தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கில் மிக பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா. இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
‘புஷ்பா’ படத்தில் நாயகியாக நடித்து இவர் போட்ட சாமீ.. சாமீ….. ஆட்டம் மிகப்பெரிய ஹிட்டானது.
‘சுல்தான்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா.
தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய்யின் 66 வது படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா.
இந்த நிலையில் பிரபாஸ் ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என டைட்டில் வைத்துள்ளனர்.
Rashmika Mandana to pair up with Prabhas after Vijay