தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சங்கம் கட்டிடம் கட்டிய பிறகுதான் தனக்கு திருமணம் என உறுதியாக கூறிவிட்டார் விஷால்.
அது எப்போது நடக்கும் என்பது அவருக்கே தெரிந்த ரகசியம்.
ஆனால் தற்போது நாம் பார்க்க போகும் விஷயம் என்னவென்றால் அது விஷாலின் தங்கை திருமணம்.
இவரது தங்கை ஐஸ்வர்யா, சிங்கப்பூரில் எம்.பி.ஏ படித்துவிட்டு தற்போது விஷாலின் தயாரிப்பு கம்பெனியை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல உம்மிடி நகைக்கடை குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி கிருத்திஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் வரும் 27-ம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள மேயர் ராமநாதன் ஹாலில் நடைபெற உள்ளது.
இந்த விசேஷத்திற்குதான் அழைப்பிதழ் வைத்து வருகிறாராம் விஷால்.
விஷாலின் அண்ணன் நடிகர் விக்ரம் கிருஷ்ணாவுக்கும் நடிகை ஸ்ரேயா ரெட்டிக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Vishal inviting celebrities for his sister Aishwarya marriage