‘PS1’ படத்திற்கு பெரியோர்களை பத்திரமாக அழைத்துச் செல்ல விக்ரம் வேண்டுகோள்

‘PS1’ படத்திற்கு பெரியோர்களை பத்திரமாக அழைத்துச் செல்ல விக்ரம் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் இன்று பட குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், விக்ரம் பிரபு நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோஃபிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொன்னியின் செல்வன்

இந்த விழாவில் விக்ரம் பேசும்போது…

“இந்த படத்திற்காக இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு சென்றோம். சோழர் பெருமையை எல்லா மக்களுக்கும் புரியும் வகையில் எடுத்து கூறியுள்ளோம்.

‘பொன்னியின் செல்வன்’ என்பது மட்டுமே அவர்களுக்கு புரியாத பெயராக இருந்தது. இப்போது பொன்னியின் செல்வன் என்ற பெயர் அவர்களுக்கு புரிந்து விட்டது.

இதுவரை இல்லாத அளவிற்கு படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முக்கியமாக இந்த படத்திற்கு பெரியோர்களின் ஆதரவும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. வீட்டில் உள்ள வயதானவர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

எனவே அவர்களை பத்திரமாக அழைத்துச் செல்வது அவர்களின் பிள்ளைகளின் கடமை. இளைஞர்களின் கடமை. அவர்கள் எல்லாம் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது எங்களுக்கு கிடைத்த பெருமை” என பேசினார் விக்ரம்.

பொன்னியின் செல்வன்

ஜெயம் ரவி பேசும்போது…

“இந்த படத்திற்காக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளோம். இதில் எந்த ஊர் எனக்கு பிடித்த ஊர் சிறந்த ஊர் என்று கூற முடியாது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்துமே சிறந்த ஊர் தான். ஏனென்றால் இது நம் நாடு நம் இந்தியா. ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக இந்த பயணம் மேற்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது” என பேசினார்.

சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற இந்த விழாவில் மணிரத்னம் சரத்குமார் கார்த்தி உள்ளிட்டார் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன்

Vikram appeals to take elders safely to ‘PS1’ movie

எங்கள் ‘பொன்னியின் செல்வன்’ குழந்தைக்கு எது அழகு? என்று சொல்லுங்கள் – விக்ரம் பிரபு

எங்கள் ‘பொன்னியின் செல்வன்’ குழந்தைக்கு எது அழகு? என்று சொல்லுங்கள் – விக்ரம் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் இன்று பட குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர்கள் விக்ரம் ஜெயம் ரவி பார்த்திபன் விக்ரம் பிரபு நடிகைகள் திரிஷா ஐஸ்வர்யா லட்சுமி, சோஃபிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் விக்ரம் பிரபு பேசும்போது…

“ஒரு குழந்தையை நாங்கள் பெற்றெடுத்துள்ளோம் அந்த குழந்தையை மக்களிடம் நாளை தரவிருக்கிறோம் .

அந்த குழந்தைக்கு கண்ணழகு.. காது அழகு.. மூக்கு அழகு என ஒவ்வொரு பகுதிகளாக பார்த்து சொல்வது போல இந்த படம் அமைந்துள்ளது. படத்தை பார்த்து அனைவரும் ஆதரவு தாருங்கள்” என பேசினார் விக்ரம் பிரபு.

பார்த்திபன் பேசும்போது…

” நானே வருவேன்.. நானே வருவேன்.. என அடம் பிடித்து தான் இன்று வந்தேன். இந்த படத்தை காண தஞ்சாவூர் செல்லலாம் என இருந்தேன்.

எனவே இன்றே தஞ்சாவூர் செல்ல நினைத்திருந்தேன். ஆனால் படக்குழு அழைத்த போது நானே வருவேன் என அடம்பிடித்து வந்தேன்.” என அவரது பாணியில் கலகலப்பாக பேசினார் பார்த்திபன்.

நடிகை திரிஷா பேசும்போது…

” நாங்கள் பொன்னின் செல்வன் படத்திற்காக பயணம் செய்த போது என் காஸ்ட்யூம் அழகாய் இருந்ததற்கு காரணம் என்னுடைய காஸ்டியூமர் தான். கண்டிப்பாக இந்த தருணத்தில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இந்த படத்திற்காக மணிரத்னம் அவர்கள் என்னை அனுகியதற்காக அவருக்கு நன்றி. முதன்முறையாக இத்தனை நட்சத்திரங்களுடன் ஒரு பிரம்மாண்டமான படத்தின் நடித்திருக்கிறேன். நீங்கள் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும்” என பேசினார் த்ரிஷா.

சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற இந்த விழாவில் மணிரத்னம் சரத்குமார் கார்த்தி உள்ளிட்டார் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆதார்’ டைரக்டரின் ஆல்பம் ஆசை.; விமர்சனங்களை மதிக்க தெரிந்த வித்தியாசமான இயக்குனர்

‘ஆதார்’ டைரக்டரின் ஆல்பம் ஆசை.; விமர்சனங்களை மதிக்க தெரிந்த வித்தியாசமான இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான திருமதி சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.

‘ஆதார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் மற்றும் படத்தினை தமிழக முழுவதும் வெளியிட்ட சக்திவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேசுகையில்…

‘ஆதார்’ படத்தினை இயக்கும் வாய்ப்பளித்த என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமான சசிகுமார் அவர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘ஆதார்’ படத்தை பற்றி பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளியான அனைத்து விமர்சனங்களையும் வாசித்தேன். பார்த்தேன். பிரமித்தேன். இதன் காரணமாக எழுந்த உந்துதலால் நன்றி அறிவிக்கும் நிகழ்வை ஒருங்கிணைத்தேன்.

ஆதார்

திரைக்கதை எழுதும் போது எத்தகைய உணர்வுடன் எழுதினேனோ… அது துல்லியமாக விமர்சனத்தில் இடம்பெற்றிருந்தது. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. படைப்பாளிகளான நாங்கள் சில ஆண்டுகள் உழைத்து திரைக்கதை எழுதி, அதனை படைப்பாக வெளியிடுகிறோம்.

அதனை இரண்டு மணி நேரம் மட்டுமே பார்த்துவிட்டு, எப்படி இவ்வளவு துல்லியமாக விமர்சிக்க முடிகிறது என்ற ஆச்சரியம் என்னுள் இன்னும் இருக்கிறது.

பத்திரிக்கையாளர்களான திரை விமர்சகர்கள் தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு அல்லது நான்கு திரைப்படங்களை கூட பார்க்கிறீர்கள். அந்த நெருக்கடியான காலகட்டத்திலும், ‘ஆதார்’ போன்ற திரைப்படத்தின் உள்ளடக்கத்தை உட் கிரகித்து, அதனை நேர்மறையாகவும், விரிவாகவும், விவரிக்க முடிகிறது என்றால்.. உங்களுடைய எழுத்தை கண்டு எனக்குள் மிரட்சி ஏற்பட்டது.

குறிப்பாக இப்படத்தின் திரைக்கதைக்குள் மறைமுகமாக இடம்பெறும் ரவி என்னும் கதாபாத்திரம், யூசுப் பாய் எனும் அருண் பாண்டியனிடம் முதல் பாதியில் ஒரு காட்சியும், இரண்டாவது பாதியில் ஒரு காட்சியும் மட்டுமே இடம்பெற்றிருக்கும். உச்சகட்ட காட்சியில் அந்த கதாபாத்திரத்திற்குரிய வசனங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும்.

திரைக்கதைக்கு வலுவாக அமைந்திருக்கும் இந்த கதாபாத்திரங்களையும், விமர்சனத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்ததை பார்த்து வியந்தேன். பெருமிதமாகவும் இருந்தது.

ஏனைய திரைப்படங்களின் விமர்சனத்தை போல் அல்லாமல், ‘ஆதார்’ திரைப்படத்திற்கான விமர்சனங்கள் நன்றாக இருந்தன. இதனை தொகுத்து ஆல்பமாக வெளியிடலாம் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது.

ஏனெனில் ‘ஆதார்’ திரைப்படத்தின் விமர்சனத்தில் இருக்கும் துல்லியமான விவரங்கள் இதற்கு முன் எந்த திரைப்படத்தின் விமர்சனத்திலும் இடம்பெறவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளரிடமும் ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய இயக்கத்தில் வெளியான ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களுக்கும் இது போன்ற விமர்சனங்கள் வந்ததில்லை.

கடந்த 22 ஆண்டு கால திரையுலக பயணத்தில், உங்களுடைய விமர்சனமும், ஆதரவும், அன்பும் என்னை படைப்பாளியாக வளர்த்துக் கொண்டு வருகிறது. என்னுடைய ஐந்தாண்டு கால உழைப்பை ‘ஆதார்’ படத்தில் முதலீடு செய்திருக்கிறேன்.

இதனால் சிறிய அச்சமும் என்னுள் இருந்தது. படத்தைப் பார்த்த பத்திரிக்கையாளர்கள், இது தரமான படைப்பு என அதன் தனித்துவத்தை அடையாளப்படுத்தி பாராட்டி, என்னை அடுத்த கட்ட இலக்கை நோக்கி பயணிக்க வைத்திருக்கிறார்கள்.

‘ஆதார்’ திரைப்படத்தின் உள்ளடக்கம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படக்கூடியத் தகுதி கொண்டது என்று கணித்து, அதனை பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதற்கு உதவி செய்ததுடன், எட்டிற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றதற்கு பங்களிப்பு செய்த அதன் ஒருங்கிணைப்பாளர் திவ்யா அவர்களுக்கும், படத்தின் வெற்றிக்கு தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இதனிடையே ‘ஆதார்’ படத்தின் வெற்றியைப் பாராட்டி, அப்படத்தின் இயக்குநரான ராம்நாத் பழனிக்குமாருக்கு, தயாரிப்பாளர் திருமதி சசிகுமார் கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்

Aadhaar movie Directer ramnath palanikumar speech

முதல் ஸ்னூக்கர் படத்தை இயக்கும் பாலுமகேந்திரா மாணவன்

முதல் ஸ்னூக்கர் படத்தை இயக்கும் பாலுமகேந்திரா மாணவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சஞ்ஜீவன்.

இப்படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கார்த்திக் ஸ்வர்னகுமார் ஒளிப்பதிவில் தனுஜ் மேனன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் படத்தொகுப்பை ஷிபு நீல் பி.ஆர் கவனித்துள்ளார்.

இப்படத்தின் நடனத்தை சாண்டி மாஸ்டர் கையாள, ஸ்டண்டை ஃபயர் கார்த்தி மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் மணி சேகர் கூறியதாவது…

“நான் இயக்குனர் பாலுமகேந்திரா சாரின் சினிமா பட்டறையில் பயின்ற மாணவன் என்பதாலே படங்களை புதுவிதமாக அணுக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்துவிட்டது.

இப்படம் தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம். நான் அதிக நேரம் ஸ்னூக்கர் விளையாட்டிற்காக நண்பர்களுடன் செலவழித்திருக்கிறேன்.

ஸ்னூக்கர் என்றாலே சூதாட்டம், அதிக பண வைத்து விளையாடக் கூடியது போன்ற பேச்சுக்கள் எழுகிறது. உண்மையில் மற்ற விளையாட்டுக்களை போன்று தான் இதுவும் ஒரு விளையாட்டு.

இப்படம் இளைஞர்களை வெகுவாக கவரக்கூடிய வகையில் கதையையும் திரைக்கதையையும் வடிவமைத்துள்ளேன். ஒரு படம் என்றால் அது ஒரு ஜானரை மைய்யமாக வைத்துக் கொண்டு அதனை உருவாக்குவார்கள்.

இந்த படத்தில் ரசிகர்கள் அனைத்து விதமான ஜானர்களையும் அனுபவிக்கலாம். இதில் காதல், காமெடி, திரில்லர் போன்ற விஷயங்களை ரசிகர்கள் அனுபவிக்க முடியும்.

இப்படத்தில் நடந்த முக்கியமான ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். படப்பிடிப்பில் முக்கியமான காட்சியை படமாக்க மழை தேவைப்பட்டது.

அதற்காக செயற்கை மழையை தயார் செய்ய முயற்சி செய்தோம் சில காரணங்களால் அதனை தயார் செய்ய முடியாமல் போனது. சரியாக படப்பிடிப்பு தொடங்க இருந்த சிறிது நேரத்தில் நாங்கள் எதிர்ப்பார்த்த காற்றுடன் கூடிய மழை இயற்கையாக வந்து எங்களை ஆச்சரியப்படுத்தியது.

இயக்குனர் பாலுமகேந்திரா சார் எங்களை நேரில் வந்து ஆசிர்வதித்து போன்று இருந்தது. ஏனென்றால் பாலுமகேந்திரா சார் இயக்கிய மூன்றாம் பிறை படத்தில் இதேப்போன்று ஒரு நிகழ்வு நடந்ததாக கேள்விப் பட்டிருக்கிறோம். எங்களின் படப்பிடிப்பிலும் இதே போன்று நடந்தது அவரின் ஆசியாக தோன்றியது. படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.

எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வந்து படத்தை பார்த்து அனைத்தையும் அனுபவியுங்கள் என்றார்.

சஞ்ஜீவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. இப்படம் அக்டோபர் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு கணவரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்திய ‘பிகில்’ நடிகை

திருமணத்திற்குப் பிறகு கணவரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்திய ‘பிகில்’ நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘பிகில்’ படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார்.

பெண்கள் கால்பந்து அடிப்படையிலான திரைப்படத்தில் காயத்ரி ரெட்டி முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காயத்ரி தனது நிச்சயதார்த்தத்தின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார்.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட அவர் தனது கணவரின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் மற்றும் “என் கணவரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துகிறோம்” என்று தலைப்பிட்டுள்ளார். திறமையான நடிகைக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்துகள் குவிகின்றன.

Gayathri Reddy

கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்காக திருநெல்வேலி சென்றடைந்தார் தனுஷ்

கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்காக திருநெல்வேலி சென்றடைந்தார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு முறையான பூஜையுடன் தொடங்கியது.

1980 களின் பின்னணியில் எடுக்கப்படும் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ‘டாக்டர்’ & ‘டான்’ பட நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் தனுஷ் திருநெல்வேலி சென்றுள்ளார் என்பது இப்போதைய லேட்டஸ்ட் அப்டேட்.

மேலும் நடிகர் தனுஷ் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

More Articles
Follows