‘தங்கலான்’ ஷூட் அப்டேட்.: அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே.?

‘தங்கலான்’ ஷூட் அப்டேட்.: அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ நடித்து வருகிறார்.

இப்படத்தில் பார்வதி திருவோடு, மாளவிகா மோகனன், பசுபதி மாசிலாமணி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது.

சிறிது காலம் ஓய்வுக்கு தற்போது மீண்டும் ‘தங்கலான்’ படப்பிடிப்பில் விக்ரம் இணைந்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் சென்னை படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மதுரையில் ஒரு வாரம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இத்துடன் ‘தங்கலான்’ படப்பிடிப்பு நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

Vikram’s ‘Thangalaan’ races to the final stage of shooting

தயாரிப்பாளர் ரவீந்தர் மீது பண மோசடி புகாரளித்த அமெரிக்க வாழ் இந்தியர்

தயாரிப்பாளர் ரவீந்தர் மீது பண மோசடி புகாரளித்த அமெரிக்க வாழ் இந்தியர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல டி.வி. நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டு சமூக வலை தளங்களில் பிரபலமானவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.

முருங்கைக்காய் சிப்ஸ், நட்புனா என்னன்னு தெரியுமா?, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள ரவீந்தர்

தயாரிப்பாளர் ரவீந்தர் மீது தற்போது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக புகார் மனு அளித்துள்ளார்.

புகார் மனுவில் கூறி இருப்பதாவது,

கிளப் ஹவுஸ் என்கிற செயலி மூலமாக அறிமுகமான ரவீந்தர் என்னிடம் நன்றாக பழகினார்.

இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் அவர் என்னிடம் ரூ.20 லட்சம் கடன் கேட்டார்.

சினிமா நடிகர் ஒருவருக்கு ‘அட்வான்ஸ்’ கொடுக்க வேண்டி இருப்பதாக கூறி இந்த பணத்தை என்னிடம் அவர் கேட்டார்.

நான் ரூ.15 லட்சம் பணம் மட்டும் தன்னிடம் உள்ளதாக கூறி அந்த பணத்தை 2 தவணையாக ரவீந்தரின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தேன்.

இந்த பணத்தை ரவீந்தர் அவர் சொன்னபடி திருப்பி தரவில்லை.

இதுபற்றி பல முறை தொடர்பு கொண்டு கேட்டும் அவர் என்னை அலைக்கழித்தார். சில நேரங்களில் அவதூறாக பேசினார். பின்னர் எனது செல்போன் அழைப்பை எடுக்காமல் பிளாக் செய்து விட்டார்.

ரவீந்தர் என்னிடம் பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருப்பதால் அதுபற்றி உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

American Indian complaint against producer Ravinder Chandrasekar cheated with rs 15 lakhs

‘லப்பர் பந்து’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ஹரீஷ் கல்யாணை வாழ்த்திய படக்குழு

‘லப்பர் பந்து’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ஹரீஷ் கல்யாணை வாழ்த்திய படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கனா’, ‘எஃப்ஐஆர்’ படங்களில் இணை இயக்குனர் மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’.

இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளன இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து ‘லப்பர் பந்து’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

லப்பர் பந்து

Harish kalyan’s ‘Lubber Pandhu’ first look releasing

நடிகை அசின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு; விவகாரத்து குறித்து அறிவிப்பு

நடிகை அசின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு; விவகாரத்து குறித்து அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2004-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அசின்.

விஜய், விக்ரம், சூர்யா, கமல், அஜித் என பல நடிகர்களின் பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தார்.

அசின், ‘ஹவுஸ்புல்-2’ படத்தில் நடித்தபோது அக்ஷய்குமாரின் நண்பரும், மைக்ரோ மேக்ஸ் நிறுவனருமான ராகுல் சர்மாவுடன் காதல் மலர்ந்தது.

அசின் கடந்த 2016-ம் ஆண்டு ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த கையோடு கணவருடன் செட்டில் ஆன அசின், சினிமாவை விட்டும் விலகினார்.

இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு அசின் – ராகுல் சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

அசின் – ராகுல் சர்மா தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ராகுல் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனை அறிந்த அசின் அவரை எச்சரித்தும், அவர் கேட்காததால் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாக கூறப்பட்டது.

இந்த செய்தி நடிகை அசின் பார்வைக்கு சென்ற நிலையில், தற்போது அசின், சமூக வலைத்தளத்தின் வாயிலாகபதிலளித்துள்ளார்.

அதில், நாங்களே ஜாலியாக டூர் செய்துக் கொண்டு பிரேக்பாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இப்படியொரு கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத ஒரு செய்தி வருவதை பார்த்து வேடிக்கையாகத்தான் இருக்கு என்றும் உங்களுக்கு வேற வேலை இல்லையா? இன்னும் பெட்டரா ஏதாவது டிரை பண்ணுங்க என நடிகை அசின் பதிவிட்டு விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

actress Asin reacts to divorce rumours with husband Rahul Sharma

அதர்வா படத்தை இயக்கும் நெல்சன்.; சூப்பர் அப்டேட் இதோ

அதர்வா படத்தை இயக்கும் நெல்சன்.; சூப்பர் அப்டேட் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016-ஆம் ஆண்டு அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன்.

இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் உடன் மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதை அடுத்து எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்த ‘மான்ஸ்டர்’ படத்தை இயக்கினார்.

தொடர்ந்து, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் நடிப்பில் ‘ஃபர்ஹானா’ திரைப்படத்தை இயக்கினார்.

இப்படம் கடந்த மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் விரைவில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இப்படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் சிகூறப்படுகிறது.

மேலும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சன் வெங்கடேசன்

nelson venkatesan is directing Atharvaa new movie

இதுவே உச்சமாக இருக்கக் கூடாது.; நானும் நிறுத்த மாட்டேன்.; ‘இந்தியன் 2’ குறித்து கமல் – ஷங்கர் பதிவு

இதுவே உச்சமாக இருக்கக் கூடாது.; நானும் நிறுத்த மாட்டேன்.; ‘இந்தியன் 2’ குறித்து கமல் – ஷங்கர் பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1996-ல் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 27 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகி வருகிறது.

லைகா தயாரித்து வரும் இந்த படத்தை ஷங்கர் இயக்க கமல்ஹாசன் அர்ப்பணிப்புடன் நடித்து வருகிறார்.

கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

ஷங்கர் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதன்முறையாகும்.

‘இந்தியன் 2’ படத்தின் பிரதானக் காட்சிகளைப் பார்த்த பிறகு படத்தின் இயக்குநர் ஷங்கர் குறித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

அதில்..

‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள்
@shankarshanmugh

இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி.

அன்பன்
கமல்ஹாசன்

@LycaProductions

@RedGiantMovies_
#Indian2

மேலும் இயக்குநர் ஷங்கருக்கு வாட்ச் ஒன்றை அணிவிக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் பதிவுக்கு இயக்குனர் ஷங்கரும் பதில் அளித்து இருக்கிறார். அந்த பதிவில்…

My heart is filled with gratitude and joy sir.I will never stop giving it my best! And needless to say, your performance and presence brought an essential essence to the film. Thank you for the token to commemorate this very special moment. I will cherish this feeling 🙏… https://t.co/vznsmrnGqe

Kamal and Shankar excited about Indian 2 scenes

More Articles
Follows