தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை ‘E4 ENTERTAINEMENT’ நிறுவனம் பெற்றது.
இப்படத்தை வர்மா என்ற பெயரில் பிரபல டைரக்டர் பாலா இயக்கினார்.
விக்ரம் மகன் துருவ், மேகா சவுத்ரி, ரைசா இணைந்து நடித்திருந்தனர்.
ஆனால் ‘அர்ஜுன் ரெட்டி’ படம் போல் வர்மா எங்களுக்கு திருப்தியில்லை. எனவே படத்தை குப்பையில் வீசிவிட்டு புதிய படத்தை தயாரிக்கவுள்ளோம் என ‘E4 ENTERTAINEMENT’ நிறுவனம் அதிரடியாக அறிவிக்க கோலிவுட்டே அதிர்ந்து போனது.
விரைவில் புதிய இயக்குனர் இப்படத்தை இயக்குவார் என அறிவித்தனர்.
அதன்படி தற்போது உருவாகவுள்ள ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கை கௌதம் மேனன் இயக்குவார் என்ற தகவல்கள் கோலிவுட்டில் வலம் வருகின்றன.
ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.