‘விஜய்க்காக சம்பளம் வாங்காம நடிப்பேன்…’ ஜெயம் ரவி

‘விஜய்க்காக சம்பளம் வாங்காம நடிப்பேன்…’ ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayam raviதிங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’.

அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர்.

முதன்முறையாக ஹாரீஸ் ஜெயராஜ் மற்றும் மதன் கார்க்கியுடன் கை கோர்த்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

படத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இது ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படமாகவும் அமைந்திருக்கிறது.

வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இதில் கலந்துக் கொண்டு ஜெயம்ரவி பேசியதாவது…

கதை மேல் நம்பிக்கை வைத்து படத்துக்கு உழைத்த நல்ல கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பால் தான் இந்த படம் உருவாகியிருக்ககிறது.

நான் மட்டும் தான் ஈஸியா வேலை செஞ்சேன்னு மதன் கார்க்கி சொல்றதுலாம் சுத்த பொய். அவர் மூளையை கசக்கி கஷ்டப்பட்டு தான் பாட்டு எழுதியிருக்கிறார்.

என் படத்தில் நடிச்சா பெரிய ஹீரோயின் ஆகிடுவாங்கனு சொல்வாங்க. நிச்சயம் சாயிஷா பெரிய ஹீரோயின் ஆகிடுவாங்க.

விஜய் மாதிரி சினிமாவை நேசிக்கும் ஒருவரால் தான் இந்த படத்தை எடுக்க முடியும். இந்த படம் ஒரு நல்ல விஷயத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறது.

கூட்டுக் குடும்பமாக வாழும் மலை சார்ந்த மக்களை பற்றிய படம் தான் இது. சின்சியராக உழைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம்.

தமிழனாக இருந்தால் படத்தை இண்டர்நெட்டுல போடாதீங்க.

போட்ட பணத்தை நிச்சயம் இந்த படம் திரும்ப எடுக்கும்.

அப்படி படம் ஒடலைனா சம்பளம் வாங்காமல் விஜய்க்கு ஒரு படம் பண்ணி கொடுக்கிறேன்.

பிறகு “ஷேர் செய்து படத்தை தயாரித்து சரிகட்டிவிடுவோம். என் வண்டியும் ஓடணும் இல்ல” என்றார் நாயகன் ஜெயம் ரவி.

If Vanamagan becomes failure I will do one more film with Vijay at free of cost says Jayam Ravi

Vanamagan Press Meet Photos

‘அஜித் ரசிகர்களின் பலம் பிரமிக்க வைக்கிறது…’ காஜல் அகர்வால்

‘அஜித் ரசிகர்களின் பலம் பிரமிக்க வைக்கிறது…’ காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kajal Aggarwal open talk about Ajith and his fans Strengthதென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களுடன் அவர் உரையாடினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

தற்போது அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்துள்ளார். எனவே அஜித் ரசிகர்கள் அப்படம் குறித்து கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளித்தபோது… ‘விவேகம் படத்தில் அஜித்தின் தோழியாக நடித்துள்ளேன். அப்படக்குழுவினருடன் இணைந்தது நல்ல அனுபவம்.

என் வாழ்வில் சந்தித்த மனிதர்களில் அஜித் சிறப்பானவர். அவரின் ரசிகர்கள் பலம் பிரமிக்க வைக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

Kajal Aggarwal open talk about Ajith and his fans Strength

தனுஷுக்கு கஜோல்; சிவகார்த்திகேயனுக்கு சிம்ரன்

தனுஷுக்கு கஜோல்; சிவகார்த்திகேயனுக்கு சிம்ரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simran kajolவேலைக்காரன் படத்தை தொடர்ந்து தன் அடுத்த பட சூட்டிங்கில் பிஸியாகி விட்டார் சிவகார்த்திகேயன்.

பொன்ராம் இயக்கிவரும் இதன் சூட்டிங் தற்போது தென்காசியில் நடைபெற்று வருகிறது.

இதில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா, சூரி, நெப்போலியன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் ரசிகர்களின் முன்னாள் கனவுக் கன்னியான சிம்ரன் நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்த கேரக்டர் குறித்து சிம்ரன் கூறும்போது… “கேரக்டர் பற்றி இப்போது கூறமுடியாது. ஆனால் இது மிகவும் பவர்புல்லான கேரக்டர் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகியுள்ள தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 (விஐபி2) படத்திலும் முன்னணி நடிகையான கஜோலுக்கு பவர்புல்லான கேரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kajol in Dhanush movie and Simran in Sivakarthikeyan movie plays powerful role

ஏஆர் ரஹ்மான் இசையமைத்த விஜய் 61 இசை வெளியீடு தகவல்கள்

ஏஆர் ரஹ்மான் இசையமைத்த விஜய் 61 இசை வெளியீடு தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ar rahman vijayஏஆர். ரஹ்மானுடன் 3வது முறையாகவும், இயக்குனர் அட்லியுடன் 2வது முறையாகவும் விஜய் இணைந்துள்ள படம் தளபதி 61.

நாளை (ஜீன் 21) இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.

இந்த தகவலை வெளியிட்ட ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் நிறுவனமே இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு தகவலையும் வெளியிட்டுள்ளது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசையை வருகிற ஆகஸ்ட் மாதம் மிகப்பிரம்மாண்டமாக வெளியிடவிருக்கிறார்களாம்.

விழா நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Vijay 61 audio launch will be on August 2017

thalapathy 61 letter

விஜய்61 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியில் மாற்றம்; ரசிகர்கள் குஷி

விஜய்61 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியில் மாற்றம்; ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay 61 first look will be released on June 21st 2017நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிற ஜுன் 22ஆம் தேதி வருகிறது.

இதனை முன்னிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்த அட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை அன்றைய தினத்தில் வெளியிட இருந்தனர்.

இதுநாள் வரை அந்த கொண்டாத்திற்காக ரசிகர்கள் காத்து கிடந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் நாளை (ஜீன் 21) மாலை 6 மணிக்கே இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட உள்ளனர்.

இதனை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Vijay 61 first look will be released on June 21st 2017

ரஜினியின் அடுத்தடுத்த சந்திப்புகள்; இன்று இந்து மக்கள் கட்சி

ரஜினியின் அடுத்தடுத்த சந்திப்புகள்; இன்று இந்து மக்கள் கட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக வந்த செய்திகளை அடுத்து தினம் தினம் பிரபலங்கள் அவரை சந்தித்து வருகின்றனர்.

இன்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ரஜினியை சந்தித்துள்ளார்.

அவருடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பின் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறுகையில்…

‘ரஜினி கண்டிப்பாக தனி கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவார். இது குறித்த ஆலோசனைகளை அவர் நடத்தி வருகிறார்.

அவர் அரசியலுக்கு வருவதற்கான சரியான தருணம் இதுதான்.

பா.ஜ.க. ரஜினியை இயக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

More Articles
Follows