மேரேஜ் பண்ணிக்கலாமா கேட்டால் யாரும் ஓகே சொல்லல…? : விஜய்ஆண்டனி

மேரேஜ் பண்ணிக்கலாமா கேட்டால் யாரும் ஓகே சொல்லல…? : விஜய்ஆண்டனி

vijay antony stillsவிஜய் ஆண்டனி தயாரித்து நடித்து எடிட்டராக பணிபுரிந்துள்ள அண்ணாதுரை படம் இன்று வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தன் சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார் விஜய்ஆண்டனி.

காதலித்து திருமணம் செய்ய ஆசை. எனவே பெண்ணிடம் சென்று காதலை சொல்வேன்.

ஆனால் அந்த பெண்ணிடம் பேசும்போது கல்யாணம் பண்ணிக்கலாமா? என்றுதான் கேட்பேன். எனவேதான் யாரும் ஒத்துக்கல போல.

சொந்த ஊரில் இருக்கும்போது முயற்சி செய்தேன். சென்னை வந்த பிறகும் முயற்சி செய்தேன்.

ஆனால் யாரும் ஒத்துக்கல. இறுதியாக ஒப்புக் கொண்டவர்தான் இப்போது என் மனைவி பாத்திமா.” என்று தன் காதல் திருமணத்தை பற்றி பேசினார்.

கமல் படங்களை பார்த்தபின் ஒரு முடிவுக்கு வந்தேன்: விஜய்ஆண்டனி

கமல் படங்களை பார்த்தபின் ஒரு முடிவுக்கு வந்தேன்: விஜய்ஆண்டனி

kamal haasan and vijay antony விஜய்ஆண்டனி இரு வேடங்களில் நடித்துள்ள படம் அண்ணாதுரை. இப்படம் இன்று ரிலீஸ் ஆவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் விஜய் ஆண்டனி.

அப்போது தன்னுடைய குழந்தை பருவம் முதல் இளமைப்பருவம் வரை என அனைத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.
அவர் பேசியதாவது…

ஒரு மிடில்கிளாஸ் குடும்பத்தில் வளர்ந்தவன் நான். மிகவும் கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்துள்ளேன்.

சினிமா மீது ஆசை இருந்தது. வீட்டில் சொன்னால் விடமாட்டார்கள் என்பதால் சென்னைக்கு வேலைக்கு போகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

எப்படியோ இசைமையப்பாளர் ஆகிவிட்டேன். அதன்பின்னர் நடிக்க ஆசை ஏற்பட்டது.

அது நிச்சயம் கண்டிப்பாக கிடைத்துவிடும் என தோன்றியது காரணம். ஏற்கெனவே இசையமைப்பாளராக பிரபலமாகிவிட்டேன்.

அதுவும் நடந்துவிட்டது. நான் சத்தியமாக நடிக்கல. நான் சினிமாவிலும் நானாகவே இருக்கிறேன்.

சொல்லப்போனால் கதைக்குள் நாள் ஒளிந்துக் கொள்கிறேன். கதை ஜெயிக்கிறது.

அண்ணாதுரை படத்தில் 2 வேடங்களில் நடித்துள்ளேன். அவ்வளவுதான்.

கமல் சார் நடித்த தசாவதாரம், மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களை பார்த்தால் அவர் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு மாதிரி பேசியிருப்பார்.

அப்போதே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அதுபோல் நிச்சயமாக என்னால் முடியாது. கற்றுக் கொண்டு நடிக்க வேண்டியதுதானே என்று கேட்டால் அதுவும் தெரியாது.

நான் இப்படியே இருக்கிறேன். ஆசைப்பட்டதை செய்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.” என்று பேசினார்.

ரசிகர்களின் விருப்பத்திற்காக விசுவாசத்தில் அஜித் செய்யும் மாற்றம்

ரசிகர்களின் விருப்பத்திற்காக விசுவாசத்தில் அஜித் செய்யும் மாற்றம்

thalaபொதுவாழ்க்கையில் நரைத்த முடி, நரைத்த தாடி என எப்படியிருந்தாலும் சினிமாவில் டை அடித்து நாயகியுடன் டூயட் பாடவே எல்லாம் ஹீரோக்களும் விரும்புவார்கள்.

ஆனால் நிஜவாழ்க்கை கெட்அப்பையே சினிமாவிலும் அறிமுகப்படுத்தி அசத்தியவர் அஜித்.

மங்காத்தா படம் முதல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே ஹீரோவாக நடித்து வந்தார்.

தற்போது 5 படங்களை கடந்துவிட்ட பின்னர் அவரது ரசிகர்களுக்கே இந்த கெட் அப் போர் அடித்துவிட்டதாம்.

எனவே பழையபடி கருப்பு முடியுடன் அஜித் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டனர்.

அதன்படி தனது அடுத்த படமான விஸ்வாசம் (விசுவாசம்) படத்தில் கருப்பு தலையுடன் உடலை இளைத்து நடிக்கவுள்ளாராம்.

இப்படம் கிராமத்து கதைக்களத்தை கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது.

மெர்சல் நஷ்டமா? பிரபலங்கள் கருத்தால் எழுந்தது புதிய சர்ச்சை

மெர்சல் நஷ்டமா? பிரபலங்கள் கருத்தால் எழுந்தது புதிய சர்ச்சை

mersal postersஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் கடந்த அக்டோபர் 18ஆம் தீபாவளியன்று ரிலீஸ் ஆனது.

ரசிகர்களின் பேராதரவுடன் படம் பல மடங்கு வசூல் செய்துள்ளதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

தற்போது 50 நாட்களை நெருங்கும் வேளையில், பிரபல நடிகர் எஸ்வி. சேகர் தன் சமீபத்திய பேட்டியில் மெர்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு ரூ. 60 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கும் என கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு பதிலளிக்கும் வகையில் மற்றொரு தயாரிப்பாளரான தனஞ்செயன் அவர்கள் கூறியுள்ளதாவது…

தயாரிப்பாளர் படம் நஷ்டம் என எதுவும் கூறவில்லை. விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருக்கும் லாபம் கிடைத்துள்ளது அதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் அடைய வாய்ப்பில்லை.

மொத்த வசூல் எவ்வளவு என்பதை தயாரிப்பு நிறுவனம் விரைவில் விளக்கும் என எதிர்பார்க்கிறேன்” என அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அனுஷ்கா / கீர்த்தி சுரேஷ்? அஜித்தின் விசுவாச நாயகி யார்…?

அனுஷ்கா / கீர்த்தி சுரேஷ்? அஜித்தின் விசுவாச நாயகி யார்…?

ajithவிவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் விவேகம் கூட்டணியே இணைந்துள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, சிவா இயக்க அஜித் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு விசுவாசம் எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகி யார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதில் நாயகியாக நடிக்க அனுஷ்கா மற்றும் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இருவரில் ஒருவர் உறுதியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 95% அனுஷ்காவே விசுவாச நாயகி எனவும் தகவல்கள் வந்துள்ளன.

இனி நான் சிங்கிள் கிடையாது; மணக்கோலத்தில் ஹிப்ஹாப் ஆதி

இனி நான் சிங்கிள் கிடையாது; மணக்கோலத்தில் ஹிப்ஹாப் ஆதி

No more single Hiphop Aadhi got engaged todayஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் மற்றும் விஷால் நடித்த ஆம்பள, கத்தி சண்டை உள்ளிட்ட படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்தவர் ஹிப்ஹாப் ஆதி.

இதனையடுத்து இவரே இயக்கி நடித்த படம் மீசைய முறுக்கு.

இப்படம் வெற்றிப் பெறவே மீண்டும் சுந்தர் சி தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் ஹிப்ஹாப் ஆதி.

இந்நிலையில் திடீரென தான் திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக கூறி, தன் நிச்சயதார்த்த புகைப்படத்தை தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்.. “இனி நான் சிங்கிள் கிடையாது” என பதிவு செய்துள்ளார்.

No more single Hiphop Aadhi got engaged today

More Articles
Follows