யார் தடுத்தாலும் நிறுத்த மாட்டோம்… மெர்சல் ரசிகர்கள் நியூ ரூட்

யார் தடுத்தாலும் நிறுத்த மாட்டோம்… மெர்சல் ரசிகர்கள் நியூ ரூட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay fans found new route in Mersal GST dialogue issueமெர்சல் படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அப்படத்தை எதிர்பார்த்து கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்தவர்கள் விஜய் ரசிகர்கள்.

கடந்த அக். 18ல் தீபாவளிக்கு வெளியாகி பல சாதனைகளை மெர்சல் படைத்து வருகிறது.

அதே வேளையில் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் வசனங்களை நீக்க வேண்டும் என பாஜக.வினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

மேலும் தங்கள் மருத்துவ தொழிலை விஜய் அவமதித்து விட்டார் என மருத்துவ சங்கமும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க நாங்கள் தயாராகவுள்ளோம் என மெர்சல் தயாரிப்பாளரே அறிவித்துவிட்டார்.

இதனைக் கண்ட விஜய் ரசிகர்கள், தங்கள் தளபதி சரியாக கருத்தை தான் பேசியுள்ளார்.

ஒருவேளை அந்த காட்சிகளை நீக்கினால், அந்த காட்சிகளை நாங்கள் வாட்ஸ் அப்பில் மக்களிடையே பகிர்வோம்.

எங்களை யாரும் தடுக்க முடியாது என புது ரூட்டில் பயணிக்கின்றனர் இந்த தளபதி ரசிகர்கள்.

Vijay fans found new route in Mersal GST dialogue issue

பாஜக பார்வையில் எதிர்ப்பு நியாயமானதே… மெர்சல் தயாரிப்பாளர் முரளி

பாஜக பார்வையில் எதிர்ப்பு நியாயமானதே… மெர்சல் தயாரிப்பாளர் முரளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy Vijay said Thanks to all for making Mersal as big successமெர்சல் படம் வெளியான நாள்முதல் பல்வேறு எதிர்ப்புகளை பாஜக.வினரிடமிருந்து பெற்று வருகிறது.

இதனையடுத்து மெர்சல் தயாரிப்பாளர் முரளி கூறியதாவது…

“மெர்சல் சர்ச்சை மனவேதனை தருகிறது. சாதாரண மக்களுக்கும் மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதே படத்தின் கரு.

மெர்சல் அரசுக்கு எதிரான திரைப்படம் அல்ல. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் படத்தை எடுக்கவில்லை.

தவறான புரிதலை ஏற்படுத்தும் அந்த காட்சிகளை நீக்க வேண்டுமானால் அதற்கும் தயார்.

பாஜகவினர் பார்வையில் அவர்களது எதிர்ப்பு நியாயமாகவே உள்ளது.

இந்த விவகாரத்தில் பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டவர்களை சந்தித்தோம். நேரில் சந்திக்கும் எங்கள் முடிவை பாஜகவினர் பாராட்டினார்கள்.

நாங்கள் அளித்த விளக்கத்தை பாஜகவினர் ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Producer Murali clarifies Mersal issue with BJP Leaders

மெர்சல் படத்தில் எதுவும் நீக்கப்படவில்லை… கன்பார்ம் செய்தார் ஹேமா

மெர்சல் படத்தில் எதுவும் நீக்கப்படவில்லை… கன்பார்ம் செய்தார் ஹேமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

There is no cuts and Mute dialogues in Mersal says Producer Hema Rukmaniமெர்சல் படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி வசனம் இந்தியளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பாஜக.வினர் இந்த வசனங்களை எதிர்க்க தொடங்கினர்.

ஆனால் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி, தேசிய கட்சித் தலைவர்கள் வரை கருத்துச் சுதந்திரம் உள்ள நாட்டில் மெர்சல் படத்தில் பேசிய வசனங்கள் சரியானதே என கூற தொடங்கிவிட்டனர்.

இதனால் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படுமா? என்ற சந்தேகம் ரசிகர்களிடையே வலுக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில், ‘மெர்சல்’ படத்திலிருந்து எந்தக் காட்சிகளும் நீக்கப்படவில்லை. வசனங்களும் நீக்கப்படவில்லை.

எங்களுக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. அரசுக்கும் பா.ஜ.க நண்பர்களுக்கும் நன்றி.

தேவைப்பட்டால் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கத் தயாராக இருக்கிறோம்’ என்று தயாரிப்பாளர் ஹேமா ருக்குமணி அறிவித்துள்ளார்.

There is no cuts and Mute dialogues in Mersal says Producer Hema Rukmani

கமலை தொடர்ந்து மெர்சல் படத்திற்கு கவுதமியும் ஆதரவு

கமலை தொடர்ந்து மெர்சல் படத்திற்கு கவுதமியும் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gautamiவிஜய்யின் மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜிஎஸ்டி குறித்த வசனங்களுக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே மெர்சல் படத்திற்கு ஆதரவாக கமல்ஹாசன், சரத்குமார், ஜிவி, பிரகாஷ், விஜய்சேதுபதி, பிரசன்னா உள்ளிட் பல நடிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கவுதமியும் தன் கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது…

நானும் மெர்சல் படம் பார்த்தேன். அதில் ஜிஎஸ்டி குறித்தோ அல்லது டிஜிட்டல் இந்தியா குறித்தோ எதுவும் தவறாக குறிப்பிடப்படவில்லை.

என தன் ஆதரவை தெரிவித்துள்ளார் நடிகை கௌதமி.

There is nothing wrong in Mersal regarding GST says Gautami

kamal vijay vesti

கமல்-ஷங்கர் இணையும் இந்தியன்2 தயாரிப்பாளர் மாற்றம்.?

கமல்-ஷங்கர் இணையும் இந்தியன்2 தயாரிப்பாளர் மாற்றம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal shankarகடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட படம் இந்தியன்.

கமல் இரு வேடங்களில் நடித்த இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார்.

அண்மையில் இதன் இரண்டாவது பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்தோம்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவுள்ள இப்படம் ஜனவரியில் தொடங்கவுள்ளதாகவும், தில் ராஜு இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் `இந்தியன்-2′ படத்தை பிரபல லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Indian 2 producer may be changed

பாஜக-வினர் ஏன் மெர்சலை அரசியலாக்குகிறார்கள்? – எஸ்.ஏ.சந்திரசேகர்

பாஜக-வினர் ஏன் மெர்சலை அரசியலாக்குகிறார்கள்? – எஸ்.ஏ.சந்திரசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sac

மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஜிஎஸ்டி வசனங்கள் பாஜ கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இதற்கு அந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து பாஜக.வினருக்கு பல்வேறு தரப்பினரும் அவர்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதன்முறையாக விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்ஏ.சந்திரசேகர் அவர்கள் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டின் குடிமகனாக நான் பேசுகிறேன். கருத்து சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம்.

அரசியல் தொடர்புள்ளவர்கள்தான் சென்சார் வாரியத்திலும் உள்ளனர். அவர்கள்தான் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்துள்ளனர்.

ஆனால், சென்சார் அனுமதித்த ஒரு படத்தில் காட்சிகளை நீக்க ஆளும் கட்சி சொல்கிறது. அவர்கள் ஏன் இதை அரசியலாக்குகிறார்கள்? என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Dont know Why BJP making Mersal in Political issue says SA Chandrasekar

More Articles
Follows