தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் சினிமாவில் அறிமுகமாகிறார். அதன் பற்றிய விவரம் வருமாறு…
விஜய்சேதுபதி, அஞ்சலி இணைந்து நடிக்கும் படம் சிந்துபாத்.
இப்படத்தை அருண்குமார் என்பவர் இயக்குகிறார்.
இவர் விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கியவர்.
இதில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்யும் சிறுவனாக நடிக்கிறார்.
மேலும் சேதுபதி திரைப்படத்தில் நடித்த லிங்காவும் இதில் நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னாவும் நடிக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
எளிமையாக வாழ நினைக்கும் ஒருவனுக்கு இந்த சமூகம் தடையாக உள்ளது என்பதையும், அதற்கான தீர்வையும் சொல்லும் படமாக இது இருக்குமாம்.