IRON LADY ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நித்யா மேனன்

IRON LADY ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நித்யா மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nithya Menon playing as Iron Lady in Jayalalitha biopicதமிழக மக்களால் அம்மா என அன்புடன் அழைக்கப்பட்டார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

நடிகையாக பிரபலமாகி அரசியலில் ஆளுமையாக உயர்ந்தவர் இவர்

அவர் மரணமடைந்து இன்றுடன் (5-12-18) 2 ஆண்டுகள் ஆகிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க உள்ளதாக இயக்குனர் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் தனி தனி படமாக எடுப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில் ப்ரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு ‘THE IRON LADY’ என அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நித்யா மேனன் நடிக்க இருக்கிறார் என கூறப்பட்டது. தற்போது அது உறுதியாகியுள்ளது.

இன்று ஜெயலலிதாவின் நினைவு நாள் என்பதால் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘THE IRON LADY’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் ஜெயலலிதா தோற்றத்தில் நித்யா மேனன் படம் இடம் பெற்றுள்ளது.

Nithya Menon playing as Iron Lady in Jayalalitha biopic

Nithya Menon playing as Iron Lady in Jayalalitha biopic

60 வருட சினிமா வாழ்க்கைக்கு கமல் முற்றுப்புள்ளி; இந்தியன்-2 தான் கடைசி!

60 வருட சினிமா வாழ்க்கைக்கு கமல் முற்றுப்புள்ளி; இந்தியன்-2 தான் கடைசி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Indian 2 movie will be my last movie says Kamalhassanகுழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் கமல்ஹாசன்.

எம்ஜிஆர் – சிவாஜி என அனைவருடனும் நடித்துவிட்டார்.

கிட்டதட்ட 60 ஆண்டுகளாக சினிமாவில் புகழோடு நிலைத்து நிற்கிறார் கமல்ஹாசன்.

தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

எனவே தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

அண்மையில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களை சந்தித்தார்.

இந்நிலையில், கேரளாவில் கீழகம்பளம் பஞ்சாயத்தில் டுவென்டி-20 திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 37வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் துவக்கவிழாவில் பங்கேற்க கமல்ஹாசன் கேரளா சென்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது…

அடுத்த வருடம் 2019ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ம் தேதி துவங்குகிறது.

இந்தப்படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கமாட்டேன்.” என தெரிவித்தார்.

இதனிடையில் கமல் தயாரித்து நடித்து இயக்கியுள்ள சபாஷ் நாயுடு திரைப்படம் அதற்கு முன்பே வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

அரசியல் காரணத்துக்காக தன் நடிப்பை கமல் நிறுத்தினாலும் கமல் போன்ற உன்னத கலைஞர் இல்லாத சினிமாவை என்ன சொல்வது..?.

Indian 2 movie will be my last movie says Kamalhassan

57000 திரைகளில் ரஜினியின் *2.0*; சைனாவை அதிர வைக்கும் லைகா

57000 திரைகளில் ரஜினியின் *2.0*; சைனாவை அதிர வைக்கும் லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DtlE3AEUUAE_aMjரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘2.0’.

ஷங்கர் இயக்கிய இப்படத்தை ரூ. 600 கோடியில் லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 15000 திரைகளில் வெளியாகி இப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், இந்தப் படம் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் சீனாவில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளது லைகா.

இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

“சோனி, வார்னர் பிரதர்ஸ், யூனிவர்சல், டிஸ்னி உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களின் படங்களைத் தொடர்ந்து சீனாவில் வெளியிட்டு வரும் HY நிறுவனம், லைகாவுடன் இணைந்து 2.0 படத்தை சீனாவில் வெளியிடுகிறது..

2019-ம் ஆண்டு மே மாதம் இப்படம் 10000 திரையரங்குகளில், 57000 திரைகளில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகும்.

இதில் சுமார் 47000 திரைகள் 3டி திரைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுப் படங்களில் சீனாவில் மிக அதிகமாக 3டி திரையில் வெளியாகும் படமாக ‘2.0’ இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்கள்.

மாரி 2 ரிலீஸை தள்ளிப் போட முடியாது. விஷாலுக்கு தனுஷ் பதிலடி.?

மாரி 2 ரிலீஸை தள்ளிப் போட முடியாது. விஷாலுக்கு தனுஷ் பதிலடி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and vishalதனுஷ் தயாரித்து நடித்துள்ள மாரி2 படம் டிசம்பர் 21ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

இன்று இப்பட டிரைலர் வெளியானது.

இதனிடையில் தனுஷ் தயாரிப்பு நிறுவனமான ஃவுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

இரண்டு, மூன்று நாட்களாக இன்றைக்கு மீட்டிங் என்று தினேஷ் போன் பண்ணுவார். மீட்டிங்க்கிற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, தலைவருக்கு (விஷாலுக்கு) உடம்பு சரியில்லை அதனால் மீட்டிங் கேன்சல் என்று சொல்லுவார்.

இது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.

இது வேண்டுமென்றே செய்வது போல் தெரிகிறது. ‘காலா’ சமயத்திலும் இப்படித்தான் அமைந்தது.

இதனால், ‘மாரி 2’ படத்தை டிசம்பர் 21-ம் தேதி வெளியிடுவது என முடிவு பண்ணியிருக்கோம்.

இரண்டு மாதத்துக்கு முன்பாக கடிதம் கொடுத்துவிட்டோம். தணிக்கையும் ஆகிவிட்டது.

ரூ. 33 கோடி பட்ஜெட் ஆகியுள்ளதால், மாதம் 1 கோடி வரை வட்டிக் கட்ட வேண்டியுள்ளது.

கவுன்சிலுக்கு கட்டுப்பட்டு போக வேண்டும் என்று தான் இவ்வளவு நாள் காத்திருந்தோம்.

எந்தவொரு பதிலுமே யாருமே சொல்ல மாட்டேன் என்கிறார்கள். இதனால் எங்களுடைய முடிவு இது தான்.

இவ்வாறு அந்த ஆடியோ பதிவில் பேசியுள்ளார்கள்.

இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த பதிவால் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்

500 தியேட்டர்களில் விமல் படம்.; இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு-ய்யா

500 தியேட்டர்களில் விமல் படம்.; இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு-ய்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Evanukku Engeyo Matcham Irukku movie will release in 500 theatres Worldwideவிமல் ஆஷ்னா ஜவேரி நடிக்க சர்மிளா மாண்ட் ரே தயாரிக்க AR.முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் இம்மாதம் 7 ம் தேதி வெளியாகிறது.

இதற்கு முன்பு விமல் நடித்த எந்த படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானதில்லை.

கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 தியேட்டர்களுக்குள் தான் வெளியாகும்..ஆனால் இந்த படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

முதன் முறையாக உலகம் முழுவதும் 500 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இந்த விஷயம் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்
இசை – நடராஜன் சங்கரன்
பாடல்கள் – விவேகா
கலை – வைரபாலன்
நடனம் – கந்தாஸ்
ஸ்டண்ட் – ரமேஷ்.
எடிட்டிங் – தினேஷ்
தயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி
தயாரிப்பு நிர்வாகம் – பி.ஆர்.ஜெயராமன்
தயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்
திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ்

Evanukku Engeyo Matcham Irukku movie will release in 500 theatres Worldwide

ஊர்காரர்கள் எச்சரித்தும் ஷில்பாவுடன் மலையேறிய ஹரிஷ் கல்யாண்

ஊர்காரர்கள் எச்சரித்தும் ஷில்பாவுடன் மலையேறிய ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Harish Kalyan talks about his Ispade Rajavum Idhaya Raniyum movieரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண்.

ஷில்பா மஞ்சுநாத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் லடாக்கில் நடந்து முடிந்த படப்பிடிப்பு அவருக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்கியிருக்கிறது.

“சில விஷயங்கள் நம் கண்களுக்கு சொர்க்கம் போல காட்சியளிக்கும். ஆனால் அத்தகைய இடங்களுக்கு செல்வது சில ஆபத்தான சவால்களை உள்ளடக்கியது.

நம் கற்பனைகளையும் தாண்டிய சவால்கள் அவை. லடாக்கில் படப்பிடிப்பு நடக்கும்போது இதுபோன்ற அனுபவங்கள் எங்களுக்கு இருந்தன” என்று லடாக் படப்பிடிப்பு அனுபவங்களை கூறுகிறார் ஹரிஷ் கல்யாண்.

மொத்த படக்குழுவும் லடாக்கின் அழகான இடங்களில் ஒரு சில காட்சிகளை படம் பிடிக்க வேண்டியிருந்தது. அவை மிகப்பெரிய சவால்களை கொண்டிருந்தது.

ஹரிஷ் கல்யாண் அந்த தருணங்களை நினைவு கூறும்போது, “ஒருமுறை, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகே சில காட்சிகளை படம்பிடித்து முடித்தோம்.

திடீரென்று, ஒரு உதவி இயக்குனரால் மூச்சுவிட முடியவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தோம். அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விட்டார் என்று தெரியும் வரை நாங்கள் அதிர்ச்சியில் இருந்தோம்.

வழக்கமாக, உயரமான பகுதிகளில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும். அவர் சரியான கம்பளி ஆடைகளை அணியவில்லை, மேலும் அவரது காதுகளையும் மூடிவிடவில்லை, அது இறுதியில் அவரது நுரையீரலை பாதித்திருக்கிறது” என்றார்.

இன்னொரு சவாலான சம்பவத்தை பற்றி கூறும்போது, “இன்னொரு கடினமான சூழ்நிலையாக இருந்தது உயரமான பகுதிகளில் மலையேற்றம். நான் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் ரோஹ்தாங் பாஸின் பின்னணியில் படம்பிடிக்கப்பட வேண்டியிருந்தது.

அது, உயரமான இடத்தில் இருந்தது. உள்ளூர்வாசிகள் யாரும் எங்களுடன் வர விரும்பவில்லை, எங்களையும் கூட எச்சரித்தனர். இருப்பினும், ரஞ்சித் ஜெயக்கொடி மற்றும் ஒளிப்பதிவாளர் கவின் ஏற்கனவே அந்த இடங்களுக்கு வந்திருந்தனர். காட்சிக்கு ஏற்ற அற்புதமான அழகிய பின்னணியை கொண்டிருப்பதாக உறுதியளித்தனர்.

ஆரம்பத்தில், உள்ளூர்வாசிகள் எச்சரிக்கையை பற்றி கண்டு கொள்ளவில்லை. ரஞ்சித் பயணத்தைத் தொடர என்னை ஊக்குவித்தார், கிட்டத்தட்ட 2 மணிநேரம் மலையேறினோம். இறுதியாக, அங்கு முதல் ஆளாக நான் சென்று சேர்ந்தேன். அந்த இடம் அவ்வளவு அழகாக இருந்தது, மொத்த குழுவுமே அந்த இடத்தின் அழகால் மெய் மறந்து, பட்ட கஷ்டங்களை மறந்து விட்டனர்” என்றார் ஹரீஷ் கல்யாண்.

Harish Kalyan talks about his Ispade Rajavum Idhaya Raniyum movie

More Articles
Follows