துருவ் விக்ரம் படத்தில் அறிமுகமாகும் நடிகை ரோஜா மகள்

துருவ் விக்ரம் படத்தில் அறிமுகமாகும் நடிகை ரோஜா மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெகன்மோகன் ரெட்டியின் அரசின் ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறை அமைச்சராக இருக்கும் நடிகை ரோஜாவுக்கு அன்சுமாலிகா என்ற மகள் உள்ளார், மாடலிங் தொழில்களில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வரும் அவர் விரைவில் சினிமாவில் நுழைய இருக்கிறார்.

சமீபத்தில் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடிய அன்ஷுமாலிகாவுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதாகவும், அதில் தொழில்முறை பயிற்சி எடுக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் த்ருவ் விக்ரம் நடிக்க இருக்கும் புதிய தெலுங்கு படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது திருமணத்துக்கு தயாராகிறாரா சமந்தா ?

இரண்டாவது திருமணத்துக்கு தயாராகிறாரா சமந்தா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு நான்கு வருட மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டனர்.
அவர்கள் பிரிந்து ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு, சமந்தா இறுதியாக மனம் மாறியது போல் தெரிகிறது,

சத்குரு ஜெகதீஷ் வாசுதேவ் சமாதானப்படுத்தியதை அடுத்து, சமந்தா இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து தெலுங்கில் ‘குஷி’ படத்தில் சமந்தா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘துணிவு’ படத்தில் அஜித்துடன் இணைந்த துணிச்சலான நடிகர்

‘துணிவு’ படத்தில் அஜித்துடன் இணைந்த துணிச்சலான நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் இயக்குனர் என பன்முகம் கொண்டவர் சமுத்திரக்கனி.

.இவர் தற்போது அஜித் நடித்துவரும் ‘துணிவு’ படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

இந்த பட படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் சமுத்திரக்கனி.

இவர், தான் இயக்கும் படங்களில் துணிச்சலான சமூக கருத்துக்களை பேசி வருபவர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இவர்களுடன் மஞ்சுவாரியர் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

வினோத் இயக்கும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார்.

ஜிப்ரான் இசையமைக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

‘துணிவு’ படத்தின் பர்ஸ்ட், மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது எனத் தெரிய வந்துள்ளது.

சமுத்திரக்கனி

Samuthirakani joins Thunivu movie

அஜித்தின் ‘துணிவு’ இந்தியாவின் மிகப்பெரிய நிஜக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு காவல்துறையினரின் பாராட்டைப் பெற்றதா?

அஜித்தின் ‘துணிவு’ இந்தியாவின் மிகப்பெரிய நிஜக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு காவல்துறையினரின் பாராட்டைப் பெற்றதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துணிவு’ அஜீத் குமாரின் 61வது படத்தின் டைட்டிலாக அறிவிக்கப்பட்டதிலிருந்து சமூக வலைதளங்களில் முதல் இடத்தில் உள்ளது.
1987 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த பிரபல வங்கிக் கொள்ளையை தழுவி கதைக்களம் அமைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய வங்கிக் கொள்ளையின் சிறப்பம்சம் என்னவென்றால், இரு தரப்பிலும் யாரும் தங்கள் உயிரை இழக்கவில்லை.
திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் நன்றாக இருந்தது, காவல்துறை அதை “ஒரு Clean and Neat operation ” என்று அழைத்தது.

பிறந்தநாளில் வேறென்ன நான் கேட்க முடியும்.; அட்லியை அசத்திய ஷாரூக் – விஜய்

பிறந்தநாளில் வேறென்ன நான் கேட்க முடியும்.; அட்லியை அசத்திய ஷாரூக் – விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய ஹிட் படங்களை இயக்கியவர் அட்லி.

இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றி கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் அட்லி.

மேலும் சினிமா பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகும் ஜவான் படத்தை ஹிந்தியில் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் செப்டம்பர் 21ல் தனது 37-வது பிறந்தநாளை அட்லி கொண்டாடி இருந்தார்.

ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி இருந்தனர்.

இந்த நிலையில், நடிகர்கள் விஜய் மற்றும் ஷாருக்கான் உடன் தான் இருக்கும் படத்தை அட்லி பகிர்ந்துள்ளார்.

“பிறந்த நாளில் இதைவிட வேறென்ன நான் கேட்டுவிட முடியும். அன்பான ஷாருக்கான் சார் மற்றும் என்னோட அண்ணன், என்னோட தளபதி விஜய்” என பதிவிட்டுள்ளார் அட்லி.

அந்த போட்டோவில் மூவரும் ப்ளாக் உடையில் கெத்தாக நிற்கின்றனர்.

What more could I ask for on a birthday –  Atlee

நானே வருவேன் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் அப்டேட் இதோ !

நானே வருவேன் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் அப்டேட் இதோ !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் மற்றும் செல்வராகவன் நடித்துள்ள சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ‘நானே வருவேன்’ படம் தணிக்கை செய்யப்பட்டு முழு குடும்பத்திற்கும் ஏற்ற வகையில் எந்தவித வெட்டுக்களும் இல்லாமல் யுஏ சான்றிதழை வழங்கியுள்ளனர் சென்சார் அதிகாரிகள் .

இதனிடையே படத்தின் ரன்னிங் டைம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது . அதாவது இந்தப் படம் 2 மணி நேரம் 2 நிமிடம் நீளம் இருப்பதாக தெரிவிக்க பட்டுள்ளது .

More Articles
Follows