நடிகர் பிருத்விராஜ் மருத்துவமனையில் அனுமதி; என்னாச்சு..!?

நடிகர் பிருத்விராஜ் மருத்துவமனையில் அனுமதி; என்னாச்சு..!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர் பிருத்விராஜ்.

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கானா கண்டேன்’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நடிகர் பிருத்விராஜ் தற்போது ‘விளையாத் புத்தா’ படத்தில் நடித்து வருகிறார்.

‘விளையாத் புத்தா’ படம் மறைந்த மலையாள இயக்குனர் சாச்சியின் கனவு திரைப்படமாகும்.

ஏற்கனவே சாச்சி இயக்கத்தில் ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத்தில் நடித்திருந்த பிருத்விராஜ், தற்போது அவரின் கனவு திரைப்படமான ‘விளையாத் புத்தா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

‘விளையாத் புத்தா’ படத்தின் படப்பிடிப்பி கேரளாவில் உள்ள மறையூரில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அங்கு அந்தரத்தில் தொங்கிய படி பிருத்விராஜ் சண்டையிடும் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டு வந்தது. இதில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் நடிகர் பிருத்விராஜுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து வலியால் துடித்த நடிகர் பிருத்விராஜை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்யவும் அறிவுறுத்தி உள்ளார்களாம்.

இதை தொடர்ந்து அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

Prithviraj to undergo surgery post injury on sets of Vilayath Buddha

‘புராஜெக்ட் கே’ படத்தில் கமல் – அமிதாப்.; உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் – இயக்குநர்

‘புராஜெக்ட் கே’ படத்தில் கமல் – அமிதாப்.; உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் – இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் ஃபிக்சன் படமான ‘புராஜெக்ட் கே’ அதன் அறிவிப்பில் இருந்தே, தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது.

மொத்த இந்திய ரசிகர்களாலும் கொண்டாடப்படும் இப்படத்தில் மெகாஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடிக்கிறார்கள்.

தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது, மிகப்பெரும் ஆச்சர்ய தகவலாக, ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் ‘புராஜெக்ட் கே’ படத்தில் இணைவது இறுதியான நிலையில் இந்திய திரையில் மிகப்பெரும் நட்சத்திர ஆளுமைகள் பங்கேற்கும் படைப்பாக இப்படம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

இத்தகவலை உறுதிப்படுத்தும் வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்…

“50 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடன உதவியாளராகவும், உதவி இயக்குநராகவும் இருந்தபோது தயாரிப்புத் துறையில் அஸ்வினி தத் என்ற பெயர் மிகப்பெரிதாக இருந்தது. 50 வருடங்களுக்குப் பிறகு இப்போது நாங்கள் இருவரும் இணைகிறோம்.

நம் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஒரு சிறந்த இயக்குநர் இதில் தலைமை வகிக்கிறார். என்னுடைய சக நடிகர்களான பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் ஆகிய இந்த தலைமுறையை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இதற்கு முன் அமித் ஜியுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் அவருடன் இணைந்து பணியாற்றுவதை முதல் முறை போலவே உணர்கிறேன்.
இப்போதும் அமித் ஜி ஒவ்வொரு படத்திலும், தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவரது பாதையை தான் நானும் பின்பற்றுகிறேன்.

’புராஜெக்ட் கே’ படத்தில் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். திரையுலகில் எந்த ஒரு முயற்சியை எடுத்தாலும், பார்வையாளர்கள் என்னை எந்த நிலையில் வைத்து பார்த்தாலும், என்னுடைய முதன்மையான தன்மை, நான் ஒரு திரைப்பட ஆர்வலன் என்பதே.

அனைத்து புது முயற்சிகளையும் ரசிகர்கள் கண்டிப்பாக அங்கீகரிப்பார்கள். ’புராஜெக்ட் கே’ படத்திற்கு இது என்னுடைய முதல் கைதட்டலாக இருக்கட்டும். எங்கள் இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில், ரசிகர்கள் மத்தியிலும் சினிமா உலகிலும் கைதட்டல்கள் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

கமல்ஹாசன் இப்படத்தில் இணைவது குறித்து தயாரிப்பாளர் அஸ்வனி தத் பகிர்ந்து கொண்டதாவது…

“எனது திரைப்பயணத்தில், மிக நீண்ட காலமாக, உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்பது கனவாக இருந்தது. ‘புராஜெக்ட் கே’ மூலம் இப்போது அந்த கனவு நனவாகியுள்ளது.

இரண்டு பழம்பெரும் கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது எந்தவொரு தயாரிப்பாளருக்கும் வாழ்வின் மிகச்சிறந்த தருணமாகும். எனது திரை வாழ்க்கையின் 50வது ஆண்டில் இது உண்மையிலேயே எனக்கு கிடைத்த மிகப்பெரும் ஆசீர்வாதம்.”

இயக்குநர் நாக் அஸ்வின், உலகநாயகன் கமல்ஹாசன் படத்தின் நடிகர்களுடன் இணைந்தது குறித்து பேசுகையில்…

“திரையுலகின் வரலாற்று சிறப்பு மிக்க வேடங்களில் நடித்துள்ள கமல் சார், இது போன்ற புதிய முயற்சியில் எங்களுடன் இணைவது மிகப்பெரிய கவுரவம். அவர் இப்படத்தில் இணைந்தது, எங்களுக்கு கிடைத்த பாக்கியம். எங்கள் முழு குழுவினரையும் இந்த செய்தி பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘புராஜெக்ட் கே’ பன்மொழிகளில் தயாராகும் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமாகும். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் திரைப்படத் தயாரிப்பு வரலாற்றில் அவர்களின் ஐம்பது புகழ்பெற்ற ஆண்டுகளை நிறைவு செய்யும் வகையில், மிகப்பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறது.

Kamal Haasan joining ‘Project K’ film said producer Aswani Dutt

விஜய் சூர்யா தனுஷ் சூரி ஆகியோருடன் இணைவது குறித்து வெற்றிமாறன் பேச்சு

விஜய் சூர்யா தனுஷ் சூரி ஆகியோருடன் இணைவது குறித்து வெற்றிமாறன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஜூன் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரசாத் லேபில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குனர் வெற்றிமாறன்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் பேசும்போது…

“வடசென்னை 2′ கண்டிப்பாக வெளிவரும். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

அதற்கு முன்பு ‘விடுதலை 2’ படத்தின் பணிகளை செய்து வருகிறேன்.

இந்த படத்தை முடித்த பிறகு ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.

தற்போது சூர்யா வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையின் உருவத்தை ஸ்கேன் செய்து அதை லண்டனில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் அனிமேஷன் செய்து வருகிறோம்.

அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது” என்றார்/

அதன் பின்னர் விஜய் படத்தை இயக்குவீர்களா? என்று கேள்வி கேட்டபோது..

“கண்டிப்பாக விஜய் ரெடியாக இருந்தால் என்னுடைய கதையைக் கேட்டால் இருவருக்கும் ஒத்து வரும்போது அதற்கான படம் நிச்சயமாக அமையும்” என்றார்.

Vettrimaran speech about Vijay Suriya Dhanush Soori movies

உதயநிதி-யின் ‘மாமன்னன்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சர்ட்டிபிகேட்

உதயநிதி-யின் ‘மாமன்னன்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சர்ட்டிபிகேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் ‘மாமன்னன்’.

இப்படத்தில் உதயநிதி, வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘மாமன்னன்’ படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ படத்துக்கு தணிக்கை குழுவால் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தெரிவிக்கும் வகையில் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

மாமன்னன்

Udhayanidhi’s Maamannan movie got U/A certificate

கார்த்தி – ராஜூ முருகன் இணைந்த ‘ஜப்பான்’ பட சூட்டிங் அப்டேட்

கார்த்தி – ராஜூ முருகன் இணைந்த ‘ஜப்பான்’ பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’.

இப்படத்தில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், ‘ஜப்பான்’ திரைப்படத்தில் தன்னுடைய காட்சிகளை நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ளதாகவும் அடுத்த இரண்டு வாரங்களில் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Karthi wraps up shooting for ‘Japan’ movie

எங்க எமோஷனோடு விளையாடாதீங்க.; சன் பிக்சர்ஸை எச்சரிக்கும் ரஜினி ரசிகர்கள்

எங்க எமோஷனோடு விளையாடாதீங்க.; சன் பிக்சர்ஸை எச்சரிக்கும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.

நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் ரஜினியுடன் மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கிசரஃப் தமன்னா ரம்யா கிருஷ்ணன் சுனில் உள்ளிட்ட பல இந்திய பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சரியாக ஒன்றை மாதங்கள் மட்டுமே உள்ளது.

ஆனால் படத்தின் டீசர் / பாடல் வெளியீடு என படத்தின் புதிய தகவல்களோ எதுவுமே வெளியாகவில்லை.

இதனால் ரஜினி ரசிகர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜெய்லர் அப்டேட் சன் பிக்சர்ஸ் என்பதை டேக் செய்து ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்களின் எமோஷனலுடன் விளையாடாதீர்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Rajinikanth fans warns Sun pictures

More Articles
Follows