Breaking ஊழல் முதல் சர்கார் தேர்தல் வரை..; விஜய் ஓபன் பேச்சு

Breaking ஊழல் முதல் சர்கார் தேர்தல் வரை..; விஜய் ஓபன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay talks about Politics in Sarkar Audio launchசர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தமிழக அரசியல் நிலவரம் பற்றி பரபரப்பாக பேசினார்.

கலாநிதி மாறன் பெயரிலேயே நிதி இருப்பதால் இந்த படத்துக்கு நிறைய செலவு செய்திருக்கிறார்.

நாங்க சர்கார் அமைச்சிட்டு தேர்தல்ல நிக்கிறோம். தீபாவளிக்கு வர்றோம். அப்போ ஓட்டு போடுங்க.

இங்க உள்ள பெரியவங்க அமைச்சர்கள் நல்லவங்களா இருந்தா எல்லாம் நல்ல படியா நடக்கும். பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை எல்லாத்துக்கும் பணம் தேவைப்படுது. ஒரு தலைவனை இந்த நாடு எதிர்பார்க்கிறது.

எப்போதும் தர்மம் தான் ஜெயிக்கும். நியாயம்தான் ஜெயிக்கும். ஆனால் கொஞ்சம் லேட் ஆகும் அவ்வளவுதான்.

ஒரு நாட்ல மன்னன் நல்லா இருந்தால்தான் நாடு நல்லா இருக்கும். எங்க இருந்து அந்த ஒருத்தன் வருவாங்கன்னு பாருங்க. அவன் வந்து நடத்துவான் பாருங்க..” என்று விஜய் பேசினார்.

Vijay talks about Politics in Sarkar Audio launch

Breaking காங்கிரஸ் கட்சி சூப்பர் கட்சி…; சர்கார் விழாவில் விஜய் அரசியல் பேச்சு

Breaking காங்கிரஸ் கட்சி சூப்பர் கட்சி…; சர்கார் விழாவில் விஜய் அரசியல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Congress Party is good party when Gandhiji was there says Vijayசர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பற்றி பரபரப்பாக பேசினார்.

இன்னைக்கு காந்தி ஜெயந்தி. அவர பத்தி ஒன்று சொல்லனும். காந்தி அநியாயத்துக்கு நல்லராக இருந்தாரு.

அதான் காங்கிரஸ் ஒரு நல்ல கட்சியா இருந்துச்சி.

இப்பவும் அது நல்ல கட்சிதான். ஆனா அது அப்போ சூப்பர் டூப்பர் கட்சியா இருந்ததுக்கு காரணம் காந்திதான்.” என்று காந்தி பற்றியும் காங்கிரஸ் கட்சி பற்றியும் விஜய் பேசினார்.

Congress Party is good party when Gandhiji was there says Vijay

Breaking மெர்சல்ல அரசியல் இருந்துச்சி; சர்காருல அரசியல் மெர்சலா இருக்கும்… விஜய் பன்ச்

Breaking மெர்சல்ல அரசியல் இருந்துச்சி; சர்காருல அரசியல் மெர்சலா இருக்கும்… விஜய் பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar will have Mersal politics Vijays Punch dialogue in Sarkar Audio launchஅண்மைக்காலமாக பொதுமேடைகளிலும் விஜய் ரொம்ப அழகாகவே பன்ச் டயலாக்குகளை பேசி வருகிறார்.

தற்போது சர்கார் இசை விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

அதில் விஜய் பேசும்போது…

மெர்சல் படத்துல அரசியல் இருந்துச்சி; சர்காருல அரசியல் மெர்சலா இருக்கும்” என்று பன்ச் டயலாக் பேசினார்.

Sarkar will have Mersal politics Vijays Punch dialogue in Sarkar Audio launch

சர்கார் விழாவில்…; வாழ்க்கை ஜம்முன்னு இருக்க தளபதி சூப்பர் ஐடியா

சர்கார் விழாவில்…; வாழ்க்கை ஜம்முன்னு இருக்க தளபதி சூப்பர் ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

How to make life jolly Vijay super tips at Sarkar Audio launchவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் இசை சென்னையில் நடைபெற்று வருகிறது.

அதில் விஜய் பேசும்போது…

உசுப்பேத்துரவன் கிட்ட உம்முனு இருந்து, கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்” என்றார்.

How to make life jolly Vijay super tips at Sarkar Audio launch

Breaking நிஜத்தில் முதல்வராக இருந்தால் நடிக்க மாட்டேன்.. : சர்கார் விஜய் பேச்சு

Breaking நிஜத்தில் முதல்வராக இருந்தால் நடிக்க மாட்டேன்.. : சர்கார் விஜய் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If I became Chief Minister i wont act says Vijay at Sarkar Audio launchசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

அதில் பட நாயகன் விஜய் பேசும்போது….

சர்கார் படத்துல நான் முதல்வராக நடிக்கல. ஆனால் ஒரு வேளை முதல்வர் ஆனால், நிச்சயம் நடிக்க மாட்டேன்.

லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பேன்.” என தன் அரசியல் வருகையை சூசகமாக தெரிவித்து பேசினார்.

If I became Chief Minister i wont act says Vijay at Sarkar Audio launch

விஜய் ஆண்டனி-ஆர்யா-கிருத்திகா பங்கேற்ற சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ்

விஜய் ஆண்டனி-ஆர்யா-கிருத்திகா பங்கேற்ற சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay antony and kiruthika udhayanidhiசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை அமைப்பின் தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் செயலாளர் ருக்மிணிதேவி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். 35 வயது முதல் 100 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளில் நடந்த ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் போட்டிகளில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்கள் அடுத்து தஞ்சாவூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அடுத்தடுத்து இந்தியா, ஆசியா மற்றும் உலக அளவில் போட்டிகள் நடக்க இருக்கின்றன.

நடிகர் ஆர்யா, இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஊக்கப்படுத்தியதோடு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 55+ வயது பிரிவில் முதல் இடத்தை பிடித்திருக்கிறேன். நான் தேசிய அளவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்பேன் என்றார் அசோஷியேஷன் தலைவரும், ஓட்டப்பந்தய வீரருமான செண்பகமூர்த்தி.

ஒவ்வொரு வருடமும் நான் தவறாமல் இந்த அத்லெடிக் போட்டிகளை காண வருவேன். 35 வயது முதல் 100 வயது வரையில், பல்வேறு பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல் போட்டிகள் நடைபெறுகின்றன. இவர்களுடன் நான் போட்டி போட்டு ஓடினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. அந்த அளவுக்கு உடல் வலிமையோடும், அர்ப்பணிப்போடும் கலந்து கொண்டு ஒடுகிறார்கள். அவர்கள் ஓடும் வேகத்தை பார்த்தால் நமக்கு நிறைய பயிற்சி தேவை என்பது புரிகிறது. இவர்களை பார்த்தாலே நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது. அதனாலேயே தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்கிறேன். இவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் கூட கலந்து கொள்கிறார்கள். நாம் தான் உடல்நிலையை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. அதற்கு ஏதாவது ஒரு காரணம் தேடுகிறோம். இவர்களை போல நாமும் உடலை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றார் நடிகர் ஆர்யா.

நான் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த போட்டிகளை காண வந்திருக்கிறேன். 95 வயது பெரியவர் ஒருவர் ஓடி வெற்றி பெற்றார். அதையெல்லாம் பார்க்கும் உண்மையிலேயே ஆச்சரியமாகவும், நமக்கு ஒரு உந்துதலாகவும் இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும் மெடல் கொடுக்காமல், கலந்து கொள்ளும் அனைவருக்குமே விருதுகள் வழங்க வேண்டும். ஏனென்றால் இவ்வளவு வெயிலிலும் முழு முயற்சியுடன் வெற்றியை மனதில் வைத்து ஓடுகிறார்கள். அவர்கள் நமக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.

இங்கு வருவதற்கு முன்பு எந்தவித சிந்தனையும் இல்லாமல் வந்தேன். ஒரு தாத்தா மிக வேகமாக ஓடுவதை பார்த்து அசந்து விட்டேன். எனக்கே வயதாகி விட்டது என நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், இங்கு வந்த பிறகு தான் வயது ஒரு விஷயமே அல்ல என்பதை உணர்ந்தேன். உடல் ஆரோக்கியம் தான் முக்கியம். எனக்கு செண்பகமூர்த்தி சாரை 6 வருடமாக தெரியும். காலையில் 4 மணிக்கு எழுவார், சரியான நேரத்துக்கு தூங்குவார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நேரம் ஒதுக்கி, உடல்பயிற்சி செய்வார். நாம் அனைவரும் உடல்பயிற்சி செய்வது அவசியம் என்றார் நடிகர் விஜய் ஆண்டனி.

More Articles
Follows