‘விஜய்யுடன் அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் கடவுளுக்கு நன்றி’ – சாயிஷா

‘விஜய்யுடன் அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் கடவுளுக்கு நன்றி’ – சாயிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vanamagan fame Sayyeshaa talks about Actor Vijayஇயக்குநர் விஜய், ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகியுள்ள வனமகன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் சாயிஷா.

இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது.

நாளை மறுநாள் ஜீன் 23ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கூறியதாவது-..

நான் விஜய்யின் ரசிகன். அவர் மிகச்சிறந்த டான்ஸர்.

அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கடவுளுக்கு நன்றி சொல்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Vanamagan fame Sayyeshaa talks about Actor Vijay

விவேகம் படத்தின் பாடல்கள் வெளியீடு எப்போது.?

விவேகம் படத்தின் பாடல்கள் வெளியீடு எப்போது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegamஅஜித் நடித்த வேதாளம் படத்திற்கு இசையமைத்து பாடல்களை ஹிட்டாக்கிய அனிருத்தே விவேகம் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

எனவே இப்படத்தின் பாடல்களுக்கு முந்தைய படத்தை விட அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஓரிரு தினங்களுக்கு முன், அஜித்தின் புகழ் பாடும் பாடலாக சர்வைவா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இதனையடுத்து படத்தின் எல்லாம் பாடல்களும் எப்போதும் வரும் என அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அடுத்த ஜீலை மாதம் 27ஆம் தேதி அனைத்து பாடல்களும் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vivegam songs release date updates

விஜய்யை அட்வான்ஸாக வாழ்த்திய தனுஷ் என்ன சொன்னார்.?

விஜய்யை அட்வான்ஸாக வாழ்த்திய தனுஷ் என்ன சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay dhanushநடிகர் விஜய்க்கு ரசிகர்களை தாண்டி திரையுலகிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

ஜிவி. பிரகாஷ், சிபிராஜ், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் விஜய்யின் தீவிர ரசிகர்கள் என்பதை பலமுறை தெரிவித்து வருபவர்கள்.

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாள் நாளை ஜீன் 22ஆம் தேதி வருகிறது.

எனவே நடிகர் விஜய்க்கு முன்பே வாழ்த்து தெரிவித்து தனுஷ் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சார். கடின உழைப்பாளி, அர்ப்பணிப்பு, சிறந்த மனிதர். நீங்களாகவே இருக்கிறீர்கள். நன்றி சார். என தெரிவித்துள்ளார்.

Dhanush‏Verified account @dhanushkraja

Wishing a very happy birthday to vijay sir .. a very hardworking ,dedicated amazing human being whom I admire a lot.Thank u sir.For being u.

Happy Birth day Vijay sir for being you says Dhanush

‘தானா சேர்ந்த கூட்டம்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் பற்றி விக்னேஷ் சிவன்

‘தானா சேர்ந்த கூட்டம்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் பற்றி விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director vignesh shivanசூர்யா, கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போதிலும், இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிடாமல் இருந்தார் இயக்குனர்.

தற்போது இதன் பர்ஸ்ட் லுக்கை அடுத்த ஜீலை மாதம் முதல் வாரம் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படம் ஒரு தந்தை-மகன் பாசத்தை உணர்வுபூர்வமாக சொல்லவரும் படம் என சொல்லப்படுகிறது.

Thaana Serndha Kootam movie first look release updates

‘விஐபி 2’ பட டிரைலர்-பாடல்கள் வெளியீட்டு தேதி

‘விஐபி 2’ பட டிரைலர்-பாடல்கள் வெளியீட்டு தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VIP2 movie Songs and Trailer release date is hereசௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி 2 (‘விஐபி 2’)

இதன் சூட்டிங் முடிவடைந்து, தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகி வரும் இதன் பாடல்களை ஜீன் 25ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதே நாளில் தமிழ், தெலுங்கு மொழி டிரைலரும் வெளியாகும் எனவும், இந்தி டிரைலர் ரிலீஸ் தேதி மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

தனுஷ் உடன் அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்டோர் நடிக்க, இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு அவர்களும் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.

VIP2 movie Songs and Trailer release date is here

டி.ஆர்-விஷாலை இயக்கும் பேரரசு; தமிழ் சினிமா காணாத கூட்டணி

டி.ஆர்-விஷாலை இயக்கும் பேரரசு; தமிழ் சினிமா காணாத கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director perarasuரஜினியை ஏஆர் முருகதாஸ் இயக்க மாட்டாரா? கமலை பாலா இயக்க மாட்டாரா? அஜித்தை ஷங்கர் இயக்க மாட்டாரா? விஜய்யை மணிரத்னம் இயக்க மாட்டாரா? என இம்மாதிரியான கூட்டணியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கிடப்பார்கள்.

ஆனால் இதையெல்லாம் மீறி ரசிகர்கள் எதிர்பாராத ஒரு கூட்டணியை உருவாக்கி ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார்கள் சினிமாக்காரர்கள்.

அப்படியான ஒரு ஷாக்தான் இன்றைய செய்தியாக கிடைத்துள்ளது.

பிரபல இயக்குனரும் நடிகருமான டி. ராஜேந்தரை இயக்கவிருக்கிறார் பேரரசு.

இந்த கூட்டணிக்கு இன்னும் பல சேர்க்கும் விதமாக இதில் விஷாலும் இணைந்திருக்கிறார்.

இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

More Articles
Follows