ஹரி – விஷால் இணையும் பட சூட்டிங் அப்டேட்.; இசையமைப்பாளர் இவரா.?

ஹரி – விஷால் இணையும் பட சூட்டிங் அப்டேட்.; இசையமைப்பாளர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு (செப்டம்பர் 15) அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஷால் 34

இதைத்தொடர்ந்து விஷாலின் 34-வது இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார்.

இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஷால் 34

விஷாலின் 34-வது படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், இதன் படப்பிடிப்பு இன்று ஜூலை 15 முதல் தொடங்குகிறது எனவும் அறிவித்துள்ளனர்.

விஷால் 34

Devi Sri Prasad to compose music for Vishal’s film with Hari

அஜித் – பிரசாந்த் பட நடிகை பூஜா வாங்கிய நிலம் செல்லாது.; கோர்ட்டு உத்தரவு

அஜித் – பிரசாந்த் பட நடிகை பூஜா வாங்கிய நிலம் செல்லாது.; கோர்ட்டு உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘கல்லூரி வாசல்’ என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகை பூஜா பட்.

இவர் பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் சகோதரி.

நீலகிரி மாவட்டம் ஜெகதலா கிராமத்தில் கடந்த 1978-ம் ஆண்டு பட்டியலின வகுப்பைச் சேர்ந்த எம்.குப்பன் என்பவருக்கு அப்போதைய கலெக்டர் ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கிடு செய்து அதை வேறு யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது என்று நிபந்தனையும் விதித்துள்ளார்.

ஆனால் அந்த நிலம் அதற்குப் பிறகு பலரிடம் கைமாறி விற்பனையாகியுள்ளது.

நீலகிரியில் உள்ள அந்த நிலத்தை கடந்த 1990-ம் ஆண்டு நடிகை பூஜா பட் வாங்கியுள்ளார்.

அந்த நிலத்தை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், நிலத்தை அரசுக்கு திரும்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் கோத்தகிரி வட்டாட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகை பூஜா பட் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, நீலகிரியில் நடிகை பூஜா பட் நிலம் வாங்கியது செல்லாது என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை யாரும் வாங்கவோ உரிமையில்லை? விற்கவோ உரிமையில்லை? என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

alia bhatts sisters purchase of land in nilgiris is invalid high court order

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ பட ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடியா.?

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ பட ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KGF புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ள படம் ‘சலார்’.

இப்படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

கே.ஜி.எப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரித்து வருகிறது.

‘சலார்’ படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சலார்’ படத்தின் டீசர் கடந்த வாரம் 6ம் தேதி வெளியானது. இந்த டீசர் ஒரே நாளில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்தது.

இந்நிலையில், ‘சலார்’ படத்தின் ஓடிடி ரைட்ஸ் விற்பனையாகி உள்ளதாக தகவல் என வெளியாகியுள்ளது

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட மற்ற மொழிகளின் உரிமை என ஒட்டுமொத்தமாக 200 கோடி ரூபாய் வரை விற்பனையாகி உள்ளது.

இந்த உரிமையை அமேசான் ப்ரைம் அல்லது நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும், இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

prabhas salaar ott rights reportedly sold for 200 crores

Oru chinna Preview-ku ready-ah? ரசிகர்களுக்கு ‘ஜெயிலர்’ தரும் இன்ப அதிர்ச்சி.!

Oru chinna Preview-ku ready-ah? ரசிகர்களுக்கு ‘ஜெயிலர்’ தரும் இன்ப அதிர்ச்சி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘இது டைகரின் கட்டளை’ என்ற பாடல் வருகிற 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

‘ஜெயிலர்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று சனிக்கிழமை ஜூலை 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘டைகரின் கட்டளை..’ #HukumPreview பாடலில் இருந்து ஒரு சின்ன பிரிவியூ வீடியோ வெளியிடப்படும் என பட குழு அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

ஜெயிலர்

jailer second single hukum preview today update

4 மாத சூட்டிங்கை நிறைவு செய்த ‘லியோ’..; படக்குழுவுக்கு லோகேஷ் நன்றி

4 மாத சூட்டிங்கை நிறைவு செய்த ‘லியோ’..; படக்குழுவுக்கு லோகேஷ் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.

இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

சமீபத்தில் ‘லியோ’ படத்தில் தனக்கான காட்சிகளை நடிகர் விஜய் நிறைவு செய்தார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கடந்த 6 மாதமாக நடைபெற்று வந்த ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘6 மாதங்களில் வெறும் 125 நாட்கள் படப்பிடிப்பு’ என தெரிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இது தொடர்பான புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

மேலும், ‘லியோ’ படத்தை 19 அக்டோபர் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

leo shooting completed director lokesh kanagaraj tweets

ரியல் மாவீரன்.: சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்கள் சங்கம்

ரியல் மாவீரன்.: சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது படங்களுக்கு குழந்தைகள் மத்தியிலும் குடும்பப் பெண்களின் மத்தியிலும் பலத்த வரவேற்பு உள்ளது.

ஒரு பக்கம் நடிகராக பிஸியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் இவரது படங்களையும் இளம் இயக்குனர்களுக்கும் இளம் நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து படங்களை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் ‘மாவீரன்’ படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் தயாரிப்பாளர்கள் படும் வேதனையை பற்றி சிவகார்த்திகேயன் பேசியிருந்தார்.

அவரது பேச்சில் “தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் தலையிடாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தலாமே என என்னிடம் பலரும் சொல்கிறார்கள்.

ஆனால் என்னை பொறுத்தவரை ஒரு நடிகர் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தினாலும் நடத்தாவிட்டாலும் இது போன்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

நாம் நடிகர்.. நமக்கு சம்பளம் வந்தால் போதும், தயாரிப்பாளருக்கு பிரச்சினை வந்தால் நமக்கென்ன என ஒதுங்கி இருக்க முடியாது.

அது நான் நடித்த படம். அதன் லாப நஷ்டங்களில் எனக்கும் பங்கு உண்டு. அந்த படத்திற்கு வரும் பிரச்சினைகளை முடிந்த வரை தீர்த்துவைப்பது எனது கடமை என்று நினைக்கிறேன்” என்று பேசியிருந்தார்.

இவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தயாரிப்பாளர்கள் மத்தியிலும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கிடைத்தன.

இதனையடுத்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி ராமநாராயணன்…

“தயாரிப்பாளர்கள் படும் இன்னல்களை மனதில் வைத்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மாவீரன்

Producer Council Thanks letter to Sivakarthikeyan

More Articles
Follows