மாதவன் சித்தார்த் நயன்தாரா கூட்டணியை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்

மாதவன் சித்தார்த் நயன்தாரா கூட்டணியை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தமிழ்ப் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதி சுற்று’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ உள்ளிட்ட பல வெற்றிகரமான மற்றும் பெரிதும் பாராட்டப்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர். YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த்.

இவர் தற்போது தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சக்தி வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் திறமை மிகுந்த தயாரிப்பாளரான எஸ். சஷிகாந்த், தனது 23வது தயாரிப்பான ‘டெஸ்ட்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்த ‘டெஸ்ட்’ என்னும் திரைப்படத்தில் பிரபல நட்சத்திரங்களான மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

*இது குறித்து தயாரிப்பாளர் சக்ரவர்த்தி ராமச்சந்திரா கூறுகையில்,*

“பத்தாண்டுகளுக்கும் மேலாக சஷியுடன் பணியாற்றியுள்ள நான் சரியான கதைகளைக் கண்டறிவதில் அவருக்கு இருக்கும் திறமையையும், சிறு விவரங்கள் மீதும் அவருக்குள்ள பேரார்வத்தையும் நன்கறிவேன். மிகவும் ஈர்க்கக்கூடிய கதையம்சம் கொண்டது ‘டெஸ்ட்’.

சஷி இயக்குநராக அறிமுகமாகும் படத்தை தயாரிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. YNOTன் முதல் தயாரிப்பின் போது இருந்ததைப் போலவே இப்போதும் மிகுந்த உற்சாகமாக இருக்கிறோம்,” என்றார்.

*எஸ்.சஷிகாந்த் கூறுகையில்…

“ஒரு கட்டிடக் கலைஞராக இருந்து தயாரிப்பாளராக மாறியதால், கதை சொல்லும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் நான் எப்போதும் ஈர்க்கப்பட்டேன். இந்தத் துறையில் உள்ள திறமையான திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றும் அதிர்ஷ்டம் பல ஆண்டுகளாக எனக்கு கிடைத்து வருகிறது.

அவர்களது அர்ப்பணிப்பு நிலையான உத்வேகமாக எனக்கு இருந்து வருகிறது. இப்போது, ஒரு இயக்குநராக எனது புதிய அத்தியாயத்தை தொடங்கும் போது, எனது கண்ணோட்டத்தை திரையில் கொண்டு வரவும், பார்வையாளர்களை சென்றடையும் கதைகளை கூறவும் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

இயக்குநராக நான் அறிமுகமாகும் படத்தில் அசாதாரண திறமை கொண்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் உள்ளனர். அவர்களின் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

மனித உணர்வுகளின் உன்னதத்தை விவரிக்கவுள்ள ‘டெஸ்ட்’, விளையாட்டுத்திறன், தோழமை உணர்ச்சி மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை மையப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு கதையாகும். பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் அமர்த்தி அவர்களின் இதயங்களை தொடும் படமாக இது இருக்கும்.

சென்னை மற்றும் பெங்களூரில் ஜூலை 2023 வரை படப்பிடிப்பு நடைபெறும். 2024 கோடை காலத்தில் உலகளவில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும்.

இத்திரைப்படம் பற்றிய கூடுதல் அறிவிப்புகளுக்கு #theTEST உடன் இணைந்திருங்கள்.

YNOT ஸ்டுடியோஸ் பற்றி

எஸ். சஷிகாந்தால் 2009ம் ஆண்டு நிறுவப்பட்ட YNOT ஸ்டுடியோஸ், இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். சென்னையில் இருந்து இயங்கும் YNOT ஸ்டுடியோஸ், கடந்த 13 ஆண்டுகளாக உயர்தர தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களை தயாரித்து விநியோகித்து வருகிறது.

‘இறுதி சுற்று’, ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘மண்டேலா’ மற்றும் பல திரைப்படங்கள் அதன் குறிப்பிடத்தக்க தயாரிப்புகளில் அடங்கும். புதுமையான கதைசொல்லல், துணிச்சலான கருப்பொருள்கள் மற்றும் அற்புத திறமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியத் திரைப்படத் துறையில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான திரைப்படங்களைத் தயாரிப்பதில் YNOT ஸ்டுடியோஸ் நற்பெயரைப் பெற்றுள்ளது.

2021ம் ஆண்டில் ‘மண்டேலா’ (தமிழ்) திரைப்படத்திற்காக தயாரிப்பாளராக ‘சிறந்த அறிமுகப் படத்திற்கான இயக்குநருக்கான தேசிய திரைப்பட விருது’ உட்பட ஏராளமான விருதுகளையும் பாராட்டுகளையும் இந்நிறுவனம் வென்றுள்ளது.

தயாரிப்பாளர் திரு.எஸ்.சஷிகாந்த் தேசிய விருதை பெற்றார். புதிய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு திரைப்படத் துறையின் எல்லைகளை விரிவுப்படுத்துவதிலும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் சிந்தனையைத் தூண்டும் கதைகளை வழங்குவதிலும் YNOT ஸ்டுடியோஸ் உறுதியாக உள்ளது.

இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/studiosynot

ட்விட்டர்: https://twitter.com/studiosynot

யூடியூப்: https://www.youtube.com/@ynotstudios
முகநூல்: https://www.facebook.com/ynotstudios

மின்னஞ்சல்: [email protected]

TEST’ to be helmed by Sashikanth to feature Madhavan Siddharth Nayanthara

வெற்றி – ஷில்பா மஞ்சுநாத் இணையும் படம்.; கலைஞர்கள் விவரம் இதோ..

வெற்றி – ஷில்பா மஞ்சுநாத் இணையும் படம்.; கலைஞர்கள் விவரம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘8 தோட்டாக்கள்’ படத்தின் நடிகர் வெற்றி மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் நடிகை ஷில்பா மஞ்சுநாத் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்கள்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் அஷ்ரப் அலி இயக்க, சின்னத்தம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிக்குகிறது.

வெற்றி - ஷில்பா மஞ்சுநாத்

இப்படம் நேற்று அதிகாரப்பூர்வ பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில் மூத்த குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி மற்றும் மகேஷ் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

மேலும், அருண் விஜய் நடித்த ‘தடம்’ படத்திற்கு இசையமைத்த அருண்ராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

வெற்றி - ஷில்பா மஞ்சுநாத்

Vetri & Shilpa Manjunath’s film begined with pooja

தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு ரஜினி ஆறுதல்.; உதவிய சூர்யா – கருணாஸ் – லாரன்ஸ்

தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு ரஜினி ஆறுதல்.; உதவிய சூர்யா – கருணாஸ் – லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர் விஏ.துரை.

இவர் பின்னர் சொந்தமாக, எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்தார்.

விக்ரம் – சூர்யா நடிப்பில் பாலா இயக்கிய ‘பிதாமகன்’, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘கஜேந்திரா’ போன்ற படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை.

மேலும் ரஜினிகாந்த் தயாரித்து நடித்து ‘பாபா’ படத்திலும், நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தற்போது மனைவி, மகளை பிரிந்து விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வருகிறார்.

இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிப்பு இருந்தது. சிகிச்சைக்கு கூட பணமின்றி தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.

மேலும் வி.ஏ.துரை சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

நடிகர் சூர்யா 2 லட்சம் ரூபாயும் , கருணாஸ் 50 ஆயிரம் ரூபாய் நிதி கொடுத்து உதவிக்கரம் நீட்டி இருந்தனர்.

ரஜினிகாந்த் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்து இருந்தார். அத்துடன், நான் பார்த்துக் கொள்கிறேன் கவலைப்பட வேண்டாம் என நம்பிக்கை மருத்துவச் செலவையும் ஏற்றுக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அவரின் உதவி குறித்த எந்த தகவலும் அவரது தரப்பில் இருந்து வெளிவரப்படவில்லை.

தற்போது அண்ணா நகரில் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வி.ஏ.துரை.

மருத்துவ செலவிற்கான ரூபாய் 3 லட்சத்தை நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரான்ஸ் மருத்துவ மனையில் செலுத்தி உதவியிருக்கிறார்.

rajini suriya Karunas Lawrence helped producer durai

உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மு.மாறனின் இயக்கத்தில் உதயநிதி நடித்து வெளியான படம் ‘கண்ணை நம்பாதே’.

இப்படத்தில் ஆத்மிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா சாவ்லா, வசுந்தரா காஷ்யப், சதீஷ், ஜி மாரிமுத்து மற்றும் சுபிக்ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை 2019 இல் தயாரிப்பைத் தொடங்கி, 2022 இல் படப்பிடிப்பை முடித்த பிறகு, அது திரையரங்குகளில் வருவதற்கு மேலும் தாமதமானது.

கடைசியாக, இப்படம் மார்ச் 17-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே அதிகமான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், ‘கண்ணை நம்பாதே’ படம் ஏப்ரல் 14 முதல் பிரபலமான நெட்பிளிக்ஸில் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Udhayanidhi’s ‘Kannai Nambathey’ OTT Release Date Announcement

லாரன்ஸ் நடித்த ‘ருத்ரன்’ பட ரிலீசுக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு

லாரன்ஸ் நடித்த ‘ருத்ரன்’ பட ரிலீசுக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ படம் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக, ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் நிறுவனம் ஒப்பந்தம் செய்து இருந்தது.

ரூ. 12 கோடியே 25 லட்சம் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்ஸா நிறுவனம் முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தியிருந்தது.

இந்நிலையில், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் எனக் கூறிய தயாரிப்பு நிறுவனம், திடீரென இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது.

இதுதொடர்பாக, மத்தியஸ்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், ஏப்ரல் 14ம் தேதி படத்தை வெளியிட பட குழு முடிவு செய்துள்ளதாகவும், திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, படத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.

மேலும் மனுவுக்கு பதிலளிக்கும்படி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

இத்துடன் விசாரணையை ஏப்ரல் 24 ம் தேதிக்கு தள்ளிவைத்தார் நீதிபதி.

Court orders ban on release of ‘Rudhran’ starring Lawrence

தமிழ் புத்தாண்டில் யோகி பாபு வரலையாம்.; காரணமே இல்லாம ‘யானை முகத்தான்’ தள்ளிப்போனார்

தமிழ் புத்தாண்டில் யோகி பாபு வரலையாம்.; காரணமே இல்லாம ‘யானை முகத்தான்’ தள்ளிப்போனார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ‘லால் பகதூர் ஷாஸ்த்தி’, ‘வரி குழியிலே கொலபாதகம்’, ‘இன்னு முதல்’ என மூன்று ஹிட் படங்கள் டைரக்ட் செய்தவர் ரெஜிஷ் மிதிலா.

இவர் ‘யானை முகத்தான்’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

இதில் விநாயகர் வேடத்தில் நடித்துள்ளார் யோகி பாபு. இவருடன் ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து, இயக்கம் : ரெஜிஷ் மிதிலா
தயாரிப்பாளர்கள்: ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ்:
தயாரிப்பு நிறுவனம்: தி கிரேட் இந்தியன் சினிமாஸ்
ஒளிப்பதிவு : கார்த்திக்Sநாயர்
படத்தொகுப்பு : சைலோ
இசையமைப்பாளர்: பரத் சங்கர்
ஆடை வடிவமைப்பாளர்: குவோச்சாய்.S
ஒப்பனை: கோபால்
நிர்வாக தயாரிப்பு : சுனில் ஜோஸ்
தயாரிப்பு மேற்பார்வை : ஜெயபாரதி.

சமூக பக்தி பாணியில் தயாராகி இருக்கும் இந்தப்படத்தை தி கிரேட் இந்தியன் சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ரஜீஷ் மிதிலா மற்றும் லிஜோ ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன் இந்த படம் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் தற்போது இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பதற்கு சில காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் முதன்முறையாக படத்தின் ரிலீசை தள்ளி வைப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை என அறிவித்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

“காரணம் இல்லாமல் தள்ளி வைக்கிறோம்.. #யானைமுகத்தான் படக்குழுவினர் அதிரடி அறிவிப்பு..!!”

#YaanaiMugathaan worldwide release postponed from April 14 to April 21 now.
Due to ‘*NO*’ Reason..

@iYogiBabu @thilak_ramesh
@RMidhila #Karunakaran
@sonymusic_south @johnsoncinepro

Yaanai Mugathaan worldwide release postponed from April 14 to April 21

More Articles
Follows