இயக்குநர் பாலாவுக்கு மீண்டு(ம்) கை கொடுக்கும் ‘நந்தா & நாச்சியார்’

இயக்குநர் பாலாவுக்கு மீண்டு(ம்) கை கொடுக்கும் ‘நந்தா & நாச்சியார்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரீமேக் படங்களை இயக்காத பாலாவை தனக்காக தன் மகனுக்காக ‘வர்மா’ படத்தை இயக்க வைத்தவர் விக்ரம்.

முழுப்படமும் ரெடியாகி இறுதியாக படமே சரியில்லை என தயாரிப்பாளர் சொல்ல படமே ரிலீசாகவில்லை. (ஓடிடி ரிலீஸ் வேறு கதை).

அதன்பிறகு பாலா படமே இயக்கவில்லை.

இந்த நிலையில் இயக்குநர் பாலா ஒரு புதிய படத்தை இயக்க அதை ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து தயாரிக்கப் போகிறார்கள்.

இந்த தகவல் சில மாதங்களாக பேசப்பட்டாலும் தற்போது உறுதியாகியுள்ளதாம்.

இந்த புதிய படத்தில் ஹீரோவாக அதர்வா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே பாலா இயக்கத்தில் உருவான ‘பரதேசி’ படத்தில் அதர்வா நடித்துள்ளார்.

அதுபோல் பாலா இயக்கிய நந்தா & பிதாமகன் படங்களில் சூர்யாவும் ‘நாச்சியார்’ படத்தில் ஜோதிகாவும் நடித்துள்ளனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Suriya and Jyothika joins for Bala’s film

நயன்தாராவின் உடல்மொழி பார்வையற்றவரை போலவே இருந்தது..; ‘நெற்றிக்கண்’ இயக்குனர் நெகிழ்ச்சி

நயன்தாராவின் உடல்மொழி பார்வையற்றவரை போலவே இருந்தது..; ‘நெற்றிக்கண்’ இயக்குனர் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடிப்பில், பரபர, திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள “நெற்றிக்கண்” திரைப்படம்
Disney Plus Hotstar தளத்தில் 2021 ஆகஸ்ட் 13 முதல் உலகமெங்கும் வெளியாகிறது.

இயக்குநர் மிலிந்த் ராவ் படம் குறித்து கூறியதாவது…

எங்கள் திரைப்படத்திற்கு இது வரையிலும் கிடைத்து வரும், அற்புதமான வரவேற்பு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பட வெளியீட்டுக்கு முன்னதாகவே ரசிகர்களிடம் இதுபோன்ற வரவேற்பைப் பார்ப்பது எங்கள் குழுவிலுள்ள அனைவருக்கும் பெரிய உற்சாகததை தந்துள்ளது.

இதன் அனைத்து பெருமையும் நயன்தாரா அவர்களையே சேரும். இப்படத்தில் அவரது உழைப்பு, நம்பமுடியாத அளவு பிரமிப்பானதாக இருந்தது.

அவர் இப்படத்தில் ஒரு பார்வையற்ற நபராக நடிப்பதால், பார்வையற்றோரிடமிருந்து அவர்களின் அனுமதியுடன் நாங்கள் நிறைய குறிப்புகளைப் பெற்று, அதை படத்தில் பயன்படுத்தினோம். தயாரிப்பாளராக இருந்தபோதிலும், நயன்தாரா மேடம் இந்த வேடத்துடன் பொருந்துகிறாரா என்று சோதனை படப்பிடிப்பை நடத்த விரும்பினார் அதன் படி அவரை வைத்து டெஸ்ட் ஷூட் செய்தோம்.

அவர் உடல்மொழி பார்வையற்ற ஒருவரை போலவே இருந்தது. மேலும் அவர் இப்பாத்திரத்தில் மேக்கப்பே இல்லாமல் நடித்துள்ளார். இத்தனை பெரிய பிரபலமாக இருந்தாலும் இந்த கதாப்பாத்திரத்திற்கு அவர் தந்த உழைப்பு அபாரமானது.

மிக கச்சிதமாக, நுணுக்கத்துடன் இந்த பாத்திரத்தை அவர் செய்துள்ளார். பார்வையற்ற பாத்திரம் என்றவுடனேயே இந்த பாத்திரம் எல்லாப்படத்தையும் போல, கருப்பு கண்ணாடி மாட்டி நடமாடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்.

கண்கள் தான் உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவி. அதனை முழுதாக வெளிப்படுத்த வேண்டும், என்பதில் உறுதியாக இருந்தோம்.

இப்படப்பிடிப்பில் எளிதாக கவனம் சிதறும் ஆனால் அனைத்து தடைகளையும் உடைத்து, நயன்தாரா அவர்கள் கண் தெரியாத ஒருவரை திரையில் அற்புதமாக கொண்டு வந்திருக்கிறார். படத்தில் இந்த பாத்திரம் இரண்டு முக்கியமான நிலைகளை கடந்து செல்லும்.

முதலில் அவருடைய கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பார்வையில்லாத அதிர்ச்சியைக் கடந்து செல்லும். அப்போது மிக பலவீனமான நிலையில் இருக்கும்.

அந்த நிலையை கடந்து அமைதியான நிலையை அந்த பாத்திரம் அடையும்.

நீண்ட பொதுமுடக்கம் முடிந்த பிறகு நாங்கள் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்தபோது, ‘இதுவும் கடந்து போகும்’ பாடலுக்காக, அவர் அதிக எடையைக் குறைத்ததைக் கண்டு, ஒட்டுமொத்த குழுவும் வியந்தது.

மக்கள் அவரை லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடுவது அவருக்கு பொருத்தமே. இப்படத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.

இந்த படத்தில் அனைவரது பங்களிப்பும், “நெற்றிக்கண்” படத்தை அருமையான படைப்பாக மாற்றியுள்ளது. ரசிகர்கள் கண்டிப்பாக இப்படத்தை கொண்டாடுவார்கள் என்றார்.

Rowdy Pictures சார்பில் விக்னேஷ் சிவன் இப்படத்தை Kross Pictures உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார் . R..D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Netrikkan director praises Nayanthara’s performance

ஜிவி பிரகாஷ் ஜோடியாக சுரபி நடித்த ‘அடங்காதே’ முதல் பாடல் வெளியானது

ஜிவி பிரகாஷ் ஜோடியாக சுரபி நடித்த ‘அடங்காதே’ முதல் பாடல் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“சைக்கோ” படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, Double Meaning Productions நிறுவனம் சினிமாவின் மற்ற துறைகளிலும் கால் பதிக்க துவங்கியுள்ளது.

அந்த வகையில் தனது புதிய இசை லேபிள் நிறுவனத்தை துவங்கியுள்ளது.

Double Meaning Productions நிறுவனத்தின் புதிய இசை லேபிள் மூலம் முதல் வெளியீடாக, G.V. பிரகாஷ் நடிப்பில், “அடங்காதே” படத்தின் பாடலை வெளியிடுகிறது.

Double Meaning Productions சார்பில் தயாரிப்பாளர் இயக்குநர் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது…

சில திரைப்படங்களை தயாரித்தவன் என்கிற முறையில் ஒரு படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகுந்த நெருக்கத்தையும், படத்திற்கு மிகச்சிறந்த விளம்பரத்தையும் பெற்றுத்தரும் என்பதை உணர்ந்திருக்கிறேன்.

அந்த வகையில் தான் Double Meaning Productions சார்பில், புதியதொரு மியூசிக் லேபிள் நிறுவனத்தை துவங்கியுள்ளோம்.

இந்நிறுவனத்தின் முதல் வெளீயீடாக, எங்கள் பெருமைமிகு படைப்பான “அடங்காதே” படத்திலிருந்து பாடலை வெளியிடுவது மிக மகிழ்ச்சி. இத்திரைப்படத்தை Sri Green Production நிறுவனம் தயாரிக்கிறது.

எங்கள் நிறுவனத்தில் சார்பில் முதல் பாடலான “நீ இன்றி நானா” பாடலை வெளியிடும் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ், ஹரீஷ் கல்யாண், அருண்ராஜா காமராஜ், இயக்குநர் சேரன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

ஷண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக சுரபி நடித்துள்ள திரைப்படம் ‘அடங்காதே’.

இந்த திரைப்படத்தில் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Nee Indri Naana Video Song from Adangathey is out

குக் வித் கோமாளி-கள்.. ஷகீலா பொண்ணு… ஜிபி முத்து, சார்பட்டா நடிகர்..; பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ரெடி.?

குக் வித் கோமாளி-கள்.. ஷகீலா பொண்ணு… ஜிபி முத்து, சார்பட்டா நடிகர்..; பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ரெடி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 7 இந்திய மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

தமிழில் கமல் 4 சீசன்களை தொகுத்து வழங்கியுள்ளார். விரைவில் 5வது சீசன் தொடங்கவிருக்கிறது.

இதற்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் பங்கேற்ற சிலருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வருகின்றன.

ஓவியா உள்ளிட்ட பலருக்கு ராசியே இல்லை எனலாம்.

ஆனால்… ஆரி, பாலாஜி முருகதாஸ், கவின், தாத்தா சுரேஷ், சாக்ஷி அகர்வால், மகத், ஐஸ்வர்யா தத், ஸ்நேகன், ரித்விகா, வனிதா விஜயக்குமார், முகின் ராவ், லாஸ்லியா, என பலருக்கு பிரகாசமாக அமைந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது அதற்கான போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனி, சுனிதா மற்றும் பாபா பாஸ்கர் ஆகியோர் பங்கேற்பர் எனத் தெரிகிறது.

மேலும் சார்பட்டா பரம்பரை பிரபல நடிகர், ஷகிலா மகள் மிலா, டிக் டாக் யூடியுப் பிரபலம் ஜிபி முத்து ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

First set list of Bigg Boss Tamil 5 contestant leaked ?

8 வழிச்சாலை.. சிங்கார சென்னை 2.0.. பெட்ரோல் ரூ 3 குறைப்பு.. மதுரையில் மெட்ரோ.. மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்கள்..; முதன்முறையாக காகிதமில்லா தமிழக இ-பட்ஜெட் தாக்கல்

8 வழிச்சாலை.. சிங்கார சென்னை 2.0.. பெட்ரோல் ரூ 3 குறைப்பு.. மதுரையில் மெட்ரோ.. மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்கள்..; முதன்முறையாக காகிதமில்லா தமிழக இ-பட்ஜெட் தாக்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெடகூட்டத் தொடர் சட்டபேரவை தலைவர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அதன் சிறப்பம்சங்கள் குறித்த பார்வை இதோ…

பெட்ரோல் மீதான வரியில் லிட்டருக்கு ரூ.3 குறைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வரிக் குறைப்பால், பெட்ரோல் விலையில் ரூ.3 குறையும். பெட்ரோல் மீதான வரிக்குறைப்பால் தமிழக அரசுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று அறிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வி & உயர் கல்வித்துறை

கற்றல் செயல்பாட்டில் முதல் 3 இடங்களில் தமிழகத்தை கொண்டு வர நடவடிக்கை.
*ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கு ரூ.20.76 கோடி
* அடிப்படை கல்வியறிவு, கணித அறிவை உறுதிசெய்ய எண்ணும் எழுத்தும் இயக்கத்திற்கு ரூ.66.70 கோடி ஒதுக்கீடு
* அரசுப்பள்ளி மாணவர்களின் கணினி திறனை உறுதிசெய்ய உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்க ரூ.114.18 கோடி நிதி
*மலைப்பாங்கான தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப்பள்ளிகள் புதிதாக அமைக்கப்படும்.
*865 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
* கூடுதல் வகுப்பறைகள் ஆய்வு கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ரூ.123.02 கோடி
* விடுதிகளை மேம்படுத்த சிறப்பு மூலதனம் ரூ.25 கோடி

*முனைவர் பட்ட கல்வி உதவித்தொகை திட்டம் ரூ.16 கோடி
* 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும்
*ரூ.10 கோடியில் 25 கலை அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
*413 கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40 தொடுதிரை கணினிகள் 13.22 கோடியில் ஏற்படுத்தப்படும்.
*தமிழ்நாடு ஆளில்லா விமான கழகம் துவங்கப்படும்.

*பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி
*சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி ரூ. 4,807 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
*தமிழக போலீசாருக்கு ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு.14,317 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
*தீயணைப்பு துறை ரூ.405.13 கோடி
*பேரிடர் மேலாண்மை துறைக்கு ₹1,360 கோடி ஒதுக்கீடு.
*சாலை பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.500 கோடி
*நீதித்துறை நிர்வாகத்திற்கு ரூ.1,713.30 கோடி
*பொது விநியோக திட்டத்தில் உணவு மானியத்திற்கு ரூ.8,437.57 கோடியாக அதிகரிப்பு
*29 குளங்களின் தரம் உயர்த்த ரூ.111.24 கோடி
*பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி
*ஊரக வேலை உறுதி திட்ட ஊதியத்தை ரூ.300 ஆகவும், பணிநாட்களை 150 நாட்களாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

*மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும்
*நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி
*மீன்வளத்துறைக்கு ரூ.303.66 கோடி
*6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
*150 கோடியில் காசிமேடு மீன்பிடித்துறைமுகம் மேம்படுத்தப்படும்
*மீனவர்கள் நலனுக்காக ரூ. 1,149.79 கோடி.

*டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கு ரூ.959.20 கோடி நிதி
*108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1,033 ஆக உயர்த்தப்படும்.
* ஆதிதிராவிடர் சிறப்பு கூறுகள் திட்டத்திற்கு மொத்த செலவீனம் ரூ.14,696.60 கோடி
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டம் ரூ.1884.70 கோடி
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு நலனுக்கு ரூ. 4142.33 கோடி
* குடிசை மாற்று வாரிய திட்டங்களுக்கு ரூ.3955.44 கோடி நிதி
* குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் ரூ. 2536.69 கோடி நிதி
* எம்ஜி ஆர் மதிய உணவு திட்டம் ரூ.1,725.41 கோடி நிதி ஒதுக்கீடு
* 3ம் பாலினத்தவர்கள் ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.1.50 கோடி ஒதுக்கீடு
* அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடு ரூ.48.48 கோடி நிதி ஒதுக்கீடு
* ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்திற்கு ரூ.2,536.69 கோடி நிதி
* கல்விக்காக வெளிநாடு செல்ல ரூ.5 கோடி உதவி
* வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு ரூ.60 கோடி
* அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய மானியத்திற்கு ரூ.215 64 கோடி
* மசூதிகள் மற்றம் தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.6 கோடி நிதி

*தமிழகத்தின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை 33 சதவீதம் உயர்த்த ரூ.500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்ககம், முதல்வர் தலைமையில் உருவாக்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்
* ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.150 கோடி
* 2021-22ம் ஆண்டில் 2,49,877 வீடுகள் கட்ட ரூ.8,017.41 கோடி
* கிராமப்புறங்களில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்
* ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.2000 கோடி
* அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கீடு.
*மாநில ஊரக வாழ்வாதார திட்டம் ரூ.809.79 கோடி
*அம்ருத் திட்டததிற்கு ரூ.1450 கோடி

*சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,350 கோடி
*கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் ரூ.1,000 கோடி
*சென்னையில் புதிய மேம்பாலங்கள் கட்ட ரூ.500 கோடி ஒதுக்கீடு
*எம்எல்ஏ மேம்பாட்டு திட்டங்களுக்கு தலா ரூ.3 கோடி வழங்கப்படும்
*சென்னையி்ல 3 இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2,056 கோடி ஒதுக்கீடு
*பள்ளிகல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி
*உயர்கல்வித்துறைக்கு ரூ.5369.09 கோடி
*மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.18,933.20 கோடி.

2022ல் அகவிலைப்படி :

புவியியல் புகைபடிவ பூங்கா அமைக்க ரூ.10 கோடி நிதி
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக ரூ.225.62 கோடி ஒதுக்கீடு
* 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும்.
* மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும்
* மோசடி ஆவணங்களின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் பதிவாளருக்கே வழங்கப்படும்
*வரி ஏய்ப்பு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

*ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க ரூ.623.59 கோடி
*நெடுஞ்சாலை துறைக்கு 17,899.17 கோடி
*சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2350 கோடி
*சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலை திட்டம் 1,750 கோடி
*16 மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாடு ரூ.6448.28 கோடி
*வேளாண்மைக்கான இலவச மின்சாரம் வீட்டு மின்சார மானியத்திற்காக ரூ.19,872.77 கோடி
*கொரோனா கால நிவாரணமாக ரூ.9370.11 கோடி செலவிடப்பட்டுள்ளது.
*நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.100 கோடி.

*சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டத்திற்கு ரூ.2,371 கோடி
*சென்னையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2056 கோடி ஒதுக்கீடு
*குடிசை மாற்று வாரியம் திட்டங்களுக்கு ரூ.3954.44 கோடி
*மகளிர் இலவச பஸ் பயணத்திற்கு டீசல் மானியமாக ரூ.703 கோடி ஒதுக்கீடு
*79,395 குக்கிராமங்களுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர்.
*தேவையுள்ள இடங்களில் புதிய ரேஷன் கடைகளை ஏற்படுத்துவதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கு குழு ஏற்படுத்தப்படும்.
*ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்
*திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் செயல்படுத்தப்படும்.
* நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மண்சாலைகள் தரம் உயர்த்தப்படும்
*சென்னை – குமரி இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும்
*சிங்கார சென்னை 2.0 பணிகள் துவங்கப்படும்.
*புதிய பெருநகர வளர்ச்சிக்குழுமங்கள் மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரில் ஏற்படுத்தப்படும்.

*மெட்ரோ 2ம் கட்ட பணிகள் 2026ல் முடிவடையும்
*சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகள் விரைவில் துவங்கப்படும்
*கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவை 4 ஆண்டுகளுக்குள் துவங்கும்
*தமிழகத்தை மின்மிகை மாநிலம் எனக்கூறுவது தவறு.
*2500 மெகாவாட் மின்சாரத்தை மின்சந்தையில் கொள்முதல் செய்தே தமிழக அரசு சமாளிக்கிறது.
*மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும்.
*அடுத்த 5 ஆண்டுகளில் வாடகை கட்டடங்களில் செயல்படும் நீதிமன்றங்களுக்கு போதிய கட்டடங்கள் கட்டப்படும்.
*உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பல்வேறு அம்சங்களை வெளியிட்டார் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

Tamil Nadu budget 2021-22 high lights

56 வருடங்களுக்குப் பிறகு வரும் ‘சிவன்’.: ஆங்கில மொழியிலும் உருவாகும் தமிழ் ஃபேன்டஸி த்ரில்லர் ‘மாயன்’

56 வருடங்களுக்குப் பிறகு வரும் ‘சிவன்’.: ஆங்கில மொழியிலும் உருவாகும் தமிழ் ஃபேன்டஸி த்ரில்லர் ‘மாயன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 56 வருடங்களுக்குப் பின் சிவனை கதைநாயகனாக கொண்ட படமாக மாயன் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் உருவாகி இருக்கிறது மாயன் திரைப்படம்.

மாயன் என்றால் கால பைரவனின் பிள்ளைகள் என்று அர்த்தம். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஆக்குபவர்களும் அழிப்பவர்களும் மாயர்களே.

அப்பேர்ப்பட்ட மாயர்களுக்கும் நம் மூதாதையர்களும் ஒரு பெரிய உறவு இருக்கிறது.

அந்த வரலாற்று உறவின் அடிப்படை தான் மாயன் படத்தின் கதைக்கரு.

முதல் இந்திய கமர்சியல் ஆங்கில திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஆஸ்திரேலிய ஆங்கில படத்திலும், மலேசிய தமிழ் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ள வினோத் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கதைநாயகிகளாக பிரியங்கா மோகன், பிந்து மாதவி மற்றும் பியா பாஜ்பய் நடித்துள்ளனர்.

ஜான்விஜய், தீனா,கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், கே கே மேனன், உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் ஆங்கில பதிப்புக்காக அனைவருமே ஆங்கிலம் பேசி நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார், ராஜேஷ் கண்ணா. இந்த பிரமாண்ட பேன்டஸி த்ரில்லர் படத்தை ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கிறது. இணை தயாரிப்பு ஜி.வி.கே.எம் எலிஃபண்ட் பிக்சர்ஸ்..

Thriller fantasy film Maayan will be made in 4 languages

More Articles
Follows