மீண்டும் சிம்பு-ஹன்சிகா ஜோடி இணையுமா?

மீண்டும் சிம்பு-ஹன்சிகா ஜோடி இணையுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and hansikaசிம்புவின் படங்களை போல், அவரது காதல்களும் சர்ச்சையில் சிக்காமல் இருப்பது இல்லை.

முன்பு நயன்தாராவை காதலித்தார் அது முறியவே ஹன்சிகாவை காதலித்தார். அதுவும் முறியவே ஆன்மிகத்தை காதலித்தார்.

இதனிடையில் இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தார்.

திரையில் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து… சிம்பு தற்போது நடித்து வரும் AAA படத்தில் சிம்புவின் ஜோடியாக ஹன்சிகா நடிக்கக்கூடும் என தகவல்கள் கிடைத்தன.

ஆனால் இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இச்செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

எனவே விரைவில் சிம்புவின் ஜோடி யார்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

‘கபாலி விளம்பரம்; அதிக விலை…’ ரஞ்சித் பரபரப்பு பேட்டி!

‘கபாலி விளம்பரம்; அதிக விலை…’ ரஞ்சித் பரபரப்பு பேட்டி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ranjith stillsகபாலி படத்தின் ரிலீசுக்கு முன்பும் அதன் பின்னரும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், வசூல் பற்றியும் பேச்சுக்களும் எழுந்துள்ளன.

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் ரஞ்சித் கூறியதாவது…

கபாலி பார்த்துவிட்டு இயக்குனராக ஜெயித்துவிட்டீர்கள் என ரஜினி பாராட்டினார். மகிழ்ச்சி. இது வழக்கமான ரஜினி படம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

என்னை பொறுத்தவரை நான் ரஜினியை சரியான விதத்தில் பயன்படுத்தி உள்ளேன்.

அவருடைய படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. இது ரஜினி படம் என்பதே போதும்.

ஆனால் நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு மீடியாக்கள் முதல் தனியார் நிறுவனங்கள் வரை அனைவரும் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டனர்.

இந்த படத்தின் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்றது சரியல்ல. சென்னையிலுள்ள காசி தியேட்டரில் நான் படம் பார்க்க போன போது ரசிகர்களே வந்து என்னிடம் இதுபற்றி தெரிவித்தார்கள்.

எனக்கு அதிகாரம் இருந்தால் நிச்சயம் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதை தடுத்திருப்பேன்.”

இவ்வாறு ரஞ்சித் தன் கபாலி அனுவங்களை தெரிவித்திருக்கிறார்.

ஒரே படத்தில் இணைந்த தனுஷ்-சிம்பு… ரசிகர்கள் உற்சாகம்!

ஒரே படத்தில் இணைந்த தனுஷ்-சிம்பு… ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and dhanushதமிழ் சினிமாவில் இரு துருவங்களாக பார்க்கப்படும் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஒரு படத்தில் இணைந்து நடித்தனர்.

அதன்பின்னர் வந்த ரஜினி-கமல், விஜய்-அஜித், சூர்யா-விக்ரம் ஆகியோரும் படங்களில் இணைந்து நடித்தனர்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடையே இரு துருவங்களாக பார்க்கப்படும் சிம்பு-தனுஷ் இணைந்து நடித்தது இல்லை.

ஆனால் தற்போது இருவரும் ஒரு படத்திற்காக இணைந்துள்ளனர்.

தமன் இசையமைப்பில் உருவாகிவரும் திக்கா என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார் தனுஷ்.

இப்படத்தில் உள்ள மற்றொரு பாடலை சிம்பு பாடியிருக்கிறார்.

ஒரே படத்தில் தனுஷ் மற்றும் சிம்பு பாடியிருப்பது ரசிகர்கள் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இப்படத்தில் நாயகனாக சாய் தரம் தேஜா நடித்து வருகிறார். சுனில் ரெட்டி இயக்க, டாக்டர் ரோகின் ரெட்டி தயாரிக்கிறார்.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.

விக்ரம்-கௌதம் மேனன்… மீண்டும் இணைவார்களா..?

விக்ரம்-கௌதம் மேனன்… மீண்டும் இணைவார்களா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram-and-gautham-menonநான் எதிர்பாராத கூட்டணி கூட சில சமயம் அரசியலில் நடந்துவிடும்.

ஆனால் மிகவும் எதிர்பார்க்கும் கூட்டணி சினிமாவில் அமைவதில்லை.

கமல், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்டோர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துவிட்டனர்.

ஆனால் விக்ரம் இதுவரை கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவில்லை.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விக்ரமுக்கு கௌதம் மேனன் விருது வழங்கினார்.

அப்போது விக்ரம்முடன் பணிபுரிய ஆசை என தெரிவித்தார்.

மேடையில் இணைந்த இந்த கூட்டணி திரையில் இணைவது எப்போது என்பதை காத்திருந்து பார்ப்போம்.

அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

apj abdul kalam 1st year vishal trustமக்களின் ஜனாதிபதி என அன்போடு அழைக்கப்பட்ட ஏபிஜே அப்துல்கலாம் மறைந்து இன்றோடு முதலாம் ஆண்டு நிறைவு பெறுகிறது.

எனவே நடிகர் விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் இன்று (27.7.2016) நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது.

இதில் தென்னிந்தியா நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் மேலாளர் முருகராஜ் கலந்து கொண்டார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த அரவிந்த் ஃபவுன்டேஷனை சேர்ந்த மாணவ மாணவியர்களின் படிப்பிற்கு தேவையான புத்தகம், பேனா, பென்சில் மற்றும் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும் ஒவ்வொரு மாணவர்களிடமும் ஒரு மரக்கன்றை கொடுத்து வளர்க்கும் படி கொடுக்கப்பட்டது.

இதில் நடிகர் சௌந்தரராஜா, புரட்சி தளபதி விஷால் நற்பணி மன்ற தலைவர் ஜெய சீலன், செயலாளர் ஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.​

12 வயது சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய தனுஷ்

12 வயது சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

12 yr kotiswari familyஒரு யதார்த்த நடிகராக வலம் வரும் தனுஷை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை எனலாம்.

இந்நிலையில் இவரை தன் வாழ்வில் ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும் என ஒரு 12 வயது சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் தனுஷ்.

அந்த சிறுமியின் பெயர் காளீஸ்வரி. ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவரின் கடைசி நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

எனவே தன்னுடைய கடைசி ஆசையாக தனுஷை சந்திக்க விரும்பினாராம்.

அதன்படி தனுஷ் அவரை சந்தித்து அவருடன் தன் நேரத்தை செலவிட்டுள்ளார்.

More Articles
Follows