லை அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் இங்கு எல்லோரும் சின்னதாக இருந்து வந்தவர்களே படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணன் பேசியதாவது..,

நான் 100 படங்களுக்கு மேல் பல மொழிகளில் வேலை செய்துள்ளேன். ஒரு படத்தில் மொத்த படக்குழுவினரும் நன்றாக இருந்தால் தான் படம் நன்றாக வரும். சிட்தி படத்தில் மிக அற்புதமான குழுவினர் இணைந்துள்ளார்கள். எல்லோருக்கும் படம் பற்றிய புரிதல் இருந்ததாலே தான் இந்தப்படம் நன்றாக வந்துள்ளது.

இயக்குநர் ஒரு நாள் எனது இந்துஸ்தானி இசையை வேறு ஜானரில் கலந்து பயன்படுத்த போவதாக சொன்னார். அவரது தெளிவு பிரமிக்க வைத்தது. இந்தப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.

நடிகை கன்னிகா பேசியதாவது…

நான் மனோகரி படத்தில் வேலை செய்துள்ளேன் இந்தப்படம் பற்றி தெரியும் படம் நன்றாக வந்துள்ளது. மிக நல்ல தயாரிப்பாளர் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் நன்றி.

தயாரிப்பாளர் ராஜன் பேசியதாவது…

சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் என்றவுடன் எனக்கு ஏ எம் ரத்னம் அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறார். ஷங்கரை வைத்து, படமெடுத்து சம்பாதித்து அதே பணத்தை இங்கே படத்திலேயே விட்டுவிட்டு அதை அடைக்க தெலுங்கில் போய் படமெடுத்துகொண்டிருக்கிறார். சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் நல்ல பெயர் நன்றாக வரும். இந்த கடின காலத்திலும் தமிழில் படத்தை கொண்டு வரும் தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி. மலையாள சினிமாவில் சினிமாவுக்கு உண்மையாக இருப்பார்கள். இப்போது நான் எல்லாம் மலையாளப்படம் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரை சிரமப்படுத்துகிறார்கள் அவர்களை காப்பாற்றுங்கள் என்று தான் கேட்கிறேன். கேரளாவில் எல்லா நடிகர்களும் உதவி செய்கிறார்கள். இங்கே யார் உதவி செய்கிறார்கள். கொரோனா காலத்தில் ரஜினி சார் போன் செய்து என்ன உதவி வேண்டும் எனக்கேட்டு 100 மூட்டை அரிசி கொடுத்தார்.

ராம் சரண் படம் தோற்ற போது நான் ஹீரோ என்பதால் தான் படம் வாங்கினார்கள் என தயாரிப்பாளருக்கு 15 கோடியை திருப்பி கொடுத்தார். ராதே ஷ்யாம் படம் பெயிலர் பிரபாஸ் அந்த படத்திற்கு வாங்கிய பணத்தில் 50 கோடியை திருப்பி கொடுத்துவிட்டார். ராம் சரண், பிரபாஸை வணங்குகிறேன். வெற்றியில் பங்கு கொள்ளும் ஹீரோக்கள் தோல்வியிலும் பங்குகொள்ள வேண்டும். இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் RV உதயகுமார் பேசியதாவது,

படம் என்பது வேறு, குணாதிசியம் வேறு. ஒரு மென்மையானவன், வன்மையானவனாகிறான் என்பதை படமாக எடுக்கலாம். அது தான் இந்த படத்திலும் காட்டபட்டுள்ளது. அப்பாவி எப்படி சிக்கலுக்குள் மாட்டிகொள்கிறான் என்பது தான் கதை. ஹீரோக்களை ராஜன் அதிகமாக திட்டுகிறீர்கள், அது தவறு. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் போன்று சாப்பாடு போட்டவர் யாரும் இல்லை.

என்னை கூட்டி போய் சாப்பாடு போட்டவர் விஜயகாந்த். யாரும் பசியுடன் இருப்பது பிடிக்காமல் சாப்பாட்டு போட்டவர் விஜயகாந்த். கொரோனா காலத்தில் இயக்குனர் சங்கத்துக்கு ரஜினிகாந்த் போன் செய்து, எவ்வளவு பேர் கஷ்டத்தில் இருக்கீறீர்கள் என கேட்டு உதவியவர். எழுத்தாளர் சங்கத்திற்கும் உதவினார்.

கேட்காமலயே உதவியவர் அஜித் குமார். தோல்வி படத்திற்கு பிறகு அதே நிறுவனத்திற்கு படம் செய்து கொடுப்பவர்.
வாழ்ந்து பார்த்தால் தான் இயக்குனராக முடியும். சில டூபாக்கூர் இயக்குனர்கள் உள்ளனர்.

சிவாஜி சார், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் பிரபு என்னை அழைத்து சிவாஜி சாரிடம் கதை சொல்ல சொன்னார். நான் முதல் நாள் பார்த்த ஆங்கில படத்தின் கதையை கூறினேன். அதை கேட்ட அவர், இப்போதெல்லாம் பலர் சப்டில் ஆக்டிங், நேச்சுரல் ஆக்டிங் என சொல்கிறார்கள், நான் அதிகமாக நடித்துவிட்டேன், நான் மாற்றி நடிக்க வேண்டும் என்றார் சாகும் தருவாயிலும் நடிப்பில் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்த ஒப்பற்ற கலைஞன் அவர்.

சிலருக்கு தர்மம் பற்றி தெரியவில்லை. நமக்கு லாரன்ஸ், விஜய், சூர்யா என பலர் உதவினர். அவர்களை வாழ்த்த வேண்டும்.

இப்பொழுது சினிமாவை பிசினஸ் ஆக்கி விட்டீர்கள். சினிமா மீது ஆர்வம் கொண்டவர்களை இயக்குனராக்காமல், பணம் கேட்பவருக்கு கொடுத்து கெடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இந்த படம் தமிழ் தயாரிப்பாளர், மலையாள குழு உடன் படம் எடுத்துள்ளார். முன்னர் எல்லா மொழியும் சென்னையில் தான் எடுக்கபட்டது. இப்பொழுது தான் பான் இந்தியா என்ற வார்த்தை உள்ளது. ஆனால் முன்னரே அப்படி தான் எடுக்க பட்டது. அதை மாற்றியவர்கள், வியாபாரிகள். இசையமைப்பாளர் பற்றி தயாரிப்பாளரும், இயக்குநரும் தான் கூற வேண்டும். இசையமைப்பாளர் பாடல்களை சிறப்பாக உருவாக்கியுள்ளார் வாழ்த்துக்கள். சமீபத்தில் நான் பார்த்த டிரெய்லர்களில் என்னை விஷுவலாக அசத்தியது இந்தப்படம் தான். படத்தில் எல்லோரும் நன்றாக செய்துள்ளார்கள். ஹீரோயின் பெயரில் என் பெயரும் உள்ளது வாழ்த்துக்கள் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது..,
தயாரிப்பாளர் எனக்கு அறிமுகமானது, மனோகரி படத்தின் மூலமாக தான். அப்பொழுது அவர் கூறியது, மலையாளத்தில் நான் ஒரு படம் முடித்துள்ளேன், ஒரு தமிழனாக நான் தமிழில் முதல் படம் வெளியாக வேண்டும் என நினைக்கிறேன். மலையாள திரையுலகம் மிகபெரிய திரையுலகமாக இருக்கும் போது, அவர் தமிழ் மேல் கொண்ட ஈர்ப்பு அளப்பறியது. அவர் இந்த படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என்று விரும்பினார். இயக்குநருடன் நான் பேசிய வார்தைகள் குறைவு தான். பின்னர் இசையமைப்பாளர் பற்றி கூறிய போது, அவர் ஒரு மெலடி கிங் என கூறினார். அவர் சிறப்பாக வேலை செய்துள்ளார். மொத்த குழுவும் அயராத உழைப்பை தந்துள்ளனர். படத்தின் நிகழ்வை சென்னையில் வைக்கும் போது, யாரையாவது அழைக்கலாம் என்றபோது ராஜன் சாரை அழையுங்கள், உதயகுமார் சாரை அழையுங்கள் என்றேன். எல்லா நிகழ்வுகளுக்கும் இருவரும் வருகிறார்கள் என்ற சோர்வு பத்திரிக்கையாளருக்கு இருக்கும்.

சினிமாவில் யாரும் தோற்றுவிட கூடாது என நினைப்பவர்கள் அவர்கள். அவர்கள் அருகில் அமர்வது எனக்கு மகிழ்ச்சி. படத்தின் ஒளிப்பதிவு மிகவும் கடினமானது. கடலில் எடுத்த காட்சிகள் மிகவும் கடினமாது. தயாரிப்பாளரிடம் நான் ஓடிடிக்கு போகலாம் என கூறிய போது, அவர் தியேட்டர் தான் என்று உறுதியுடன் கூறினார். காரணம் அவர் இயக்குனராக வேண்டும் என சென்னை வந்தவர். அதனால் நான் சாதிக்க முடியாததை நிகழ்த்தி காட்ட, தயாரிப்பாளராக மாறியவர். படம் கண்டிப்பாக வெற்றி பெறும். வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் ஆரி பேசியதாவது…,
நான் உள்ளே வரும் போதே யாரார் வந்திருக்கிறார்கள் என கேட்டேன் ராஜன் சார், உதயகுமார் சார் வந்திருக்கிறார்கள் என்றார்கள், அப்போ நான் போய்விடுகிறேன் அவர்களே எல்லாவற்றையும் பேசிவிடுவார்கள் என்றேன். சின்ன பட்ஜெட் படங்களுக்கு யாரும் உதவாத போது, அப்படத்திற்கு ஜாமின் தரும் முதல் ஆட்களாக அண்ணன் ராஜன் அவர்கள் இருக்கிறார்கள். அண்ணன் ஏன் எல்லா பிரச்சனையும் பேசுகிறார் என்றால் அவருக்கு அவ்வளவு பிரச்சனை இருக்கிறது. அண்ணனும் நானும் பேசிக்கொண்டிருக்கும் போது ஒன்று ஞாபகம் வந்தது. நலிந்த தயாரிப்பாளர்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும், ஒரு நலிந்த தயாரிப்பாளரை காட்டுங்கள் ஒரு ரூபாய் பணம் வாங்காமல் நான் நடித்து தருகிறேன். இதே உதவியை நான் நடிகர் சங்கத்திற்கும் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த இயக்குனரும் நானும் சேர்ந்து ஒரு படம் செய்வதாக இருந்தது ஆனால் அதை தடுத்தது மோடி தான், டிமானிடைசேசன் வந்தது அது படத்தை பாதித்து விட்டது.

நீங்கள் கேஜிஎஃப் ரசிகராக இருந்தாலும் ஓகே பீஸ்ட் ரசிகராக இருந்தாலும் ஓகே ஆனால் படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள். இந்தப்படம் டிரெய்லரே தரமாக இருக்கிறது. அதில் உழைப்பு தெரிகிறது. தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் பயஸ் ராஜ் பேசியதாவது…

இந்தப்படம் மிக சிறந்த திரில் அனுபவமாக இருக்கும். இசையமைப்பாளர் மிக சிறப்பான இசையை தந்திருக்கிறார். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் I. M. விஜயன், ராஜேஷ் சர்மா, ஹரி கிருஷ்ணன், சிஜீ லால், வேணு மரியாபுரம், சொப்னா பிள்ளை, மதுவிருத்தி, திவ்யா கோபிநாத், தனுஜா கார்த்தி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு : கார்த்திக் S. நாயர்

இசை : ரமேஷ் நாராயணன்

வசனம் : சீனிவாச மூர்த்தி

பாடல்கள் : சினேகன், மலர் வண்ணன்.

எடிட்டிங் : அஜித் உன்னிகிருஷ்ணன்

நடனம் : சாமி பிள்ளை

ஸ்டண்ட் : பவன் சங்கர்

கலை : பெனித் பத்தேரி

மக்கள் தொடர்பு : மணவை புவன்

தயாரிப்பு :மகேஷ்வரன் நந்தகோபால்

தயாரிப்பு நிறுவனம் : சூர்யா பிலிம் புரொடக் ஷன்ஸ்.

எழுத்து – இயக்கம் : பயஸ் ராஜ் (Pious Raj).

Siddy audio launch

Director RV Udhaya Kumar praises top actors at SIDDY audio launch

லிஜோமோல், ஹரிபாஸ்கர் – லாஸ்லியா நடிக்கும் ‘அண்ணபூர்ணி’

லிஜோமோல், ஹரிபாஸ்கர் – லாஸ்லியா நடிக்கும் ‘அண்ணபூர்ணி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KH பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ODO பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து தயாரிக்க, லயோனல் ஜோசுவா இயக்கும் படம் “அண்ணபூர்ணி”. இன்று பூஜையுடன் இனிதே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உடன் தரணி ரெட்டி, ராஜீவ் காந்தி, வைரபாலன் ஆகியோர் நடிக்கின்றனர்.

த்ரில்லர் டிராமாவாக உருவாகும் அண்ணபூர்ணி படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பிரபல பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்திற்கு வசனங்களும் பாடல்களும் எழுதுகிறார்.

ஒளிப்பதிவு – ஹெக்டர், படத்தொகுப்பு – கலைவாணன், கலை – அமரன், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

Lijomol Jose – Hari Krishnan – Losliya starrer “Annapoorni”

அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் பார்க்கக் கூடாதவர்கள் யார்.?; ‘வாய்தா’ இசை விழாவில் தோழர் மகேந்திரன் பேச்சு

அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் பார்க்கக் கூடாதவர்கள் யார்.?; ‘வாய்தா’ இசை விழாவில் தோழர் மகேந்திரன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வினோத்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வாய்தா’.

இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ஓம் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரன் அவர்களின் புதல்வன் புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

அவருக்கு ஜோடியாக நடிகை பவுலின் ஜெசிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் பேராசிரியர் மு. ராமசாமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர். ஜே. சேது முருகவேல் அங்காரகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சி. லோகேஸ்வரன் இசை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீடு நேேேேற்றறறு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகியான சி மகேந்திரன், தயாரிப்பாளர் சி. வி. குமார், படத்தின் தயாரிப்பாளர் கே. வினோத்குமார், இயக்குநர் மகிவர்மன், புதுமுக நாயகன் புகழ் மகேந்திரன், பாடலாசிரியர் உமாதேவி, படத்தின் ஆடியோவை வெளியிடும் உரிமை பெற்றிருக்கும் டிப்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியான சரண்யா, படத்தின் நாயகி பவுலின் ஜெசிகா, கலை இயக்குனர் ஜாக்கி, படத்தொகுப்பாளர் நரேஷ் குணசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின் இயக்குநர் மகி வர்மன் பேசுகையில்,…

” வாய்தா திரைப்படத்திற்கு படக்குழுவினர் ஆகிய நாங்கள் பல முறை ‘வாய்தா’ வாங்கி, மக்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். நான் இந்தப் படத்திற்காக கதை எழுதும் முன் மாற்று சினிமா குறித்தும், மலையாள சினிமா குறித்தும் ஏராளமான திரை ஆர்வலர்கள் பேசியிருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான படைப்புகள் வருகை தந்து கொண்டிருக்கிறது.

சாதிய ரீதியிலும், வர்க்க ரீதியிலும் தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான படைப்புகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. அதனால் ‘வாய்தா’ அத்தகைய தோற்றத்திலான படமாக பார்க்கப்படும்.

ஆனால் ‘வாய்தா’ படத்தை நாங்கள் 2018 ஆம் ஆண்டில் மக்கள் பிரச்சனையை பேசும் படமாக தொடங்கிவிட்டோம். சினிமாவில் முதல் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்ததால், இந்தப் படைப்பு சற்று தாமதமாக வந்திருக்கிறது.

இந்தப் படத்தை முதலில் ‘ஏகாலீ’ என்ற பெயரில் சுயாதீன திரைப்படமாக தான் உருவாக்க வேண்டும் என நினைத்தோம்.

ஆனால் நண்பர் ஒருவர் மூலமாக தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களை சந்தித்து ஒரு முறை கதையை சொன்னேன். கதை அவருக்கு பிடித்தது.

உடனடியாக நானே தயாரிக்கிறேன் என ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு தளத்திற்கு அவர் ஒரே ஒரு நாள் ஒரு மணி நேரம் மட்டுமே வருகை தந்து பார்வையிட்டார். எங்கள் மீது நம்பிக்கை வைத்து படைப்பு சுதந்திரத்தை வழங்கினார். இதற்காக என்னுடைய முதல் நன்றியை அவருக்கு தெரிவிக்கிறேன்.

என்னுடைய படைப்பு மக்களுக்கானது. நான் கலையை மக்களுக்காக என்ற கொள்கை கொண்டவன். கலை கலைக்காக அல்ல என்பதை கடந்து கலையை மக்களுக்கானதாக காண்கிறேன்.

படத்தின் தொடக்கத்தில் முதலில் பாடல்களை வேண்டாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் சின்ன சின்ன அரசியல் பேசும் பாடல்களை இணைத்தோம்.

‘ஜோக்கர்’ படத்தில் எழுத்தாளரும், நடிகருமான பவா அவர்களின் குரலைக் கேட்டு, இந்தப் படத்திலும் அவரை பாட வைத்திருக்கிறோம். இதுபோன்று புது புது முயற்சிகளை செயல்படுத்த தொடங்கி, ஒன்பது பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது.

கடின உழைப்பிற்குப் பிறகு படத்தின் பணிகளை நிறைவு செய்து தணிக்கை குழுவிற்கு சென்றோம். ஏகாலி என்ற பட தலைப்பை பதிவு செய்யும்போது தயாரிப்பாளர் சங்கத்தில் இது ஒரு குறிப்பிட்ட ஜாதியை குறிக்கிறது. அந்த சாதிய அமைப்புகளிடம் இருந்து தடையில்லா சான்றிதழை வாங்கி வாருங்கள் என அறிவுறுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட சமூகத்தின் அமைப்பிலிருந்து தடையில்லா சான்றிதழை வாங்கி தலைப்பை பதிவு செய்தோம். அப்போதிருந்தே இந்த படத்திற்கு பிரச்சனை தொடங்கியது.

தணிக்கைக் குழுவினர் இந்த ஏகாலி என்ற வார்த்தையையும், தலைப்பையும் மாற்றும்படி அறிவுறுத்தினர். அதன் பிறகு தயாரிப்பாளருடன் விவாதித்து ‘வாய்தா’ என தலைப்பை மாற்றினோம்.

இது மக்களுக்கான படைப்பு. மக்களுக்கான அரசியல் பேசும் ‘வாய்தா’ படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நடிகரும், நாடக ஆர்வலருமான பேராசிரியர் மு. ராமசாமி பேசுகையில்….

, ” அண்மையில் இந்த திரைப்படத்தை பார்த்தேன். மிகவும் நேர்த்தியாக படமாக்கப்பட்டிருக்கும் படைப்பு. படப்பிடிப்பு நடைபெற்ற கிராமம் முழுவதும் எனக்கு நன்றாக பரிச்சயமானது. அந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டின் முற்றத்திலும் நான் உறங்கி இருக்கிறேன். உச்சக்கட்ட காட்சியில் பார்வையாளர்களில் மனதை கனக்க செய்துவிடும் காட்சிகள் உண்டு.

ஒரு நல்ல திரைப்படம் என்பது பார்வையாளர்களின் மனதை கனக்க செய்யவேண்டும் என்பார்கள். இன்றும் நாம் வாழும் சமூகத்தில் இப்படி ஒரு அவலங்கள் நடைபெறுகிறதே.. என்ற ஒரு ஆதங்கம் மனதுக்குள் எழும். அந்த அதிர்வை இந்த திரைப்படம் ஏற்படுத்தும். இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு என்னுடைய நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘வாய்தா’ திரைப்படம் வர்ணத்தையும் பேசுகிறது. வர்க்கத்தையும் பேசுகிறது. வர்ணாசிரம தர்மப்படி இந்த சமுதாயத்திற்குள் அழுத்தப்பட்டிருக்கும் வண்ணார் சமூகத்தின் நடவடிக்கைகள், வாழ்வியல் விசயங்கள் இதில் விரிவாக பேசப்பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் சாதிய மதவாத ஆதிக்க சக்திகளின் குரல் ஓங்கி இருக்கும் நிலையில், இது போன்ற படைப்புகள் வரவேண்டும். மக்களின் மனதில் சில கேள்விகளை எழுப்பும். எழுப்ப வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்.

தமிழகம் முழுவதும் மிக குறைவான எண்ணிக்கையில் இருக்கும் இந்த சமூகத்திலிருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட வரவில்லை என நினைக்கிறேன். ஆனால் இவர்கள் ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஏதேனும் ஒரு வகையில் சடங்குகளுடன் தொடர்புடையவர்கள்.

இவ்வாறு சமூகத்தின் கடைநிலையில் வாழும் எளிய மனிதன் சட்டத்தின்முன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதை மிக நேர்த்தியாக இயக்குநர் மகி வர்மன் உருவாக்கியிருக்கிறார்.

தற்போதைய கணினி மயமாக்கப்பட்ட சூழலில் இந்த சமூகத்தினருக்கு சலவை தொழிலாளர்கள் என சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் இவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

இன்றைய திரை உலகில் ஏராளமான இளைஞர்கள் அறிமுகமாகி சினிமாவை ஒரு வலிமையான ஆயுதமாக பயன்படுத்தும் திராணியை பெற்றிருக்கிறார்கள்.

தற்போதைய சூழலில் தணிக்கை குழு மேலும் கடுமையாக்கப்பட்டிருக்கிறது எதிர்காலத்தில் வரும் படைப்பாளிகள் தங்கள் கருத்தினை வெளியிடுவதற்கு கடும் நெருக்கடி ஏற்படும். ஆனால் கடும் அழுத்தங்களையும் மீறி குறியீட்டுகளாலும், அழகியலோடும் கருத்துகளை வெளியிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இதனை ‘வாய்தா’ படத்தின் மூலம் விதைத்திருக்கும் இயக்குனருக்கும், படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

தயாரிப்பாளர் சி.வி. குமார் பேசுகையில்,….

” படத்தின் தயாரிப்பாளரான வினோத்குமார் என்னுடைய நண்பர் அவர் தொழில் முதலீட்டாளர்கள் இணையம் வழியாக தொழில் முதலீடு குறித்த சந்திப்பை நடத்தி மத்திய அரசுடன் இணக்கத்துடன் கூடிய நட்புடையவர். ஆனால் அவர் அதற்கு நேர் மாறாக ஒரு திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். அண்மையில் இந்தத் திரைப்படத்தை பார்த்தேன். நல்லதொரு தரமான படைப்பாக இருக்கிறது.

ஆர்ட் பிலிம், இன்டிபென்டன்ட் பிலிம், கமர்சியல் பிலிம் என்றும், இதை கடந்தும் பல தயாரிப்பாளர்கள் பேசுகிறார்கள். ஆனால் என்னைப்பொறுத்தவரை நான் ஒரு பொதுத்தளத்திலான பார்வையாளர்களுடைய எண்ணத்தைக் கொண்டவன். இந்தப் படத்தை பார்க்கலாமா? பார்க்கக் கூடாதா. என்ற ஒரே ஒரு கேள்வி மட்டுமே என் முன் இருக்கும். அதை கடந்து ஆர்ட் பிலிம் கமர்ஷியல் பிலிம் என்ற சிந்தனை எல்லாம் இருக்காது. இரண்டு மணி நேரம் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் திரையரங்குகளுக்கு நுழைகிறோம் அதற்கு ஏற்றதா? இல்லையா? என்பது மட்டுமே என்னுடைய எதிர்பார்ப்பாக இருக்கும். அந்த வகையில் இந்த வாய்தா படம் நல்ல படமாகவும், பொழுதுபோக்கிற்கு ஏற்ற படமாகவும் அமைந்திருக்கிறது.

இன்றைக்கு இருக்கும் நீதிமன்ற சூழலில் ஒரு சாதாரண மனிதன் நீதிமன்றத்தினை நாடினால் அவனுக்கு என்ன அனுபவம் கிடைக்கிறது என்பதனை துணிச்சலுடன் படமாக்கி இருக்கிறார்கள்.

இந்தப் படம் வெளியான பிறகு தயாரிப்பாளர் மீது ஏராளமான வழக்குகள் பதியப்படும் என்பது உறுதி. குறைந்தபட்சம் 50 நீதிமன்றங்களிலாவது படத்தைப் பற்றியும், படத்தயாரிப்பாளர் மீதும் வழக்கு பாயலாம். ஏனெனில் அந்த அளவிற்கு இந்த படத்தில் ஏராளமான முரண்பாடுகள், கருத்து பேதங்கள் இருக்கிறது.

வாய்தா போன்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஊடகங்கள் பெரிய அளவில் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான தோழர் சி. மகேந்திரன் பேசுகையில்….

, ” தமிழ் சினிமா மட்டுமல்ல அரசியல், வாழ்க்கை, இலக்கியம்.. இவை அனைத்தும் நேர்மையில் இருந்து விலகி செல்லும்போது, அதற்குரிய விலையை அது கொடுத்துவிட்டு தான் செல்லும். சினிமாவும் இப்படிதான்.

சினிமா என்பது ஒரு எஜுகேஷன். லூமியர் சகோதரர்கள் சினிமாவை உருவாக்கியபோது தயாரிப்பாளர்கள் கிடையாது. தெருக்கூத்து போன்று தன்னுடைய கருத்துக்களை சொல்லிக்கொண்டே இருக்கும்.

25 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டு இருந்த பொழுது அந்த திரைப்படத்தை பார்த்திருக்கிறேன்.

ஒரு தொழிலாளி உறங்கிக் கொண்டிருப்பான். அவன் காலில் ஒரு கரப்பான் பூச்சி கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, ரத்தம் வெளியேறும். அது அவனுக்குத் தெரியாது. அதன் விளைவு என்னவென்றால் அவன் தினமும் 20 மணி நேரம் உழைத்து விட்டு, தன்நிலை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை எந்தவித தொழில்நுட்ப இல்லாமல் நேர்த்தியாக உணர்த்தி இருப்பார். இது தொழிலாளர்களுக்கு ஒரு விழிப்புணர்வை உண்டாக்கியது. அவர் ஊர் ஊராக சென்று இதனை காண்பித்தார். எது ஒன்று வளர்ச்சி அடைகிறதோ..அது வணிக மயமாகி விடும்.

இதுபோன்ற சூழலில் வித்தியாசமான படமாக பேராசிரியர் மு ரா குறிப்பிட்டதுபோல் வண்ணார் சமூகத்தை பற்றிய படமாக ‘வாய்தா’ உருவாகியிருக்கிறது.

வண்ணார் சமூகத்திலேயே புரத வண்ணார் என்றொரு சமூக பிரிவும் இருக்கிறது. இவர்கள் யார் என்றால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உடைகளை சலவை செய்து தருபவர்கள்.

உயர் ஜாதி மற்றும் இடை சாதிப் பிரிவினரின் ஆடைகளை சலவை செய்து தருவது வேறு ஒரு பிரிவு. நம்முடைய வர்ணாசிரம தர்மப்படி புரத வண்ணார் காண கூடாதவர்கள். ( Unseeable) அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்தில் (Un Approachble ) பார்க்கக் கூடாதவர்கள் என்று இவர்களை குறிப்பிடுகிறார். இவர்களை பார்த்தால் பார்த்தவர்களின் குடும்பம் கெடும். கெட்டுப்போகும். அழிந்து போகும்.. என்பதை போன்ற மூட நம்பிக்கை கொண்டவர்கள். இவர்கள் நள்ளிரவில் மட்டுமே தங்களின் வாழ்வாதாரத்தை மேற்கொள்பவர்கள்.

என்னுடைய இளைய தோழர் மகி இதுபோன்ற ஒரு விசயத்தை படைப்பாக மாற்றும் போது, நான் வியந்து போனேன். பேராசிரியர் மு ரா குறிப்பிட்டதுபோல் துணிச்சல் மிக்க படைப்பாளியாகத் தான் நான் அவரை பார்க்கிறேன்.

என்னுடைய மகன் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மகனாக இருந்தாலும் அவரும் என்னுடைய இளைய தோழர் தான். அவரும், அவருடைய நண்பர்களும் கடினமாக உழைத்து இந்த படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரை படக்குழுவினர் எனக்கு அறிமுகப் படுத்தும்போது அவரிடம் ஒரு சிறந்த பண்பு இருந்தது. அது இந்தப் படைப்பில் நேர்த்தியாக வெளிப்பட்டிருக்கிறது.

தயாரிப்பாளர் சி. வி. குமார் பேசுகையில் ஒன்றை குறிப்பிட்டார். ‘இங்கு நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால் சமூகத்திற்காக ஏதேனும் செய்ய வேண்டும். உலகம் தவறான திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறதே.. மறுக்கப்பட்ட நியாயத்தை சொல்ல வேண்டுமென்ற எண்ணம் எழுகிறது’ என குறிப்பிட்டார்.

ஏனெனில் மனிதன் வாழும் போதும்.. வாழ்ந்த பிறகும் நிம்மதியாக இறக்க வேண்டும். கெடுதல் செய்து செய்து இறக்க வேண்டுமா..? ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதுதான் கலையாக வடிவம் பெறுகிறது.

இப்போதைய தமிழ் சினிமாவில் பல கூறுகள் இருக்கலாம். ஆனால் நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். திரைத்துறையில் நேர்மையாக செயல்பட வேண்டும் என்ற அடிப்படையை உடையவர்களால் தான் மாற்றத்தை உண்டாக்க முடியும்.

படத்தின் உள்ளடக்கத்திற்காக முதலீடு செய்து தன்னை இணைத்துக்கொண்ட பட தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். இது என்னுடைய கடமை என எண்ணுகிறேன். ” என்றார்.

விழாவின் இறுதியில் தோழர் சி. மகேந்திரன், ‘வாய்தா’ படத்தின் இசையை வெளியிட, அதனை சிறப்பு விருந்தினரான தயாரிப்பாளர் சி.வி. குமார் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

Mahendran speech at Vaaitha audio launch

ஆன்டி ஹீரோவாக பிரசாந்த் நடிக்கனும்.. அப்போதான் அது நடக்கும்.. – ஆர்கே. செல்வமணி

ஆன்டி ஹீரோவாக பிரசாந்த் நடிக்கனும்.. அப்போதான் அது நடக்கும்.. – ஆர்கே. செல்வமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆண்டுதோறும் தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம்.இந்த ஆண்டு
சென்னை தி.நகர் பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இந்த விழாவில் பெப்ஸியின் தலைவரும் அண்மையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றவருமான இயக்குநர் ஆர். கே. செல்வமணி ,இயக்குநர் ஏ.வெங்கடேஷ்,
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் இசையமைப்பாளருமான தினா ஆகியோர் கலந்து கொண்டு பிரஷாந்தை வாழ்த்தினர்.

இவ்விழாவில் பிரஷாந்தின் தந்தையும் இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் பேசும்போது

” இது நமது குடும்ப விழா. வந்திருக்கும் அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் அவர்கள் பிரஷாந்த்தின் பிறந்த நாள் விழாவிற்கு வந்து வாழ்த்துவார்கள்.
பல ஆண்டுகளாக அவர்களுடனேயே எங்கள் குடும்பமும் இருக்கிறது என்று உணர்கிறேன் .

சற்று இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

‘அந்தகன்’ வந்ததும் பிரசாந்துக்கு டும் டும் டும்..; பெண் பார்த்து வைத்துள்ள தியாகராஜன்

பிரஷாந்த் நடித்து அடுத்தடுத்து படங்கள் வர உள்ளன. இப்போது தயாராகிக் கொண்டிருக்கும் ‘அந்தகன் ‘திரைப்படம் பிரஷாந்த்துக்கு மறக்க முடியாத படமாக இருக்கும். இந்தப் படம் இந்தியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது .

தெலுங்கு, மலையாளத்திலும் பெரிய வெற்றி பெற்றது .சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியாகி பெரிய வசூல் செய்த படம் அது.தமிழிலும் பிரம்மாண்டமாகவும் பெரும் பொருட்செலவிலும் எடுக்கப்பட்டு வருகிறது.

நிறைய நட்சத்திரங்கள் நிறைந்த ஒரு படமாக இப்படம் உருவாகிறது .பிரஷாந்துடன் அனுபவமிக்க பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சிம்ரன், சமுத்திரக்கனி, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் , மனோபாலா என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஒரு சிறு வேடத்திற்கு கூட பிரபலமானவர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம்.

பிரஷாந்துக்கு அடுத்தடுத்து அழுத்தமான நல்ல கதைகளையும் நல்ல இயக்குநர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம். அப்படி நல்ல படங்கள் அமையும் என்று நம்புகிறோம்.

இங்கே வந்திருக்கும் ஆர்.கே செல்வமணி அவர்கள் மீண்டும் மீண்டும் இயக்குநர் சங்கத் தேர்தலில் வெற்றி பெறுகிறார். அந்த அளவிற்கு அவர் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவர் ஒரு சிறந்த இயக்குநர் மட்டுமல்ல இயக்குநர்கள் சங்கத்துக்குப் பாடுபடக் கூடியவரும் கூட.

அவர் தனது வெற்றிப் படங்கள் போலவே இந்த சங்கப் பணிகளிலும் முத்திரை பதித்துள்ளவர்.

பிரசாந்தின் ‘அந்தகன்’ உடன் இணைந்த ‘அசுரன்’ தயாரிப்பாளர்; 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டணி

இன்று திரைப்படக்கல்லூரியில் படிக்காமலேயே பல இளைஞர்கள் இயக்குநர் கனவோடு வருகிறார்கள். அவர்கள் இன்றுள்ள நவீன தொழில்நுட்பங்கள் தெரியாமல் சிரமப்படுகிறார்கள்.

அவர்களுக்கு இன்றுள்ள நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுப்பதற்கு ஒரு பள்ளி ஆரம்பித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று செல்வமணி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் .அதற்குப் பிரஷாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நான் ஐந்து லட்ச ரூபாய் அன்பளிப்பாக வழங்குகிறேன்.வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி, ”இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

இயக்குநர் ஏ வெங்கடேஷ் பேசும்போது,

“நான் பிரஷாந்த் சாருடன் ‘சாக்லெட் ‘என்ற ஒரு படத்தில் மட்டும்தான் பணி புரிந்தேன். ஆனால் பல படங்களில் பணிபுரிந்த அளவிற்கு எங்களிடம் நல்ல பழக்கமும் நல்ல புரிதலும் தொடர் நட்பும் உள்ளது.அன்று முதல் அவருடன் நான் தொடர்ந்து பயணம் செய்கிறேன்.

பிரஷாந்த் சாரை வெறும் நடிகராகவே மற்றவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த தொழில் நுட்பக் கலைஞர். அவருக்கு நல்ல கதை அறிவும் தொழிநுட்ப அறிவும் உள்ளது.

திரையுலகில் ஒரு பேச்சு உள்ளது பிரஷாந்தைக் கெடுப்பதே அவரது அப்பாதான் என்று .இதை என்னிடம் பலர் நேரிலேயே கூறியிருக்கிறார்கள்.

இது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது தியாக ராஜன் சார் மௌனமான ஒரு சிரிப்பு சிரித்தார். ஆனால் பிரஷாந்த் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

” எந்த தந்தையாவது தன் மகன் வாழ்க்கையைக் கெடுப்பதற்கும் இடையூறு செய்வதற்கும் விரும்புவாரா? எனக்கு என் அப்பா தான் எல்லாம்” என்றார். அந்த நொடியிலேயே அவர் மீது எனக்கு மேலும் மதிப்பு அதிகரித்தது.”
இவ்வாறு ஏ.வெங்கடேஷ் கூறினார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,

” பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள ஒரு நடிகர் பிரஷாந்த்.அவரது பலம் வெளிநாடுகளில்தான் தெரியும். அந்த அளவிற்கு அவரை வெறித்தனமாக பின்பற்றும் ரசிகர்கள் வெளிநாடுகளில் உண்டு. மலேசியாவில் நட்சத்திரக் கலை விழா நடத்தி வெற்றி பெற்றவர் இவர் ஒருவராகத்தான் இருப்பார். அந்தளவுக்கு அவருக்கு அங்கே ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பிரஷாந்த் தன் தந்தை மீது வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் மற்றவர்களுக்கு உதாரணமாக உள்ளது. அப்படிப்பட்டவர் மேலும் பல உயரங்களைத் தொடுவார்” என்று கூறி வாழ்த்தினார்.

இசையமைப்பாளர் தினா பேசும்போது,

” பிரஷாந்தின் புகழ் எந்த அளவிற்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. அவருக்கு வெளிநாடுகளில் நல்ல புகழ் உள்ளது. வெளிநாடுகளில் நடக்கும் இசை விழாக்களுக்கும் நட்சத்திரக் கலை விழாக்களுக்கும் அவர் வந்தால் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிடும் .இதை நாங்கள் பலமுறை அவரை அழைத்துச் சென்றபோது உணர்ந்திருக்கிறோம். எங்கள் இசைக்கலைஞர்கள் சங்கத்திற்குப் பலமுறை விழாக்களுக்கு வந்து அவர் இப்படி ஒத்துழைப்பு கொடுத்து உதவியது பலருக்கும் தெரியாது.

இவர் மாதிரி ஒரு பன்முகத் திறன் வாய்ந்த நடிகரைப் பார்க்க முடியாது. மைக்கேல் ஜாக்சன் போலவே பல்வேறு திறமைகள் கொண்டவர். அவரைத் தமிழகத்தின் மைக்கேல் ஜாக்சன் என்று கூறலாம் “என்று கூறி வாழ்த்தினார்.

இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசும்போது,

“தியாகராஜன் சாருக்கும் எனக்கும் உள்ள நட்பு முப்பதாண்டுகளாக அதே அளவு நீடிக்கிறது.அன்று பார்த்தது முதல் அப்படியே இருக்கிறார்.

எனது முதல் இரண்டு படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஒரு காதல் கதை எடுப்பதாக முடிவு செய்தபோது பலரையும் நடிக்க வைத்தோம். நான் திருப்தியடையவில்லை. அப்போதுதான் பிரஷாந்த் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்தையும் அதிலிருந்த அவரது படத்தையும் பார்த்து அவரை எனக்குப் பிடித்து விட்டது. நடிக்க வைத்தேன்.

அப்போது பலரும் அவரது தந்தை பற்றி என் காதுபடப் பேசினார்கள்.சரியாக வராது என்றார்கள். அவர் என் படத்தில் நடிக்க வந்த பிறகும் கூட நம்பாத நிலை இருந்தது. முன்பணமும் அவர் வாங்கவில்லை.

அதனால் பலரும் சந்தேகிக்கிறார்கள் என்று அவருக்கு நான் 25 ஆயிரம் ரூபாய் வலுக்கட்டாயமாக முன்பணமாகக் கொடுத்தேன்.அவருக்கு கொடுத்த சம்பளமே அவ்வளவுதான். அவர் நடித்துக் கொடுத்து ஒத்துழைத்தார். படப்பிடிப்பின்போது நான் ரோஜாவை மட்டுமல்ல பிரஷாந்தையும் காதலித்தேன். அந்தளவுக்கு அவரை எனக்குப் பிடித்தது.

அவரது அறிவுக்கும் திறமைக்கும் அன்புக்கும் தொழில்நுட்ப ஆர்வத்திற்கும் அவர் தனக்கான சரியான உயரத்தை அடையவில்லை என்றுதான் நான் சொல்வேன். அவர் இந்த கால மாற்றத்திற்கேற்ப ஆன்டி ஹீரோவாக, நெகட்டிவ் ரோல்களில் கவனம் செலுத்தினால் பெரிய உயரத்தை அடையலாம்.
இப்போதெல்லாம் மக்கள் நடிகர்களை நடிகர்கள் என்றுதான் பார்க்கிறார்கள். ஹீரோ, வில்லன் என்று யாரும் பார்ப்பதில்லை .எனவே அவர் பல்வேறு திறமைகளை நடிப்பில் காட்டிக் கொள்ள வாய்ப்புள்ள நெகடிவ் ரோல்களில் நடித்தால் பெரிய உயரம் தொடுவார்” என்று கூறி வாழ்த்தினார்.

இறுதியாக அனைவருக்கும் பிரஷாந்த் நன்றி கூறினர்.

RK Selvamani talks about Prashanth at his birthday party

More Articles
Follows