சேகர் ரெட்டியின் பணத்தை செலவு செய்ய விஷால் யோசனை

சேகர் ரெட்டியின் பணத்தை செலவு செய்ய விஷால் யோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sekar-reddy-தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களின் பினாமி என்று கூறப்படுபவர் சேகர் ரெட்டி.

தமிழகத்தின் பெருவாரியான பொதுத்துறை ஒப்பந்தங்கள் இவர் கைவசமே உள்ளது.

இந்நிலையில் இவரிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தோண்ட தோண்ட தங்கம் என்பது போல இவரிடம் இருந்து கோடிக்கணக்கான பணமும் தங்கமும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

அதிலும் பல கோடி அளவில் புதிய ரூ.2000 நோட்டுகள் இவரிடம் கட்டு கட்டாக உள்ளதை கண்டு பிடித்து கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து விஷால தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கழிப்பறைகள் கட்ட பயன்படுத்தலாம், தொழுநோய் மற்றும் புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு கொடுக்கலாம்.

அனாதை குழந்தைகளுக்கு வருடம் முழுவதும் உணவு அளிக்கலாம்.

விவசாய கடன் மற்றும் கல்வி கடனை தள்ளுபடி செய்யலாம்’ என பல்வேறு திட்டங்கள் பற்றி தெரிவித்துள்ளார்.

Actor Vishal ideas to spend Sekar reddy’s IT raid cash

Vishal ‏@VishalKOfficial

I wish the money caught in #sekarreddy s house is donated to build toilets 4 physically challengd ppl,donate to cancer n leprosy patients, unlimitd food supply Fr animals in blue cross,food for all orphanage n old age homes 4 a yr,clear all farmer loans n edu loans.pissd

ரஜினி பிறந்தநாளில் அஜித்தை சந்திக்கும் காஜல் அகர்வால்

ரஜினி பிறந்தநாளில் அஜித்தை சந்திக்கும் காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith kajal agarwalஓரிரு தினங்களுக்கு முன், சென்னை வந்த அஜித் மீண்டும் பல்கேரியா நாட்டில் நடைபெறும் தல57 சூட்டிங்கில் கலந்து கொள்ள புறப்பட்டார்.

சிவா இப்படத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.

தற்போது அக்ஷராஹாசன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் படத்தின் நாயகி காஜல் அகர்வாலும் பல்கேரியாவுக்கு புறப்படுகிறார்.

அவர் டிசம்பர் 12ஆம் தேதி அஜித்துடன் சூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.

அன்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Kajal Agarwal will be joining #Thala57 shoots in Europe on December 12

‘பைரவா’ படத்தில் விஜய் இப்படித்தான் அறிமுகமாகிறாரா.?

‘பைரவா’ படத்தில் விஜய் இப்படித்தான் அறிமுகமாகிறாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa vijayபரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பைரவா படத்தில் விஜய் எப்படி அறிமுகமாகுவார்? என்ற தகவல் படக்குழுவினரால் அண்மையில் கசிந்துள்ளது.

பைரவா டீசரில் விஜய் சிரித்த முகத்தோடு, காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு திரும்புவது போன்ற ஒரு காட்சியிருக்கும்.

அதுதான் படத்தில் விஜய் அறிமுகம் ஆகும் காட்சியாம்.

2 காரணங்களுக்காக பிறந்தநாள் விழாவை தவிர்க்கும் ரஜினி

2 காரணங்களுக்காக பிறந்தநாள் விழாவை தவிர்க்கும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthமுதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க கமல் சொல்லியிருந்தார்.

அதுபோல் ரஜினியும் தவிர்ப்பாரா? என்று நாம் நம் தளத்தில் பதிவு செய்திருந்தோம்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா அண்மையில் காலமானதால், ரஜினியும் தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்க்க ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இதை தவிர்க்க மற்றொரு காரணமும் உள்ளதாம்.

அதாவது டிசம்பர் 7ஆம் தேதி ரஜினியின் நெருங்கிய நண்பரான சோ ராமசாமி மரணமடைந்தார்.

அடுத்தடுத்து நடந்த இரு துயர சம்பவங்களால் ரஜினி மிக சோகத்தில் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளராம்.

வெங்கட் பிரபுவிடம் சிவகார்த்திகேயன் வைத்த கோரிக்கை

வெங்கட் பிரபுவிடம் சிவகார்த்திகேயன் வைத்த கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan venkat prabhuவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது.

படத்தை பார்த்த விமர்சகர்கள் முதல் ரசிகர்களை வரை பாராட்டி கொண்டே உள்ளனர்.

மேலும் இயக்குனர்கள் ஷங்கர், லிங்குசாமி, நடிகர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் வெங்கட் பிரபுவை பாராட்டியிருந்தனர்.

அப்போது சிவகார்த்திகேயனின் பாராட்டுக்கு வெங்கட் பிரபு நன்றி தெரிவித்து, சார் என சொல்லியுள்ளார்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்… என்னை சார் என்று சொல்லாதீர்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.

Sivakarthikeyan ‏@Siva_Kartikeyan
@vp_offl sir pls don mention sir

விஜய்-ஜெயம் ரவி இணையும் படத்தலைப்பு வெளியானது

விஜய்-ஜெயம் ரவி இணையும் படத்தலைப்பு வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vanamaganஜெயம் ரவி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் போகன்.

தற்போது விஜய் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இது வனபகுதிகளை சார்ந்த கதையாக உருவாகி வருகிறது.

எனவே இப்படத்திற்கு வனமகன் என பெயரிட்டு, சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஸ்டண்ட் சில்வா சண்டை காட்சிகளை அமைக்கிறார்.

அந்தோணி படத்தொகுப்பை கவனிக்க, திங்க் பிக் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

More Articles
Follows