தமிழ் நாட்டில் துணிவு டாப் .. உலகளவில் வாரிசு டாப் .. பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு ?

தமிழ் நாட்டில் துணிவு டாப் .. உலகளவில் வாரிசு டாப் .. பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பு நிறுவனங்களால் உறுதிப்படுத்தப்படாத பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

அஜித்தின் ‘துணிவு’ தமிழ்நாட்டில் சுமார் 18 கோடி ரூபாயும், இந்தியாவில் ரூ 26 கோடியும், உலகம் முழுவதும் ரூ. 30 கோடியும் வசூலித்துள்ளது.

விஜய்யின் ‘வாரிசு’ தமிழகத்தில் ரூ.17 கோடியும், இந்தியாவில் ரூ.26.5 கோடியும், உலகம் முழுவதும் ரூ.35 கோடியும் வசூலித்துள்ளது.

உலகளவில் வாரிசு படம் துணிவை விட 5 கோடி அதிகம் வசூல் செய்ததாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘Thunivu’ vs ‘Varisu’ first day world wide box office collections here

போனி கபூரின் மகன் அஜித் குமாருடன் இணைந்து நடிக்கிறாரா?

போனி கபூரின் மகன் அஜித் குமாருடன் இணைந்து நடிக்கிறாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜீத் குமாரின் சமீபத்திய திரைப்படமான துணிவு, ஜனவரி 11, புதன்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்தி திரையுலகில் பிரபலமான போனி கபூர் இதனை தயாரித்துள்ளார்.

இப்போது, ​​ஒரு ஊடக நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர், அஜித் குமாருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.

ஒரு படத்தில் அஜித் குமாருடன் இணைந்து நடிக்க விரும்புகிறீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது சரியான காரணத்திற்காக இது நடக்க வேண்டும் என்று கூறினார் .

அதற்கான சந்தர்ப்பம் வரும் போது கண்டிப்பாக இணைவேன் என்றார்.

Is Boney Kapoor’s son collaborating with Ajith Kumar in his next?

‘துணிவு – வாரிசு’ ரிலீஸ்.; விஜய் – அஜித் ரசிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

‘துணிவு – வாரிசு’ ரிலீஸ்.; விஜய் – அஜித் ரசிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஜனவரி 11ஆம் தேதி விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு படங்கள் வெளியானது.

இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எனவே இந்த படத்தை வரவேற்கும் வகையில் கட் அவுட்டுகள் பேனர்கள் வைத்து படத்தை வரவேற்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் இந்த பேனர்களை அனுமதியின்றி விதிகளை மீறி வைத்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் சட்ட விதிகளை மீறி பேனர்கள் வைத்த விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Police registered a case against Vijay-Ajith fans

RRR பட பாட்டு.. கீரவாணிக்கு கோல்டன் குளோப் விருது.; கமல் – ரஜினி வாழ்த்து

RRR பட பாட்டு.. கீரவாணிக்கு கோல்டன் குளோப் விருது.; கமல் – ரஜினி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2022 ஆண்டில் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்ஆர்ஆர்’ படம் வெளியானது.

இதில் இடம்பெற்றுள்ள ‘நாட்டுக் கூத்து’ பாடலுக்கு ‘Best Original Song’ பிரிவில் கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது.

சர்வதேச அளவில் திரைத்துறையில் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது பார்க்கப்படுகிறது.

இந்த பாடல் காட்சி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் வீட்டின் முன்னால் படமாக்கப்பட்டது.

இந்த விருதை பெற்றுள்ள இசையமைப்பாளர் கீரவாணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல் தன் ட்விட்டரில்…

தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா. @ssrajamouli இயக்கிய #RRR படத்தின் #NaatuNaatu பாடலுக்காக #GoldenGlobes விருது வென்று தந்திருக்கிறார் @mmkeeravaani முன்னமே யூட்யூபில் 11 கோடிப் பார்வைகளைத் தாண்டிய பாடல் இது. வாழ்த்துகிறேன்.

நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய சினிமாவுக்கு கோல்டன் குளோப் விருதை பெற்றுகொடுத்து பெருமைபடுத்திய இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் ராஜமவுலிக்கு நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.

கீரவாணி மற்றும் ராஜமவுலி ஆகிய இருவரும் கமல் மற்றும் ரஜினிக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

கூடுதல் தகவல்..

கீரவாணி தற்போது பி வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் குஞ்சுமோன் தயாரிக்கும் ‘ஜென்டில்மேன் 2’ படத்திற்கும் கீரவாணி இசை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Golden Globe Award for Keeravani.; Kamal – Rajini wishes to him

சர்வதேச ஆளுமைகள் பங்கேற்கும் கேரள இலக்கியத் திருவிழாவில் கமல்ஹாசன்

சர்வதேச ஆளுமைகள் பங்கேற்கும் கேரள இலக்கியத் திருவிழாவில் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில், டி.சி. கிழக்கம்முறி அறக்கட்டளை சார்பில் ஜனவரி 12-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மாபெரும் இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது.

ஆசியாவின் இரண்டாவது பெரிய இலக்கியத் திருவிழாவாகக் கருதப்படும் இந்நிகழ்ச்சியில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள், பொருளியல் நிபுணர்கள், தொழில்முனைவோர், அரசியல்வாதிகள், கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுப் பேசுகின்றனர்.

இதில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர், இயக்குநர்,
தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர் என கலைத் துறையிலும், அரசியல் துறையிலும் பங்காற்றிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் பங்கேற்கிறார்.

அவர் வரும் 15-ம் தேதி மாலை 4 மணியளவில் `நான் கண்டறிந்த அரசியல்’ (Finding my politics) என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க நிகழ்வான, மிகப் பெரிய இலக்கியத் திருவிழாவில் கமல்ஹாசன் அவர்கள் பங்கேற்பது தமிழர்களுக்குப் பெருமையளிக்கும் ஒன்றாகும்.

இந்தியாவின் ஒரு சிறந்த கலை ஆளுமையாகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று, உரை நிகழ்த்துவார் என்று விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, தான் தொகுத்து வழங்கும் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், மலையாளத்தின் பிரபல எழுத்தாளுமைகளையும், அவர்களது படைப்புகளையும் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கேரள மாநிலத்தின் பாரம்பரியக் கலைகள், இலக்கியம், திரைத்துறை ஆகியவற்றின் மீது ஆர்வம்கொண்ட கமல் ஹாசன் அவர்கள் கேரளாவின் இலக்கிய ஆளுமைகளான பால் ஜக்காரியா, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு உள்ளிட்ட பல முன்னணி எழுத்தாளர்களோடு நீண்டகால நட்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

– ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Kamal Haasan attends the Kerala Literary Festival featuring international personalities

‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட நிறுவனத்துடன் இணைந்த நடிகர் அடிவி சேஷ்

‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட நிறுவனத்துடன் இணைந்த நடிகர் அடிவி சேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

பான் இந்திய திரைப்படமாக தயாராகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட பார்வையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘HIT 2’ எனும் திரைப்படத்தின் மூலம் இரட்டை ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்து நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கிறார் நடிகர் அடிவி சேஷ்.

இவரது நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘G2’ ( கூடாச்சாரி 2) என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

கூடாச்சாரி படத்தின் முதல் பாகம், இந்திய அளவில் நடைபெறும் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இதன் இரண்டாவது பாகத்தின் கதை சர்வதேச அளவில் நடைபெறுவதாக உருவாக்கப்படுகிறது. இதற்கான கதையை நடிகர் அடிவி சேஷ் எழுதுகிறார்.

இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மேஜர்’ எனும் படத்திற்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய வினய் குமார் சிரிகீனீடி, இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘கார்த்திகேயா 2’, ‘மேஜர்’ போன்ற அகில இந்திய அளவில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படங்களை வழங்கிய தயாரிப்பாளர்கள் டி. ஜி. விஸ்வபிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆகியோர் பீப்பிள் மீடியா ஃபேக்டரி , அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஏ. கே. என்டர்டெய்ன்மெண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் இந்த படத்தை இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழுவினர், ‘ப்ரீ விஷன்’ எனப்படும் முன்னோட்ட பார்வைக்கான காணொளியையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

இதில் நாயகன் சேஷ், சம்பிரதாயமான உடையில் மிடுக்காகவும், ஸ்டைலாகவும் தோன்றி உயர்ந்த கட்டிடத்திலிருந்து கீழே விழும்போது துப்பாக்கியால் சுடுவதை காணலாம். இந்த காட்சிக்காக நடிகர் தன் உடலை வருத்திக் கொண்டு நடித்திருக்கிறார்.

மேலும் இந்த காணொளியில் நடிகர் சேஷ், இந்தியாவிலிருந்து ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள் வரை செல்லும் கூடாச்சாரியின் இறுதி காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

இதனை தொடர்ந்து அவரது முதல் தோற்றம், கூடாச்சாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகிறது. ‘G2’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கதையின் காலகட்டம், உருவாக்கம், தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, சர்வதேச அளவிலான தொழில்நுட்ப குழுவினரின் திட்டமிடல் ஆகியவற்றின் அடிப்படையில் இப்படத்தின் உருவாக்கம், எதிர்பார்த்ததை விட அதிகமாகவும், பிரம்மாண்டமானதாகவும் இருக்கும் என தெரிய வருகிறது.

தொடர்ந்து வெற்றிகளை அளித்து வரும் நடிகர் அடிவி சேஷ் கதை எழுதி, கதையின் நாயகனாக நடிக்கும் ‘G2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்ட பார்வையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை விதைத்திருக்கிறார்.

Adivi Sesh’s Pan India Movie G2 First Look & Pre-Vision Unleashed

More Articles
Follows