பாலியல் தொழிலாளியின் ஆட்டோகிராஃப்பை சொல்லும் 21 வயது இளம் இயக்குநர்

பாலியல் தொழிலாளியின் ஆட்டோகிராஃப்பை சொல்லும் 21 வயது இளம் இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முற்றிலும் புதுமுகங்கள் நடித்த ‘மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது.

21 வயதே ஆன புதிய அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயண் மிக வித்தியாசமான கதைக்களத்தில், பாலியல் தொழிலாளி ஒருவரின் ஆட்டோகிராஃப் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இயக்கியிருக்கும் படம் ‘மாலைநேர மல்லிப்பூ’.

பாலியல் தொழிலாளி பாத்திரத்தில், பிரபல தியேட்டர் ஆர்டிஸ்டான வினித்ரா மேனன் நடித்துள்ளார்.

அவரது பத்து வயது மகனாக குழந்தை நட்சத்திரம் அஸ்வின் நடித்துள்ளார்.

மிக இளம் வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட லட்சுமியின் வாழ்வின் சில குறிப்பிட்ட காலங்களை, ஆவணப்படுத்தியிருக்கும் இயக்குநர் சஞ்சய், அத்தொழிலில் அவர் சந்திக்கும் வாடிக்கையாளர்கள், அவரது வீட்டு உரிமையாளர், சக பாலியல் தொழிலாளிகள் ஆகியோருடன் அவருக்கு நிகழும் அனுபவங்களை மிக நேர்மையாக காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்த சூழலில், தனது இருட்டான பக்கங்களை மறைத்து, பத்து வயதே ஆன, ‘என் அப்பா யார் என்று சதா கேள்வி எழுப்பி வரும் மகனை வளர்த்தெடுக்க அவர் காட்டும் தாய்ப்பாசம் பார்ப்பவர்களை நிச்சயம் நெகிழவைக்கும்.

பிரத்யேகமாக ஓ.டி.டி. தளங்களை மனதில் வைத்தே உருவாக்கப்பட்ட இந்த ‘மாலைநேர மல்லிப்பூ’ மிக விரைவில் முன்னணி ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

தயாரிப்பு நிறுவனம் ‘: an every frame matters production

தயாரிப்பு : விஜயலட்சுமி நாராயணன்

எழுத்து, இயக்கம்: சஞ்சய் நாராயண்

ஒளிப்பதிவு: நாய்துப் டோர்ஜி

இசை :ஹ்ரிதிக் சக்திவேல்

எடிட்டர் : சஞ்சய்

கலை இயக்குநர் : ஜெனித் பிரபாகர்

மக்கள் தொடர்பு : யுவராஜ் & முத்துராமலிங்கம்.

21-year-old young director making film of sex worker’s life

கேன்ஸ் பட விழாவில் ரஞ்சித் இயக்கிய கேங்ஸ்டர் ஸ்டோரி ‘வேட்டுவம்’ லுக்

கேன்ஸ் பட விழாவில் ரஞ்சித் இயக்கிய கேங்ஸ்டர் ஸ்டோரி ‘வேட்டுவம்’ லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் பா.இரஞ்சித் எழுதி இயக்கும் ”வேட்டுவம்”
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்டது.

இயக்குனர் பா. இரஞ்சித் படங்கள் இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் படங்கள் தயாரித்து வருகிறார்.

தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பரியேறும்பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் வெளிவந்தன.

இதனை தொடர்ந்து சேத்துமான், பொம்மை நாயகி, ஜெ.பேபி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.

இந்த நிலையில் பா.இரஞ்சித் ”நீலம் ஸ்டுடியோ” எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியிருக்கிறார்.

இந்த நிறுவனத்தோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து முதல் தயாரிப்பாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ”வேட்டுவம்” எனும் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.

‘வேட்டுவம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித், தயாரிப்பாளர்கள் அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி ஆனந்த் அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

கேங்ஸ்டர்கள் பற்றிய கதையாக உருவாகவிருக்கும் வேட்டுவம் படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

First Look poster of Pa Ranjith’s Vettuvam was released at Cannes film festival

நாலு வருஷமானாலும் நச்ன்னு டபுள் ரெக்கார்ட் செஞ்ச கமலஹாசன்

நாலு வருஷமானாலும் நச்ன்னு டபுள் ரெக்கார்ட் செஞ்ச கமலஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியல் பிரவேசம்.. கொரோனா ஊரடங்கு, ஆஸ்பத்திரியில் ஆப்ரேசன் என நான்கு வருடங்களாக கமல்ஹாசன் பிசியாக இருந்தார்.

எனவே அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது 4 வருடங்களுக்கு பிறகு மிகவும் எதிர்பார்ப்புக்குரிய விக்ரம் படத்தை தயாரித்து நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத்பாசில், காயத்ரி, ஸ்வஸ்திகா, காளிதாஸ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை வருகிற ஜீன் 3ஆம் தேதி வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது ரெட் ஜெயண்ட் நிறுவனம்.

‘விக்ரம்’ படத்தின் முதல் சிங்கிளான ‘பத்தல பத்தல’ பாடல் கடந்த வாரம் யு டியுப்பில் வெளியாகி தற்போது வரை 25 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

மேலும் கடந்த மே 15ஆம் தேதி இரவு 8 மணிக்கு ‘விக்ரம்’ பட டிரைலர் வெளியானது. அந்த டிரைலரும் தற்போது 25 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

ஒரே சமயத்தில் பத்தல பத்தல பாடலும் (27 மில்லியனை கடந்துள்ளது) ‘விக்ரம்’ பட டிரைலரும் 26 மில்லியன் பார்வைகைளைக் கடந்திருப்பது கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

4 வருடமானாலும் நச்ன்னு டபுள் சாதனை செஞ்சிட்டாரு ஆண்டவரூ..

Kamal Haasan’s 2 new records for Vikram

சென்னையில் தெலுங்கு முறைப்படி ஆதி – நிக்கி திருமணம்

சென்னையில் தெலுங்கு முறைப்படி ஆதி – நிக்கி திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஈரம்’, ‘கோச்சடையான்’, ‘மரகத நாணயம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆதி. பிரபல தெலுங்கு இயக்குனர் ரவிராஜா பினிசெட்டியின் 2வது மகன்.

‘டார்லிங்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘இடியட்’, ‘கலகலப்பு 2’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நிக்கி கல்ராணி. இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.

இவர்கள் இருவரும் ‘யாகவராயினும் நா காக்க, மரகத நாணயம்’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்துள்ளது.

தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் ‘தி வாரியர்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் ஆதி. அதுபோல் நிக்கியும் தமிழ் மற்றும் சில மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மே 18ல் சென்னையில் தெலுங்கு முறைப்படி ஆதி நிக்கி திருமணம் நடைபெற்றது.

இவர்களின் திருமணத்தில் நடிகர் மெட்ரோ சிரிஷ் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

நேற்றிரவே திருமண வரவேற்பும் நடந்துள்ளது.

Aadhi – Nikki Galrani tie the knot

ரஜினியை அழவைத்த சிவகார்த்திகேயன்..; சூப்பரூ என பாராட்டிய சூப்பர் ஸ்டார்

ரஜினியை அழவைத்த சிவகார்த்திகேயன்..; சூப்பரூ என பாராட்டிய சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்திருந்த படம் ‘டான்’.

லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்த இந்த படத்தை உதயநிதி வெளியிட்டார்.

நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க அனிருத் இசையமைத்து இருந்தார்.

சிபி சக்கரவர்த்தி இயக்கிய இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த வாரம் மே 13ல் வெளியானது.

கிட்டத்தட்ட 5 நாட்களில் ரூ.50 கோடி வசூலை உலகளவில் கடந்துள்ளதாக கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் படத்தின் வெற்றியை கேட் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளது.

இந்த நிலையில் டான் படத்தை நடிகர் ரஜினிகாந்த் தன்னை போனில் அழைத்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் சிபியை ரஜினி போனில் பாராட்டினாராம்.

‛ரஜினி சார் படத்தை பார்த்துட்டு சூப்பர்.. சூப்பர் பென்டாஸ்டிக் ‘டான்’.

கடைசி 30 நிமிடங்கள் என்னால் என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியல” என ரஜினி தெரிவித்ததாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Rajinikanth praised Sivakarthikeyan’s Don

மகள்கள் வருவார்களா? 2வது மனைவியுடன் காத்திருக்கும் இமான்

மகள்கள் வருவார்களா? 2வது மனைவியுடன் காத்திருக்கும் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் இசை உலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி. இமான். தற்போது 100 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார்.

இவர் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சில தினங்களுக்கு முன்தான் மே 15ஆம் தேதி ஞாயிறன்று 2வது திருமணம் செய்துக் கொண்டார். இந்த விழாவில் நடிகை சங்கீதா அவரது கணவர் கிரிஷ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

மறைந்த பிரபல சினிமா டிசைனரான உபால்டுவின் மகள் அமலியை திருமணம் செய்து கொண்டார் இமான்.

அமலிக்கு தனது முதல் கணவர் மூலம் ஒரு மகளும் இருக்கிறார். இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் செய்தியாக பார்த்தோம்.

தனது 2வது திருமணத்திற்கு பிறகு சில தகவல்களை பதிவிட்டுள்ளார் இமான்.

அதில், “மே 15ம் தேதி எனக்கு அமலியுடன் மறுமணம் நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியாக பகிர்கிறேன்.

எனது அப்பா டேவிட் கிருபாகர தாஸ் என்னுடைய கடினமான காலங்களில் ஒரு வலிமையான தூணாக இருந்ததற்கு மிகவும் நன்றி.

எனது அம்மா மறைந்த மஞ்சுளா டேவிட்டின் ஆசீர்வாதமும் எனக்கு உண்டு.

சிறந்த பெண்மணியான அமலியை அடைவதற்குக் காரணமாக இருந்த எனது குடும்பத்தினர் நலம் விரும்பிகள் ஆகியோருக்கு நன்றி.

இனிமேல், அமலியின் அன்பு மகள் நேரத்ரா என்னுடைய 3வது மகள். நேத்ராவின் அப்பாவாக இருப்பதற்கு மகிழ்ச்சி.

எனது அன்பு மகள்கள் வெரோனிகா, பிளஸிகா எனது திருமணத்தில் இல்லாதது எனக்கு வருத்தம்.

நிச்சயம் ஒரு நாள் எனது மகள்கள் வீட்டிற்கு வருவார்கள் என அதிகபட்ச அன்புடன் நாங்கள் காத்திருக்கிறோம்.

அமலி குடும்பத்தினரின் விலைமதிப்பற்ற அன்புக்கு நன்றி. மேலும் இத்தனை வருடங்களாக எனக்கு ஆதரவாக இருக்கும் இசை ரசிகர்களுக்கு எனது நன்றி,” என தெரிவித்துள்ளார் இமான்.

Will the daughters come? Iman waiting with 2nd wife

More Articles
Follows