Breaking : விஜய் முதல் சர்கார் திரையிட்ட தியேட்டர்கள் மீதும் வழக்கு; அமைச்சர்கள் ஆலோசனை

Breaking : விஜய் முதல் சர்கார் திரையிட்ட தியேட்டர்கள் மீதும் வழக்கு; அமைச்சர்கள் ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான சர்கார் திரைப்படம் நேற்று தீபாவளியை முன்னிட்டு உலகமெங்கும் வெளியானது.

பிரபல திமுக கட்சியை சேர்ந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தாலும் இதில் அரசியல் நையாண்டி அதிகமாகவே இருந்தது.

இப்படத்தில் தமிழக அரசையும் தற்போதுள்ள நடைமுறைகளையும் வறுத்தெடுத்திருந்தனர்.

எனவே படத்திற்கு பல விதத்திலும் எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜீ எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது மற்றொரு அமைச்சராச சி.வி. சண்முகம் அவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் வழக்கு பதியப்படும்.

மேலும் சர்கார் படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீதும் வழக்கு பதியப்படும். என கூறியுள்ளார்.

தனுஷின் மச்சான் சகா படத்தில் ஹீரோவாகிறார்

தனுஷின் மச்சான் சகா படத்தில் ஹீரோவாகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vada chennai dhanushதனுஷ் தயாரித்து நடித்திருந்த வடசென்னை படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.

இதில் தனுஷின் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இதில் ஐஸ்வர்யாவின் தம்பியாக அதாவது தனுஷின் மச்சான் முறையாக சரண் என்பவர் நடித்திருந்தார்.

ஐஸ்வர்யாவை தனுஷ் பெண் கேட்க வரும் காட்சியில் தன் அப்பாவையே மிரட்டும் தோனியில் சரண் நடித்திருப்பார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் இதற்கு முன்பே சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம். படத்திற்கு சகா எனத் தலைப்பிட்டுள்ளனர்.

vadachennai actor saran

கமல் பிறந்தநாளில் இந்தியன் 2 படத்தை கன்பார்ம் செய்த லைகா

கமல் பிறந்தநாளில் இந்தியன் 2 படத்தை கன்பார்ம் செய்த லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

indian 2 stillsநடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தன் 64வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் உலகநாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து கமல் வாழ்த்துக்களை பெற்றார்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக லைகா புரொடக்சன்ஸ் தாங்கள் தயாரிக்கும் இந்தியன் 2 பட அறிவிப்பை ஒரு வீடியோ பதிவாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

அதில் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இந்தியன் 2 விரைவில் தொடங்கும் என தெரிவித்துள்ளனர்.

ஷங்கர் இயக்கவுள்ள இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா அல்லது காஜல் அகர்வால் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Breaking : நல்ல கதையா திருடுங்கடா.; சர்காரை கேவலப்படுத்திய ராஜா

Breaking : நல்ல கதையா திருடுங்கடா.; சர்காரை கேவலப்படுத்திய ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why dont you steal best story BJP Raja asks Sarkar teamவிஜய் 3 வேடங்களில் நடித்த மெர்சல் படம் இந்தியளவில் மிகப் பிரபலமாக முக்கியமான காரணம் பாஜக. எதிர்ப்பு அலைதான்.

பா.ஜக. வை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் எச். ராஜா ஆகிய இருவரும் இப்படத்தை கடுமையாக எதிர்த்தனர்.

தற்போதும் இவர்கள் விஜய் நடிப்பில் நேற்று வெளியான சர்கார் படத்தையும் எதிர்த்து வருகின்றனர்.

தன் செங்கோல் கதையை திருடி சர்கார் படத்தை படமாக்கி விட்டார் என வருண் என்பவர் வழக்கு தொடுக்க, பின்னர் அவரிடம் சமரசம் செய்துக் கொண்டார் முருகதாஸ்.

இது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இது குறித்து தமிழிசை பேசும்போது கள்ள கதையை வைத்து கள்ள ஓட்டை பற்றி படமெடுத்துள்ளனர் என விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று சர்கார் படத்தை மறைமுகமாக தாக்கும் வகையில் தன் ட்விட்டர் பக்கத்தில் எச். ராஜா இந்த பதிவை இட்டுள்ளார். இதோ அந்த பதிவு

H Raja‏Verified account @HRajaBJP
படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா

Why dont you steal best story BJP Raja asks Sarkar team

Breaking : வளரும் விஜய்க்கு இது நல்லதல்ல.; சர்காருக்கு அமைச்சர் எச்சரிக்கை

Breaking : வளரும் விஜய்க்கு இது நல்லதல்ல.; சர்காருக்கு அமைச்சர் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar movie into trouble Minister Kadambur Raju warns Vijayநேற்று தீபாவளி தினத்தன்று விஜய் நடிப்பில் உருவான சர்கார் திரைப்படம் உலகமெங்கும் வெளியானது.

இதன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்னது போலவே அரசியலை மெர்சல் செய்திருந்தார் இயக்குனர் முருகதாஸ்.

இப்படத்தை பெரும்பாலானோர் பாராட்டினாலும் சிலர் நெகட்டிவ்வான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படம் குறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல

சர்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். (அதாவது ஒரு காட்சியில் மக்கள் அரசுக்கு எதிராக வெகுண்டெழும் போது அரசு கொடுத்த இலவச பொருட்களை தீயில் போட்டு கொளுத்துவார்கள்)

அதில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படும். இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம்.

இவ்வாறு இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த போது நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Sarkar movie into trouble Minister Kadambur Raju warns Vijay

Breaking: நான் மக்களின் கருவி; இன்று தன் பிறந்தநாளில் கமல் பேச்சு

Breaking: நான் மக்களின் கருவி; இன்று தன் பிறந்தநாளில் கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I am Peoples tool says Kamalhassan on his birthday todayநடிகர் கமல்ஹாசன் சில மாதங்களுக்கு தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்து மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

அதன்படி கட்சியை வளர்க்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று (7.11.18) அவர் தன் 64வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஓரிரு தினங்களுக்கு முன் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

அதில் ‘இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். கேக் வெட்டுதல் உள்ளிட்ட ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம்.

அதற்குப் பதிலாக ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். ரத்த தானம் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும்’ என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது…

ஊழலற்ற சுகாதாரமான அரசியல் தேவை என்பதில் மக்கள் நீதி மய்யம் உறுதியாக உள்ளது.

மேலும் தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 தொகுதிகளின் இடைத்தேர்தலை சந்திக்கவு மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது.

நான் எந்த கட்சிக்கும் குழலோ ஊதுகுழலோ கிடையாது; நான் மக்களின் கருவி.” என பேசினார்.

I am Peoples tool says Kamalhassan on his birthday today

More Articles
Follows