தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஷால் தனது அடுத்த புதிய படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார்.
பெயரிடப்படாத இதற்கு தற்காலிக பெயராக #விஷால்32 என்று வைத்துள்ளார்கள்.
நடிகர்களில் நெருங்கிய நண்பர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.
இந்த நிறுவனம் தான் #விஷால்32 படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே, சன் டிவியில் ஹிட் அடித்த நிகழ்ச்சியான, விஷால் பங்கு பெற்ற “சன் நாம் ஒருவர்” நிகழ்ச்சியை இந்த ராணா புரொடக்ஷன்ஸ் தான் தயாரித்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து தனது நண்பர்கள் ரமணா, நந்தா தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கிறார் விஷால்.
இதன் படபிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
#சமர் படத்தில் விஷால் திரிஷாவுடன் இணைந்து நடித்த சுனைனா, முதன் முறையாக விஷாலுடன் தனி ஹீரோயினாக ஜோடி சேருகிறார். சுனைனா படங்களில் இது முக்கிய படமாக இருக்கும்.
ஒரு ‘பொருள்’ – #விஷால்32 படத்தின் கதையையும் டைட்டிலையும் தீர்மானிக்கும். விரைவில் டைட்டில் வெளியாகும் போது அந்த ‘பொருள்’ என்னவென்று தெரிந்துவிடும்.
சமீபத்தில் வெளியான பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய A. வினோத்குமர் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே கதை, திரைக்கதை எழுதுகிறார்.
வசனம்: A.வினோத்குமார்/பொன்பார்த்திபன்.
சாம் CS இப்படத்திற்கு இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.
Vishal to romance actress Sunaina for his next