‘நந்தா’ படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபலம்

‘நந்தா’ படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தற்போது கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ எனும் ஆந்தாலஜி படத்தில் நடிக்கவுள்ளார்.

இதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கிறார்.

இதற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கவுள்ள ‘சூர்யா 40’ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

‘சூர்யா 40’ படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 2001ல் வெளியான பாலா இயக்கிய ‘நந்தா’ படத்தில் ராஜ்கிரண் மற்றும் சூர்யா இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

nandha movie rajkiran

Veteran Tamil actor to join Suriya 40 ?

மறைந்த தயாரிப்பாளர் பாலு குடும்பத்தாரிடம் 50 லட்சத்தை திருப்பி கொடுத்து நடிக்க சம்மதித்த விஷால்

மறைந்த தயாரிப்பாளர் பாலு குடும்பத்தாரிடம் 50 லட்சத்தை திருப்பி கொடுத்து நடிக்க சம்மதித்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சின்னத்தம்பி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலு.

இவர் அண்மையில் சில தினங்களுக்கு முன் காலமானார்.

இவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நடைபெற்றது.

அப்போது நடிகர் விஷால் தன்னுடைய மேலாளரை அனுப்பியிருந்தார்.

தான் பாலு தயாரிக்க சரவணன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த பட பூஜை படத்தை காட்டியுள்ளார்.

மேலும் அப்படத்தை 6 மாதத்திற்குள் நடத்தி முடித்து அப்பட மூலம் லாபத் தொகையை தயாரிப்பாளர் பாலு குடும்பத்திற்கு வழங்க உள்ளதாகத தெரிவித்தார்.

இவையில்லாமல் விஷாலுக்கு பாலு வழங்கிய அட்வான்ஸ் தொகையான 50 லட்ச ரூபாயையும் விஷால் பாலு குடும்பத்தினரிடம் திருப்பி கொடுத்தாராம்.

Vishal to help producer Balu family

Vishal Producer Balu

‘மும்பைகர்’ பாலிவுட் படத்தில் காமெடியனாக நடிக்கும் விஜய்சேதுபதி

‘மும்பைகர்’ பாலிவுட் படத்தில் காமெடியனாக நடிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதிஎந்த வேடம் எந்த மொழி என்றாலும் தயங்காமல் தன் கேரக்டரில் முத்திரை பதிப்பவர் நடிகர் விஜய்சேதுபதி.

இவர் கை வசம் தெலுங்கு படம் & மலையாளப் படம் கைவசம் உள்ளது.

தமிழில்… கடைசி விவசாயி, நவரசா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல படங்கள் உள்ளது.

தற்போது பாலிவுட்டிலும் படம் நடிக்க ரெடியாகிவிட்டார்.

‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிமுகமான மாநகரம் படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர்.

இப்படத்துக்கு ‘மும்பைகர்’ எனப் பெயரிட்டுள்ளனர். இப்பட மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் விஜய்சேதுபதி.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க, விக்ராந்த் மெஸ்ஸி, சஞ்சய் மிஷ்ரா நடிக்கின்றனர்.

இதில், மாநகரம் படத்தில் முனிஸ்காந்த் நடித்த ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறாராம்.

தமிழில் முனிஸுக்கு குறைவான காட்சிகளே இருந்தாலும் ஹிந்தியில் காட்சிகளை அதிகப்படுத்துகிறார்களாம்.

Details about Vijay Sethupathi’s role in Mumbaikar film revealed

தாணு தயாரிப்பில் தனுஷ்-செல்வா-யுவன் மெகா கூட்டணி.; புதுப்பேட்டை-2..?

தாணு தயாரிப்பில் தனுஷ்-செல்வா-யுவன் மெகா கூட்டணி.; புதுப்பேட்டை-2..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Selva Raghavanஇயக்குனர் செல்வராகவன் தற்போது நாயகனாகவும் நடித்து வருகிறார்.

‘சாணிக் காயிதம்’ படத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாகிறார்.

இதனிடையில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார் செல்வராகவன்.

இப்படத்தில் தனுஷ் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இது 2024ல் ரிலீஸ் என்பதையும் அறிவித்தனர்.

இப்பட அறிவிப்பை திடீரென வெளியிட்டார் செல்வராகவன்.

இந்த நிலையில் இன்று ஜனவரி 5ல் தன் ட்விட்டர் பக்கத்தில், ” தாணு சார், யுவன் மற்றும் தனுஷுடன் இணைவது மிக்க மகிழ்ச்சி ” என ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இன்று முதல் இப்பட சூட்டிங் ஆரம்பமாகியுள்ளது.

இது செல்வராகவனின் 12வது படைப்பாகும். இது புதுப்பேட்டை படத்தின் 2ஆம் பாகமா? அல்லது புதிய படமா? என்பது குறித்த தகவல் இல்லை.

Dhanush and Selva Raghavan reunites for Pudhu Pettai 2 ?

பொங்கலுக்கு அரசியல் கட்சி.; எஸ்.ஏ.சி மக்கள் கட்சி / அப்பா எஸ்ஏசி மக்கள் இயக்கம்..; செமயாய் இருக்குல்ல

பொங்கலுக்கு அரசியல் கட்சி.; எஸ்.ஏ.சி மக்கள் கட்சி / அப்பா எஸ்ஏசி மக்கள் இயக்கம்..; செமயாய் இருக்குல்ல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SAC Vijayஇயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்தாண்டு நவம்பர் 5-ம் தேதி ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல்கட்சியை பதிவு செய்தார்.

பொருளாளராக தனது மனைவி ஷோபாவை நியமித்தார்.

இந்த கட்சிக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார் விஜய்.

அவரின் அறிக்கையில்… ‘‘எனக்கும் அந்த கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது. என் ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் சேரக் கூடாது’’ என்றார்.

மறுநாளே பொருளாளர் பொறுப்பில் இருந்து ஷோபா விலகினார்.

சில தினங்களில் எஸ்ஏசி நியமித்த அனைத்து நிர்வாகிகளையும் நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமித்தார்.

இதனால் கட்சி தொடர்பான பணிகளை நிறுத்தினார் எஸ்ஏசி.

தற்போது 3 மாதங்களில் விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ள எஸ்ஏசி.

அதன்படி மீண்டும் புதிய கட்சி தொடங்க உள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு உடனடியாக 20 மாவட்ட பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளார்.

இந்த முறை கட்சி பெயர் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.

அதாவது… ‘எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி’ அல்லது‘அப்பா எஸ்ஏசி மக்கள் இயக்கம்’என்பது கட்சிப் பெயராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

பொங்கல் தினத்தில் ஜனவரி 14ல் புதிய கட்சி ஆரம்பம் என தகவல்கள் வந்துள்ளன.

SAC to start political party on pongal ?

ஜனவரி 10ல் ரசிகர்கள் அறவழிப் போராட்டம்..; புரட்சி உருவாகுமா…? மறுபரிசீலனை செய்வாரா ரஜினி்..?

ஜனவரி 10ல் ரசிகர்கள் அறவழிப் போராட்டம்..; புரட்சி உருவாகுமா…? மறுபரிசீலனை செய்வாரா ரஜினி்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகொரோனா வைரஸ் பரவல் மற்றும் தன் உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனாலும் ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் சேவை செய்ய முடியும் என அறிவித்தார்.

ரசிகர்களும், தமிழக மக்களும் தன்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆனாலும் தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் என ரஜினி ரசிகர்கள் தினம் தினம் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் தர்ணா & ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் அறவழி அமைதி போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 10.01.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

“படையெடுத்து வாரீர்…
தலைவர் தலைமையேற்றிட..
தமிழகம் நலம் பெற்றிட மாற்றத்தை விரும்புவர்கள் அணி திரண்டு வாரீர்.”

என அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்தாண்டு மார்ச் 12ஆம் தேதி ரஜினி பேசும் போது.. “அரசியல் மாற்றத்திற்கான மக்கள் புரட்சி.. ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் எழுச்சி உருவானால் அரசியலுக்கு வருவேன்” என்று சொன்னார்.

ஒரு வேளை அந்த புரட்சியை உருவாக்கி அவரை அழைக்கிறார்களோ ரஜினி ரசிகர்கள்?

ரஜினி தன் முடிவை மறுபரிசீலனை செய்வாரா?

Rajini fans protest on Jan 10 in chennai

More Articles
Follows