Breaking வர்மா-விற்கு பதிலாக துருவ் விக்ரம் அறிமுகமாகும் படம் இதுதான்

Breaking வர்மா-விற்கு பதிலாக துருவ் விக்ரம் அறிமுகமாகும் படம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varmaa movie dropeed Dhruv Vikram next titled Adithya Varmaவிஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான அர்ஜுன் ரெட்டி படம் தெலுங்கில் செம ஹிட்டானது.

எனவே இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கி தமிழில் உருவாக்கியது.

ரீமேக் படங்களை இயக்காத பாலா இப்படத்தை நடிகர் விக்ரமுக்காக இயக்க ஒப்புக் கொண்டார்.

இப்படத்தின் மூலம் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகவிருந்தார்.

இதில் நாயகியாக மாடல் அழகி மேகா, ரைசா நடித்திருந்தனர்.

ஆனால் படம் முழுவதும் படமாக்கப்பட்ட பின் படம் திருப்தியில்லை என படத் தயாரிப்பாளர் அறிவித்தார்.

இந்நிலையில் அதே ரீமேக் படத்தை மற்றொரு இயக்குனரின் இயக்கத்தில் தயாரிக்கவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளனர்.

அதன்படி ஆதித்யா வர்மா என்று பெயரிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

கீரிஷ்ய்யா என்பவர் படத்தை இயக்க, நாயகிகளாக பனித்தா மற்றும் பிரியா ஆனந்த் நடிக்கின்றனர்.

ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஈ4 எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

Varmaa movie dropped Dhruv Vikram next titled Adithya Varma

LKG படத்திற்கு 5AM காட்சி; விஷ்ணு விஷால் & RJ பாலாஜி திடீர் மோதல்

LKG படத்திற்கு 5AM காட்சி; விஷ்ணு விஷால் & RJ பாலாஜி திடீர் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishnu Vishal and RJ Balaji have nasty fight regarding LKG 5am showரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட டாப் ஹீரோஸ் படங்களுக்கு மட்டுமே அதிகாலை 4 மற்றும் 6 மணி காட்சிகள் திரையிடுவது வழக்கம்.

தற்போது அது நீண்டு தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், கார்த்தி, விஜய்சேதுபதி ஆகியோர் படங்களுக்கும் திரையிடப்பட்டு வருகிறது.

இவையில்லாமல் நடிகைகளில் நயன்தாரா படத்திற்கும் திரையிடப்பட்டது.

தற்போது ஓவியா நடித்துள்ள 90எம்எல் படத்திற்கு மார்ச் 1ஆம் தேதி அதிகாலை காட்சி இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் வெளியாகவுள்ள எல்கேஜி படத்திற்கு சென்னை ரோகிணி தியேட்டரில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனையறிந்த நடிகர் விஷ்ணு விஷால், “காலை 5 மணி காட்சி அதன் மதிப்பை இழந்து வருகிறது. தந்திரமாக மாறிவிட்டது” என்று மறைமுகமாக சாடியிருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்.ஜே.பாலாஜி, “நானும் எல்.கே.ஜி படத்துக்கான காலை 5 மணிக் காட்சி தந்திரம் என்றே நினைத்தேன். பிறகு திரையரங்க உரிமையாளரிடம் நேரடியாகக் கேட்டு உறுதி செய்துகொண்டேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் எங்களுக்கு யாருடைய சிபாரிசும் இல்லை. மெரிட் அடிப்படையில் சிறப்பு காட்சி கிடைத்துள்ளது.

இந்த சிந்தனைக்கு ஓய்வு கொடுங்கள். மற்றவர்கள் உழைப்புக்கு மதிப்பளியுங்கள், உங்கள் மதிப்பு உங்களுக்குக் கிடைக்கும்” என்று தனது தெரிவித்துள்ளார்.

எனவே ஆர்.ஜே.பாலாஜிக்கு விஷ்ணு விஷால் பதிலளித்துள்ளதாவது…

“உங்களைச் சுற்றியிருப்பவர்களை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன் நீங்கள் என்ன செய்தீர்கள். அப்போது நடிகர்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை.

உங்கள் உழைப்பை மட்டுமில்லாமல் அனைவரின் கடின உழைப்பையும் மதியுங்கள்.

நான் எனக்கான அங்கீகாரத்தைப் பெறுகிறேன். நான் வெற்றிக்காக மக்களின் உணர்வுகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

இப்படியாக இருவரும் மாறி மாறி மோதிக் கொண்டுள்ளனர்.

பின்னர் இருவரும் போனில் பேசி பிரச்சினையை முடித்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Vishnu Vishal and RJ Balaji have nasty fight regarding LKG 5am show

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார் தேசிய விருது இயக்குனரின் மகள்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார் தேசிய விருது இயக்குனரின் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalyani Priyadarshan pair up with Sivakarthikeyan in SK15ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Mr.லோக்கல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

நயன்தாரா நாயகியாக நடிக்க, ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

இப்படம் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

சில நாட்களாக இதன் சூட்டிங் நின்ற நிலையில் தற்போது படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தை அடுத்து ‘இரும்புத்திரை’ இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறதாம்.

இதில் முக்கிய வேடத்தில் ஆக்சன் கிங் அர்ஜீன் நடிக்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இவர் தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பிரியதர்சனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் அம்மா லிசியும் பிரபல நடிகையாவார்.

இந்த நாயகி கல்யாணி ‘வான்’ என்ற தமிழ்ப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Kalyani Priyadarshan pair up with Sivakarthikeyan in SK15

ராமராஜன் படத்தலைப்பை கைப்பற்றிய சிவகார்த்திகேயன்

ராமராஜன் படத்தலைப்பை கைப்பற்றிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyans production 2nd movie titled Nenjamundu Nermaiunduசினிமாவில் அறிமுகமான சமயத்தில் சிவகார்த்திகேயனுக்கு அவ்வளவாக படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மாபெரும் வெற்றிக் பிறகு அவர் இன்று வரை முன்னணி நாயகர்களின் வரிசையில் இணைந்து விட்டார்.

தற்போது வரை 15 படங்களில் கூட அவர் நடிக்கவில்லை. ஆனால் திறமையான கலைஞர்களுக்கு தன் தயாரிப்பில் வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

தன் தயாரிப்பு படங்கள் என்றாலும் அவர் அதில் நாயகனாக நடிக்கவில்லை.

கனா படத்தின் மூலம் தன் நண்பன் அருண்ராஜா காமராஜை இயக்குனராக்கி அழகு பார்த்தார்.

படம் மாபெரும் ஹிட்டடிக்க, 2வது படத்தை தயாரித்து வருகிறார்.

இதில் டிவி பிரபலம் ரியோ நாயகனாக நடிக்கிறார்.

அவருடன் ஷிரின், ராதாரவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
தற்போது படத்தின் சூட்டிங் முடிந்து டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.

இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி வருகிறார். இவருடன் பிளாக் ஷீப் யூடியூப் குழுவும் படத்தை இயக்கிவருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என படத்தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே தலைப்பில் ராமராஜன் நடித்த படம் ஒன்று கடந்த 1991ல் வெளியானது.

இதில் ராமராஜன் உடன் ரூபினி, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Sivakarthikeyans production 2nd movie titled Nenjamundu Nermaiundu

Sivakarthikeyans production 2nd movie titled Nenjamundu Nermaiundu

திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் மிஸ்டர் லோக்கல் பட டீசர்

திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் மிஸ்டர் லோக்கல் பட டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanநகைச்சுவை என்பது சிவகார்த்திகேயன் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரிடம் இருந்தும் பிரிக்க முடியாத ஒரு அங்கம். அனைத்து தரப்பு, குடும்ப ரசிகர்களையும் அதன் மூலம் ரசிக்க வைக்கிறார்கள். அவர்கள் இருவரும் மிஸ்டர் லோக்கல் மூலம் ஒரே படத்தில் இணைகிறார்கள் என்ற முதல் அறிவிப்பு வந்ததில் இருந்து, அடுத்தடுத்த அறிவிப்பு மூலம் இன்று வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தற்போது அதன் டீஸர் வெளியாகி அனைவரையும் திரும்ப திரும்ப பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு டீஸரை உருவாக்குவது என்பது நிறைய திறமையும், பொறுப்பும் தேவை. ஏனெனில் படத்தில் என்ன இருக்கிறது என்பதை ரசிகர்களுக்கு சரியாக சொல்ல வேண்டும். இந்த மிஸ்டர் லோக்கல் டீஸரில் பிரதான கதாபாத்திரங்களான மனோகர் (சிவகார்த்திகேயன்) மற்றும் கீர்த்தனா (நயன்தாரா) ஆகியோரிடையே உள்ள மோதல்கள் மிகத்துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தில் அவரது நகைச்சுவை உணர்வும், மாஸ் தருணங்களும் மிகச் சரியாக காட்டப்பட்டுள்ளன. கூடுதலாக, முன்னணி கதாபாத்திரங்களுக்கிடையே நாம் பார்க்கும் வாய்மொழி சண்டை, முழுப்படமும் எப்படி இருக்கும் என்பதை காண நம்மிடையே எதிர்பார்ப்புகளை உண்டாக்குகிறது. ஹிப் ஹாப் தமிழாவின் கவர்ந்திழுக்கும் பின்னணி இசையும் டீஸரில் கூடுதல் சிறப்பு.

மே 1ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தை ராஜேஷ் இயக்கியிருக்கிறார், ஸ்டுடியோகிரீன் ஃபிலிம்ஸ் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, யோகிபாபு, சதீஷ் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரோகேஷ், மிர்ச்சி விஜய் மற்றும் கே.ஆர்.தரண் பாடல்களை எழுதியுள்ளனர். தினேஷ்குமார் நடனத்தையும், அன்பறிவு சண்டைப்பயிற்சியையும் கவனிக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் உருவாகும் இரண்டாம் படம்

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் உருவாகும் இரண்டாம் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan new film poojaமுதல் படமான கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தற்போது “தயாரிப்பு எண் 2” படத்தை மிக வேகமாக முடித்து வருகிறது. ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளன.

படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, “இது வழக்கமான விஷயமாக தோன்றலாம், ஆனால் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி தெரிவிப்பதை தவிர வேறு எதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை. வாய்ப்பு அளித்ததையும் தாண்டி, எங்களை ஊக்கப்படுத்தியதும், எங்கள் படைப்பு சுதந்திரத்தில் எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் முழு சுதந்திரம் கொடுத்ததும் எங்களை படத்தை மிகச் சிறப்பாக கொண்டு செல்ல உற்சாகம் அளித்தது. இப்போது படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம், அதே சமயத்தில் டப்பிங் பணிகளையும் துவக்கியிருக்கிறோம்” என்றார்.

படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினரை பற்றி அவர் கூறும்போது, “நடிகர்களை பற்றி நான் என்ன சொல்ல முடியும், அவர்கள் ஏற்கனவே தங்கள் திறமையால் மிகவும் புகழ் பெற்றவர்கள். ரியோ ஏற்கனவே ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் விரும்பப்படும் நபராக மாறிவிட்டார். நான் அவருடன் பணிபுரிந்த வரை, அவரின் அர்ப்பணிப்பும், சிறப்பானதை வழங்குவதில் அவரின் உறுதியையும் உணர்ந்தேன். அதே போலவே ஷிரினும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ராதாரவி சார் எங்கள் படத்தில் நடிக்க வந்தது எங்கள் அதிர்ஷ்டம். நாஞ்சில் சம்பத் சார் எங்கள் படத்துக்கு ஒரு வைரக்கல். நான் சில நேரங்களில் நாஞ்சில் சம்பத் சாரின் எளிமையான மற்றும் நேர்மையான வாழ்க்கையை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். நிச்சயமாக, ஆர்.ஜே. விக்னேஷ்காந்தும் அவர் பங்குக்கு நகைச்சுவை விஷயங்களை அளித்திருக்கிறார்” என்றார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த “தயாரிப்பு எண் 2” ஒரு நகைச்சுவை படம் ஆகும். ஷபிர் (இசை), U.K. செந்தில்குமார் (ஒளிப்பதிவு), ஃபென்னி ஆலிவர் (படத்தொகுப்பு), பிரதீப்குமார் (சண்டைப்பயிற்சி), கமலநாதன் (கலை) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் பற்றிய அறிவிப்புகள் எந்த நேரத்திலும் தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Articles
Follows