21 வயது இளைஞர் கட்டிய ‘மாலைநேர மல்லிப்பூ’-வை வாழ்த்திய வசந்த் & கேஎஸ் ரவிக்குமார்

21 வயது இளைஞர் கட்டிய ‘மாலைநேர மல்லிப்பூ’-வை வாழ்த்திய வசந்த் & கேஎஸ் ரவிக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாலைநேர மல்லிப்பூ”. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயதே ஆன மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் தோழிகளுக்கும் இடையே உள்ள உறவையும் மிக ஆழமாக பேசுகிறது.

பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வினித்ரா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் அஸ்வின் பத்து வயது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நாய்து டோர்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹர்திக் சக்திவேல் இசையமைத்திருக்கிறார். விஜயலெட்சுமி நாராயணன் தயாரித்திருக்கிறார்.

பாலியல் தொழிலாளியின் ஆட்டோகிராஃப்பை சொல்லும் 21 வயது இளம் இயக்குநர்

இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இயக்குநர் வசந்த் கலந்து கொண்டு பேசும் போது,…

“எல்லோருக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு பத்திரிக்கைத் துறை நண்பர்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருப்பதில் சந்தோசம் அடைகிறேன். இந்தப் படத்தோட இயக்குநர் சஞ்சய் நாராயணன் 21 வயசுலயே நினைக்க முடியாத ஒரு சப்ஜெக்ட பர்ஸ்ட் படத்துல எடுத்ததுக்காகவே நீங்கெல்லாம் கை தட்டலாம்.

என்னோட கேளடி கண்மணி படத்துக்கு ஆனந்த விகடன்ல அப்ப துணை ஆசிரியராக இருந்த மதன் சார் விமர்சனத்துல ஒரு வரி எழுதி இருந்தாரு. “ஒரு குழந்தை டிராக்டர் ஓட்டுகிறது” அப்டின்னு. எனக்கு அப்ப அது புரியல..

ஏன் சார் அப்டி எழுதியிருக்கீங்கன்னு கேட்டேன்.. அப்ப அவரு சொன்னாரு, மத்த வண்டியெல்லாம் ஓட்டிரலாம். டிராக்டர் ஓட்டுறது ரொம்ப கஷ்டம்.

அதனால தான் அந்தப் பாராட்டுன்னு சொல்லிருந்தாரு. அந்தப் பாராட்டு இந்தப் படத்துக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன். நான் இன்னும் முழுப் படமும் பார்க்கவில்லை. ஆனாலும் இங்கு காட்டிய சின்ன சின்ன க்ளிப்ஸ் பார்க்கும் போது முதல் பட இயக்குநர் போலத் தெரியவில்லை. பல படங்களை எடுத்த அனுபவமிக்க இயக்குநர் எடுத்த மற்றொரு படம் போலத்தான் இது இருக்கிறது.

இதைத்தான் நான் இயக்குநரும் நண்பருமான கே.எஸ்.ரவிக்குமார் அவர்களிடமும் கூறினேன். “நாமெல்லாம் ரொம்ப காலம் உதவி இயக்குநராகவே கழித்து விட்டோம்” என்று சிரித்துக் கொண்டோம்.

இந்தப் படத்தோட இயக்குநரைப் பாராட்டுவது போலவே இப்படத்தை தயாரித்திருக்கும் இயக்குநரின் தாய் விஜயலெக்ஷ்மி அவர்களுக்கும் என் பாராட்டுக்கள். ஏன் என்றால் மகனின் முதல் படம், தலைப்பு ‘மாலை நேர மல்லிப் பூ” அதைப் புரிந்து கொண்டு அவர்களின் தாய் அதை தயாரிப்பதென்பது மிகப் பெரிய விசயம். வினித்திரா மிகச் சிறந்த நடிகை. இப்படத்திற்கு அவர்களும் மிகப் பெரிய சப்போர்ட்டாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

Maalai Nera Malipoo Trailer

எனக்கு கதை எழுதும் போது ஏதாவது ப்ளாக் ஏற்பட்டா சென்னை கிறிஸ்டின் காலேஜ் தான் போவேன். அங்க இருக்குற ஏராளமான மரங்கள் தான் எனக்கு கதை சொல்லும். அந்தக் காலேஜ்ல தான் இந்த இயக்குநர் படிச்சிட்டு வந்திருக்காரு, அதனால அந்த மரங்கள் அவருக்கு ஏராளமான கதைகளை சொல்லி இருக்கும். இது போன்ற மிகச் சிறந்த படங்களை அவர் எடுக்க வாழ்த்துகிறேன்.

இந்தப் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று பேசினார்.

’நெடுநல்வாடை’ பட இயக்குநர் செல்வக்கண்ணன் பேசும் போது,…

“அனைவருக்கும் வணக்கம், இந்தப் படத்தோட கிளிப்பிங்க்ஸ் விஷ்வல்ஸ் பார்க்கும் போது ரொம்ப சர்ப்ரைஸ் ஆக இருந்தது. நிச்சியமாக இளம் இயக்குநர் சஞ்சய் நாராயணனிடம் நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒரு சப்ஜெக்ட் எடுத்துக்கிட்டு அதை ஒரு உப்புமா படம் போல பல பேர் எடுத்து வைப்பாங்க… ஆனா இந்தப் படம் அப்டி இல்லை.

டெக்னிக்கலாவும் நல்ல ஸ்டிராங்கான படமாத் தெரியுது. ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க.. நான் இந்தப் படத்தோட ஒளிப்பதிவாளரப் பாத்து சிரிச்சிக்கிட்டே இருந்தேன்.. ஏன்னா எல்லாரும் பாக்குறதுக்கு ரொம்ப சின்ன பசங்களா இருக்காங்க.. அப்டியே ஸ்கூல்ல இருந்து வந்தவுங்க மாதிரியே இருக்காங்க.. பட் அவுங்க படைப்பை பார்த்தால் பிரமிப்பாக இருக்குது.

நம்பவே முடியல. டிரைலர் பாக்கும் போதே இந்தப் படத்தோட Depth என்னென்னு தெரியுது. எடுத்த கதைக்கருக்கு படம் கண்டிப்பா நியாயம் சேர்க்கும்னு தோணுது. அம்மாவுக்கும் பையனுக்குமான உறவை சொல்லுகிற படத்தை இயக்குநரின் அம்மாவே தயாரித்து இருக்கிறார். அது மிகவும் அழகான விசயம். மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஏனென்றால் இது போன்ற அம்மா எல்லாருக்கும் கிடைக்காது. இயக்குநர் மிகவும் அதிர்ஷ்டசாலி அவர்களுக்கு என் நன்றிகள். மொத்த படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள்.

படத்தின் இயக்குநர் சஞ்சய் நாராயணன் பேசும் போது….

, “ இது ஒரு சின்ன படம். ரொம்ப ரொம்ப சின்னப் படம். இதற்கு நீங்கள் இவ்வளவு ஆதரவு தருவது, இந்த ஹால் முழுக்க நிரம்பி இருப்பதைப் பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எங்கள் படத்தின் டிரைலரை ஆன்லைனில் வெளியிட்ட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் சாருக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்கு வந்திருக்கும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவை எங்களுக்குக் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் படக்குழுவினர் அனைவருமே எனக்கு மிகச் சிறந்த ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள். அவர்களுக்கும் என் தாய்க்கும் நன்றிகள்.” என்று பேசினார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் பேசும் போது….

, பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் மீடியா நண்பர்கள் PRO-க்கள், யுவராஜ் போன்ற அனைவருக்கும் வணக்கம். இப்படத்தின் தயாரிப்பாளர் விஜயலெக்ஷ்மி அவர்கள் என் கல்லுரி விரிவுரையாளர் Mr.ராஜேந்திரன் அவர்களின் சிபாரிசின் அடிப்படையில் என்னை சந்திக்க வந்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள சொல்லி அழைப்பு விடுத்தார்கள். நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரம் இருப்பதில்லை என்பதால் புறக்கணிக்க நினைத்தேன். படத்தின் தயாரிப்பாளர் யார் என்று இயக்குநரைக் கேட்டேன். அவர் என் அம்மா தான் என்று சொன்னார். அவர்கள் நல்ல பணக்காரர்களா என்று கேட்டேன். இயக்குநர் இல்லை சார், என் அம்மா எனக்காக அவர்களின் நகைகளை எல்லாம் விற்று படம் தயாரித்திருக்கிறார் என்று கூறினார். அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இவர்கள் தான் இப்படத்தை முன்னெடுத்தவர், அதனால் தான் அவரை முன்னால் அமரச் சொல்லிக் கேட்டேன்.

இயக்குநர் பாலச்சந்தர் அரங்கேற்றம் படம் எடுப்பதற்கு முன்னர் பல படங்கள் எடுத்துவிட்டார். ஆனால் இப்படத்தின் இயக்குநர் சஞ்சய் நாராயணன் தன் முதல் படத்திலேயே பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையில் தாய் மகனுக்கு இடையே இருக்கும் பாசப் பிணைப்பை தன் கதையாக எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. அந்த தைரியத்திற்கு நான் தலைவணங்குகிறேன். இயக்குநரை முதலில் நேரில் பார்க்கும் போது, அவருக்குள் என்ன மாதிரியான விசயங்கள் இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. இன்று அவர் மேடையில் பேசும் போதும், அவரின் படைப்பைப் பார்க்கும் போதும் பிரமிப்பாக இருக்கிறது. இவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. பார்ப்பதற்கு கார்த்திக் சுப்புராஜ் போல இருக்கும் இந்த இயக்குநர் அவரைப் போலவே பெரும் புகழ் அடைய வாழ்த்துகிறேன். இயக்குநர் வசந்த் கூறியது போல், ஒவ்வொரு காட்சியிலும் கணம் இருந்தது. கதைக்கருவிற்கு காட்சிகள் வலு சேர்க்கிறது. நாயகி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்பொழுது கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளம் வளர்ந்து வருகிறது. எனவே யார் மூலமாக இப்படத்தை வெளியிடுவது என்பதில் கவனமாக இருக்கவும். எனக்குத் தெரிந்து இதை ஓடிடி தளத்தில் வெளியிடுவது சிறந்தது” என்று கூறினார்.

நாயகி வினித்ரா மேனன் பேசும் போது, “இந்த படக்குழுவைப் பார்க்கும் போது இவர்களை நம்பலாமா..? என்று தோன்றியது. ஏனென்றால் என்னைவிட அனைவரும் இளையவர்களாக இருந்தார்கள். ஆனால் கதையை படித்ததும் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. அது போல் இயக்குநரின் அம்மா இப்படத்தின் தயாரிப்பாளர் மட்டும் இல்லை. இப்படத்தின் எல்லா துறைகளிலும் அவர்கள் பணியாற்றினார்கள். உணவு தயாரிப்பது, ஆர்ட் டிப்பாட்மெண்டில் உதவுவது, காஸ்ட்யூம் ரெடி செய்வது இப்படி இப்படத்தின் முதுகெலும்பாக இருந்தவர்கள் அவர்கள் தான். மொத்தமே எங்கள் யூனிட்டில் ஒரு பத்து பேர் தான் இருப்போம். நான் எனது கதாபாத்திரத்தை மிகவும் விரும்பி செய்திருக்கிறேன். மிகவும் சவால் நிறைந்த கதாபாத்திரம். அதை எடுக்கும் போது பல தருணங்களில் நாங்கள் எல்லோருமே உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினோம். இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. என்னால் முடிந்த அளவிற்கு இப்படத்தில் நான் சிறப்பாக நடித்திருக்கிறேன். இப்படத்திற்கு நீங்கள் அனைவரும் உங்கள் ஆதரவை கொடுத்து உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.” என்று பேசினார்.

இயக்குநர் சுப்ரமணிய சிவா பேசும் போது, “ஊரில் ‘டேய் இதெல்லாம் சின்னப் பசங்க பாக்குற வேலையாடா..? என்று பேசுவார்கள். ஆனால் இது போன்ற படங்களை சின்ன வயதில் தான் எடுக்க வேண்டும். ஏனென்றால் சின்ன வயதில் காமம் காதல் வந்தால் தான் அது சரி. ஒரு வயதுக்கு மேல் காதல் காமம் வந்தால் அது மனநோய். ஆக இது தான் காதல் மற்றும் காமத்திற்கான வயது. எனவே அந்த வயதிற்கான படத்தையே சஞ்சய் நாராயணன் எடுத்திருக்கிறார். நம் தமிழ் திரையுலகின் கமர்ஸியல் மாஸ்டர் என்றால் அது இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சார் தான். அவர்களுடைய பாராட்டும் இப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் கிடைத்திருக்கிறது. அது அவ்வளவு எளிதான விசயம் அல்ல.. அது போல கிளாசிக் மாஸ்டரான இயக்குநர் வசந்த் சார் அவர்களின் பாராட்டும் இப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் கிடைத்திருக்கிறது. ஆக கமர்ஸியல் மற்றும் கிளாசிக் இயக்குநர்கள் இருவரின் பாராட்டையும் இப்படம் ஒருங்கே பெற்றிருப்பதால் இந்தநாள் சிறப்பு வாய்ந்தது.

தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்தியாவில் 30 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக புள்ளியல் விவரம் கூறுகிறது. இதற்கு முழுக் காரணம் வறுமை. இதனால் பாதிக்கப்படும் ஆண் வன்முறையை நோக்கியும் பெண் பாலியல் தொழில் நோக்கியும் போகிறாள். பாலியல் தொழில் என்பது ஆதித் தொழில். பைபிளில் இது குறித்த கதைகள் இருக்கின்றது. நம்முடைய தமிழ் புராணமான சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி கதாபாத்திரம், புகார் நகரில் இருந்த பெரிய பாலியல் தெருக்கள் போன்ற குறிப்புகள் எல்லாம் நாம் அறிவோம். ஆக அப்போது இருந்த ஒரு ஆதித் தொழில் இன்றைய 5G யுகத்தில் எப்படி இருக்கிறது என்பதைத் தான் இயக்குநர் கூறியிருக்கிறார். ஒவ்வொரு சமூகத்திலும் தாய் என்பவள் மிகவும் வலிமையானவள்; அவளை நாம் அடக்கித் தான் வைத்திருக்கிறோம். அவள் தாயோ, மனைவியோ, மகளோ, தோழியோ நாம் அடக்கித் தான் வைத்திருக்கிறோம். இப்படத்திலும் அப்படித்தான் வலிமையான தாய் தன் மகனின் சிறந்த எதிர்காலத்திற்காக எப்படி போராடுகிறாள் என்பதே கதை.

சிலப்பதிகாரத்தில் மாதவியும் தன் மகள் மணிமேகலைக்கும் அதையேதான் செய்தாள். ஆக பாதிக்கப்படும் பெண்களின் சார்பாக பேச வேண்டியது ஒரு எழுத்தாளனின் ஒரு படைப்பாளியின் கடமை. அந்த கடமையை நிறைவேற்றும் படைப்பாகத்தான் இப்படம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த இயக்குநரின் முதல் படத்திலேயே இவரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. இதனை பணமாக மாற்ற வேண்டும். அரசு கல்லூரிகள் இருக்கும் வரை மாணவர்களிடம் போராட்டக் குணமும், சமூக அக்கறையும் இருந்தது. ஆனால் எப்பொழுது இன்ஜினியரிங் கல்லூரிகளாக அவை மாறியதோ அப்போதே அவர்களிடம் போராட்டக் குணம், சமூக அக்கறை போன்றவை தொலைந்து போய் காசு சேர்க்கும் ஆசை மட்டுமே எஞ்கி இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். இந்த இயக்குநர் தாயின் பிள்ளையாக இருப்பதால் இவர் மனித நேயத்தோடு தான் படம் எடுத்திருப்பார். இப்படம் நிச்சயமாக பேசப்படும் என்று நம்புகிறேன். இப்படத்திற்கும் இப்படக் குழுவினருக்கும் மிகப் பெரிய வாழ்த்துக்கள்.” என்று பேசினார்.

Vasanth and KS Ravikumar praised Maalai Nera Mallipoo

ஒரே படத்தில் தங்கர்பச்சான் ஜிவி.பிரகாஷ் பாரதிராஜா யோகிபாபு கௌதம் மேனன் கூட்டணி

ஒரே படத்தில் தங்கர்பச்சான் ஜிவி.பிரகாஷ் பாரதிராஜா யோகிபாபு கௌதம் மேனன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனித உறவுகளை மய்யமாகக் கொண்ட அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற தரமான அழுத்தமான திரைப்படங்களை தந்த தங்கர் பச்சான் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார்.

அதற்கு ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்று பெயரிட்டுள்ளார்.

இப்படத்தை, வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் D.வீரசக்தி பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

தரகர்களால் தரங்கெட்ட தனியார் கல்வி நிறுவனங்களை எச்சரிக்கும் ‘செல்ஃபி’ – தங்கர் பச்சான்

இப்புதிய திரைப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூவருமே இது வரை நடித்திராத அழுத்தமான கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

மற்றொரு முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையை, பிரபல நாயாகியாக தேர்வு செய்து வருகிறார்கள்.

மிக முக்கியமாக கருதும் இப்படத்தின் இசை அமைக்கும் பொறுப்பை ஜி.வி.பிரகாஷ் ஏற்றுள்ளார். முதன் முறையாக தங்கர் பச்சானுடன் இணைந்து பணிபுரிகிறார்.

பிரபலங்கள் N.K.ஏகாம்பரம் ( சோனி ஓடிடி -க்கு சேரன் இயக்கி வரும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் ) ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் தங்கவேல் ( இந்தியன் 2, அயலான் ) கலையை அமைக்கிறார்.

ஜூலை மாதம் 25 முதல் இரு கட்டங்களாக படப்பிடிப்புகள் தொடங்குகின்றன.
ஜி. வி. பிரகாஷ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் உருவாகி கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பிறர் அறியாத பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டு குற்ற உணர்வில் நிம்மதி இழந்து மன்னிப்புத்தேடி அலைபவனின் மனநிலைக்கு ஏற்ப பாடல் ஒன்றை எழுதி முடித்து ஈரம் காயாத விழிகளுடன் வைரமுத்து டிவிட்டரில் ..

“தங்கர்பச்சான் இயக்க
ஜி.வி.பிரகாஷ் இசைக்கும் படம்
‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ பாட்டெழுதும்போதே சொல்லோடு கசிந்தது கண்ணீர்.
விழுமியங்கள் மாறிப்போன சமூகத்திற்கு என்னோடு அழுவதற்கு கண்ணீர் இருக்குமா? இல்லை.. கண்களாவது இருக்குமா?..

என அழுத்தமான மன உணர்வுகளை பதிவிட்டுள்ளார்.

வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் D.வீரசக்தி இப்படம் குறித்து,

“மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்பு இது. இக்கதையை கேட்ட மாத்திரத்திலேயே கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன்.

அடுத்த நொடியே படத்தை தயாரிக்க முடிவெடுத்துவிட்டேன். இது தங்கர் பச்சானின் அழுத்தமான மற்றொரு படைப்பு. தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமாக இது இருக்கும்..”

என்று சொல்லியுள்ளார்.

‘திரௌபதி’ பிடிக்கல.. ‘ருத்ர தாண்டவம்’ படத்தை மக்கள் பார்க்க அதிகமாக பேசும் மோகன்…; தங்கர் பச்சான் கடிதம்

தங்கர் பச்சான் இயக்கத்தில் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் “டக்கு முக்கு டிக்கு தாளம்” திரைப்படத்தின் வெளியீட்டு பணிகளுக்கிடையில் இப்புதிய திரைப்படத்தின் பாடல்களை உருவாக்கும் பணிகளை துவக்கியுள்ளார் தங்கர் பச்சான்.

G.V.Prakash is joining hands with Thangar Bachan for a film called ‘Karumegangal yaen Kalaiginrana ?’

இந்தியாவின் பர்ஸ்ட் போஸ்ட் ஆபிஸை வைத்து உருவான ‘போத்தனூர் தபால் நிலையம்’

இந்தியாவின் பர்ஸ்ட் போஸ்ட் ஆபிஸை வைத்து உருவான ‘போத்தனூர் தபால் நிலையம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Passion Studios தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் ஆகியோர் சிறந்த உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களை வடிவமைத்து உருவாக்கியுள்ளனர்.

அவர்களது அடுத்த வெளியீடாக மே 27, 2022 முதல் ஆஹா தமிழில் ஓடிடி உலகளாவிய வெளியீடாக “போத்தனூர் தபால் நிலையம்” திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தை இயக்கியுள்ள பிரவீன் தான் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

‘போத்தனூர் தபால் நிலையம்’ என்ற தலைப்பில் வரும்போதே, இது ஒரு மென்மையான மெலோடிராமாடிக் டிராமாவாக இருக்கும் என்று நினைக்கையில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விஷுவல் ப்ரோமோக்கள் நம் அனுமானங்களை முற்றிலும் தவறென நிரூபிக்கின்றன.

ஆம்! இந்த படம் ஒரு முந்தைய காலகட்டத்தில்-குற்றம்-விசாரணை சம்பந்தபட்ட சஸ்பென்ஸ் திரில்லராக இருக்குமென சமீபத்தில் வெளியிடப்பட்ட டிரெய்லர் கூறுகிறது, மற்றும் அந்த டிரெயலர் நமது ஆர்வத்தையும் அதிகரிக்கவைக்கிறது.

மேலும், ‘தபால் நிலைய கொள்ளை’ என்பது படத்தின் கதைக்கரு என தெரிந்தவுடன், திரைப்படத்தின் மீது மிகப்பெரிய பரபரப்பும் ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளது.

இயக்குனர்-நடிகர் பிரவீன் கூறுகையில்…

“அஞ்சலகத்தில் காசாளராக இருந்த என் அப்பாவிடம் சாவகாசமாக பேசும் போதுதான் போத்தனூர் தபால் நிலையம் என்ற கதைக்கரு உருவானது.

அவர் தனது அனுபவத்தை, சில நிஜ வாழ்க்கை சம்பவங்களுடன் பகிர்ந்து கொள்வார், அந்த பகிர்தல்கள் ஒரு கற்பனை நிறைந்த திரைப்படத்தை, உருவாக்க என்னைத் தூண்டியது.

எனது முயற்சிகளை ஊக்குவித்து, இந்த திரைப்படத்தை செயல்படுத்தியதற்காக எனது தயாரிப்பாளர்களான சுதன் சுந்தரம் சார் மற்றும் ஜெயராம் சாருக்கு நன்றி.

இந்தத் திரைப்படத்தில் ஆர்வம் காட்டி, மே 27, 2022 அன்று உலகம் முழுவதும் இப்படத்தை திரையிடுவதற்காக ஆஹா தமிழுக்கு நன்றி கூறுகிறேன்.

திரைக்கதையை ஈர்க்கும் வகையில் உருவாக்கியுள்ளோம், போத்தனூர் தாபல் நிலையம் பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய மற்றும் தனித்துவமான அனுபவமாக இருக்கும். பார்வையாளர்கள் எங்களின் கதையை ஏற்று பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்.

இயக்குனர்-நடிகர் பிரவீன் தொடர்ந்து கூறுகையில்….

‘போத்தனூர் தபால் நிலையம்’ இந்தியாவின் முதல் தபால் அலுவலகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். 80களின் பின்னணியில் இப்படம் அமைக்கப்பட்டிருப்பதால், பார்வையாளர்களுக்கு ஒரு துல்லியமான காட்சி விருந்தளிக்க கலைத் துறையின் சார்பில் பல கலைஞர்கள் பணிபுரிந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தப் படம் ரெட்ரோ பாணியில் இருக்கும், 90களை மீண்டும் பார்க்கும் அனுபவமாக இருக்கும் என்றார்.

VFX மற்றும் அனிமேஷன் உலகில் 13 வருட அனுபவத்தின் காரணமாக, இயக்குனர்-நடிகர் பிரவீன் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் சார்ந்த திரைப்படமான ‘கோச்சடையான்’ படத்தில் தொழில்நுட்ப இயக்குநராக பணிபுரிந்தார். Passion Studios ஏற்கனவே சீதக்காதி, அந்தகாரம், என்னாங்க சார் உங்க சட்டம் போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது.

பிரவீன் மற்றும் அஞ்சலி ராவ் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மே 27, 2022 முதல் போத்தனூர் தபால் நிலையம் ஆஹா தமிழ் செயலியில் திரையிடப்படுகிறது.

Pothanur Thabal Nilayam based on India’s first post office true incidents

242 விருதை அள்ளிய ‘சிதை’ குறும்படம் சினிமாவாகிறது..; பூஜையன்றே படத்தை வாங்கிய ஓரக்கிள் மூவிஸ்

242 விருதை அள்ளிய ‘சிதை’ குறும்படம் சினிமாவாகிறது..; பூஜையன்றே படத்தை வாங்கிய ஓரக்கிள் மூவிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்களின் கவனம் ஈர்த்த குறும்படம்; 200 விருதுகளை குவித்த ”சிதை”!

இயக்குனர் கார்த்தி ராம் இயக்கத்தில் பிஜு அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் தான் “சிதை”. பெண்களின் உறுப்பு சிதைத்தலை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இக்குறும்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

நேர்த்தியான வசனங்கள், ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலும் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தது இக்குறும்படம்.

அதுமட்டமல்லாமல், இக்குறும்படம் இதுவரை சுமார் 232 விருதுகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளுக்கு இக்குறும்படம் சென்று விருதுகளை குவித்திருக்கிறது.

இக்குறும்படத்தின் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜி கே திருநாவுக்கரசு, சரவணன், மதியழகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பலரும் இக்குறும்படம் இத்தனை விருதுகளுக்குமேல் இன்னும் பல விருதுகளை குவிக்க தகுதியான ஒன்று தான் என்று கூறினார்கள்.

அடுத்தகட்டமாக, வெள்ளித்திரை படம் எடுத்து இயக்குனர் கார்த்தி ராம் மிகப்பெரும் வெற்றியை அடைய வேண்டும் என்று அனைவரும் வாழ்த்து கூறினர்.

பெண்கள் பல துறைகளில் உயர்ந்து விட்டாலும் இன்றும் பெண்களுக்கு எதிரான பெண் உறுப்பு சிதை உள்ளிட்ட பல கொடுமைகள் நவீன உலகத்திலும் நடந்துக் கொண்டேதான் இருக்கின்றன. இவை முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.

‘சிதை’ போன்ற படங்கள் வந்தால் மட்டுமே இந்த கொடுமைகள் உலகத்திற்கு தெரியவரும். அப்பொழுதுதான் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு பெண்களுக்கு உண்மையான விடியல் பிறக்கும். இதை உரக்க சொன்ன இயக்குநர் கார்த்தி ராம் குழுவினரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

இந்த நிலையில் ‘சிதை’ படத்தின் முதல் பாகத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இதில் ஒளிப்பதிவாளர்- சுபாஷ் நாதன், எடிட்டர்- வினோத் சிவக்குமார், கே எம் கே ராதாகிருஷ்ணன், ஓரக்கிள் மூவிஸ் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு இந்நிறுவனம் என்எஃப்டி பார்டனராக ஓரக்கிள் மூவிஸ் வந்திருந்து வாழ்த்தினர்.

படப்பூஜையன்றே ஓரக்கிள் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை வாங்க முன்வந்துள்ளது.்

ஜூலை மாதம் முதல் இதன் படப்பிடிப்பை 30 நாட்கள் தொடர்ந்து நடத்தவுள்ளனர்.

பெண் உறுப்பை ‘சிதை’-க்கும் கொடூரம்.; கார்த்திராம் இயக்கத்திற்கு 230 விருதுகள் https://www.filmistreet.com/cityevents/200-awards-for-karthikeyans-sithai-short-film/

Award winning short film ‘Sidai’ becomes a movie ..;

சர்ப்ரைஸ் விசிட் : கமல்ஹாசனை கட்டியணைத்து கண்ணீர் விட்ட ரசிகர்கள்

சர்ப்ரைஸ் விசிட் : கமல்ஹாசனை கட்டியணைத்து கண்ணீர் விட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விக்ரம்’.

இதில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா கொடுக்கும் செம ட்விஸ்ட்

இதில் ‘ஜல்லிக்கட்டு’ படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.

அனிருத் இசையமைத்துள்ளார்.

விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை பிரபல வினியோகஸ்தர்களான AP International நிறுவனமும் தமிழக உரிமையை உதயநிதியும் வாங்கி உள்ளனர்..

விக்ரம் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு “விக்ரம் ஹிட் லிஸ்ட்” என பெயரிடப்பட்டுள்ளனர்.

இப்படம் ஜூன் 3ல் ரிலீசாகவுள்ளது.

கமலுடன் மதுரை சம்பவம்.. சிம்புவுடன் அரசியல் டாக்.; ‘விக்ரம்’ விழாவில் ரஞ்சித் பேச்சு

இப்பட வெளியீட்டை ஒட்டி தனது ரசிகர்களை சர்ப்ரைஸாக சந்தித்துள்ளார் கமல்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரசிகர்களை அழைத்து, அவர்கள் கமல்ஹாசன் குறித்தும் அவருடைய படங்கள், அரசியல் குறித்து பேச வைத்துள்ளனர்..

அப்போது, ரசிகர்கள் பேசும்போது சர்ப்ரைஸாக கமல்ஹாசன் திடிரென ரசிகர்கள் முன் தோன்றியுள்ளார்

அப்போது இதில் பங்கேற்ற ரசிகர்கள் கமலை சந்தித்ததும் கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதனர்.

Surprise Visit: Kamal Haasan meets his fans

டி ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு உருக்கமான அறிக்கை

டி ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு உருக்கமான அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், திரைப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் டி ராஜேந்தர்.

அரசியலில் ஒரு கலக்கு கலக்கியவர். எம்எல்ஏ ஆகவும் பதவி வகித்துள்ளார்.

தற்போதும் ஒரு கட்சிக்கும் தலைவராக இருக்கிறார். டி ராஜேந்தர் தனது அடுக்கு மொழி எதுகை மோனை வசனத்திற்கு புகழ் பெற்றவர்.

இவர் உயிருள்ளவரை உஷா, என் தங்கை கல்யாணி, ஒரு தாயின் சபதம், காதல் அழிவதில்லை என பல படங்களை இயக்கியுள்ளார்.

ஆனால் எந்த படத்திலும் இவர் நாயகியை தொடாமல் நடிப்பார். இவரைப் போன்ற ஒரு திரைக் கலைஞனை உலகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது.

இவர் இயக்கிய படங்களின் மூலம்தான் இவரது மகன் சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பின்னர் சிம்புவை இவரே கதாநாயகனாகவும் அறிமுகப்படுத்தினார்.

1980ல் டிஆர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

1980களில் டி. ராஜேந்தர் அறிமுகப்படுத்திய அமலா, நளினி, ஜோதி, ஜீவிதா மற்றும் மும்தாஜ் உட்பட பல நடிகைகள் பிற்காலத்தில் வெற்றி நாயகிகளாக வலம் வந்தனர்.

‘உயிருள்ளவரை உஷா’ படத்தில் நடித்த நடிகை உஷாவை கரம் பிடித்து தன் மனைவியாக்கினார்.

இவர்களுக்கு சிலம்பரசன், குறளரசன், இலக்கியா ஆகிய இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் தற்போது சிம்புக்கு மட்டும்தான் இதுவரை திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் டி ராஜேந்தருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிம்பு டாடி டி-ராஜேந்தர் எப்படி இருக்கிறார்.?

எனவே சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் தனது தந்தையின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு.

அதில்…

“எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிது இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயர் சிகிச்சை தர வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

அவர் உடல்நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்.

அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Simbu’s heartfelt statement on T Rajender health

More Articles
Follows