1500 படங்களுக்கு இசையமைத்த பிறகு சொல்கிறேன்.. வெற்றிமாறன் முக்கியமானவர்.. – இளையராஜா

1500 படங்களுக்கு இசையமைத்த பிறகு சொல்கிறேன்.. வெற்றிமாறன் முக்கியமானவர்.. – இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எல்ரெட் குமார், ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் ‘விடுதலை’.

இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (08.03.2023) நடைபெற்றது.

இசைஞானி இளையராஜாவின் பாடல்களோடு விழா தொடங்கியது.

விழா நாயகன் இளையராஜா பேசியதாவது,..

” இந்தப்படம் திரையுலகம் இதுவரை சந்திக்காத களத்தில் நடக்கும். அவருடைய ஒவ்வொரு கதையும் வெவ்வேறு திரைக்கதை. 1500 படங்களுக்கு இசையமைத்த பிறகு சொல்கிறேன்.

வெற்றிமாறன் திரையுலகிற்கு முக்கியமான இயக்குநர். இந்தப் படத்தில் இதுவரை நீங்கள் கேட்காத இசையை கேட்பீர்கள்” என்றார்.

விடுதலை

Vetrimaaran is important director in Cinema says ilaiyaraaja

BIG BREAKING ரஜினிக்காக காத்திருந்த தேசிங்கு.; தட்டி தூக்கிய கமல் – சிம்பு கூட்டணி

BIG BREAKING ரஜினிக்காக காத்திருந்த தேசிங்கு.; தட்டி தூக்கிய கமல் – சிம்பு கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துல்கர் சல்மா ரக்சன் ரித்து வர்மா நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த படம் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து தூள் கிளப்பியது.

இந்த படத்தைப் பார்த்து அனைவரும் பாராட்டிய வேளையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பாராட்டுகளை தெரிவித்தார்.

அப்போது தனக்கும் ஒரு கதை இருந்தால் ரெடி பண்ணுங்க என ரஜினி தெரிவித்து இருந்தார்.

மேலும் தேசிங்கு பெரியசாமி தீவிர ரஜினி ரசிகர் என்பதால் இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

ஆனால் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்காமல் நெல்சன் இயக்கத்தில் நடிப்பது முடிவானது.

அதன் பின்னர் தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ஒரு படம், ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களை கமிட்டானார்.

ரஜினிக்காக காத்திருந்த தேசிய பெரியசாமி வெறுத்துப் போனார்.

இந்த நிலையில் சிலம்பரசன் நடிக்கும் அவரின் 48வது படத்தை தேசிங்கு இயக்குவார் என சற்று முன் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தை கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.

Kamal and Desinghu Periysamy combo for STR 48

மேலும் இது குறித்து பக்கத்தில் கமல் கூறியதாவது…

சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்! @SilambarasanTR_ @desingh_dp

#STR48 #BLOODandBATTLE #RKFI56_STR48

#Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram https://t.co/nIcmVjrBHk

‘சப்தம்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்த லைலா

‘சப்தம்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்த லைலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்து வரும் படம் ‘சப்தம்’.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

‘சப்தம்’ படத்தின் முதல் ஷெட்யூல் சில வாரங்களுக்கு முன்பு மூணாறில் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

நடிகை லட்சுமி மேனன் தினங்களுக்கு முன் ‘சப்தம்’ படப்பிடிப்பில் இணைந்தார்.

இந்நிலையில், தற்போது நடிகை லைலா ‘சப்தம்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

நடிகை லைலா ‘சப்தம்’ படத்தில் இணைந்ததை இயக்குனர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “புதிய பரிமாணத்தில் சப்தம் படத்தொகுப்பில் இணைந்த பசுமையான நடிகை லைலா அவர்களை வரவேற்கிறோம்” என்று எழுதி இருந்தார்.

லைலா

Laila joined the shooting of ‘Sabdam’ movie

நான் பாத்துக்கிறேன்.. டோன்ட் ஒர்ரீ.; தயாரிப்பாளர் துரைக்கு ரஜினி உதவி

நான் பாத்துக்கிறேன்.. டோன்ட் ஒர்ரீ.; தயாரிப்பாளர் துரைக்கு ரஜினி உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் – சூர்யா நடிப்பில் பாலா இயக்கிய பிதாமகன் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த கஜேந்திரா போன்ற படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை.

இத்துடன் என்னம்மா கண்ணு, லூட்டி உள்ளிட்ட படங்களையும் தயாரித்து இருக்கிறார் துரை.

மேலும் ரஜினியின் ‘பாபா’ படத்தில் எக்சிகியூட்டிவ் புரொடியூசராக பணியாற்றி இருக்கிறார் வி.ஏ.துரை.

(அந்த சமயத்திலேயே தனக்கு ரூ.51 லட்சம் சம்பளமாக ரஜினி வழங்கியதாக தெரிவித்திருக்கிறார் விஏ. துரை)

கடந்த சில ஆண்டுகளாகவே இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

மேலும் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார் தயாரிப்பாளர் வி.ஏ.துரை.

இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

தயாரிப்பாளர் நிலை அறிந்து நடிகர் சூர்யா உடனடியாக ரூ 2 லட்சம் வழங்கினார். மேலும் நடிகர் கருணாஸ் ரூ 50,000 கொடுத்து உதவியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் துரை உடல்நலம் குறித்து அவரிடமே விசாரித்த ரஜினி.. “நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம், எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.

‘ஜெயிலர்’ சூட்டிங் முடிந்த உடனே உங்களை வந்து சந்திக்கிறேன் என சொல்லி ஆறுதல் தெரிவித்தாராம்.

இத்துடன் வி.ஏ.துரைக்கு ரஜினி உதவிக்கரம் நீட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி

Rajinikanth extends support to producer VA Durai

VA Durai worked as an executive producer in Rajinikanth’s ‘Baba’, and he was paid Rs 51 lakh for his work in the film.

He has also produced several films like ‘Ennama Kannu’, ‘Lootu’, ‘Pithamagan’ and ‘Gajendran’,

யோகி பாபுவின் ‘பொம்மை நாயகி’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

யோகி பாபுவின் ‘பொம்மை நாயகி’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்து வெளியான படம் ‘பொம்மை நாயகி’.

இப்படத்தில் யோகி பாபு, ஹரிகிருஷ்ணன், சுபத்ரா, ஸ்ரீமதி, ஜி.எம்.குமார், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், யாழி ஃபிலீம்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

‘பொம்மை நாயகி’ படத்தை கடந்த மாதம் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ‘பொம்மை நாயகி’ படம் வரும் மார்ச் 10-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொம்மை நாயகி

Yogi babu’s Bommai Nayagi OTT Release Date Announcement

OFFICIAL அடுத்த பட அறிவிப்பை வெளியிடும் நடிகர் சிவகார்த்திகேயன்

OFFICIAL அடுத்த பட அறிவிப்பை வெளியிடும் நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் தன் வெற்றி பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குபவர் சிவகார்த்திகேயன்.

நடிகர் பாடகர் பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட இவர் தற்போது தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டு வருகிறார்.

தனது எஸ் கே ப்ரொடக்க்ஷன் நிறுவனம் சார்பில் இவர் தயாரித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.

கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் இவரது தயாரிப்பில் வெளியானது.

மேற்கண்ட படங்களில் கனா டாக்டர் டான் உள்ளிட்ட படங்களில் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் இன்று மார்ச் 9ஆம் தேதி மாலை 5 மணிக்கு தனது நிறுவனம் தயாரிக்கும் உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்தில் இவர் நடிப்பாரா? அல்லது வெறும் தயாரிப்பாளர் மட்டும் தானா? என்பது இன்று மாலை தெரிந்து விடும்.

Sivakarthikeyan next movie announcement

We are thrilled to announce an exciting update on our next film today at 5 PM.

Stay tuned for more details! Cant wait to share our latest project with you!!

#SKPProductionNo6 https://t.co/7FTV97mpp8

More Articles
Follows