தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எந்த மாநிலம் எந்த மொழி என்றாலும் கலைஞர்களுக்கு பேதம் கிடையாது என்பதை சரியாக புரிந்து வைத்துள்ளார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.
தமிழில் பல படங்கள் வரிசை கட்டி நின்றாலும் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களிலும் நடிக்க தனி ஆர்வம் காட்டி வருகிறார்.
கடந்த வருடம் மார்க்கோனி மத்தாய் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் மற்றொரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
19(1)(a) என்ற பட சூட்டிங்கில் கலந்துக் கொண்டுள்ளார்.
நித்யா மேனன் இப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
சைக்கோ, 24. மெர்சல், ஓகே கண்மணி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் நித்யா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய விருது பெற்ற படங்களான ‘ஆதாமிண்ட மகன் அபு’, ‘பத்தேமாறி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சலீம் அஹமதுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இந்து வி.எஸ் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.
Vijay Sethupathi joins sets of Malayalam film