தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சென்டிமெண்ட் இருக்கும்.
பெரும்பாலும் தன் படத்தின் ஒரு காட்சியை ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் வைப்பார் ரஜினிகாந்த்.
இதனால் அந்த பிள்ளையாரை ரஜினி பிள்ளையார் என்றே அழைக்கின்றனர்.
அதுபோல் டி.ராஜேந்தர் தான் இயக்கி நடித்த படங்களின் தலைப்பு 9 எழுத்தில் இருக்கும்மாறு வைத்திருப்பார்.
இந்நிலையில் விஜய் சென்டிமெண்ட் பார்ப்போரோ? இல்லையோ அவரது ரசிகர்கள் அவருக்கான சென்டிமெண்ட்டை கண்டு பிடித்துள்ளனர்.
அதன்படி அவர்கள் கூறியுள்ளதாவது…
தலைவா, பைரவா, சுறா, ஜில்லா என எ ஆங்கில எழுத்தில் முடியும் டைட்டில்கள் உங்களுக்கு செட்டாகவில்லை.
அதற்கு மாறாக போக்கிரி, துப்பாக்கி, கத்தி, தெறி, காதலுக்கு மரியாதை, குஷி, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி போன்று ஐ (ஆங்கில எழுத்தில்) முடியும்மாறு தலைப்பு வையுங்கள்.
அதான் உங்கள் வெற்றிக்கு ஒர்க் அவுட் என்கிறார்களாம்.
அது ஒரு பக்கம் இருக்கட்டும் ரசிகர்களே…
பூவே உனக்காக படம் எ எழுத்தில் முடிந்தது ஆனால் மாபெரும் வெற்றிப் பெற்றது.
புலி, ஆதி, கீதை படங்கள் ஐ எழுத்தில் முடிந்தது.
ஆனால் இவை தோல்வி அடைந்தது. இது விஜய்க்கோ அவரது ரசிகர்களுக்கோ தெரியாமலா இருக்கும்.
தளபதியே முடிவு செய்யட்டும் பாஸ். ஏதோ எங்களுக்கு தெரிஞ்சதை சொல்றோம் ஜி.
Will title letters Sentiment workout for Vijay