தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன், கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டாலும், இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை.
இதனால் இயக்குனரை கடந்த சில மாதங்களாகவே சூர்யா ரசிகர்கள் தொந்தரவு செய்துக் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து, சூர்யா கேரம்போர்டு விளையாடுவது போன்ற ஒரு ஸ்டில்லை வெளியிட்டு, ‘மீம்ஸ் போதும், இன்னும் சில நாட்களில் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று ரசிகர்களை சமாதானம் செய்துள்ளார்
அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
Vignesh shivan released Suriyas new still from TSK movie