அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் இணைந்தார் விஜய்-சூர்யா பட ஹீரோயின்

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் இணைந்தார் விஜய்-சூர்யா பட ஹீரோயின்

மலையாளத்தில் ரிலீசாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

இந்த படத்தை தமிழில் எடுக்க பலர் முன்வந்துள்ள நிலையில் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது.

பிஜுமேனன் நடித்த போலீஸ் அதிகாரியாக பவன் கல்யாணும் நடிக்கிறார்.

பிரித்விராஜ் நடித்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியாக ராணா நடிக்கிறார்.

இந்த நிலையில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நித்யா மேனன் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

விஜய்யின் மெர்சல் மற்றும் சூர்யாவின் 24 ஆகிய படங்களில் நித்யா மேனன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay and Suriya film actress joins this hit remake

‘திட்டம் இரண்டு’ படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யாவின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்

‘திட்டம் இரண்டு’ படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யாவின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்

கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

இதனால் ஓடிடி மற்றும் டிவி-யில் நேரடியாக படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

‘ஏலே’, ’புலிக்குத்தி பாண்டி’, ‘மண்டேலா’, ‘வெள்ளை யானை’, உள்ளிட்ட படங்கள் நேடியாக டிவியில் ஏற்கெனவே வெளியானது.

இந்த நிலையில் விஜய் டிவியில் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வெளியாகிறது ‘பூமிகா’.

இது ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ரவீந்திரன் பிரசாத் இயக்க கார்த்திக் சுப்பராஜ் தனது ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இதன் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருப்பதால், 23-ஆம் தேதி அன்றே நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.

சோனி லைவ் ஓடிடியில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’ அண்மையில் ரிலீசாகி கவனம் ஈர்த்துள்ளதால், பூமிகாவின் ரிலீசும் தற்போது உறுதியாகியுள்ளது.

Aishwarya Rajesh in next film release update is here

சூர்யா பட டப்பிங்கை தொடங்கினார் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ்

சூர்யா பட டப்பிங்கை தொடங்கினார் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ்

கலையுலகில் மூன்று தலைமுறையாக ஒரு குடும்பம் நடிப்பில், பாரம்பரியமாக ஜொலிப்பது, மிகப்பெரும் சாதனை.

நடிகர் விஜயகுமார், அருண் விஜய் மற்றும் இப்போது அவர்களது, தொடர்ச்சியாக அடுத்த தலைமுறையில் ஆர்ணவ் விஜய் வரை நடிப்பு அக்குடும்பத்தில் மரபாக, அழகாக வளர்க்கப்படுகிறது.

2D Entertainment நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படத்தில், தாத்தா-தந்தை-மகன் மூவரும் திரையில் இணைந்து நடிக்கும் செய்தி, ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், ஆர்ணவ் விஜய் இன்று தனது காட்சிகளுக்கான, டப்பிங் பணிகளை செய்யத் தொடங்கினார்.

இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இயக்குநர் சரவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ள இந்தப்படம், குழந்தைகளை மையப்படுத்தி, 100% குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.

மொத்த படக்குழுவும் இப்படம் உலக ரசிகர்கள் ரசிக்கும் படியான படமாகவும், மன அழுத்தத்தை நீக்கும், பொழுதுபோக்கு திரைப்படமாகவும் இருக்குமென உறுதியாக நம்புகிறது.

இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் ஊட்டியை சுற்றிய பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.

சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், RB Films யின் S.R.ரமேஷ் பாபு உடன் இணைந்து இணை தயாரிப்பு செய்கிறார்கள்.

நிவாஸ் கே பிரசன்னா (இசை), கோபிநாத் (ஒளிப்பதிவு), மேகா (எடிட்டிங்), மைக்கேல் (தயாரிப்பு வடிவமைப்பாளர்), வினோதினி பாண்டியன் (உடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.

Arun Vijay son Arnav starts dubbing for his debut film

உங்க பெயர் முத்துராமலிங்கம்.? அப்படின்னா சினிமாவில் நடிக்க சூப்பர் சான்ஸ் இதோ..

உங்க பெயர் முத்துராமலிங்கம்.? அப்படின்னா சினிமாவில் நடிக்க சூப்பர் சான்ஸ் இதோ..

மேஸ்ட்ரோ இசைஞானி
இளையராஜா இசைமழையில்
ஜல்லிக்கட்டு மூவிஸ் பக்தியுடன் வழங்கும் ஜெ.எம்.பஷீர் நடிப்பில் தேசியதலைவர் – மறைக்கப்பட்ட வரலாறு

திரைக்கதை, வசனம், இயக்கம் R.அரவிந்த்ராஜ் B.A., DFTech.

முத்துராமலிங்கதேவர் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’
என்ற பெயரில் பிரமாண்டமாக படபிடிப்பு சென்னையில் நடை பெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மதுரை ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் படபிடிப்பு நடக்க உள்ளது.

இதில் தேவர் தோன்றும் ஒரு பிரமாண்ட காட்சி 1000 பேர்பங்கேற்க படமாக்கபட உள்ளது.

இதற்காக படக்குழு ஐயாவின்
பெயரை கொண்ட 1000 பேரை படபிடிப்பில் பங்கேற்க வேண்டி
விளம்பரம் கொடுத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் முத்துராமலிங்கம் என்ற பெயருள்ள 1000 பேர் கலந்து கொண்டு நடிக்க உள்ளனர்.

அதற்கான பிரமாண்ட செட் சிவகங்கையில் போடபட்டு வருகிறது.

இதில் 100 பேர் மொட்டை போடுவது போல் நடிக்க போவதாக தகவல். தென் மாவட்டம் படப்பிடிப்பால் கலை கட்ட போகிறது.

97102 34567, 90478 82233
என்ற எண்ணிற்க்கு உங்கள் புகைப்படம்
மற்றும் அடையாள அட்டையை அனுப்பவும்.

Here’s Chance to act in Tamil film

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ ட்ரெய்லர்.; எடிட்டிங்கில் மிரட்டிய லாரன்ஸ் கிஷோர்

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ ட்ரெய்லர்.; எடிட்டிங்கில் மிரட்டிய லாரன்ஸ் கிஷோர்

இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நெற்றிக்கண்’. இது நயனின் 65-வது திரைப்படமாகும்

நயன்தாரா பார்வையற்றவராக அவரை மிரட்டும் வில்லனாக அஜ்மல் நடித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் தனது Rowdy Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இது அவரது முதல் தயாரிப்பாகும்.

சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த ‘அவள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இப்படத்தினை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.

இந்த ட்ரெய்லர் இந்தளவு சூப்பர் ஹிட்டடிக்க முக்கிய காரணம் அமைந்தது படத்தின் படத்தொகுப்பு தான்.

ஷார்ப்பான எடிட்டிங் செய்து கை அனைவரையும் மிரள வைத்திருக்கிறார் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர்.

அவள் படத்தில் தொடங்கி இராவண கோட்டம், தேன், தி நெக்ஸ்ட் டோர் உள்ளிட்ட வெற்றி படங்களுக்கு இவரே எடிட்டிங்க் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெற்றிக்கண் தொழில்நுட்ப கலைஞர்கள்..

இசை – கிரிஷ், ஒளிப்பதிவு – N.கார்த்திக் கணேஷ், கலை இயக்கம் – S.கமலநாதன், சண்டை இயக்கம் – C.மகேஷ், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், ஒலியமைப்பு – விஜய் ரத்தினம், உடை வடிவமைப்பு – சைதன்யா, ராவ், தினேஷ் மனோகரன், வசனம் – நவீன் சுந்தரமூர்த்தி, விளம்பர வடிவமைப்பு – கபிலன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D one, இணை தயாரிப்பு – K.S.மயில்வாகணன், தயாரிப்பு மேற்பார்வை – V.K.குபேந்திரன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – G முருகபூபதி, M.மணிகண்டன்.

இத்திரைப்படம் டிஸ்னி-ஹாட் ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியாகிறது.

Editor Lawrence Kishore got appreciation for his recent work

இந்திய சுதந்திர தினம் 75.. கப்பலோட்டிய தமிழன் வஉசி 150..; ஜிவி.பிரகாஷ் அருண்ராஜா ஆகியோரின் புதிய முயற்சி

இந்திய சுதந்திர தினம் 75.. கப்பலோட்டிய தமிழன் வஉசி 150..; ஜிவி.பிரகாஷ் அருண்ராஜா ஆகியோரின் புதிய முயற்சி

இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது.

கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-லிருந்து தொடங்குகிறது.

இந்திய சுதந்திர போருக்கு எப்படி தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்ததோ, அதுபோல இந்திய சுதந்திரதின கொண்டாட்டத்திற்கும், தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

50-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில் பரத்பாலா அவர்களின் இயக்கத்தில், ‘தாய்மண்ணே வணக்கம்’ – ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டு இந்திய அளவில் பிரபலமானது.

வரும் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழர்களின் தியாகத்தை உணர்த்தும் விதமாகவும் இந்தியாவெங்கும் இருக்கும் சுதந்திர வீரர்களின் பெருமைகளை போற்றும்படியும் ஏ.ராஜசேகர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் பிரமாண்டமாக மற்றுமொரு பாடல் உருவாகிறது.

தமிழில் தொடங்கி இந்தியாவில் திரைப்படங்கள் உருவாகும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராட்டி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கனி உள்ளிட்ட 12 மொழிகளில் இந்த பாடல் உருவாகிறது.

இந்தியாவில் உள்ள முன்னணி திரைப்பட கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்பாடல் உருவாக்கத்தில் பங்கு கொள்ளவிருக்கிறார்கள்.

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இயற்கை எழில் கொஞ்சும் பல்வேறு இடங்களிலும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களிலும் இப்பாடல் படமாக்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காட்சி ஊடகங்களிலும் இப்பாடல் திரையிடப்பட இருக்கிறது.

இப்படப்பிடிப்பின் சிறப்பு நிகழ்வாக கனெக்டிங் இந்தியா வித் கலர்ஸ் (Connecting India With Colors) என்ற தலைப்பில் உலக சாதனை முயற்சியாக 6 கி.மீ. நீளத்திற்கு கேன்வாஸ் பெயிண்டிங் (Canvas Painting) வரையப்படுகிறது.
தமிழகம் தொடங்கி இந்தியாவெங்கும் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்று நிகழ்வுகள் வரையப்படுகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 முன்னணி ஓவியக்கலைஞர் வரைகிறார்கள்.

இந்த உலக சாதனையை (Guinness book of records, limca book of records and Asian book of records) -ல் பதிவு செய்யப்போகிறோம்.

இந்த பாடலின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் (FIRST LOOK MOTION POSTER) வெளியீடு வரும் செப்டம்பர் 5-ல் தொடங்கும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது ஆண்டு விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.

இவ்விழாவில் வ.உ.சி. எழுதிய அனைத்து நூல்களையும் உள்ளடக்கிய வ.உ.சி பெட்டகம்’ வெளியிடப்பட இருக்கிறது.

வ.உ.சி-யின் 150வது ஆண்டை குறிக்கும் பொருட்டு உலகெங்கும் இருக்கும் 150 தமிழ் ஆளுமைகள் எழுதும் ‘வ.உ.சி 150’ என்ற புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது.

இந்தியாவில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களில் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு தான் முதன் முதலில் அரசியல் வாழ்க்கை வரலாறு 1906-ல் எழுதப்பட்டது.

வெள்ளையர்களால் இந்தியாவில் தடை செய்யப்பட்டு லண்டன் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுவிட்ட அந்த நூலை மீட்டெடுத்து ( நூலகர் மற்றும் ஆய்வாளர் திரு.ரங்கையா முருகன்) தமிழில் தமிழ்பெருஞ்சொல் வ.உ.சி. என்றும் ஆங்கிலத்தில் தி பிக் வேர்ட் வி.ஒ.சி. THE BIG WORD V.O.C.என்றும் வெளியிடுகிறோம்.

இவையனைத்தும் ஆடியோ புத்தகமாகவும் (AUDIO BOOK ), வீடியோ புத்தகமாகவும் (VIDEO BOOK), கிண்டில் வர்ஷனாகவும் (KIDLE VERSION) வ.உ.சி. செயலியாகவும் (V.O.C. MOBILE APP) இலவசமாக டிஜிட்டலில் பதிவேற்றுகிறோம்.

மாபெரும் இந்நிகழ்வை நல்லறிஞர்களின் துணை கொண்டு சக்ரா அறக்கட்டளை நிறுவனர் சக்ரா ராஜசேகர் மற்றும் விதை புத்தக வெளியீட்டு நிறுவனர் ஆ.சுப்ரமணியன் இணைந்து முன்னெடுத்திருக்கிறார்கள்.

GV Prakash and Arun Raja joins for special song

More Articles
Follows