JUST IN அந்தமாதிரி படமெடுக்க 365 இயக்குனர்கள் இருக்காங்க.; விஜய்சேதுபதியை விரட்டிய மிஷ்கின்

JUST IN அந்தமாதிரி படமெடுக்க 365 இயக்குனர்கள் இருக்காங்க.; விஜய்சேதுபதியை விரட்டிய மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அனு கீர்த்தி, புகழ், சிங்கம் புலி, விமல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘டிஎஸ்பி’.

இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார்.

இந்த படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது…

“கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே நல்லா இரும்மா.. என்ற பாடலை தான் நான் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். என் உதவி இயக்குனர்கள் கூட இதைப் பற்றி அடிக்கடி என்னிடம் கேட்பார்கள்.. அந்த அளவுக்கு அந்த பாடல் எனக்கு பிடித்து விட்டது.

இந்த டிஎஸ்பி படத்தின் டிரைலரை பார்த்தேன். அதில் இரண்டு மூன்று விக்ரம் இருப்பதை போல உணர்ந்தேன்.

10-15 வருடங்களுக்கு முன்பு என்னுடைய இயக்கத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தார் விஜய்சேதுபதி. அப்போது அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் இன்று அவர் மிகப்பெரிய உயர்ந்த இடத்தில் இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

இதனிடையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆர் ஜே விஜய்.. ‘நீங்கள் காமெடி படம் எடுப்பீர்களா என்று மிஷ்கினிடம் கேட்டார்..

“அதற்கு நான் நகைச்சுவை உணர்வு நிறைந்தவன் தான். ஆனால் எனக்கு அந்த மாதிரி படம் எடுக்க தெரியாது.

நான் வன்முறையாளன் அல்ல. ஆனால் என்னுடைய படத்தில் வன்முறை காட்சிகள் இருக்கும்.

நான் சாப்பிடும் மேசையில் கூட ஒரு தலை இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.

என்னால் அது போன்ற படங்கள் தான் எடுக்க முடியும் நீங்கள் எதிர்பார்க்கும் படங்களைப் போல எடுக்க 365 இயக்குனர்கள் இருக்கிறார்கள்” என்று மிஷ்கின் பேசினார்.

Mysskin speech at DSP movie Audio launch

JUST IN விஜய்சேதுபதி ஒரு RARE PIECE.; No 1 & No 2-லாம் அவருக்கு கிடையாது – இமான்

JUST IN விஜய்சேதுபதி ஒரு RARE PIECE.; No 1 & No 2-லாம் அவருக்கு கிடையாது – இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அனு கீர்த்தி, புகழ், சிங்கம் புலி, விமல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘டிஎஸ்பி’.

இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார்.

இந்த படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் இமான் பேசும்போது…

“15 வருடங்களுக்கு முன்பு.. ‘கூடை மேல கூட வச்சு…” என்ற பாடலை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் போது… நான் யுகபாரதி அந்தப் படத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் மூவரும் நிறைய நடிகர்களை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம்.

அப்போதுதான் விஜய்சேதுபதி இதற்கு சரியாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்தோம். அன்று முதல் அவரை நான் பார்த்து வருகிறேன்..

அவரைப் பொறுத்தவரை நம்பர் ஒன் நம்பர் டூ நம்பர் த்ரீ என்றெல்லாம் கிடையாது.. அதெல்லாம் எனக்கு வேண்டாம் என்று அவர் வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.

நீங்கள் ஒரு ரேர் பீஸ் (Rare piece) நான் விஜய்சேதுபதியுடன் நிறைய படங்களுக்கு பணிபுரிந்துள்ளேன்.

‘றெக்க’ படத்தில் ஒரு பாடலுக்கு அவர் இருக்க மாட்டார். கண்ணம்மா கண்ணம்மா என்ற பாடல் பெண் குரல் மட்டும் தான் இருக்கும்.

ஒரு முன்னணி நாயகர் அது போல பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்களை படத்தில் வைக்க மாட்டார்கள். ஆனால் அதற்கான இடத்தையும் விட்டுக் கொடுப்பார் விஜய்சேதுபதி.

அவருக்கு 100 வயதானாலும் சினிமாவில் தான் இருப்பார்.. காரணம் அவர் எந்த கேரக்டர் கொடுத்தாலும் செய்து கொண்டே இருப்பார்.

ஒரு முன்னணி நடிகராக இருக்கும் ஒருவர் வில்லன் கேரக்டரை செய்ய மாட்டார். ஆனால் அதையும் செய்து கொண்டு இருக்கிறார்..

நல்லாயிருமா? நல்லாயிருமா? என்ற பாடல் அவரை நினைத்து தான் எழுதினோம். அவர் நன்றாக இருக்க வேண்டும்” என வாழ்த்தி பேசினார் இமான்.

Imman speech at DSP movie Audio launch

15 வருடங்களுக்கு பிறகு நரேனுக்கு குழந்தை.; க்யூட் போட்டோ பாருங்க

15 வருடங்களுக்கு பிறகு நரேனுக்கு குழந்தை.; க்யூட் போட்டோ பாருங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆகஸ்ட் 2007 இல், தொலைக்காட்சி தொகுப்பாளர் மஞ்சு ஹரிதாஸை மணந்தார் நடிகர் நரேன்.

தம்பதியருக்கு தன்மயா என்ற மகள் உள்ளனர்.

தற்போது, ​​ 15 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளனர் .

மஞ்சுவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

நரேன் நேற்று இரவு தனது சமூக ஊடகத்தில் புதிதாகப் பிறந்த மகன் விரலை இறுக்கமாகப் பிடித்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஜப்பானிய மொழி படத்தில் நடிக்க ஆசைப்படும் நடிகை ஆலியா பட்

ஜப்பானிய மொழி படத்தில் நடிக்க ஆசைப்படும் நடிகை ஆலியா பட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தான் ஹாலிவுட்டில் மட்டும் நின்றுவிடப் போவதில்லை என்றும், முடிந்தால் ஜப்பானிய படத்திலும் நடிப்பேன் என்றும் நடிகை ஆலியா பட் கூறினார்.

“நான் முடிந்தவரை பல தரப்பு படங்களை ஆராய முயற்சிக்கிறேன்.

எனது பட்டியலில் இருந்து ஹாலிவுட்டை மட்டும் டிக் செய்யவில்லை.

தொடர்ந்து எனக்கு சவாலான பாத்திரங்களை செய்ய விருப்பமுண்டு .

எனக்கு மொழி பேசத் தெரிந்திருந்தால் ஜப்பானிய திரைப்படத்திலும் நடிப்பேன் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.

விஜய்யின் வாரிசு படத்தில் இணைகிறாரா சிம்பு ?

விஜய்யின் வாரிசு படத்தில் இணைகிறாரா சிம்பு ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிம்பு தற்போது, ​​ விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய்யின் வரவிருக்கும் ‘வரிசு’ படத்தில் ஒரு பாடலுக்கு சிலம்பரசன் டிஆர் குரல் கொடுக்கிறார் என்கிற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் இசையமைப்பாளர் தமன், எஸ்டிஆருக்கு சிறந்த நண்பர் என்பது அனைவரும் அறிந்ததே.

சிம்பு தனது நண்பர் தமன் மற்றும் அண்ணன் தளபதி விஜய்க்காக வாரிசு படத்தில் பாடப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது 3 சகாப்த பாலிவுட் பயணம் பற்றி மனம் திறந்த சுனில் ஷெட்டி

தனது 3 சகாப்த பாலிவுட் பயணம் பற்றி மனம் திறந்த சுனில் ஷெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பால்வான்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகர், சுனில் ஷெட்டி

தனது முப்பது வருட பயணத்தைப் பற்றி பேசிய அவர் 30 ஆண்டுகள் நன்றாக இருக்கிறது.

“சில நேரங்களில் மக்கள் உங்களை மறந்துவிடுவார்கள், ஊடகங்கள் உங்களை மறந்துவிடும்.

ஆனால் ஊடகங்கள் என்னை வாழ வைத்துள்ளன.

எனது உடல்தகுதி காரணமாக மக்கள் என்னை வாழ வைத்திருக்கிறார்கள்.

கடவுள் கருணை காட்டுகிறார், இங்கே நான் மீண்டும் என் OTT அறிமுகத்தைப் பற்றி உற்சாகமாகவும் பதட்டமாகவும் இருக்கிறேன் என்றார்.

More Articles
Follows