“ லோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹைவோல்டேஜ் படம் “ நெடுநல்வாடை”

“ லோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹைவோல்டேஜ் படம் “ நெடுநல்வாடை”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nedunalvaadaiபடத்தின் நாயகன், நாயகி ஆகிய இருவரும் படம் தொடங்கிய பத்தே நாட்களில் எஸ்கேப் ஆனபிறகும் நண்பர்கள் என் மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் இன்று ரிலீஸ் தேதியை நெருங்கி வந்துவிட்டோம்’ என்கிறார் ‘நெடுநல்வாடை’ படத்தின் இயக்குநர் செல்வக்கண்ணன்.

உடன் படித்த 50 நண்பர்களின் பணமுதலீட்டில் தயாரான படம் பி ஸ்டார் புரடக்‌ஷன்ஸின் ‘நெடுநல்வாடை. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் அடுத்த வாரம் மார்ச் 15 அன்று ரிலீஸாகிறது. பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் P.மதன் இப்படத்தை ரிலீஸ் உதவி புரிந்து வருகிறார்.

நேற்று பிரசாத் லேப்பில் நடந்த இப்பட ட்ரெயிலர் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் மதன், இணை தயாரிப்பாளர் ஜேம்ஸ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தமிழில் படங்களுக்கு தலைப்பு வைக்கவேண்டிய அவசியம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து பேசிய காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநரும் ‘நெடுநல்வாடை’ படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்திருப்பவருமான ஐந்துகோவிலான் பேசியபோது,’’ ஒரு தயாரிப்பாளருக்கு படம் இயக்கும்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிடுகிற இந்தக் காலத்தில் 50 தயாரிப்பாளர்களுடன் இணைந்து எந்த வித பிரச்சினையும் இல்லாமல் ஒரு படத்தை எடுத்து முடித்திருப்பதே மிகப்பெரிய சாதனை’ என்றார்.

அடுத்து 50 தயாரிப்பாளர்ளின் சார்பில் பேசிய சுந்தர் கள்ளம் கபடமில்லாமல் படம் குறித்த பல ரகஸியங்களைப் பகிர்ந்துகொண்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக துவக்கத்தில் படத்தில் ஒரு வாரம் நடித்துவிட்டு நடிகர் அபிசரவணனுடன் ஓடிப்போன அதிதி மேனன் குறித்த பஞ்சாயத்துகளை மேடையிலேயே போட்டு உடைத்தார். ‘படம் எடுக்க முன்வந்தபோது நாங்கள் நினைத்த பட்ஜெட்டை விட பல மடங்கு தாண்டிவிட்டது. ஆனாலும் நண்பர் செல்வக்கண்ணன் எவ்வளவு நேர்மையானவர் என்பது எங்களுக்குத் தெரியும் என்பதால் எதையும் பொருட்படுத்தாமல் நாங்கள் தொடர்ந்து செலவு செய்து இப்படத்தை முடித்தோம். இப்போதும் கூட இந்தப் படத்திலிருந்து ஒரு பைசா கூட திரும்பி வராவிட்டாலும் இயக்குநர் மீது எங்களுக்கு இருக்கும் ப்ரியங்களும் நட்பும் அப்படியே இருக்கும்’ என்றார்.

எஸ்கேப் ஆர்டிஸ்டின் தயாரிப்பாளர் மதன் பேசும்போது,’இன்றைய தேதியில் நண்பர்கள் இப்படி ஒரு காரியத்தில் இறங்கியிருப்பது வியப்பளிப்பதாக இருக்கிறது. இவ்வளவு பிரச்சினைகளையும் மீறி மிகவும் தரமான படமாக ‘நெடுநல்வாடையை செல்வக்கண்ணன் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்த அந்த 50 நண்பர்களுக்கும் கண்ணன் வாழ்நாள் முழுக்கக் கடன்பட்டிருக்கிறார்’ என்றார்.

அடுத்து நன்றி உரையாற்றிய இயக்குநர் செல்வக்கண்ணன்,’ இந்தப் படம் எத்தனையோ முறை டிராப் ஆகவேண்டியது. ஆனால் நடந்த உண்மைகள் எதையும் மறைக்காமல் பிரச்சினைகள் அத்தனையையும் நண்பர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிக்கொண்டே இருந்தேன். அவர்களுக்கு பிராக்டிக்கலான சினிமா குறித்து எதுவுமே தெரியாதென்றாலும் நான் பொய் சொல்லவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து உதவி படத்தை முடிக்க உதவினார்கள். நல்ல படங்களை ரசிகர்கள் ஒருநாளும் கைவிட்டதில்லை என்ற நம்பிக்கையில் மிகவும் தரமான ஒரு படத்தை நல்ல டெக்னீஷியன்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறேன். ‘நெடுநல்வாடை’ லோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹைவோல்டேஜ் படம் என்றார்.

முக்கிய கதாபாத்திரங்கள் :

பூ ராமு,இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

தயாரிப்பு : பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ்

இயக்குநர் : செல்வகண்ணன்

இசை : ஜோஸ் ஃபிராங்க்ளின்

ஒளிப்பதிவு : வினோத் ரத்தினசாமி

பாடல்கள் : கவிப்பேரரசு வைரமுத்து

படத்தொகுப்பு : மு.காசிவிஸ்வநாதன்

கலை : விஜய் தென்னரசு

சண்டை பயிற்சி : ராம்போ விமல்

நடனம் : தினா, சதீஷ்போஸ்

மக்கள் தொடர்பு : மணவை புவன்.

நந்திதா ஸ்வேதா நடிக்கும் IPC 376

நந்திதா ஸ்வேதா நடிக்கும் IPC 376

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nandita swethaஇது த்ரில்லர் படம். சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், காமெடி எல்லாம் கலந்த கமர்ஷியல் கதை. நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆக்சன் கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். படம் முழுக்க ஆக்‌ஷன் நிரம்பியிருக்கும்.சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி பண்ணுகிறார்.படத்தில் வித்தியாசமான ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.இது ஹீரோக்கள் பண்ண வேண்டிய கதை. ஆனா ஹீரோக்கள் பண்ண முடியாத கதை.இப்ப சமூக வலைதளங்கள்தான் பரபரப்பா இயங்கிக்கிட்டிருக்காங்க.டைட்டிலை வலைதளத்தில் தேடும்போதே இது எது சம்பந்தமான கதை என்பதை யூகித்து விடுவார்கள்.ஆனால் என்ன கதை என்பதை யூகிக்க முடியாது.பெண்களை இழிவுபடுத்தி வந்துகொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இது பெண்கள் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும்.

த்ரில்லர், சஸ்பென்ஸ் என்பதையும் தாண்டி யூகிக்க முடியாத இன்னொரு விஷயமும் படத்தில் ஹைலைட்டாக இருக்கும்.பிரபுசாலமன், பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் பல படங்களில் பல மொழிகளில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ராம்குமார் சுப்பாராமன் படத்தை இயக்குகிறார்.தகராறு, அண்ணாத்துரை படங்களின் ஒளிப்பதிவாளர் k. தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் R. நிர்மல் படத் தொகுப்பைக் கவனிக்கிறார்.

படத்தின் தயாரிப்பாளர் S. பிரபாகர் பிரபல விநியோகஸ்தர்.96, ஜூங்கா, பென்சில் போன்ற பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்தவர். டிஸ்ட்ரிபியூட்டர் மற்றுமல்லாது எக்ஸிபிட்டரும்கூட. பல தியேட்டர்களை நடத்தி வருகிறார். இயக்குநர் சொன்ன கதையை நம்பி தயாரிப்பாளராக களமிறங்குகிறார்.அவர் முதல்முறையாக தமிழ் தெலுங்கில் தயாரிக்கும் பைலிங்குவல் படம் இது.

THANKS & REGARDS,

எந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர் சேத்தன்!

எந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர் சேத்தன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chetan‘மர்மதேசம் ‘தொடரில் அவர் ஏற்று நடித்த பாத்திரம் தூரதேசம் முதல் தூந்திரப் பிரதேசம் வரை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தியது .
சேத்தன் தன் ராஜாங்கத்தைப் பெரிய திரையிலும் விரிவாக்க விரும்பினார்.’தாம் தூம்’ படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு ,கன்னடம் என்று 50 படங்கள் முடித்துவிட்டார்.இருந்தாலும் அவருக்குள் ஓர் ஏக்கம் உள்ளது. அவரை ஒரு வட்டத்தில் அடக்க நினைக்கிறது திரையுலகம். ஆனால் காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி என்கிற கனவுடையவர் சேத்தன்.

இதோ அவரே பேசுகிறார்.
“நான் டிவியில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்த போது என்னை வலைவீசித் தேடி வாய்ப்பு கொடுத்தவர் ஜீவா சார் தான். அந்தப் படம் ‘தாம் தூம்’ . அதில் கதாநாயகனின் மாமா பாத்திரம். அப்போது என் டைமிங் முக பாவனைகளைப் பார்த்து உங்களுக்கு காமெடி நல்லா வரும் போல இருக்கே? என்றார்.ஆமாம் சார் அப்புறம் ஏன் சார் என்னை சீரியசாக் காட்ட முயற்சி செய்கிறீர்கள் என்றேன். அதுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. ‘மர்மதேசம்’ தொடர் செய்து வச்சிருக்கிற வேலை இது. என்றார். அந்தளவுக்கு ‘மர்மதேசம்’ தொடர் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அடிப்படையில் எனக்கு நகைச்சுவையுணர்வு அதிகம் உண்டு. ஆனால் சொன்னால் யாரும் இதை நம்ப மாட்டேன் என்கிறார்கள்.

நான் முதலில் ஒப்பந்தமான படம் ‘தாம் தூம்’ என்றாலும் முதலில் வெளியான படம்’ பொல்லாதவன்’. அதன் பிறகு நிறைய படங்கள் .
நான் நடித்தவற்றில் குறிப்பிட்டுப் பெருமைப்பட வைத்த படம் Revelations. இது நான் நடித்து 2016 ல் வெளிவந்தது.இந்தப் படம் மும்பை, கல்கத்தா, புனே என்று பல வெளியூர்களில் திரையிப்பட்டு பலரின் பாராட்டுகளைப் பெற்று நான் மகிழ்ந்த திரைப்படம் என்பேன்,

கடைசியாக வந்த படம் ‘தமிழ்ப்படம் . 2. ‘அதே இயக்குநர் சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம் என்ற படத்திலும் நடித்தேன். எனக்கு காமெடியும் வரும் என்று கண்டு கொண்டவர்.
.
எனக்கு பாசிடிவ் நெகடிவ் காமெடி என எல்லா கேரக்டரும் செய்ய ஆசை. எந்த ஒரு வட்டத்திலும் சிக்கிக் கொள்ள விருப்பம் இல்லை. இந்த விஷயத்தில் எனக்கு நாசர் சார் தான் முன்னோடி. அவர் எல்லாமும் ஏற்று நடிப்பார். எந்த வட்டத்திலும் சிக்காததால்தான் அவரால் காலம் கடந்து நிற்க முடிகிறது.
நானும் அவர் வழியில் செல்ல விரும்புகிறேன்.” என்கிறார்.

இவரது மனைவி தேவதர்ஷினி மகள் என எல்லாருமே நடிக்கிறார்களே..?

” என் மனைவி தமிழ் தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மகள்’ 96′ படத்தில் நடித்தார். இப்போது 10 ஆம் வகுப்பு படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டி யிருக்கிறது. பிறகு பார்க்கலாம் என்று இருக்கிறோம். சினிமா வே குடும்பம். குடும்பமே சினிமா என்றிருக்கிறோம்.” என்கிற சேத்தன் இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜா , சசிகுமாரு டன் நடிக்கிறார். சி.வி.குமார் தயாரிப்பில் இரண்டு பபங்கள் உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறார்.

14 வருடங்களுக்கு பிறகு தனுஷ்-சினேகா இணையும் படம் தொடங்கியது

14 வருடங்களுக்கு பிறகு தனுஷ்-சினேகா இணையும் படம் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

snehaசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான `எதிர்நீச்சல்’, `காக்கிச்சட்டை’ ஆகிய படங்களை தனுஷ் தயாரித்தார்.

இப்படத்தை ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

இதன்பின்னர் தனுஷ் டபுள் கேரக்டரில் நடித்த `கொடி’ படத்தையும் இயக்கினார்.

தற்போது மீண்டும்தனுஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு தனுஷ் 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் அப்பா மற்றும் மகனாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கியக் கதாபாத்திரத்தில் சினேகா நடிக்கவிருக்கிறார். மேலும் ஒரு புதுமுக நடிகையும் நடிக்கவுள்ளார்.

`புதுப்பேட்டை’ படத்துக்குப் 14 வருடங்கள் கழித்து தனுஷ்-சினேகா ஜோடி இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யஜோதி றிறுவனம் இப்படத்தை தயாரிக்க விவேக்-மெர்வின் இருவரும் இசையமைக்கின்றனர்.

ரஜினியின் 2.0 பட டைட்டிலை மாற்றி சீனாவில் வெளியிடும் லைகா

ரஜினியின் 2.0 பட டைட்டிலை மாற்றி சீனாவில் வெளியிடும் லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini (1)ரஜினிகாந்த், அக்சய்குமார், ‌ஷங்கர், லைகா ஆகியோரது கூட்டணியில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி கடந்த ஆண்டு நவம்பர் 29-ந் தேதி வெளியான படம் 2.0.

இப்படம் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு அமைந்திருந்தது.

இப்படத்தை உலகமெங்கும் வெளியிட்டனர். அனைத்து இடத்திலும் வசூல் வேட்டையாடியது.

தற்போது உலகளவில் மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்டுள்ள சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் படத்லைப்பை மாற்றி ரிலீஸ் செய்கின்றனர்.

இப்படத்திற்கு பாலிவுட் ரோபோ 2.0 ரிசர்கென்ஸ் (பாலிவுட் ரோபோ 2.0வின் எழுச்சி) எனப் பெயரிட்டுள்ளனர்.

மேலும் சீன ரசிகர்களை கவர்வதற்காக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாம்.

ரஜினி தெளிவா இருக்கார்; மக்கள் சக்தி தீர்மானிக்கும்.. – விவேக்

ரஜினி தெளிவா இருக்கார்; மக்கள் சக்தி தீர்மானிக்கும்.. – விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajiniகோவில்பட்டி அருகே நடந்த ஒரு கோயில் திருவிழாவில் நடிகர் விவேக் கலந்துக் கொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது…

கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்தாலும் பொதுமக்கள் என்ற மகா சக்தி முன்புதான் கூட்டணி வைத்துள்ளனர்.

மக்கள் தீர்மானிப்பவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும். தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை. இதுவும் சுவாரஸ்யமாகவே உள்ளது. எல்லோரையும் போல நானும் காத்திருக்கிறேன்.

பின்னர் ரஜினி குறித்து கூறியதாவது…

இந்த தேர்தலில் ரஜினி போட்டியிடவில்லை என்பதால் அவர் பின் வாங்கிவிட்டார் என்று அர்த்தமில்லை.

முதலில் இருந்தே சட்டமன்ற தேர்தலில் தான் நிற்க போகிறேன் என அவர் சொன்னார். அவர் தெளிவாக இருக்கிறார்.” என பேசினார் விவேக்.

More Articles
Follows