ராஜீவ்காந்தி கொலை: பேரறிவாளன் விடுதலைக்கு விஜய்சேதுபதி குரல்..?

Vijay Sethupathi Raise his Voice for Perarivalan Releaseராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

எனவே இவர்களின் விடுதலைக்காக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் அவர்களின் தலைமையில், வருகிற ஜூன் 11ஆம் தேதி வேலூர் சிறையில் இருந்து சென்னை கோட்டை வரை பிரம்மாண்ட பேரணி நடைபெறவுள்ளது.

இந்த பிரம்மாண்ட பேரணியில் இணைய பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் இதற்கு ஆதரவாக சத்யராஜ் பேசியிருந்தார். தற்போது நடிகர் விஜய் சேதுபதியும் இந்த பேரணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

25 வருடம் என்பது கால் நூற்றாண்டு. அவர்களின் பகுதி வாழ்க்கையே சிறையிலே முடிந்தது மிகக்கொடுமையான விஷயம்.

எனவே அவர்களின் விடுதலைக்காக இந்த பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த மாபெரும் பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளாராம்.

Overall Rating : Not available

Related News

‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு மீண்டும் மாமனிதன்…
...Read More
விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை படத்தை இயக்கியவர்…
...Read More
தான் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ் படத்தில்…
...Read More
'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில்…
...Read More

Latest Post