விஷாலுக்கு வில்லனாக நடித்த ஹீரோ சூர்யாவுக்கும் வில்லன்.?.; முக்கிய கேரக்டரில் நியூஸ் ரீடர் திவ்யா.?

விஷாலுக்கு வில்லனாக நடித்த ஹீரோ சூர்யாவுக்கும் வில்லன்.?.; முக்கிய கேரக்டரில் நியூஸ் ரீடர் திவ்யா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க சூர்யாவின் 40-வது படம் உருவாகி வருகிறது.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் பிரபல செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, ஆகியோரும் நடிக்கின்றனர்.

டி இமான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் வில்லனாக வினய் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது.

தமிழில் ‘உன்னாலே உன்னாலே’, ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை, அரண்மனை என பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாய் வினய்,

மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

New cast info on Suriya 40

Divya Durai samy

thupparivaalan vinay

BREAKING துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றார் தல அஜித்

BREAKING துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றார் தல அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா துறை தாண்டி பல திறமைகளுக்கு சொந்தக்காரன் நடிகர் தல அஜித்.

பைக் ரேஸ், கார் ரேஸ், ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது, போட்டோகிராபி, துப்பாக்கி சுடுதல் பயிற்சி் என பல துறைகளில் இவரின் சாதனைகள் அதிகம்.

தற்போது சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்.

இந்த நிலையில் 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

முதலிடம் பிடித்த அஜித்துக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

இதனையறிந்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் தல கால் புரியாமல் கொண்டாடி வருகின்றனர்.

Ajith Received Gold Medal at 46th TN State Shooting Championship

#CongratsTHALAAjith

#BREAKING கொரோனா அதிகரிப்பு.; தமிழகம் வருவோருக்கு மீண்டும் இ-பாஸ் கட்டாயம்

#BREAKING கொரோனா அதிகரிப்பு.; தமிழகம் வருவோருக்கு மீண்டும் இ-பாஸ் கட்டாயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

#CoronaVirus #EPass,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

நேற்று 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய அரசு அறிக்கையில்…

“புதுச்சேரி, கர்நாடகா ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம் தேவை.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு இபாஸ் கட்டாயம் தேவை.

வணிகரீதியான பயணமாக தமிழகத்தில் 3 நாட்கள் வரை தங்குவோருக்கு தனிமைப்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Again E Pass compulsory in Tamil Nadu State

‘களத்தில் சந்திப்போம்’ பார்ட் 2 வருதாம்.. தெலுங்கு ரீமேக் வேற..; ரெடியா மக்களே.?

‘களத்தில் சந்திப்போம்’ பார்ட் 2 வருதாம்.. தெலுங்கு ரீமேக் வேற..; ரெடியா மக்களே.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விமல் நடித்த மாப்ள சிங்கம் படத்தை இயக்கிய என்.ராஜசேகர் இயக்கிய அடுத்த படம் ‘களத்தில் சந்திப்போம்’.

ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

சூப்பர் குட் பிலிம்சின் 90வது படமாக உருவான இந்த படம் சமீபத்தில் ரிலீசானது.

இந்த நிலையில் இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாம்.

அருள்நிதி கேரக்டரில் சர்வானந்தும், ஜீவா கேரக்டரில் நானியும் நடிக்க பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

அதே வேளையில் களத்தில் சந்திப்போம் 2ம் பாகத்தை தமிழில் உருவாக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

Kalathil Sandhippom part 2 is on cards ?

சிவாஜி பட ஸ்டைலில் சிவகார்த்திகேயன் போடும் ‘சிங்க பாதை’..?

சிவாஜி பட ஸ்டைலில் சிவகார்த்திகேயன் போடும் ‘சிங்க பாதை’..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’, ‘அயலான்’, ‘டான்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ளன.

இந்த படங்களை முடித்து விட்டு அடுத்ததாக ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் சிவா.

அட்லீயின் உதவி இயக்குனர் அசோக் இயக்கவுள்ள இந்த படத்திற்கு ‘சிங்கபாதை’ என பெயர் வைத்து இருக்கிறார்களாம்.

சினிமா வெளிச்சம் கிடைக்காத துணை நடிகர்களைப் பற்றிய கதையாம் இது.

துணை நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் எப்படி உயர்ந்து உச்ச நடிகராகிறார்? என்பதுதான் ஒன்லைன் என சொல்லப்படுகிறது.

ரஜினி நடித்த சிவாஜி படத்தில் பூ பாதை & சிங்க பாதை என ஒரு சீன் இருக்கும். அதில் சிங்க பாதையை செலக்ட் செய்யும் ரஜினி பெரிய ஆளாகி ஆட்சியாளர்களை அலற விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan’s next with Atlee assistant

sivakarthikeyan (1)

மீண்டும் தேவயாணி் & அபி பாஸ்கர்..; ‘கோலங்கள்’ முதல் ‘புது புது அர்த்தங்கள்’ வரை

மீண்டும் தேவயாணி் & அபி பாஸ்கர்..; ‘கோலங்கள்’ முதல் ‘புது புது அர்த்தங்கள்’ வரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆயிரம் சீரியல்கள் டிவியில் காணப்பட்டாலும் சில சீரியல்களை மக்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்.

மறக்க முடியாத சீரியல்களில் ஒன்று தேவயாணி நடித்த ‘கோலங்கள்’ தொடர் ஆகும்.

ஆறு வருடங்களாக தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி சாதனை படைத்த தொடராகும்.

இந்த நிலையில் 12 வருடங்களுக்கு பிறகு அதே கோலங்கள் தொடரில் நடித்த தேவயாணியும், அபி பாஸ்கரும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.

ஜீ டிவி தமிழில் ஒளிபரப்பான ‘புது புது அர்த்தங்கள்’ சீரியலின் 2வது சீசனில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த சீரியலை விரைவில் நீங்கள் டிவியில் பார்க்கலாம்.

Kolangal cast joins for Zee tamil

devayani serial in zee tamil

More Articles
Follows