‘கத்தி’க்கு பிறகு மீண்டும் விஜய் செய்த காரியம்

vijay had friendly meet with mediaவிஜய் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் பைரவா.

இப்படத்தை அடுத்து விரைவில் அட்லி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஜய்.

இச்சந்திப்பு சென்னையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

மரியாதை நிமித்தமாக பத்திரிகையாளர்களை சந்தித்து, ஒவ்வொருவருடனும் தனி தனியாக சந்தித்து, அவர்கள் நலம் விசாரித்தார்.

மேலும் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு அவர்களை சந்தோஷப்படுத்தினார்.

கத்தி படம் வெளியீட்டின் போதும் இதுபோல் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post