ரசிகைகளை கவர ‘மனசே’.; புதிய முயற்சியில் துருவ் விக்ரம்

ரசிகைகளை கவர ‘மனசே’.; புதிய முயற்சியில் துருவ் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பெரும்பாலான முன்னணி நடிகர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களே.

ஆனால் ஓரிரு படங்களில் நடித்துள்ள நடிகர் விக்ரமின் மகன் துருவ்வுக்கு 26 வயதுதான் ஆகிறது

ஆனாலும் இவர் பள்ளி மாணவன் காலேஜ் ஸ்டூடண்ட் உள்ளிட்ட வேடங்களில் நடிக்காமல் அதிரடி போலீஸ் & தாதா என வெரைட்டியாக வில்லத்தனம் கலந்த ஹீரோவாக கலக்கி வருகிறார்.

தன் தந்தை விக்ரம் உடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு ரசிகர்களை விட ரசிகைகள் அதிகம் உள்ளனர்.

இவரின் அதிரடியான படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவரின் அடுத்த முயற்சிக்கு ‘மனசே’ என்ற தலைப்பு வைத்துள்ளனர்.

இது ஒரு இசை ஆல்பம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனசே பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

#Manase #மனசே is the title of #DhruvVikram’s Independent Musical Album’s #Track1. Song Releasing soon ?

@proyuvraaj

ரொமாண்டிக் மாஸ் என்டர்டெயின்மென்ட் ஜானரில் ‘ராவண கல்யாணம்’

ரொமாண்டிக் மாஸ் என்டர்டெயின்மென்ட் ஜானரில் ‘ராவண கல்யாணம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான சந்தீப் மாதவ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘ராவண கல்யாணம்’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் ஜே. வி. மது கிரண் இயக்கத்தில் தயாராகும் முதல் படைப்பு ‘ராவண கல்யாணம்’.

இதில் நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் இளம் நடிகரான சந்தீப் மாதவ் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடிகை தீப்ஸிகா மற்றும் புதுமுக நடிகை ரீது காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள்.

மேலும் இவர்களுடன் நடிகர் ராஜேந்திர பிரசாத், சத்ரு, ராஜ்குமார் காசி ரெட்டி, மதுசூதன், குண்டு சுதர்சன், ஆனந்த், மணி பிரபு, சரத் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

சிதம் மனோகர் ஒளிப்பதி செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். வசனத்தை பவானி பிரசாத் எழுத, ஸ்ரீகாந்த் பட்நாயக் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

ரொமாண்டிக் மாஸ் என்டர்டெயின்மென்ட் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஹால்சியன் மூவிஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரேஷ்மி சிம்ஹா மற்றும் அருண்குமார் சுராபனேனி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை சிம்ஹா மற்றும் அல்லூரி சுரேஷ் ஆகிய இருவரும் இணைந்து வழங்குகிறார்கள்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘ராவண கல்யாணம்’ படத்தின் தொடக்க விழாவில், திரையுலகை சேர்ந்த பலர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கார்த்தி – ராஜூமுருகன் இணையும் படத்தின் தலைப்பு இதுதானா.?

கார்த்தி – ராஜூமுருகன் இணையும் படத்தின் தலைப்பு இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இதனையடுத்து அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளன.

இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் கார்த்தி.

ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தியுடன் மோதும் விஜய்சேதுபதி

இந்த படத்திற்காக கார்த்தியின் தோற்றம் மிக வித்தியாசமான முறையில் இருக்கும் என தெரியவந்துள்ளது.

இவர்கள் இணையும் இந்த படத்திற்கு ஜப்பான் என்று பெயரிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படம் வழக்கம்போல ராஜூமுருகன் பாணியில் இருக்கும் என நம்பலாம்.

பான் இந்தியா படத்தில் இணையும் விஷ்ணு விஷால் & செல்வராகவன்

பான் இந்தியா படத்தில் இணையும் விஷ்ணு விஷால் & செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.

இவர் தற்போது சொந்தமாகவும் படங்களை தயாரித்து வருகிறார். இவர் அடுத்த தயாரித்து நடிக்க உள்ள படத்திற்கு ஆர்யன் என்று பெயர் வைத்துள்ளார்.

இவரின் முதல் மனைவியின் பெயர் ரஜினி நடராஜ். தற்போது இவர்கள் பிரிந்து விட்டனர். இவர்களுக்கு பிறந்த மகன் ஆர்யன் என்ற குழந்தையை விஷ்ணு விஷால் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் தான் இந்த படத்திற்கு தனது மகனின் பெயரான ‘ஆர்யன்’ என தலைப்பு வைத்துள்ளார்.

இதில் செல்வராகவன், வாணி போஜன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கின்றனர்.

க்ரைம் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த படத்திற்கு சுபாஷ் விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

இயக்குநர் கே. பிரவீண் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் தயாரிக்கின்றனர்.

‘த பர்பெஃக்ட் கிரைம் ஸ்டோரி: என்ற டேக் லைனுடன் தயாராகும் இந்த படம் பான் இந்திய படமாகும்.

விஷ்ணு விஷால் கைவசம் தற்போது ‘மோகன்தாஸ்’ மற்றும் ‘கட்டா குஸ்தி’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளன.

The special pooja video of #Aaryan, out now. Catch the glimpses from the pooja!

@TheVishnuVishal @selvaraghavan, @shraddhasrinath, @vanibhojanoffl.

Directed by @adamworx.

https://twitter.com/VVStudioz/status/1565995588638081025/video/1

Here’s the first look poster of @TheVishnuVishal’s #Aaryan. A perfect crime story!

Directed by @adamworx.

@VVStudioz @selvaraghavan @shraddhasrinath @vanibhojanoffl @vishnu_subhash @SamCSmusic @Sanlokesh @silvastunt #indulalkaveed @SVynod @kunaldaswani @prathool @thanga18 @DuraiKv @teamaimpr @UrsVamsiShekar @decoffl

சிம்பு படம் ரிலீஸ்.: முதல்வருக்கு கூல் சுரேஷ் வைத்த கோரிக்கையால் கடுப்பான நெட்டிசன்கள்

சிம்பு படம் ரிலீஸ்.: முதல்வருக்கு கூல் சுரேஷ் வைத்த கோரிக்கையால் கடுப்பான நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் காமெடி வேடங்களிலும் நடித்து வருபவர் கூல் சுரேஷ்.

இவர் அண்மைக்காலமாக youtubeல் ட்ரெண்டிங்கில் உள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் ஒவ்வொரு புதிய படங்களும் ரிலீஸ் ஆகும் நாள் அன்று படத்தை பார்த்து விட்டு தியேட்டர் வாசலில் படத்தை பற்றி விமர்சனம் செய்வார்.

எனவே இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் நிறைந்திருக்கும்.

மீடியாக்களும் இவரின் பேச்சைக் கேட்க ஆவலாக காத்திருப்பர்.

எனவே இவருக்கு வெள்ளிக்கிழமை நாயகன் என்ற பட்டத்தை இவரது ரசிகர்கள் வழங்கி உள்ளனர். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர் ஆவார்.

இந்த நிலையில் நேற்று இவர் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்…

“செப்டம்பர் 15ஆம் தேதி வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸ் ஆகிறது.

அன்றைய தினம் தமிழக அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என சிம்பு ரசிகர்கள் சார்பாக தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து சிம்பு ரசிகர்கள் இவருக்கு ஆதரவாக கருத்துக்களைச் சொல்லி வந்தாலும் மற்ற நெட்டிசன்கள் இவரை திட்டி வருகின்றனர்.

ஆனால் இதையெல்லாம் கூல் சுரேஷ் நிச்சயம் கண்டு கொள்ள மாட்டார். ஏனென்றால் அவரின் பெயரில் தான் ஆல்ரெடி கூல் இருக்கிறதே.

எனவே அவர் கூலாக தான் இருப்பார் என நம்புகிறோம்.

புனித தலமான காசியில் உருவாகி காதலின் புனிதத்தை சொல்லும் ‘பனாரஸ்’ பட ரிலீஸ் தேதி

புனித தலமான காசியில் உருவாகி காதலின் புனிதத்தை சொல்லும் ‘பனாரஸ்’ பட ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுமுக நடிகர் ஜையீத் கான், பாலிவுட் நடிகை சோனல் மோன்டோரியோ முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் காதல் காவியமான ‘பனாரஸ்’ திரைப்படம், நவம்பர் மாதம் நான்காம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரும், பல விருதுகளை வென்ற படைப்பாளியுமான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’.

ஜையீத் கான் மற்றும் சோனல் மோன்டோரியோ கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

காதலை முன்னிலைப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை என். கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

புனித தலமான காசியை கதைக்களப் பின்னணியாக கொண்டு இன்னிசையுடன் கூடிய காதல் காவியமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ‘பனாரஸ்’ திரைப்படம் நவம்பர் நான்காம் தேதி முதல் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

More Articles
Follows