ஒரே நாளில் வெற்றி விழாவா.? ஓடாத ‘டிஎஸ்பி’ படத்துக்கு ஓவர் பில்டப்

ஒரே நாளில் வெற்றி விழாவா.? ஓடாத ‘டிஎஸ்பி’ படத்துக்கு ஓவர் பில்டப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையில் விஜய் சேதுபதி நடித்துள்ள டிஎஸ்பி படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருந்தார்.

இந்த படம் வெளியான முதல் காட்சி முதலே தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த படத்திற்கும் விமர்சனங்களும் நெகட்டிவாக வந்தன.

இதனையடுத்து விஜய்சேதுபதியை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில் திடீரென இன்று படத்தின் வெற்றி விழா என படக் குழுவினர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் விஜய்சேதுபதி இயக்குநருக்கு வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது இந்தப் புகைப்படங்களை ட்ரோல் செய்துள்ளனர்.

ஓடாத படத்திற்கு ஓவர் பில்டப் ஏன்? ஒரே நாளில் வெற்றி விழாவா? ஏன் இந்த பித்தலாட்டம்? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Vijay Ajith Fans Clash : ‘துணிவு’ படத்தில் அஜித் டூப்.? ‘பிகில்’ படத்தில் விஜய் டூப்.?

Vijay Ajith Fans Clash : ‘துணிவு’ படத்தில் அஜித் டூப்.? ‘பிகில்’ படத்தில் விஜய் டூப்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படம் அடுத்த வருடம் 2023 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் படத்தில் அஜித்துக்கு பதிலாக சுதாகர் என்பவர் டூப் போட்டதாக தகவல்கள் பரவியது.

இதனையடுத்து விஜய் ரசிகர்கள் அஜித்தை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

மேலும் துணிவு படத்தில் ஆக்சன் காட்சிகளில் அஜித் நடிக்கவில்லை என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமே உறுதி செய்துவிட்டதாக மீம்ஸ்கள் பரவியது.

ஆனால் அந்த தகவல் முற்றிலும் பொய் என தெரியவந்துள்ளது.

மேலும், ‘துணிவு’ படத்தில் அஜித்தான் 100% ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் என்பதை படக்குழுவு உறுதி செய்துள்ளது.

விஜய் ரசிகர்கள் அஜித்தை ட்ரோல் செய்த காரணத்தினால் அஜித் ரசிகர்களும் பிகில் படத்தில் விஜய்க்கு டூப் போட்டவர் இவர்தான் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

SMS படத்திற்கு பிறகு எனக்கு ‘வரலாறு முக்கியம்’ அமைஞ்சிருக்கு – ஜீவா

SMS படத்திற்கு பிறகு எனக்கு ‘வரலாறு முக்கியம்’ அமைஞ்சிருக்கு – ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள ‘வரலாறு முக்கியம்’ படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த நிகழ்வினில் நடிகர் ஜீவா பேசியதாவது…

“SMS படத்திற்கு பிறகு அது போன்று ஒரு படம் வேண்டும் என்று அனைவரும் என்னை கேட்டார்கள். அப்படி ஒரு படமாய் தான் இந்த வரலாறு முக்கியம் வந்துள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் மிகவும் அதிகமான காமெடி உணர்வு உள்ளவர். அது படத்திலும் பிரதிபலித்துள்ளது.

கோவிட் காலகட்டத்தில் தான் இந்த படத்தை உருவாக்கினோம். மக்கள் சந்தோஷமாக படம் பார்க்க வேண்டுமென இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

ஹீரோயின் பிரக்யா மற்றும் காஷ்மீரா இருவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியை தருகிறது. காஷ்மீரா இதில் மலையாளம் கலந்த தமிழ் பேசி அசத்தியுள்ளார்.

பிரக்யாவை முன்னதாகவே சோஷியல் மீடியா மூலம் தெரியும். அவருடன் பகிர்ந்துகொண்டதும், படப்பிடிப்பு தளத்திலும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அனைவரது கூட்டு முயற்சியிலும் இந்த படம் உருவாகி உள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இத்திரைப்படத்தில், ஜீவா மற்றும் காஷ்மீரா பரதேசி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரக்யா நாக்ரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், ஷாரா சரண்யா, டி எஸ் கே, சித்திக் மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். சக்தி சரவணன் (ஒளிப்பதிவு), ஸ்ரீகாந்த் N.B. (எடிட்டிங்), மோகன் (கலை), சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), பிருந்தா (நடனம்), மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு ) பணிகளை செய்துள்ளனர்.

நான் பர்ஸ்ட் பார்த்த தமிழ் படமே ‘சிவா மனசுல சக்தி’ தான் – பிரக்யா நாக்ரா

நான் பர்ஸ்ட் பார்த்த தமிழ் படமே ‘சிவா மனசுல சக்தி’ தான் – பிரக்யா நாக்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள ‘வரலாறு முக்கியம்’ படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த நிகழ்வினில் நடிகை பிரக்யா நாக்ரா பேசியதாவது..

“இது என்னுடைய முதல் படம். அதற்கு இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றிகள். நான் முதன் முதலில் பார்த்த தமிழ் படம் சிவா மனசுல சக்தி படம் தான். ஜீவா போன்ற சிறந்த நடிகருடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சி.

இது எனது கனவு நிஜமான தருணம். முதல் படத்திலயே மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய விஷயம்.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு திரைப்படம். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. நன்றி” என்றார்.

வெற்றிமாறன் – விஜய்சேதுபதி படப்பிடிப்பில் ஃபைட் மாஸ்டர் மரணம்

வெற்றிமாறன் – விஜய்சேதுபதி படப்பிடிப்பில் ஃபைட் மாஸ்டர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடி நடிகர் சூரியை நாயகனாக வைத்து ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு சென்னை, கேளம்பாக்கத்தில் நடந்து வருகிறது.

அப்போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு கமலின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பிலும் கிரேன் விழுந்ததில் இரு பணியாளர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கமல் தரப்பிலும் லைக்கா தரப்பிலும் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காமெடி சீனை கொரியோகிராப் செய்வார் ஒளிப்பதிவாளர் – நடிகர் ஷாரா

காமெடி சீனை கொரியோகிராப் செய்வார் ஒளிப்பதிவாளர் – நடிகர் ஷாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள ‘வரலாறு முக்கியம்’ படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த நிகழ்வினில்… நடிகர் ஷாரா பேசியதாவது…

“இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஜீவா சார், சூப்பர் குட் பிலிம்ஸ், இயக்குனர் சந்தோஷ் மூவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் சக்தி, காமெடி சீனை கொரியோகிராப் செய்வார், அது பலரிடத்தில் இருப்பது இல்லை.

SMS போன்று இதுவும் ஒரு ஜாலியானா படமாக இருக்கும். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்.” என்றார்.

More Articles
Follows