விக்ரமின் சாமி ஸ்கொயர் படத்திலிருந்து த்ரிஷா திடீர் விலகல்

விக்ரமின் சாமி ஸ்கொயர் படத்திலிருந்து த்ரிஷா திடீர் விலகல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trisha opting out of Vikrams Saamy Squareபோலீஸ் யூனிபார்முக்கு பெருமை சேர்த்த படங்களில் மிக முக்கியமான படம் சாமி.

ஹரி இயக்கிய இப்படத்தில் விக்ரம், த்ரிஷா, விவேக், மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் பெரும் வெற்றிப் பெறவே இதன் இரண்டாம் பாகத்திற்கு சாமி ஸ்கொயர் எனப் பெயரிட்டு விரைவில் சூட்டிங்கை ஆரம்பிக்க இருந்தனர்.

இதில் விக்ரம், த்ரிஷா கூட்டணியில் மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் அவர்களும் இணைந்தார்.

இந்நிலையில் தன் கேரக்டரில் வலுவில்லை என்ற காரணத்தினால் இதிலிருந்து விலகுகிறேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா.

Trisha opting out of Vikrams Saamy Square

Trisha Krishnan‏Verified account @trishtrashers 10m10 minutes ago
Due to creative differences,I have chosen to opt out of Saamy 2 . Wishing the team goodluck.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சித்தார்த்-காளிதாஸ் ஜெயராம்

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சித்தார்த்-காளிதாஸ் ஜெயராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

siddharth`நேரம்’, `பிரேமம்’ படங்களை தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ள புதிய படம் குறித்த ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது.

இது இசையை மையப்படுத்தி உருவாகவுள்ளதாக அவரும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதிய படத்தில் சித்தார்த் மற்றும் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஆகிய இருவரும் நாயர்களாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தமிழ், மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகவுள்ளதாம்.

இது அல்போன்ஸ் புத்திரனின் வழக்கமான பார்முலா என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ரெஜேஷ் முருகேஷன் என்பவர் இசையமைக்கிறார்.

தற்போது இதன் முதற்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இன்றுமுதல் கலகலப்பு2 படத்தை காசியில் தொடங்கும் சுந்தர்.சி

இன்றுமுதல் கலகலப்பு2 படத்தை காசியில் தொடங்கும் சுந்தர்.சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kalakalappu 2 stillsசுந்தர். C இயக்கும் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார்.

கிரி, ரெண்டு, தலைநகரம், கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு, அரண்மனை – 2, ஐந்தாம் படை மற்றும் மீசைய முறுக்கு ஆகிய வெற்றி படங்களை தயாரித்த குஷ்பு சுந்தரின் அவ்னி சினி மேக்ஸ் தற்போது கலகலப்பு -2 படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தை பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில், அக்டோபர் 4 – ஆம் தேதி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற்று வந்தது.

இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று காசியில் தொடங்கியுள்ளது. இதனையடுத்து இந்தூர், புனே மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்று டிசம்பர் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடையும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கலகலப்பு – 2 ஆம் பாகத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

2012 ஆம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி ,ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் கலகலப்பு.. முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப்படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக வசூல் சாதனை படைத்தது.

தற்போது இரண்டாம் பாகத்தில் இணைந்திருக்கும் மாபெரும் நட்சத்திர பட்டாளத்தால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொழில்நுட்பக்குழு :

எழுத்து – இயக்கம் – சுந்தர். C.

திரைக்கதை – வேங்கட்ராகவன்

தயாரிப்பாளர் – குஷ்பு சுந்தர்

ஒளிப்பதிவு – U K S

வசனம் – பத்ரி

இசை – ஹிப் ஹாப் ஆதி

பாடல் – மோகன் ராஜ்

படத்தொகுப்பு – ஸ்ரீ காந்த்

கலை – பொன்ராஜ்

சண்டைப் பயிற்சி – தினேஷ்

நடனம் – ஷோபி, பிருந்தா

ஒப்பனை – செல்லத்துரை

ஆடை வடிவமைப்பு – ராஜேந்திரன், பாலு

ஸ்டில்ஸ் – V. ராஜன்

தயாரிப்பு மேற்பார்வை – பால கோபி

நிர்வாக தயாரிப்பு – A . அன்பு ராஜா

அமீர்கான்-அஜய் தேவ்கான் படங்களை பின்னுக்கு தள்ளிய விஜய்

அமீர்கான்-அஜய் தேவ்கான் படங்களை பின்னுக்கு தள்ளிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ajay devgn aamir khanஅட்லீ இயக்கத்தில் ஏஆர்.ரகுமான் இசையமைத்து விஜய் நடிப்பில் வெளியான படம் மெர்சல்.

தீபாவளி அன்று வெளியான இப்படத்தை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்திற்கு பாஜக.வினர் எதிர்ப்பு தெரிவிக்கவே படம் இன்னும் அசுர பலத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறது.

இதே தீபாவளியை முன்னிட்டு (அடுத்தடுத்த நாட்களில்) ஹிந்தி படங்களான அமீர்கானின் Secret Superstar மற்றும் அஜய் தேவ்கனின் Golmaal Again ஆகிய படங்களும் வெளியானது.

ஆனால் அந்த படங்களை தாண்டி மெர்சல் அதிக வசூலை அளித்து வருவதாக பிரபல திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

It won’t be erroneous to state that Tamil film #Mersal is collecting more than the two Hindi releases in some key international markets.

— taran adarsh (@taran_adarsh) October 22, 2017

மெர்சல் பற்றி ரஜினி பேசமாட்டார் என்றாரே சீமான்; இப்போ என்ன ஆச்சு?

மெர்சல் பற்றி ரஜினி பேசமாட்டார் என்றாரே சீமான்; இப்போ என்ன ஆச்சு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fans condemned Seeman in Mersal movie issueவிஜய்யின் மெர்சல் படத்திற்கு பாஜக.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இந்தியளவில் பேசப்படும் விவாதப் பொருளாக உருவாகியுள்ளது.

தேசிய கட்சித் தலைவர்கள் முதல் ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், சீமான், வைகோ உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

ஆனால் ரஜினிகாந்த் இதுபற்றி ஒன்றும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவரும் சினிமா நடிகருமான சீமான் அவர் கூறியதாவது…

மெர்சல் படம் பற்றி ரஜினி பேசமாட்டார். போர் வரும்போதுதான் அவர் பேசுவார் என கிண்டலாக கூறியிருந்தார்.
தற்போது மெர்சல் படம் பார்த்து ரஜினி தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

இதற்கு சீமான் என்ன சொல்லப் போகிறார்? அவசரப்பட்டு இதற்குதான் பேசக்கூடாது என ரஜினி ரசிகர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Rajini fans condemned Seeman in Mersal movie issue

விஜய்யின் மதம்-ஜாதி இந்தியன்… எச்.ராஜாவுக்கு எஸ்ஏசி பதிலடி

விஜய்யின் மதம்-ஜாதி இந்தியன்… எச்.ராஜாவுக்கு எஸ்ஏசி பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BJP H Raja condemned Vijay dialogues in Mersalமெர்சல் படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி வசனங்களுக்கு பாஜக.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதில் மெர்சல் படத்தை தான் இணையத்தில் பார்த்ததாக எச். ராஜா தெரிவித்திருந்தார்.

இதற்கு விஷால் கடும் கண்டனம் தெரிவிக்க, தான் ஒரு காட்சியை மட்டும் வாட்ஸ்அப்பில் பார்த்தேன் என விளக்கம் அளித்தார் எச்.ராஜா.

இதனையடுத்து மெர்சல் பிரச்சினையை மதம் பிரச்சினையாக தற்போது உருவெடுக்கும் வகையில் பேசி வருகிறார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிட்டு அதில் விஜய்யின் ஒரிஜினல் பெயரான ஜோசப் விஜய் என உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உண்மை கசக்கும் என பதிவிட்டுள்ளார்.

இதிலிருந்து தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இதில் என்ன தவறு உள்ளது? என கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை வசை பாடி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் தந்தையும் புரட்சி இயக்குனருமான எஸ்ஏசி (எஸ்ஏ.சந்திரசேகரன்) ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது…

“விஜய்யின் மதம் இந்தியன். அவர் ஜாதி இந்தியன் என பள்ளியில் சேர்க்கும் போதே நான் குறிப்பிட்டுள்ளேன்.

இப்போது ஒருவரின் பெயரை வைத்த அவரின் மதத்தை அடையாளப்படுத்துவது சிறுபிள்ளைதனமானது” என பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

Truth is bitter pic.twitter.com/woFdxOntRn
— H Raja (@HRajaBJP) October 22, 2017

More Articles
Follows