ரஜினி-அஜித்தை சமாளிக்க முடியாது என்பதால் முன்கூட்டியே முடிவை அறிவித்த விஷால்

ரஜினி-அஜித்தை சமாளிக்க முடியாது என்பதால் முன்கூட்டியே முடிவை அறிவித்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalஇந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 5 படங்கள் மோதுகின்றன.

டிசம்பர் 21ல் தனுஷின் மாரி2, ஜெயம் ரவியின் அடங்கமறு, சிவகார்த்திகேயனின் கனா, விஜய்சேதுபதியின் சீதக்காதி, விஷ்னுவிஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே தேதியில் மோதாமல் பட ரிலீஸ் தேதியை மாற்ற சொல்லியிருந்தார் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்.

ஆனால் அந்த 5 பட தயாரிப்பாளர்களும் மறுப்பு தெரிவிக்க வேறு வழியில்லாமல் எப்படியோ நீங்களே தியேட்டர் எண்ணிக்களை முடிவு செய்து ரிலீஸ் செய்துக் கொள்ளுங்கள் என அறிவித்துவிட்டார்.

இந்த பிரச்சினைக்கு மட்டும் முடிவு சொல்லாமல் அடுத்த வருடம் வரவுள்ள பொங்கல் படங்களுக்கும் இப்போதே முடிவை அறிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி நடித்துள்ள பேட்ட, அஜித் நடித்துள்ள விஸ்வாசம் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது.

இரண்டும் ஒரே நேரத்தில் மோதினால் வசூல் பாதிக்கப்படும் என்பதை அறிந்தும் இரு பட தயாரிப்பாளர்களும் தங்கள் முடிவில் உறுதியாகவுள்ளனர்.

இப்போது வந்துள்ள 5 பட ரிலீஸ் பிரச்சினை நிச்சயம் பொங்கல் சமயத்திலும் 2 படங்களுக்கும் வர வாய்ப்புள்ளது.

சின்ன நடிகர்கள் பிரச்சினையே சமாளிக்க முடியாது. இதில் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் நிச்சயம் தீர்வே சொல்ல முடியாது என்பதால் அவர்கள் இஷ்டப்படியே ரிலீஸ் செய்துக் கொள்ள சொல்லிவிட்டார் விஷால்.

நெல் ஜெயராமன் வாழ்க்கையை மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும் – தங்கர் பச்சான்

நெல் ஜெயராமன் வாழ்க்கையை மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும் – தங்கர் பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thanagar bachchanநெல் ஜெயராமன் இறப்பிற்கு இயக்குனர் தங்கர் பச்சான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

’எல்லாவற்றையும் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர் விட்டுச்சென்ற பணியைச் செய்ய யார் இருக்கிறார்கள்?

மரபு மாற்று பயிர்களுக்கு எதிராக போராடியவர்.

அடுத்த தலைமுறைகளுக்காகவே வாழ்ந்தவர்.

நெல் ஜெயராமன் விட்டு சென்ற பணியை அரசு தொடர வேண்டும்.

எதை எதையோ பள்ளிப்பாடங்களில் கற்றுத்தருபவர்கள் விவசாயம் குறித்து கட்டாயம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

தமிழக முதல்வர், வேளாண்மை அமைச்சர், பள்ளிக்கல்வி அமைச்சர் அனைவருமே உழவு குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். எனவே அவர் விட்டுச்சென்ற பணியைத்தொடர கடமை இருக்கிறது!

நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும். அது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.’ என்று கூறியுள்ளார்.

முருகதாஸ் இயக்கும் ரஜினி படத்திற்கு இதான் தலைப்பா..? சூப்பர்ல..!

முருகதாஸ் இயக்கும் ரஜினி படத்திற்கு இதான் தலைப்பா..? சூப்பர்ல..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and AR Murugadossஇந்த 2018 வருடத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா மற்றும் 2.0 படம் ஆகிய இரண்டும் திரைக்கு வந்துவிட்டது.

அடுத்த வருடம் ஆரம்பத்தில் பொங்கல் தினத்தில் பேட்ட திரைப்படமும் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பது உறுதியாகியுள்ளது.

தன் அரசியல் வருகைக்கு ஏற்ப இதில் அரசியல் பன்ச் டயலாக்குகள் அதிகம் இருக்க வேண்டும் என ரஜினி விரும்பியதாக கூறப்படுகிறது.

மேலும் படத்தில் சமூகம் சார்ந்த விஷயங்களும் தற்போதைய நாட்டு நடப்புகளும் இருக்க வேண்டும் என கூறியிருக்கிறாராம்.

இந்நிலையில் இப்படத்திற்கு நாற்காலி என தலைப்பு வைக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

தற்போது ரஜினியின் அனுமதிக்காக இந்த தலைப்பு காத்திருக்கிறதாம்.

ஒருவேளை இது முடிவானால் நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம்தான் என்பதில் ஐயமில்லை.

அடுத்த அதிரடி #தலைவர்பைலா..; பட்டைய கிளப்பும் பேட்ட பாடல்கள்

அடுத்த அதிரடி #தலைவர்பைலா..; பட்டைய கிளப்பும் பேட்ட பாடல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

petta rajiniரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை அடுத்த வருடம் 2019 பொங்கலுக்கு வெளியிட உள்ளது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் சிங்கிள் ட்ராக் மரண மாஸ் பாடலை டிசம்பர் 3ஆம் தேதி வெளியிட்டனர்.

இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து டியூட்பில் பட்டைய கிளப்பி வருகிறது.

மற்ற பாடல்கள் டிசம்பர் 9ஆம் தேதி பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடத்தி வெளியிட உள்ளனர். சர்கார் பட பாடல்களை வெளியிட்ட அதே மைதானத்தில் வெளியிட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் 2வது பாடல் சிங் டிராக் நாளை (டிச.,07) வெளியிடவுள்ளனர்.

ஊலல்லலா… என இந்த பாடல் துவங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தலைவர் பைலா என ஹேஷ்டேக் போட்டுள்ளனர்.

அந்த பாடல் போஸ்டரில் ரஜினி ஆடுவது போன்று போட்டோவை டிசைன் செய்துள்ளனர்.

பிரசாந்துடன் இணைந்து தன் மகன் விக்ரம் உடன் மோதும் பிரபு

பிரசாந்துடன் இணைந்து தன் மகன் விக்ரம் உடன் மோதும் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

johnny movie prabu prashanthநடிகர் தியாகராஜனின் மகன் பிரசாந்த் நடித்துள்ள படம் ஜானி.

சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நடித்துள்ள படம் துப்பாக்கி முனை.

இந்த இரு படங்களும் அடுத்த வாரம் டிசம்பர் 14ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுப்பற்றிய விவரம் வருமாறு….

ஜானி படத்தில் பிரசாந்த் உடன் சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

வெற்றிச்செல்வன் இயக்கியுள்ள இப்படத்தை பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள `துப்பாக்கி முனை’ படத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஹன்சிகா முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார்.

60 வயது மாநிறம் படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள இந்த படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இளையதிலகம் பிரபு நடித்துள்ள ஜானி படத்துடன் அவரின் மகன் விக்ரம் நடித்துள்ள துப்பாக்கி முனை மோதுவது இங்கே குறிப்பிடத்தக்கது.

Prabhu team up with Prashanth and clash with his son Vikram

Thuppaki Munai and Johnny clash on 14th Dec 2018

ரஜினியை எவ்ளோ பிடிக்குமோ *பேட்ட* அப்படியிருக்கும்.: விஜய்சேதுபதி

ரஜினியை எவ்ளோ பிடிக்குமோ *பேட்ட* அப்படியிருக்கும்.: விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Makkal Selvan Vijay Sethupathi talks about Petta and Rajinikanthகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட.

சன் பிக்சர்ஸ் தயாரித்து இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சசிகுமார், நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து நடிகர் விஜய்சேதுபதி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது….

பேட்ட படம் பற்றி எதுவும் சொல்லமுடியாது. ஆனால் படம் எப்படி இருக்கும் என்பதை சொல்கிறேன்.

ரஜினியிடம் ரசிக்க நிறைய விஷயங்கள். மாஸ், ஸ்டைல், ஈர்ப்பு இப்படி நிறைய. அவரை எந்தளவு பிடிக்குமோ அந்தளவு பேட்ட படம் மாஸாக இருக்கும். படம் பொங்கலுக்கு வருகிறது” என தெரிவித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

பேட்ட படத்தில் ஜித்து என்ற கேரக்டர் பெயரில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இந்த போஸ்டர் நேற்று முன் தினம் வெளியானது.

Makkal Selvan Vijay Sethupathi talks about Petta and Rajinikanth

More Articles
Follows