தனுஷை நெருங்கும் விஜய்சேதுபதி

Vijay sethupathi going to write script for new movieகோலிவுட்டில் பிரபலமாக உள்ள போதே பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

மேலும் படங்களை தயாரித்து வந்த இவர் முதன்முறையாக கதை, திரைக்கதை எழுதி பவர் பாண்டி படத்தை இயக்கினார்.

இவரது வழியில் தற்போது விஜய்சேதுபதி தொடர்ந்து வருகிறார்.

இவரும் விரைவில் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில், தனது அடுத்த கட்டமாக ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதவிருக்கிறாராம்.

இப்படத்தை பிஜூ விஸ்வநாத் இயக்க, இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி.

இதற்கு முன்பே, ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்திற்காக இயக்குனர் பிஜூ விஸ்வநாத்துடன் இவர் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தனுஷைப் போல விஜய்சேதுபதியும் இயக்குனர் ஆவார் என்றே எதிர்பார்க்கலாம்.

இவையில்லாமல், ‘புரியாத புதிர்’, ‘மாமனிதன்’, ‘சீதக்காதி’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ’96’ , ‘அநீதி கண்கள்’, ‘கருப்பன்’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட படங்கள் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிறது என்பது கவனிக்கத்தக்கது.

Vijay Sethupathi going to write script for new movie

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post