விஸ்வாசம் அப்டேட்ஸ்..: மதுரை ஸ்லாங்கும் அஜித் பாடி லாங்குவேஜும்

ajith in viswasamஅஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தை வருகிற 2019ல் பொங்கல் தினத்தில் வெளியிடவுள்ளனர்.

இப்படத்தில் அஜித்தின் கேரக்டர் மற்றும் படக் கதை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

தேனி மாவட்டத்தில் உள்ள கொடுவிலார்பட்டி என்கிற கிராமத்தில் தான் கதை நடக்கிறதாம்.

இதில் தூக்கு துரை என்ற கிராமத்து இளைஞனாக அஜித் நடித்துள்ளார். மேலும் முதன் முறையாக மதுரை ஸ்லாங்கும் பேசி அதற்காக தன் பாடி லாங்குவேஜ்ஜையும் மாற்றியிருக்கிறாராம்.

நாம் ஒருவருக்கொருவர் அன்பாய் இருப்பதை விட விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்பதுதான் படத்தின் ஒன் லைன் கதையாம்.

காலா படத்திற்கு வசனம் எழுதிய மணிகண்டன், இரும்புத்திரை படத்திற்கு வசனம் எழுதிய பாக்யராஜ், சபரி உள்ளிட்டோர் விஸ்வாசம் படத்திற்கு வசனம் எழுதி உள்ளனர்.

அஜித்தின் ஜோடியாக நிரஞ்சனா என்ற கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார்.

அஜித்தின் தாய் மாமனாக தம்பி ராமைய்யா நடித்துள்ளார். மற்றொரு முக்கிய கேரக்டரில் விவேக் மற்றும் யோகி பாபுவும் இணைந்துள்ளனர்.

இப்படத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமில்லை என கூறப்படுகிறது. படத்தில் 5 பாடல்கள் உள்ளதாம். விவேகா, அருண்பாரதி, தாமரை பாடல்களை எழுதியுள்ளனர்.

Overall Rating : Not available

Related News

அண்மைக்காலமாக அஜித் நடித்த வீரம், வேதாளம்,…
...Read More
சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீபிரியங்கா, சீமான்,…
...Read More

Latest Post