மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாகும் மெர்சல் நாயகி

Nithya menon likely to pair with Udhayanithi in Mysskin directionசீனுராமசாமி இயக்கியுள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டார் உதயநிதி.

தமன்னா நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அட்லீயின் உதவியாளர் ஈனாக் இயக்கத்தில் உதயநிதி நடிப்பதாக இருந்தது.

‘மேயாத மான்’ படத்தில் நடித்த பிரியா பவானிசங்கர் மற்றும் இந்துஜா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கவுள்ளனர் என்ற தகவலும் வந்தன.

ஆனால், அப்படம் டிராப்பானது.

இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார் என்ற தகவலையும் நம் தளத்தில் பார்த்தோம்.

இதில் 2 ஹீரோயின்கள் நடிக்க இருக்கும் இந்தப் படத்தில், ஒரு ஹீரோயினாக நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்தாண்டு வெளியான விஜய்யின் மெர்சல் படத்தில் நித்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Nithya menon likely to pair with Udhayanithi in Mysskin direction

 

Overall Rating : Not available

Latest Post