விக்ரமை இயக்கும் ‘இமைக்கா நொடிகள்’ பட இயக்குனர்..?

விக்ரமை இயக்கும் ‘இமைக்கா நொடிகள்’ பட இயக்குனர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)கமல் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கடாரம் கொண்டான்’ படம் ஜுன் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதற்கு முன்பே விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம் என்னாது? என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம்.

தற்போது மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் இருக்கிறாராம் விக்ரம்.

இதனிடையில் குறுகிய கால கால்ஷீட்டில் ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

‘டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அவர்கள் அந்த படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்பதிவில் மிரட்டும் சூர்யாவின் என்ஜிகே

முன்பதிவில் மிரட்டும் சூர்யாவின் என்ஜிகே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)சூர்யா நடிப்பில் உருவாகியிள்ள என்ஜிகே படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார்.

இதில் சூர்யாவுடன் ரகுல்பிரீத்சிங், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மே 31-ந்தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் சென்னையில் சில தியேட்டர்களில் இப்போதே ப்ரி புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது.

அப்படி தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே முதல்நாள் டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளது.

எனவே என்ஜிகே படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாக குழு; என்ன செய்வார் விஷால்..?

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாக குழு; என்ன செய்வார் விஷால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக விஷால் பதவி வகித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாகவே விஷாலின் தலைமையை பலர் எதிர்த்து வருகின்றனர்.

சங்க நிதியை கையாண்ட விதம், இளையராஜாவுக்கு நடத்திய பாராட்டு விழாவில் நடந்த முறைகேடு என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்துள்ளன.

இதனிடையில் மற்றொரு பிரிவு தயாரிப்பாளர்கள் தமிழக அரசிடம் புகார் கொடுத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து சங்கத்தை நிர்வகிக்க தமிழக அரசு பதிவுத்துறை அதிகாரி என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக நியமித்துள்ளது.

தற்போது தனி அதிகாரி சேகர் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களை கொண்டு தனக்கு உதவி செய்ய தற்காலிக குழு ஒன்றை (அட்ஹாக் கமிட்டி) அமைத்துள்ளார்.

இதில் பாரதிராஜா, டி.ஜி.தியாகராஜன், கே.ராஜன், டி.சிவா, சிவசக்தி பாண்டியன், எஸ்.வி.சேகர், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், எஸ்.எஸ்.துரைராஜ், கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

யுவன்-குறளரசன் வரிசையில் இஸ்லாமியராக மாறிய கஸ்தூரி..?

யுவன்-குறளரசன் வரிசையில் இஸ்லாமியராக மாறிய கஸ்தூரி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectதற்போதைய சினிமா மற்றும் அரசியல் உலகில் ஏதாவது ஒரு பரபரப்பான கருத்தை கூறி சர்ச்சையாக்கி வருபவர் நடிகை நடிகை கஸ்தூரி.

மேலும் ட்விட்டரிலும் அவ்வப்போது பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், முஸ்லிம் பெண் போல உடையணிந்து, தொழுகை செய்வது போல இரு படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனால் அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறிவிட்டாரோ? என்ற தகவல்கள் பரவியது.

ஆனால் புதிய படமொன்றில் முஸ்லிம் பெண் வேடத்தில் நடிக்கிறாராம்.

ரமலான் நோன்பு ஆரம்பமாகி விட்டதால் அதற்கு பொருத்தமாக இப்படங்களை வெளியிடுவதாக கூறினார். மேலும், நாம் அனைவரும் ஒரே கடவுளை ஒரே நோக்கத்துக்காகத்தான் வழிபடுகிறோம். ஆனால், வழிபடும் வார்த்தைகள் மட்டும் வெவ்வேறானவை எனவும் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர்கள் யுவன், குறளரசன் ஆகியோர் இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Kasturi Shankar‏Verified account @KasthuriShankar

#RamadanKareem to everyone who’s fasting this month! Its is a divine coincidence to be playing a hyderabadi muslim woman right now ! Blessed to have learnt how to pray ( even if for a movie.) #RamadanMubarak

சிவகார்த்திகேயன் நடிக்கும் ” SK 16″ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது !

சிவகார்த்திகேயன் நடிக்கும் ” SK 16″ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘ மெரினா’ , ‘ கேடி பில்லா கில்லாடி ரங்கா ‘ ஆகிய படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு
இந்த படம் மூலம் இருவரும் மூன்றாவது முறையாக இணைகிறார்கள்.

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் பதினாறாவது பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது எந்திரன்,சர்கார் , பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான “சன் பிக்சர்ஸ்” தயாரிக்கும் நான்காவது படம் இது . சன் பிக்ச்சர்ஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணி முதல் முறையாக இணைகிறார்கள் .

சிவகார்த்திகேயனின் 16 வது படமான இந்த படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடிக்கிறார்கள் . “துப்பறிவாளன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அனு இம்மானுவேல் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேருகிறார் . இது அவரது இரண்டாவது தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்த முதல் திரைப்படமான “கனா” படத்தில் கதாநாயகியாக நடித்த “ஐஸ்வர்யா ராஜேஷ்” இந்த படத்தில் நடிக்கிறார் .

இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் இசை அமைக்கிறார் . சிவகார்த்திகேயன் நடிப்பில் இமான் இசைமைக்கும் இந்த படம் இருவரும் இணையும் நான்காவது திரைப்படம் .

இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிபதிவு செய்கிறார் ,கலை இயக்கம் வீர சமர் ,படத்தொகுப்பினை ஆண்டனி எல்.ரூபன் மேற்கொள்கிறார்.

மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களான பாரதிராஜா , சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் இவர்களுடன் நட்டி(எ) நடராஜ், RK சுரேஷ் ,காமெடி நடிகர்களான சூரி , யோகி பாபு மற்றும் வேலராமமூர்த்தி ,நாடோடிகள் கோபால் , சுப்பு பஞ்சு , அர்ச்சனா , ரமா என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று எளிமையாக தொடங்கியது !

நடிகர்கள் :

சிவகார்த்திகேயன் , ,ஐஸ்வர்யா ராஜேஷ் , அனு இம்மானுவேல் ,பாரதிராஜா , சமுத்திரக்கனி
நட்டி(எ) நடராஜ், RK சுரேஷ் ,சூரி , யோகி பாபு, வேலராமமூர்த்தி ,நாடோடிகள் கோபால் , சுப்பு பஞ்சு , அர்ச்சனா , ரமா

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் : பாண்டிராஜ்
தயாரிப்பு : சன் பிக்ச்சர்ஸ்
இசை : D .இமான்
ஒளிப்பதிவு :நிரவ் ஷா
கலை இயக்கம் :வீர சமர்
படத்தொகுப்பு : ஆண்டனி எல்.ரூபன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மது

பிரியா பவானி ஷங்கர் நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார் – ‘மான்ஸ்டர்’ எஸ்.ஜே.சூர்யா

பிரியா பவானி ஷங்கர் நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார் – ‘மான்ஸ்டர்’ எஸ்.ஜே.சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)வசனகர்த்தா ஷங்கர் பேசும்போது,

இப்படத்தில், எழுத்தில் நான் இருந்திருக்கிறேன். பாடலாசிரியர் மற்றும் எழுத்து இரண்டிலும் என் பெயர் வந்ததற்கு நன்றி. இப்படம் எனக்கு இரண்டாவது படம். நெல்சன் என்னுடைய மாணவனாக இருந்தாலும் அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். நெல்சன் இயக்கத்தில் கதாநாயகி பாதுகாப்பாக இருப்பார்கள். கதையை எப்படி அழகுப்படுத்துவதை எஸ்.ஜே.சூர்யாவிடம் கற்றுக் கொண்டேன். அனைவரிடமும் ஆலோசனை கேட்பார். தயாரிப்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்று பிரபாகரனிடம் தெரிந்துக் கொண்டேன் என்றார்.

நடன இயக்குநர்

சாபு ஜோசப் பேசும்போது,

‘ஒரு நாள் கூத்து’ படத்தில் பணியாற்றிய குழுவுடன் இப்படத்திலும் பணியாற்றினோம். எலியை வைத்து கதையை கூறும்போது ஆர்வமாக இருந்தது. எலி மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து வரும் காட்சிகளில் தொழில்நுட்பத்தில் சவாலாக இருந்தது. இந்த காட்சிகள் நன்றாக வருவதற்கு அனைவரின் ஆலோசனையும் இருந்தது என்றார்.

DOP கோகுல் விநாயக் பேசும்போது,

இக்கதையை கொண்டு வந்த இயக்குநருக்கு பாராட்டுக்கள். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு இப்படத்திற்கு பலமாக இருந்தது என்றார்.

சண்டை பயிற்சி சுதேஷ் பேசும்போது,

இதுதான் எனது முதல் படம். நான் பணியாற்ற வரும்போதே இயக்குநர் அனைத்தையும் தயாராக வைத்திருந்தார் என்றார்.

நடன இயக்குநர் பேசும்போது,

குழந்தைகளை வைத்து வேலை வாங்க வேண்டும். அதுவும் அவர்களை எலியாக பாவித்து நடனம் அமைக்க வேண்டும் என்பது சவாலாக இருந்தது என்றார்.

அதிமுக நடிகர் அணில் குமார் பேசும்போது,

சினிமாவில் ஒரு நிலைக்கு வரவேண்டுமானால் அதற்கு பல தடைகள், சவால்கள், விடாமுயற்சி இல்லாமல் வரமுடியாது. ஆனால், நான் எதுவுமே செய்யாமல் இந்த வாய்ப்புக் கொடுத்த நெல்சனுக்கு நன்றி. ஒவ்வொரு காட்சியிலும் என்னை நன்றாக காட்டியதற்கு விநாயக்கிற்கு நன்றி. எனக்கு நடிக்க கற்றுக் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது,

இந்த குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அடுத்த படத்திலும் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றுவோம். எஸ்.ஜே.சூர்யாவின் லட்சியம் தான் அவரை இன்றுவரை வெற்றியாளராக வைத்திருக்கிறது என்றார்.

பிரியா பவானி சங்கர் பேசும்போது,

இந்த படத்தில் கிடைத்த அனுபவம், எஸ்.ஜே.சூர்யா நாயகன் என்றதும் அவருடன் எனக்கு பொருத்தமாக இருக்குமா? என்று தயங்கினேன். ஆனால் இயக்குநர் முதலில் கதை கேட்டு முடிவு செய்யுங்கள் என்று கூறினார். சங்கர் கூறியதுபோல் என்னை பாதுகாப்பாக வைத்திருந்தார். படக்குழுவினருடன் ஜாலியாக பணியாற்றினேன். ஜஸ்டினின் இசையில் எனக்கு ஒரு பாடல் அமைந்ததில் மகிழ்ச்சி என்றார்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது,

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-உடன் இது என்னுடைய இரண்டாவது படம். என் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து இப்படத்தை தயாரித்ததற்கு பிரகாஷ் பாபு, பிரபு, வெங்கடேசன் ஆகியோருக்கு நன்றி. நான் எப்போதும் வீட்டுப்பாடம் செய்துவிட்டு தான் பணிக்கு வருவேன். ஆனால் இப்படத்தில் அதெல்லாம் போதவில்லை.

இப்படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா, வில்லன் எலி என்ற புள்ளியில் தான் ஆரம்பமாகும். அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை எலி பிடிக்க ஆள் வைத்திருக்கிறார்கள். மனித இனத்திற்கு இணையாக இருக்கும் விலங்கு எலிதான். மனிதனை அழிக்கக்கூடிய ஆள் பலத்தோடு இருப்பது எலிதான்.எலிக்கு கோயிலே இருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யாவிடம் கதை கூறியதும் அவர் ஒரு காட்சியை நடித்துக் காண்பித்தார். காலையிலிருந்து மாலை வரை தனியாகவே நடிப்பார் எஸ்.ஜே.சூர்யா. பிரியா பவானி ஷங்கர் இக்கதையை திரையில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன் என்றார். எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், கருணாகரன் ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் கலாட்டா செய்துக் கொண்டும், போட்டிபோட்டுக் கொண்டும் நடிப்பார்கள். இக்கதையின் கருவை கூறியதும் எழுத்தாளர் ஷங்கர் தாஸ் நம்பவில்லை. ஆனால், ஒவ்வொரு காட்சியாக எடுக்க எடுக்க என்னைவிட ஆர்வமாக முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினார். சிவசங்கர் நானே போதும் என்று கூறினாலும் அவர் காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக கடினமுயற்சியை மேற்கொண்டார். கோகுலுக்கும் எனக்கும் நெருக்கமான உறவு. அதேபோல், உண்மையான எலியை வைத்துதான் படப்பிடிப்பு நடத்தினோம். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் கிடையாது.

இதுவரை யாரும் பார்த்திராத எஸ்.ஜே.சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம். எங்கு சென்றாலும் பிரியா பவானி ஷங்கருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் பிரியாவின் கதாபாத்திரத்தை நன்றாக அமைத்திருக்கிறோம். ஐந்து பாடல்களும் ரசிக்கும்படியாகவும், வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று கவனத்துடன் உழைத்திருக்கிறோம். எலியுடன் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஒரு பாடல் இருக்கிறது. அப்பாடலை எஸ்.ஜே.சூர்யாவே பாடியிருக்கிறார்.

பிரபாகரன் சினிமாவை தவிர்த்து வேறு எதையும் பேசி நான் பார்த்ததில்லை. ஒவ்வொரு காட்சியும் தரமாக வரவேண்டும் என்று எப்போதும் கூறுவார். எஸ்.ஆர்.பிரபு தேவையில்லாத அடையாளங்களை விரும்பமாட்டார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தேவையான விஷயங்களை முன்பே கூறிவிடுவார். இப்படம் நன்றாக வருவதற்கு முக்கியகாரணம் என் நண்பர்கள் தான். அதில் கமல்தான் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.

என் வீட்டில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவம் தான் இப்படம். மூன்று நாட்கள் ஒரு எலி என்னைத் தூங்க விடாமல் செய்தது. அதேபோல் அனுபவம் பெரும்பாலானோருக்கு நடந்திருக்கும். அந்த சம்பங்களின் தொகுப்பே இப்படம் என்றார்.

எஸ்.ஜே.சூர்யா பேசும்போது,

இந்த படத்தில் எனக்கு மிகப் பெரிய ஆசிர்வாதம் இருக்கிறது. எலி என்பது பிள்ளையார் வாகனம். அதிலிருந்தே எனக்கு ஆசிர்வாதம் ஆரம்பித்தது. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தான் இப்படத்தின் கதாநாயகன். மூன்று தயாரிப்பாளர்களும் கதையைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து அனைத்தையும் தரமானதாக வரவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் அவர்களின் படைப்புகள் வெளியாகும்.

ஒரு நாள் எஸ்.ஆர்.பிரபு, ஒரு கதை இருக்கிறது கேட்கிறீர்களா? என்றார். கதை சொல்லவந்த நெல்சன், நீங்கள் ஒரு எலி என்று ஆரம்பித்ததும் எப்படி இருக்குமோ? என்று நினைத்தேன். கதையைக் கேட்டதும் பிடித்திருந்தது. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் காலை முதல் நள்ளிரவு வரை அயராமல் சுறுசுறுப்புடன் இருப்பார்.

குழந்தைகளுக்கும்… செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். ‘அந்தி மாலை’ பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.

சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமாக அனுபவமாக இருந்தது.

இயக்குநர் ஒவ்வொரு காட்சி கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதிலும் காதும் நடிக்க வேண்டும் என்று கூறிவார்.

எஸ்.ஜே.சூர்யா நடித்து முதல் முறையாக ‘யு’ சான்றிதழ் பெற்ற படம் ‘மான்ஸ்டர்’.

வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கதாநாயகனாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் நான் கதாநாயகனாகத்தான் இருக்கிறேன். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதேபோல் என் வாழ்க்கையை சீராக அமைத்து கொள்வேன்.

தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் நுணுக்கமாக பணியாற்றியிருக்கிறார்கள். 17 நாட்களுக்குள் இப்படத்தை வெளியாக முயற்சி எடுத்திருக்கிறார்கள். ‘மாயா‘, ‘மானகரம்’ , ‘மான்ஸ்டர்‘, போன்ற தரமான படத்தை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கு வாழ்த்துக்கள் என்றார்.

எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,

இந்நிறுவனம் தொடங்கும்போது தரமான படங்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். தீபாவளி பண்டிகைக்கு எங்கள் பெற்றோர் புது உடைகள் முன்பே வாங்கி வைத்திருந்தார்கள். நாங்கள் கேட்டதும், இருக்கு ஆனால் தீபாவளியன்று குளித்ததும் தான் தருவோம் என்றனர். குளித்ததும் ஆடை உடுத்த எடுத்த போது ஜீன்ஸ் பேண்டை எலி கடித்துக் கிழிந்திருந்தது. எலி மீது கோபம் அன்று ஆரம்பித்தது என்றார்.

யாருக்கும் தீங்கு செய்யாத ஒருவனுக்கு எலி எப்படி வில்லனாக வருகிறது? இறுதியில் அதை அவன் கொன்றானா? என்பதை இப்படம் மூலம் கூறியிருக்கிறோம்.

இக்கதையை இயக்குநர் கூறியதும், மான்ஸ்டராக பார்க்கக்கூடிய எஸ்.ஜே.சூர்யாவிற்கு எலி மான்ஸ்டராக இருந்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்தோம். நம் நாட்டில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் தான். அப்படியொரு கதாபாத்திரத்திற்கு எஸ்.ஜே.சூர்யா பொருத்தமாக இருப்பார் என்று முடிவெடுத்தோம். அவரும் அவருடைய கதாபாத்திரத்தைச் சிறப்பாக செய்திருக்கிறார்.

இப்படம் வருகிற மே 17ம் தேதி வெளியாகிறது என்றார்.

More Articles
Follows