பிறந்தநாளில் கல்லூரி மாணவிகளுக்கு இசை விருந்தளித்த துருவ் விக்ரம்

பிறந்தநாளில் கல்லூரி மாணவிகளுக்கு இசை விருந்தளித்த துருவ் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் இளம் நடிகர் துருவ் விக்ரம், சென்னையில் உள்ள கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் ‘Battle Fest 2022’ என்ற பெயரில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஒவ்வொரு நட்சத்திர நடிகர்களும் தங்களது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடுவது இயல்பு. இந்த விசயத்தில் மில்லியன் கணக்கிலான ரசிகர்களை கொண்டிருக்கும் இளம் நடிகர் துருவ் விக்ரம், ரசிகைகள் மற்றும் மாணவிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, பிறந்தநாளான இன்று சென்னை கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ‘Battle Fest 2022’ எனும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

துருவ் விக்ரம்

அதன் போது, இன்று துருவ் விக்ரமின் பிறந்த நாள் என்பதை அறிந்த கல்லூரி மாணவிகள், கேக் வெட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனையடுத்து மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் இசையில் வெளியான ‘மனசே..’ என்ற சுயாதீன இசை ஆல்பப் பாடலை பாடினார். பாடி முடித்ததும் மாணவிகள் கரவொலி எழுப்பி அவரை பாராட்டினர்.

துருவ் விக்ரம்

இதனிடையே இன்று சர்வதேச இதய நாள் என்பதாலும், ஏராளமான இதயங்களை வென்ற துருவ் விக்ரமின் பிறந்த நாள் என்பதாலும், அவர் எழுதிய ’மனசே..’ எனும் பாடல் பாடியது பொருத்தமாகயிருந்தது என கல்லூரி மாணவிகள் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

துருவ் விக்ரம்

Dhruv Vikram birthday celebrate in college meet

வடிவேலு ரீ-என்ட்ரீ.; முந்தி கொண்ட நடிகர் விஜய் சேதுபதி

வடிவேலு ரீ-என்ட்ரீ.; முந்தி கொண்ட நடிகர் விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியல் உள்ளிட்ட பல காரணங்களால் சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகர் வடிவேலு தற்போது ரீஎண்ட்ரி ஆகியுள்ளார்.

இதனையடுத்து ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை சுராஜ் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார்.

இதனையடுத்து பி வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்த வருகிறார்.

இந்த நிலையில் விஜய்சேதுபதி உடன் புதிய படத்திலும் நடிக்க உள்ளதாக வடிவேலுவே அப்டேட் கொடுத்துள்ளார்.

வடிவேலுவை பல முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் கமிட் செய்ய காத்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது விஜய்சேதுபதி முந்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay sethupathy and vadivelu joining new movie

OFFICIAL மகாபாரத காதலைச் சொல்ல நவம்பர் 4ல் சமந்தா வருகிறார்

OFFICIAL மகாபாரத காதலைச் சொல்ல நவம்பர் 4ல் சமந்தா வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகப்புகழ் பெற்ற காளிதாசின் ‘அபிஞான ஷாகுந்தலம்’ எனும் சமஸ்கிருத நாடகத்தினை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமே ‘ஷாகுந்தலம்’.

இத்திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் கதை, உலகப் புகழ்பெற்ற புராதன காவியமான மகாபாரதத்தில் உள்ள ஷகுந்தலை மற்றும் ராஜா துஷ்யந்தன் அவர்களின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இதில் நடிகை சமந்தா ‘ஷகுந்தலையாகவும்’, தேவ் மோகன், ‘ராஜா துஷ்யந்தனாகவும்’ நடித்துள்ளனர்.

சச்சின் கேடேகர், கபீர் பேதி, டாக்டர் எம். மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதீ பாலன், அனன்யா நாகலா மற்றும் ஜிஷு சென்குப்தா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் கூடுதல் ஈர்ப்பாக, நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் ‘அல்லு அர்ஹா’ இளவரசர் ‘பரதர்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் , தில் ராஜு அவர்கள், குணா டீம்வொர்க்ஸுடன் இணைந்து வழங்க, நீலிமா குணா தயாரிக்க, குணசேகரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நவம்பர் 4 2022-ல் வெளிவரவுள்ளது.

சமந்தா

Samantha starring Shaakuntalam movie 4 November Release

தமிழுக்கு நாகசைதன்யா.. தெலுங்குக்கு வெங்கட் பிரபு.; இளையராஜா – யுவன் மீண்டும் கூட்டணி

தமிழுக்கு நாகசைதன்யா.. தெலுங்குக்கு வெங்கட் பிரபு.; இளையராஜா – யுவன் மீண்டும் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் நாகசைதன்யா, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் தன்னுடைய ‘NC22’ படத்தின் படப்பிடிப்பை துவக்கி இருக்கிறார்.

இந்தப் படம் நாகசைதன்யாவின் முதல் தமிழ்-தெலுங்கு பைலிங்குவலாக இருக்கும்.

அதேபோல, இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் இதுதான் முதல் தெலுங்கு படம். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

ஸ்ரீனிவாசா சித்தூரி ‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனர்’ரின் கீழ் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

படத்தில் இன்னொரு நல்ல செய்தி ‘மாஸ்ட்ரோ’ இளையராஜாவும், ‘லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள். விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ படத்திற்கு பிறகு இளையராஜா யுவன் இணைவது இங்கே கவனிக்கத்தக்கது.

நடிகர் நாகசைதன்யா இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் கொண்ட படமாக இருக்கும்.

அழகான காட்சிகளை படமாக்குவதில் திறமையான ஒளிப்பதிவாளரான SR கதிர் இந்தப் படத்தில் இணைகிறார். படத்தின் வசனத்தை அபூரி ரவி எழுதுகிறார்.

படத்தின் எடிட்டிங்கை வெங்கட் ராஜன் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பிற்காக படக்குழு திறமை மிக்கவரான ராஜீவை தேர்வு செய்துள்ளது.

கலை இயக்கத்தை சத்யநாராயணா கையாள உள்ளார். முக்கிய சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்காக சர்வதேச ஆக்‌ஷன் இயக்குநரான யானிக் பென் இதில் இணைந்துள்ளார். அதேபோல, மகேஷ் மாத்யூவும் ‘NC22’-ல் அங்கமாக உள்ளார்.

படத்தின் தொழில்நுட்பக் குழு தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள விவரங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்னும் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும். ஆக்‌ஷன்- எண்டர்டெயினராக மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படம் தயாராக இருக்கிறது. பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.

*நடிகர்கள்*:

நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி மற்றும் பலர்.

*தொழில்நுட்பக்குழு விவரம்*:

கதை, திரைக்கதை, இயக்கம் : வெங்கட்பிரபு,
தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,
பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,
வழங்குபவர் : பவன் குமார்,
இசை: ‘மாஸ்ட்ரோ’ இளையராஜா, ‘லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: SR கதிர்,
எடிட்டர் : வெங்கட் ராஜன்,
வசனம்: அபூரி ரவி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராஜீவன்,
ஆக்‌ஷன்: யானிக் என், மகேஷ் மாத்யூ,
கலை இயக்கம்: DY சத்யநாராயணா

NC22

Naga Chaitanya starrer NC22 Movie shooting started

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் சாற்றி வழிபாடு செய்த நடிகர் வடிவேலு…

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் சாற்றி வழிபாடு செய்த நடிகர் வடிவேலு…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் வடிவேலு.

மாமன்னன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலு நடிக்கிறார்.

இந்நிலையில் இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார் வடிவேலு. கோயிலில் முருகனுக்கு வேல் சாற்றி வழிபாடு செய்த பின்னர் ரசிகர்களுடனும், பத்திரிகையாளர்களுடனும் கலந்துரையாடல் செய்தார் நடிகர் வடிவேலு.

இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வடிவேலு

Actor Vadivelu worshiped at Tiruchendur Murugan Temple

துருவ் விக்ரம் படத்தில் அறிமுகமாகும் நடிகை ரோஜா மகள்

துருவ் விக்ரம் படத்தில் அறிமுகமாகும் நடிகை ரோஜா மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெகன்மோகன் ரெட்டியின் அரசின் ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறை அமைச்சராக இருக்கும் நடிகை ரோஜாவுக்கு அன்சுமாலிகா என்ற மகள் உள்ளார், மாடலிங் தொழில்களில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வரும் அவர் விரைவில் சினிமாவில் நுழைய இருக்கிறார்.

சமீபத்தில் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடிய அன்ஷுமாலிகாவுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதாகவும், அதில் தொழில்முறை பயிற்சி எடுக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் த்ருவ் விக்ரம் நடிக்க இருக்கும் புதிய தெலுங்கு படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More Articles
Follows