ரஜினியை ஒதுக்கிவிட்டு, மோதும் விஜய்-அஜித்-சூர்யா ரசிகர்கள்

ரஜினியை ஒதுக்கிவிட்டு, மோதும் விஜய்-அஜித்-சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini ajith vijay suriyaதீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விஜய் நடித்த பைரவா பட டீசர் வெளியானது.

இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில், தற்போது 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸுகளை பெற்றுள்ளது.

இன்னும் இந்த சாதனை தொடரும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று சூர்யாவின் எஸ் 3 டீசர் வெளியானது. இதுவும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

எனவே இரு தரப்பு ரசிகர்களும் சாதனை பட்டியலை பார்த்துக் கொண்டே இருக்கின்றனர்.

இவர்களுடன் அஜித் ரசிகர்களும் இணைந்து வேதாளம் டீசரை சாதனையை முறியடித்து விடுமா? என காத்திருக்கின்றனர்.

எந்த டீசர் வெளியானாலும் அதை மற்ற படங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் ரசிகர்கள், கபாலியை மட்டும் ஒதுக்கி வைத்து விட்டார்களாம்.

காரணம் ரஜினியை சாதனையை அவரே முறியடிப்பார். தங்களால் முடியாது என்பதால் இந்த முடிவாம்.

இன்று 08/11/2016 வரை உள்ள தகவல்களின் படி – யூடிப் டீசர் சாதனை….

  • கபாலி   3,26,01,706 views         லைக்ஸ் 4,65,530          டிஸ் லைக்ஸ் 17,780
  • வேதாளம்    66,43,570 views    லைக்ஸ் 1,47,929          டிஸ் லைக்ஸ் 71,727
  • தெறி டீசர்   1,10,35,506 views  லைக்ஸ் 3,07,067          டிஸ் லைக்ஸ் 58,557
  • பைரவா     82,16,388 views       லைக்ஸ் 2,19,014           டிஸ் லைக்ஸ் 35,261
  • 24 டீசர்      45,73,099 views        லைக்ஸ் 90,702              டிஸ் லைக்ஸ் 9,810
  • சிங்கம் 3 – 23,19,590 views       லைக்ஸ் 74,261               டிஸ் லைக்ஸ் 13,980 (20 மணி நேரம்)
  • இருமுகன்  37,03,769 views     லைக்ஸ் 29,591               டிஸ் லைக்ஸ் 801
விஜய் சூட்டிங்கில் விபத்து; 2 ஸ்டண்ட் கலைஞர்கள் மரணம்?

விஜய் சூட்டிங்கில் விபத்து; 2 ஸ்டண்ட் கலைஞர்கள் மரணம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 stuntman at duniya vijay shootவிஜய் என்றவுடன் நம் இளைய தளபதி படம் என நினைத்தீர்களா?

இது கர்நாடகா ஹீரோ துனியா விஜய் படம் பற்றிய தகவல்.

கர்நாடகாவில் ராம் நகர், திப்பகொண்டனஹள்ளி பகுதில் துனியா விஜய்யின் பட சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இதில் துனியா விஜய்யுடன் இரண்டு ஸ்டண்ட் கலைஞர்கள் (அணில் மற்றும் உதய்) ஹெலிகாப்டரில் இருந்து அங்குள்ள ஏரியில் குதிக்க வேண்டிய காட்சியை படமாக்கி கொண்டிருந்தனர்.

மூவரும் அந்த ஏரியில் குதித்துள்ளனர்.

ஆனால் விஜய் மற்றும் கரையை கடந்துள்ளார். மற்ற இருவரும் நீரில் மூழ்கிவிட்டதாக தெரிகிறது.

தற்போது தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

சம்மந்தப்பட்ட அந்த இரண்டு ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் நீச்சல் தெரியதாம். ஆனாலும் குதிக்க சொன்னதாக சொல்லப்படுகிறது.

ஹீரோ விஜய்யுக்கு மட்டும் பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘வேதாளம்-தெறி-எஸ்-3’ டீசர்ஸ்… சாதனை வேற; ஆனா ஒற்றுமை இருக்கே!

‘வேதாளம்-தெறி-எஸ்-3’ டீசர்ஸ்… சாதனை வேற; ஆனா ஒற்றுமை இருக்கே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ajith suriyaநேற்று மாலை சூர்யாவின் சிங்கம் 3 (எஸ்3) டீசர் வெளியானது.

இது 3 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை யூடிப்பில் பெற்றது.

தற்போது 18 மணி நேரம் வரை ஆகியுள்ள நிலையில், 20 லட்சம் (2 மில்லியன்) பார்வையாளர்களை பெற்றுள்ளது.

அதுபோல் வேதாளம் மற்றும் தெறி ஆகிய பட டீசர்களும் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்தது.

இவை அனைத்தும் வெவ்வேறு சாதனைகளை படைத்து வந்தாலும், இந்த 3 டீசர்களில் ஒரு ஒற்றுமை உள்ளது.

வேதாளம் டீசரில் ‘கண்ணாமூச்சி ரேரே’ என அஜித் பாடினார்.

தெறி டீசரில் ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ என விஜய் பாடினார்.

தற்போது எஸ்3 டீசரில் ’ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்’ என்று சூர்யா பாடுகிறார்.

ஆக மொத்தம் மூன்று ஹீரோக்களும் அவர்களின் பட டீசரில் ஒரு பாடலை பாடி தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வறுமையில் வாடும் பளுதூக்கும் வீராங்கனைகள்; சாதிக்க துணையாக சசிகுமார்

வறுமையில் வாடும் பளுதூக்கும் வீராங்கனைகள்; சாதிக்க துணையாக சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasikumarசேலத்தில் உள்ள அலுமினிய பேக்டரில் வேலை செய்பவர் கண்ணன். இவருக்கு பத்மாவதி (21), நந்தினி (18), அபிராமி (16) என்று 3 மகள்கள் உள்ளனர்.

இவர்கள் மூவருமே பளு தூக்கும் போட்களில் கலந்துகொண்டு தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

ஆனால் ஒருவர் தினமும் 10 முட்டை மற்றும் சத்தான உணவுகள் சாப்பிடவேண்டும் என இவர்களது பயிற்சியாளர் அறிவுறுத்தியுள்ளார்.

வறுமையின் காரணமாக அது இயலாமல் போகவே, இவர்கள் தற்போது பால் விற்கும் தொழில் செய்து வருகின்றனர்.

இதனையறிந்த நடிகரும் இயக்குனருமான சசிகுமார் இவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் சற்றுமுன் பதிவிட்டுள்ளதாவது-..

மூவரும் இனி என் சகோதரிகள். அவர்களின் செலவுகளை நானே ஏற்கிறேன். பண உதவிக்கும் ஏற்பாடு செய்துள்ளேன். என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பெண்களுக்கு உதவ விரும்புவோர்… 84286 47850

கலை வாழ்வு நீள வேண்டும்… கமலின் பிறந்தநாள் ஆசை!

கலை வாழ்வு நீள வேண்டும்… கமலின் பிறந்தநாள் ஆசை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhassanதிரையுலகின் சகலகலா வல்லவன் கமல்ஹாசன் நேற்று, தனது 62வது பிறந்தநாளை கொண்டாடினார்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், தன் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என சில நாட்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார்.

எனவே வருடந்தோறும் நடைபெற்று வந்த, நலத்திட்ட உதவிகள் கூட இம்முறை நடைபெறவில்லை.

ஆனாலும் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இணையத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன்பு கமலை பிரிந்த கௌதமி அவரை வாழ்த்தவில்லை.

இந்நிலையில், வாழ்த்தியவர்களுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் கமல்.

Kamal Haasan ‏@ikamalhaasan

அன்பு ரசிகர்கட்கும் மனமுவந்து வாழ்த்திய சக கலைஞர்கட்கும் மேலும் நன்றிக்கடன் பட்டேன். எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீள வேண்டும்.

Humbled by your love. Hope to live up to expectations. Thanks to admirers and artistes in their own right who celebrated me. love you all.

விவேக்-சந்தானம் படத்தில் பிரபல இசையமைப்பாளர்

விவேக்-சந்தானம் படத்தில் பிரபல இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivek santhanamவிடிவி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் சக்க போடு போடு ராஜா.

இதில் சந்தானம் நாயகனாக நடிக்க, விவேக் மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

சேதுராமன் இயக்க, நாயகியாக வைபவி சாண்ட்டில்யா நடிக்கிறார்.

இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கவிருக்கிறாராம்.

பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது.

படப்பிடிப்பில் விவேக், சந்தானம் இருவரும் போட்டி போட்டு நடித்து வருகிறார்களாம்.

More Articles
Follows