தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் 3 வேடங்களில் நடித்த மெர்சல் படம் இந்தியளவில் மிகப் பிரபலமாக முக்கியமான காரணம் பாஜக. எதிர்ப்பு அலைதான்.
பா.ஜக. வை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் எச். ராஜா ஆகிய இருவரும் இப்படத்தை கடுமையாக எதிர்த்தனர்.
தற்போதும் இவர்கள் விஜய் நடிப்பில் நேற்று வெளியான சர்கார் படத்தையும் எதிர்த்து வருகின்றனர்.
தன் செங்கோல் கதையை திருடி சர்கார் படத்தை படமாக்கி விட்டார் என வருண் என்பவர் வழக்கு தொடுக்க, பின்னர் அவரிடம் சமரசம் செய்துக் கொண்டார் முருகதாஸ்.
இது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இது குறித்து தமிழிசை பேசும்போது கள்ள கதையை வைத்து கள்ள ஓட்டை பற்றி படமெடுத்துள்ளனர் என விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று சர்கார் படத்தை மறைமுகமாக தாக்கும் வகையில் தன் ட்விட்டர் பக்கத்தில் எச். ராஜா இந்த பதிவை இட்டுள்ளார். இதோ அந்த பதிவு
H RajaVerified account @HRajaBJP
படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா
Why dont you steal best story BJP Raja asks Sarkar team