தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பி ஸ்டார் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க பூ ராமு இளங்கோ, எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர், மைம் கோபி, அஜய் நட்ராஜ், ஐந்துகோவிலான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் `நெடுநல்வாடை’.
செல்வகண்ணன் இயக்கியிருக்கும் இந்த படம் மண் மனம் மாறாத காதல், சென்டிமெண்ட் கதையாக உருவாகியுள்ளது.
ஜோஸ் ஃபிராங்க்ளின் இசையமைக்க, வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.
மு.காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு பணிகளையும், விஜய் தென்னரசு கலை பணிகளையும் கவனித்துள்ளனர்.
இந்த பட டீசரை தங்களது வித்தியாசமான படைப்பால் தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாது ரசிகர்களிடமும் மிகுந்த பாராட்டை பெற்ற மேற்கு தொடர்ச்சி மலை இயக்குநர் லெனின் பாரதி, ராட்சசன் பட இயக்குர் ராம்குமார், 96 படத்தின் இயக்குநர் பிரேம் ஆகிய மூவரும் வெளியிட்டனர்.
தற்போது நெடுநல்வாடை டீசர் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
Nedunalvaadai movie teaser release news updates